PDA

View Full Version : சுஜாதாவின் நேர்மை



ரங்கராஜன்
23-10-2008, 10:31 AM
wgwrgeg

பாரதி
23-10-2008, 11:43 AM
ஆ....!!! பலரைப் போல வேடம் போடத் தெரியாத, நடிக்கத்தெரியாத மனிதர் அவர். எழுத்து மட்டுமே அவரை முன்னிறுத்தியது. பலரின் மானசீக குரு அவர்.

வாழும் காலத்தில் பலரின் அருமை நமக்குத்தெரிவதில்லை; பின்னர் எத்தனை முயன்றாலும் அந்த காலம் திரும்பி வரப்போவதில்லை.

நெகிழ்ச்சியான இந்த நினைவை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மூர்த்தி.

mukilan
23-10-2008, 02:27 PM
இப்போழுதுதான் எழுதுகிறீர்களா அருமை மூர்த்தி. நல்ல வாசகராய் நீங்கள் இருந்ததாலேயே நல்ல எழுத்தாளுமை தெரிகிறது. சுஜாதாவின் தாக்கம் உங்களை எந்த அளவிற்கு பாதித்தது என்பதை அழகாக வெளியிட்டுள்ளீர்கள். அறிவியல் தமிழின் ஆசான் சுஜாதா என்றால் மிகையாகாது. இன்னமும் எழுதுங்கள். வாழ்த்துகள்.

Narathar
24-10-2008, 03:39 AM
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த சம்பவத்தைக்கூட மிக நேர்த்தியாக ஒரு சிறுகதைபோல் வடித்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் இப்போதுதான் எழுத ஆரம்பிட்ய்க்துள்ளீர்கள் என்று நினைக்கும் போது ஆச்சர்யமாக உள்ளது

அமரன்
24-10-2008, 03:37 PM
நெகிழ்ச்சியான நிகழ்வு. எதை அனுபவித்தீர்களோ அதை அனுபவிக்கும் விதமாக தந்துள்ளீர்கள். சுஜாதா மீதான மரியாதை கூடிக்கொண்டே போகிறது.

shibly591
24-10-2008, 04:42 PM
அருமை நண்பரே...

சுஜாதாவை எப்படி மறப்பது..??அண்மையில் அவரது அரிசி என்ற சிறுகதை படித்தேன்..சுஜாதாவுக்கு நிகர் சுஜாதாதான்

இளசு
24-10-2008, 08:08 PM
சுஜாதாவுக்குக் கிடைத்த நல்ல அங்கீகாரங்களில் ஒன்றாய்
இப்படைப்பைக் கொள்ளலாம்..

தமக்கு நிகழ்ந்த இருதய அறுவைசிகிச்சையையும் சுவையாய்க் கதைபோல் எழுதியவர் சுஜாதா..

அவரின் இறுதி நிகழ்வை.. அவர் பாதிப்பில்... அவர் பாணியில்..

பாராட்டுகள் மூர்த்தி அவர்களே..

நீங்கள் தொடர்ந்து எழுதுவதே - உங்கள் மானசீக குருவுக்கு நிஜ அஞ்சலி..

தீபா
25-10-2008, 02:32 AM
சுஜாதா உங்களுக்குக் கொடுத்தது நாணயங்கள் இல்லை.. எழுத்தாளுமைக்கான விதை..

தொடருங்கள்:.

தங்கவேல்
25-10-2008, 05:00 AM
ஆயிரம் பேர் சுஜாதாவைப் பற்றிய அஞ்சலிக் கட்டுரைகள் எழுதலாம். ஆனால் அது எல்லாவற்றிலும் போற்றுதலும், அவருடனான மறுதலிப்புகளும் அதற்கான நியாய தர்மங்களும் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் உண்மை நிலை : ஒரு எழுத்தாளனைக் கொண்டாடுவது பத்திரிக்கைகளோ, மீடியாக்களோ அல்ல. வாசகன். வாசகன் தான் எழுத்தாளனை வாழவைத்துக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட வாசகனிடமிருந்து வரும் வரிதான் எழுத்தாளனின் எழுத்துக்கு மணிமுடியாய் ஜொலிக்கும். அப்படிப்பட்ட வரிகள் தான் உங்களது மூர்த்தி.

சுஜாதாவை நினைத்துப் பெருமையாய் இருக்கிறது. உங்களைப் போன்ற மனிதர்களை தன்னையும், தன் எழுத்தையும் நேசிக்க வைத்திருக்கிறாரே என்று.

ரங்கராஜன்
25-10-2008, 08:50 AM
நன்றி நண்பர்களே
உங்களுக்கு ஒரு செய்தி சொன்னால் நம்பமாட்டீர்கள், நான் மறக்கும் துடிக்கும், மறைக்க துடிக்கும் செய்தி, மயானத்தில் நடந்த அவரின் இறுதி அஞ்சலிக்கு வந்தது மொத்தமே 25 பேர் தான், அதில் பாதி பேர் அவரின் சொந்தகாரர்கள், நடிகர் பார்த்திபன், s.ve.சேகர்,டைரக்டர் வச்ந்த், கார்ட்டுனிஸ்ட் மதன், தேசிகன், எழுத்தாளர் பாலகுமாரன், வாசகர்கள், மாயானத்தில் வேலை செய்பவர்கள் அவ்வளவே, எவ்வுளவே பெரிய எழுத்தாளர், அறிவாளி, சாதனையாளர்
அவருக்கு போய்...............................

பாரதி
25-10-2008, 05:11 PM
இன்னொரு பாரதியாரைப்போன்றே....!!!?மிகவும் வருத்தமாக இருக்கிறது மூர்த்தி.

தங்கவேல்
28-10-2008, 02:04 AM
மூர்த்தி இந்தப் புகழ் இருக்கிறதே புகழ், மனிதர்களுக்கு சில விஷயங்களை மறக்க அடித்து விடும். எந்தத் தலைவனும் அடி மட்டத்தொண்டனை மதிப்பதில்லை. எந்த நடிகனும் அவனது ரசிகனை மதிப்பதில்லை. அவர்கள் மதிப்பது அடிப்பொடி, மலர்தூவிக்களை மட்டுமே. ஆனால் அந்த அடிமட்டத் தொண்டனும், ரசிகனும் தான் உண்மையான அன்பினைக் கொண்டிருப்பான்.

மர்மயோகி
29-10-2008, 01:32 AM
நன்றி நண்பர்களே
உங்களுக்கு ஒரு செய்தி சொன்னால் நம்பமாட்டீர்கள், நான் மறக்கும் துடிக்கும், மறைக்க துடிக்கும் செய்தி, மயானத்தில் நடந்த அவரின் இறுதி அஞ்சலிக்கு வந்தது மொத்தமே 25 பேர் தான், அதில் பாதி பேர் அவரின் சொந்தகாரர்கள், நடிகர் பார்த்திபன், s.ve.சேகர்,டைரக்டர் வச்ந்த், கார்ட்டுனிஸ்ட் மதன், தேசிகன், எழுத்தாளர் பாலகுமாரன், வாசகர்கள், மாயானத்தில் வேலை செய்பவர்கள் அவ்வளவே, எவ்வுளவே பெரிய எழுத்தாளர், அறிவாளி, சாதனையாளர்
அவருக்கு போய்...............................

----------------

அவர் பணியாற்றிய ஊடகங்களின் சார்பில்கூட வரவில்லையா? என்ன மனிதர்கள் ஐயா இவர்கள்? இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு எனக்குக்கிடைக்கவில்லை. அதனால் ஒரு நல்ல மனிதருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன். அருகிலிருந்துமா இவர்கள்?

சில வருடங்களுக்குமுன் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. பத்து நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கித் தந்தவர் - எம்மைச் சந்தித்ததும் மணிக்கணக்கில் குழந்தையைப் போல் ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.

விஞ்ஞானி, எழுத்தாளர் போன்ற முகங்களைக் கடந்து அருமையான மனிதர் அவர். உங்கள் பதிவு என்னை அழவைக்கிறது ஐயா.

Maruthu
04-11-2008, 08:09 AM
இதைப் படித்ததும் எனக்கு ஒரு தத்துவப் பாடல் நினைவுக்கு வருகிறது

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?...கடைசி வரை யாரோ?...

உறவுகளின் நிலை இன்று இப்படித்தான் இருக்கிறது என்ன செய்ய?...நண்பரே!

உங்களின் மானசீக பக்திக்கும், உண்மையான மதிப்பிற்க்கும் கிடைத்த மரியாதை தான் அவருடைய இறுதி அஞலிக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பாக வந்தது.

உண்மையிலேயே நீங்கள் கொடுத்துவைத்தவர் நண்பரே!...


அன்புடன்...
மருது.

arun
22-12-2008, 07:27 PM
உண்மையில் நெகிழ்ச்சியான நிகழ்வு தான்
25 பேர் தான் வந்தார்கள் என்று சொல்லும்போது மனம் மிகவும் வருந்துகிறது

samuthraselvam
19-03-2009, 09:09 AM
வாசகர்களின் மணிமகுடம் அவர்.

அவரின் இழப்பு எழுத்து உலகிற்கு பெரும் இழப்பு...

அவர் உயிரோடு இருக்கும் போது தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் இறப்புக்குப் பின் இறுதி ஊர்வலத்தில் ஒருவரும் இல்லை எனும்போது மனம் வலிக்கவே செய்கிறது...

ஆனால் ஒருவருக்கும் கிடைக்காத அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது அண்ணா. நினைவுகளில் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் உங்களின் இந்த அனுபவம் & அவர் கொடுத்த நாணயம்....