PDA

View Full Version : பொருளாதார சரிவு



மதுரை மைந்தன்
23-10-2008, 10:38 PM
கடந்த ஒரு மாத காலமாகவே காலையில் செய்திகள் பொருளாதார சரிவைப பற்றியே கூறுகின்றன. .இதற்கு பிள்ளையார் சுழி போட்டது லீமன் பிரதர்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம். 20 பில்லியன் டாலர்களை முலதனமாகக் கொண்டு 600 பில்லியன் டாலர்களுக்கு சொத்துக்களை (பெரும்பாலும் வீடுகளை) வாங்கியது அந்த நிறுவனம். வீட்டு மார்க்கெட்டில் சரிவு ஏறபட்டதால் அந்த நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏறபட்டு திவாலாகியது. பெரும்பாலும் பிஸினஸ் காரர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி அந்த கடன்களை திரும்ப பெற முடியாமல் பல நிறுவனங்கள் லீமன் பிரதர்ஸ் மாதிரி திவாலாகியன. இதில் கொடுமை என்னவென்றால் பொது மக்கள உலகெங்கும் பாதிப்புக்கு உள்ளாயிருக்கிறார்கள். ஏறகனவே அமெரிக்காவில் ஒரு இந்தியர் தனது குடும்பத்துடன் தற்கொலை பண்ணி விட்டார் பொருளாதார சரிவின் காரணமாக. இந்தியாவில் மும்பையிலும் ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார். பலருக்கு பணி நீக்கம் ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளன.

இந்த நிலமைக்கு காரணம் மேல் நாடுகளில் பெரும்பாலோர் தங்கள் வரம்புக்கு மீறி செலவுகள் செய்ததும் அவர்களின் கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் சக்தியை உணராமல் கடன்களை வாரி வாரி வழங்கிய பொருளாதார நிறுவனங்களும் ஆகும். இவைகளைப் பார்க்கும் போது எனக்கு பழைய காலங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் சிறுவனாக இருந்த சமயம் கடன் வாங்குவது இழிவாக கருதப் பட்டது. பொருட்களை வாங்க பணத்தைச் சேர்த்து வைத்து வாங்கும் சக்தி வந்தவுடன் தான் வாங்கினார்கள் மக்கள். ஆனால் இன்று எல்லாம் கடன் வாங்கி கலயாணம் தான். சமீபத்தில் இங்கு ஒளிபரப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இளைஞர்கள் அனைவரும் தங்களுக்கு நிறைய கடன்கள் இருப்பதாக சொன்னார்கள். வீடு, கார் இவைகளைத் தவிர பொழுது போக்கு சாதனங்களைக் கூட கடனில் வாங்குகிறார்கள். வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதைப் பற்றி சிறுதும் கவலைப் படுவதில்லை. இவர்கள் இன்றைக்காக மட்டுமே வாழ்கிறார்கள் நாளைப் பொழுதைப் பற்றி சற்றும் சிந்தனை இன்றி.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.

1. ஊதாரித் தனமான செலவுகளைக் கட்டுப் படுத்தி அளவோடு வாழ வேண்டும்

2. நமக்குத தேவையில்லாத பொருட்களை வாங்க கூடாது.

3. உணவுப் பொருடகள், உடைகள், அழகு சாதனங்கள் போன்ற வற்றை தேவைக்கு அதிகமாக வாங்கக கூடாது.

4. விடா முயற்சி, கடின உழைப்பு இவற்றோடு கூட நம்மை உற்சாகப் படுத்தும் பொழுது போக்கும் அவசியம்.

5. மாத வருவாயில் ஒரு பங்கை (25%-35%) பாதுகாப்புத் தொகை சிறு சேமிப்பு மற்றும் முதலீடுகள் இவற்றிற்கு ஒதுக்குங்கள்.

6.கடன்களே வாங்க முடியாமல் வாழ முடியாது. ஆனால் அடிப்படைத் தேவைகளான வீடு, உயர் கல்வி, திருமணம் இவற்றிற்கு நம்பகமான குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தருபவர்களிடம் வாங்கலாம். அதே நேரத்தில் கார், பொழுது போக்கு சாதனங்கள் போன்ற தேவையில்லாதவற்றிறகு கடன்கள் வாங்குவதை தவiர்க்க வேண்டும்.

