PDA

View Full Version : கண்டுபிடியுங்கள்



ரங்கராஜன்
23-10-2008, 03:36 PM
ஒரு கூட்டத்தில் ஆதாமும், ஏவாளும் கலந்து இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது. (அறிவியல் முளையுடன் யோசிக்கவும்)

விகடன்
23-10-2008, 03:46 PM
கூட்டத்துக்கெல்லாம் வருவாங்களா என்ன?
மொழி தெரிந்தால்த்தானே கூட்டத்திற்கு வருகை தர.

அப்படி மீறிவந்தாலும்
வயது கூடியவர்கள் இருவர் யாரோ அவர்கள்தான்.

ரங்கராஜன்
23-10-2008, 03:52 PM
விராடன் அய்யோ அய்யோ நான் சொல்வது அரசியல் கூட்டம் அல்ல, மக்கள் அதிகமாக புழங்கும் இடம், நல்ல காமெடி நீங்க, உங்களின் பதில் தவறு

rajatemp
23-10-2008, 03:56 PM
மரவுடை தரித்திருந்தார்களோ அப்படியானால் எளிதில் கண்டுபிடித்துவிடலாமே

ரங்கராஜன்
23-10-2008, 03:59 PM
இல்லை கொஞ்சம் விஞ்ஞான புர்வமாக சிந்தியுங்கள்

அன்புரசிகன்
23-10-2008, 04:13 PM
மனித இனத்தின் ஆதியே ஆதாம் ஏவாள் என்கிறார்கள். அவர்களின் கூட்டத்தில் அவர்கள் இருவரும் தானே இருப்பார்கள்.... இதில் அவர்களை கண்டறிய ஏது கஷ்டம்... பனங்கிழங்கை பிளப்பதற்கு அரிவாள் எதற்கு???

ரங்கராஜன்
23-10-2008, 04:23 PM
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுங்கள், அரிவாள் அளவிற்க்கு சிந்திக்காமல், விரல் நக அளவிற்க்கு சிந்திதால் போதும் நண்பரே

விகடன்
23-10-2008, 05:03 PM
உங்களின் பதில் தவறு

என் பதிலில் என்ன குற்றம் கண்டீர்?
சொல்க்குற்றமா?
இல்லை
பொருளில் குற்றமா????

சொல்லும் அதை முதலில்...

ரங்கராஜன்
23-10-2008, 05:58 PM
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, முதலில் அது பதிலே இல்லை ஆஹா ஹா ஹா

ஓவியா
23-10-2008, 07:52 PM
மனித இனத்தின் ஆதியே ஆதாம் ஏவாள் என்கிறார்கள். அவர்களின் கூட்டத்தில் அவர்கள் இருவரும் தானே இருப்பார்கள்.... இதில் அவர்களை கண்டறிய ஏது கஷ்டம்... பனங்கிழங்கை பிளப்பதற்கு அரிவாள் எதற்கு???

நீங்க அஞ்சு வயசிலே பனகிழங்கை சுண்டுவிரலாம் உடைத்து சாப்பிட்டீறோ!! உங்கள் லெவலுக்கு நல்லா வெய்ட்டா யோசிக்கறீங்களே எசமான் :icon_b::icon_b::icon_b:,

மதுரை மைந்தன்
24-10-2008, 03:06 AM
ஒரு ஆப்பிளை கூட்டத்தின் நடுவில் வைத்து அந்த ஆப்பிளை யார் முதலில் எடுக்கிறார்களோ அது ஏவாள் கூட வருவது ஆதாம். சரியா?

ரங்கராஜன்
24-10-2008, 04:07 AM
இல்லை............ என்னப்பா யாரும் அறிவியல் மூளையுடன் யோசிக்க மாட்டீரிங்க

மதுரை மைந்தன்
24-10-2008, 04:41 AM
முதல்ல உங்க தமிழைக் கொஞ்சம் சரி பண்ணுங்க. ஏவாலோ எலி வாலோ இல்லை சரியான பெயர் ஏவாள்

ரங்கராஜன்
24-10-2008, 05:03 AM
மன்னிக்கவும் திருத்திவிடுகிறேன்

கண்மணி
24-10-2008, 06:33 AM
ஏவாள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடியாது. காரணம் என்ன?

இதனோட பதிலுக்கும், இந்தக் கேள்வியோட பதிலுக்கும் சம்மந்தமிருக்கே! :D :D :D

அதாவது ஆதாம் ஏவாளுக்கு தொப்புள் கிடையாது.. ஹி ஹி :D :D

ஏன்னா அவங்க தாய் வயிற்றில் இருந்து பிறந்தவங்க கிடையாது..

இந்தப் பதிலை மட்டும் சரின்னு சொல்லிடாதீங்க.. :D :D :D

ரங்கராஜன்
24-10-2008, 09:36 AM
இதுதான் சரி, அதாவது ஆதாம் ஏவாளுக்கு தொப்புள் கிடையாது

ஏன்னா அவங்க தாய் வயிற்றில் இருந்து பிறந்தவங்க கிடையாது.....
கண்மணி சரியா சொல்லிட்டீங்க, என் பெயரை சொல்லி இன்னைக்கு நல்லா சாப்பிடுங்க

மதுரை மைந்தன்
24-10-2008, 09:46 AM
இதுதான் சரி, அதாவது ஆதாம் ஏவாளுக்கு தொப்புள் கிடையாது

ஏன்னா அவங்க தாய் வயிற்றில் இருந்து பிறந்தவங்க கிடையாது.....
கண்மணி சரியா சொல்லிட்டீங்க, என் பெயரை சொல்லி இன்னைக்கு நல்லா சாப்பிடுங்க

பதில் அறிவு பூர்வகமாக இருந்தாலும் நடைமுறையில் இடிக்கிறதே. முதலில் கூட்டம் என்றால் எத்தனை பேர்? இவர்களது ஆடைகளை ஒவ்வொனறாக நீக்கி யாருக்குத் தொப்புள் இருக்கிறது யாருக்கு இல்லை என்று கண்டறிவதற்குள் போதுமடா சாமி:lachen001:

ரங்கராஜன்
24-10-2008, 10:47 AM
திரு.மதுரைவீரன்

நான் என் கேள்வியில் கூட்டம் என்று மட்டும் தான் குறிப்பிட்டு உள்ளேன், ஆனால் அவர்கள் ஆடை அணிந்து இருப்பதாக நான் எங்கும் குறிப்பிடவில்லையே

மதுரை மைந்தன்
24-10-2008, 11:06 AM
திரு.மதுரைவீரன்

நான் என் கேள்வியில் கூட்டம் என்று மட்டும் தான் குறிப்பிட்டு உள்ளேன், ஆனால் அவர்கள் ஆடை அணிந்து இருப்பதாக நான் எங்கும் குறிப்பிடவில்லையே


புத்திசாலித்தனமாக பதிலளித்திருக்கிறீர்கள். அறிவு பூர்வமாகப் பார்க்கையில் ஆதாம் ஏவாள் ஒரு கூட்டத்தில் இருந்தார்களென்றால் அவர்கள் பல சந்ததியினரை உருவாக்கி இருக்க வேண்டும். அவர்கள் 935 வருடங்கள் இருந்ததாக சரித்திரம் கூறுகிறது. மேலும் இலை தளைகளை அவர்கள் ஆடைகளாக அணியக் கற்றறு விட்டனர் என்றும் சரித்திரம் கூறுகிறது. இப்போ என்ன சொல்லி சமாளிக்கப் போகிறீக்கள்?:smilie_abcfra:

ரங்கராஜன்
24-10-2008, 11:30 AM
ஐயா சாமி
தெரியாமல் இந்த கேள்வி கேட்டுட்டேன் மன்னிச்சுடுங்க ஐயா, ஜென்மத்துக்கு இந்த மாதிரி கேட்க மாட்டேன்

மன்மதன்
24-10-2008, 12:36 PM
ஐயா சாமி
தெரியாமல் இந்த கேள்வி கேட்டுட்டேன் மன்னிச்சுடுங்க ஐயா, ஜென்மத்துக்கு இந்த மாதிரி கேட்க மாட்டேன்

ஹாஹ்ஹா,, மக்கள் இப்படித்தான் கலாய்ப்பாங்க.. கலங்கிடாதீங்க..:D:D இது மாதிரி நிறைய புதிர் :rolleyes: கொடுங்க...;)

சூரியன்
24-10-2008, 02:17 PM
கலங்கடிச்சுட்டீங்க

அமரன்
24-10-2008, 03:17 PM
அடுத்ததைக் கண்டுபிடிக்க தயாராக இருக்கோம்ல. மூர்த்தி எங்கே போயிட்டீங்க.

ஓவியா
25-10-2008, 01:35 PM
திரு.மதுரைவீரன்

நான் என் கேள்வியில் கூட்டம் என்று மட்டும் தான் குறிப்பிட்டு உள்ளேன், ஆனால் அவர்கள் ஆடை அணிந்து இருப்பதாக நான் எங்கும் குறிப்பிடவில்லையே

அட ராமா, இப்படியெல்லாம் வேற யோசித்து பதில் கொடுக்கனுமா :redface::redface:.

ஆக கடைசியா விடையை 'தொப்புளில்' வைத்து விட்டீர்களே!! :D