PDA

View Full Version : நான் நேசிக்கும் ஒருத்தி



ரங்கராஜன்
23-10-2008, 02:52 PM
எந்த பெண்ணையும் என்னால் அடைகாக்க முடியவில்லை
உன்னை தவிர என்னை முதலில்
அடைக்காத்தவளே

உன் நினைவுகளுடன் உன்னையும் சுமக்க நினைத்தேன்
நீ அத்ற்க்கு முன்பே என்னை அதிகம்
சுமந்துவிட்டாய்

எந்த நிலையிலும் என்னை நேசிக்கும் ஒருத்தியே
எப்பொழுதாவது கேள்! உனக்கு தர என்னிடம்
உள்ளதெல்லாம் ஒன்று தான்

இந்தா எடுத்துக்கொள் நீ தந்த உயிரை.

http://blog.americanfeast.com/images/Mother%20&%20Infant.jpg

அறிஞர்
23-10-2008, 03:05 PM
இந்த நேசிப்பு இணையற்றது...

இதற்கு ஈடு எது உண்டு...

வாழ்த்துக்கள் மூர்த்தி

rajatemp
23-10-2008, 04:03 PM
அம்மா ஒவ்வொரு உயிரும் ஏங்கும் உறவு

அமரன்
24-10-2008, 08:26 AM
"உடல் மண்ணுக்கு உயிர் அன்னைக்கு"
கவிதை படிக்க நன்றாக இருக்கு.
பாராட்டுக்கள் மூர்த்தி

தீபா
24-10-2008, 09:39 AM
எந்த அன்னையு மகன் உயிரைக் கேட்கமாட்டாள்..

அன்னைக்கு அன்பைக் காட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்து ஈடாக்க முடியாது..

வாழ்த்துக்கள்... உங்கள் கவிதையை மேலும் செம்மை படுத்துங்கள்.

samuthraselvam
08-05-2009, 04:06 AM
அன்னையை போற்றும் கவிதை அழகு....

கருவறையில் நம்மை சுமந்த காவல் தெய்வம் அன்னை...

அணைக்கு இணை இந்த உலத்திலேயே எதுவும் இல்லை...

பாராட்டுகள் அண்ணா...

கா.ரமேஷ்
08-05-2009, 11:37 AM
உயிரை பத்திரப்படுத்தி நமக்கு
உயர்வான பரிசளித்தவள் அன்னை...
திருப்பி கேட்பது என்பது அவளுக்கு
இயலாத காரியம்...
அந்த அரவணைப்பிற்க்கு திரும்ப செல்வதும்
முடியாத காரியம்...
அன்பை உயிராக்கி
மடியை கருவாக்கி
மறுபடியும் பிறக்கலாம் - அன்னைக்கு
மகிழ்ச்சியை கொடுக்கலாம்....!!

பாரதி
16-05-2009, 03:56 PM
நல்ல முயற்சி மூர்த்தி. மன்றத்தில் தாய்க்கு, தந்தைக்கு, பாட்டிக்கு என உறவுகள் படைத்த கவிதைகள் உண்டு. அதிலே இக்கவிதையும் இடம் பெறட்டும். தொடர்ந்து எழுதுங்கள்.