7. கடன்களை வாங்கும் போது மாத தவணைகளை உங்களது வருவாயின் 35 % க்குள் வைத்துக் கொள்வது நல்லது.

உலக பொருளாதார முன்னேற்றத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உயரக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. அளவோடு வாழ்ந்து வளமான வருங்காலத்தை சந்திப்போம்.

இறைநேசன்
24-10-2008, 07:05 AM
அநேகருக்கு அறிவை உணர்த்தும் அருமை பதிப்பு அன்பரே!

கடனை பெற கை நீட்டும் முன் அதை திருப்பிகொடுக்கும் வழி பற்றி அதிகம் அக்கறை வேண்டும் அல்லது அல்லல்பட நேரிடும் என்பது அடியேனின் கருத்தும் கூட!

நன்றி!

சிவா.ஜி
24-10-2008, 07:36 AM
மிக அருமையான பதிவு மதுரைவீரன். நீங்கள் அளித்திருக்கும் ஆலோசனைகள் அத்தனையும் அருமை. கடன் பட்டார் நெஞ்சம் போல் இனி யாரும் கலங்காதிருக்கட்டும்.

இளசு
27-08-2009, 08:28 PM
மதுரை வீரனின் இக்கட்டுரை காலத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி..

நண்பர்களே,

உங்கள் தேசங்களில் இப்போது நிலைமை எப்படி?

சரிவு சீரடையும் அறிகுறிகள் தெகிறதா?

தாமரை
28-08-2009, 01:56 AM
இது எக்காலத்திலும் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் அய்யா!

தேவைக்கு மேல் எதையுமே உபயோகித்தால் கஷ்டப்படப் போவது நமது சந்ததிகள்தான்.

தற்போது நிலைமை சற்றே சீரடைந்து உள்ளது, வேலை வாய்ப்புகள் மறுபடியும் உருவாக ஆரம்பித்து விட்டன. முன்னோட்டக் கம்பெனிகள் என்னும் சில (சரிவோ உயர்வோ இவைகள்தான் முதலில் சந்திக்கும்) தங்கள் பழைய இலக்குகளுக்குத் திரும்புகின்றன.

இன்னும் 3 மாதங்களில் சரிவு நிறு வளர்ச்சி தொடங்கிவிடும்.

aren
28-08-2009, 03:50 AM
லீமன் பிரதர்ஸின் வீழ்ச்சிக்கு லீமன் பிரதர்ஸ் மட்டும் காரணமில்லை. பல விஷயங்கள் இதில் இருக்கிறது. அதைப் பற்றி நேரம் கிடைக்கும்பொழுது எழுதுகிறேன்.

லீமனை வீழ்த்தியது ஒரு பெரிய சதி!!!!

தாமரை
28-08-2009, 04:26 AM
எழுதுவேன்,,, எழுதுவேன் ஆனா எழுதமாட்டேன்..

என்னத்தே கன்னையா வாரிசு
ஆரென்.

aren
28-08-2009, 05:49 AM
எழுதுவேன்,,, எழுதுவேன் ஆனா எழுதமாட்டேன்..

என்னத்தே கன்னையா வாரிசு
ஆரென்.

யார்மேலோ இருக்கும் கோபத்தை என்மீது ஏன் காண்பிக்கிறீர்கள். நான் பாவம்ங்க.

ஓவியன்
01-09-2009, 04:18 AM
நல்ல கட்டுரை, எக்காலத்துக்கும் பொருந்துவது....!

ஆரென் அண்ணாவின் கட்டுரையை எதிர்பார்த்தபடி காத்திருக்கின்றேன்.

பிரம்மத்ராஜா
05-09-2009, 07:17 AM
யார்மேலோ இருக்கும் கோபத்தை என்மீது ஏன் காண்பிக்கிறீர்கள். நான் பாவம்ங்க.



நீங்கள் பாவம்தான் லீமன் பிரதர்ஸ் வீழ்ந்த விவரம் கொஞ்சம் சொல்லுங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான்