PDA

View Full Version : மனிதாபிமானம் சிறுகதை



ரங்கராஜன்
22-10-2008, 05:20 PM
vwewgw

அமரன்
22-10-2008, 06:35 PM
படித்து முடித்ததும் உங்கள் கதையில் காணாத எல்லா "ஆ" வையும் ஒன்று சேர்த்து உரத்துக் கத்தனும் போல இருந்தது. அந்தளவுக்கு ஏதோ ஒன்று அழுத்த வலி தாங்க இயலவில்லை. கலங்கடிச்சிட்டீங்க மூர்த்தி. பாத்திரப்படைப்புகள் கனகச்சிதம். அதிலும் அந்த மரணித்த பயணி காவல்துறை அதிகாரி என்பது உச்சம். பல ரசங்களின் கலவையாக இருந்தாலும் கடைசில் மிஞ்சுவது கனம் மட்டுமே. அதுக்குப் பிறகு ராஜு என்ன செய்திருப்பான் என்ற சிந்தனையோட்டத்தை எந்தளவு முயன்றும் நிறுத்த முடியவில்லை. மனமார்ந்த பாராட்டுகள்.

மதி
23-10-2008, 01:45 AM
பின்னிட்டீங்க... அமரன் சொன்ன மாதிரி.. கனம் மிஞ்சியது உண்மை. அற்புதமாக எழுதுகிறீர்கள்..
வாழ்த்துகள்.

Narathar
23-10-2008, 03:44 AM
அற்புதமான கதைசொல்லும் பாணி..
கடைசியில் கதையை முடித்தவிதம் அதைவிட அற்புதம்
வாழ்த்துக்கள்!

மன்றத்தில் தொடர்ந்து பங்களிப்பு செழுத்துங்கள்

ரங்கராஜன்
23-10-2008, 04:21 AM
அனைவருக்கும் நன்றி, எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும், நான் இந்த கதையை tnsc11 fontல் எழுதிவிட்டு அதை யுனிக்கோடில் மாற்றினேன். அப்பொழுது தவறு நடந்து விட்டது, தீடீர் என்று எல்லா "ஆ"வும் மறைந்து விட்டது, இதை நான் தளத்தில் வெளியிட்ட பின் தான் கவனித்தேன்.இதனால் கதையின் ஓட்டம் தடைப்பட்டு இருக்கும் என்பதற்க்கு வருந்துகிறேன்.என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான் மன்னிக்கவும். கூறிப்பாக அமரனுக்கு என்ன அழகாக விமர்சித்து உள்ளீர்கள், தப்பையே பாராட்டாக சுட்டிகாட்டி இருக்கிறீர்கள், மிகவும் ரசித்தேன். நன்றி

பாரதி
23-10-2008, 06:47 AM
நன்றாக இருக்கிறது மூர்த்தி. உளம்கனிந்த பாராட்டு.

தேவையான வரிகளுக்கு அல்லது பத்திக்கு நடுவில் இடைவெளி விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உங்கள் பதிவின் கீழுள்ள "எடிட்" பொத்தானை அழுத்தி, நீங்களே பிழை திருத்தம் செய்து விடலாம் நண்பரே.

ரங்கராஜன்
23-10-2008, 07:30 AM
ஆஹா அந்த வசதி இருக்கா இதோ இப்பவே திருத்திவிடுகிறேன், நன்றி பாரதி

பாரதி
23-10-2008, 07:35 AM
உடனே செய்து விட்டீர்களே...!!!

அசத்தல்.

பார்த்திபன்
23-10-2008, 09:33 AM
அருமையான கதை...

வலியுடன் கூடிய (உங்கள் கதையால் வந்தது)...

பாராட்டுக்கள் (இது உங்களுக்கு)..

தொடர்ந்து எழுதுங்கள் காத்திருகிறோம்.

அன்புரசிகன்
23-10-2008, 09:44 AM
பாராட்டுக்கள் மூர்த்தி... விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு இதில் திறமையில்லை. கண்ணிமைக்காமல் வாசித்தேன். இதிலிருந்து புரியும் தானே....

சிவா.ஜி
23-10-2008, 10:13 AM
பிரமாதம் என ஒற்றைச் சொல்லில் சொல்லிச் சென்றுவிடமுடியாது. கதையைக் கொண்டு சென்ற விதம், பாத்திரங்களின் படைப்பு, உரையாடல்கள், காட்சியமைப்பு என அனைத்தும் அருமை.

அண்ணன் தங்கையின் சீண்டல்கள் வெகு யதார்த்தம்.

முடிவு.......................கலங்க வைத்துவிட்டது. ஆரம்பம் முதல் கடைசி வரை சிறிதும் குறையாத டெம்போ. வாழ்த்துகள் மூர்த்தி. இன்னும் நிறைய எழுதுங்கள்.

MURALINITHISH
08-01-2009, 08:15 AM
நீங்க வீட்டில் இருந்து கிளம்புபோதே ஒரு முடிவோடு கிளம்பி விடுவீர்களா கதையை படிக்க ஆரம்பிக்கும் போதே இதயம் ஹை ஸ்பீடில் பயனிக்கிறது கடையில் கதையில் வரும் கார் போல சட்டென்று நிற்கிறது மனதின் கனத்தால் இப்படியும் காவல் துறையில் இருக்கிறார்களா ஒரு பெண்ணின் வாழ்க்கைதான் போய் விட்டது இன்னோரு பெண்ணின் வாழ்க்கையாவது காப்பற்ற வேண்டும் எவ்வளவு உன்னதமான வார்த்தை வாழ்த்துக்கள் நண்பா

ரங்கராஜன்
24-02-2009, 05:10 AM
வாழ்த்து சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி, தொடர்ந்து உங்கள் விமர்சனத்தை தாருங்கள்

samuthraselvam
24-02-2009, 07:37 AM
அண்ணா திரும்ப வந்துட்டிங்களா ? சந்தோசம். கதை மனதை என்னவோ செய்யுது .. இப்போதான் படிச்சேன். சந்தோஷமான குடும்பத்தில் பிறந்து பாசத்துடன் சண்டை போடும் தங்கை, அக்கறையுடன் கவனிக்கும் அம்மா, ரெண்டு நாளில் நடக்கும் கல்யாணத்தை எல்லாம் ஒருநொடியில் இழந்து விடுவோமோ என்ற பயத்தை அப்படியே கண் முன்னாடி காட்சிபடுத்திய மாதிரி இருந்தது. பாவம் அந்த காவலர். அவரின் மரணம் கண்களை நனைக்கிறது.

இளசு
01-03-2009, 07:26 PM
மனம் விட்டுட் சொல்கிறேன் -

சுஜாதா போன்ற தேர்ந்த படைப்பாளிகள் தரும் சிறுகதைபோல்
அத்தனை உயர்தரம்..

கதாபாத்திர அறிமுகங்கள், உரையாடல்களில் - மிளிர்கிறீர்கள் தக்ஸ்...

அலைபேசியில் ஒருவர் பேச்சு மட்டும் சொன்ன உத்திக்கு சிறப்பு பாராட்டுகள்.

, அழைப்புமணி இசை - கதைக்கு கைகொடுக்கச் செய்த திறனுக்கு சபாஷ்!

பூமகள்
19-03-2009, 04:45 AM
ஒரு தேர்ந்த எழுத்தாளரை உங்களுள் இருந்து வெளிக் காட்டியிருக்கும் மற்றொரு மாணிக்கப் படைப்பு..

செல்லத் தங்கையிடம் காட்டும் வேடிக்கை கோபங்கள்..

அம்மாவின் பாசம் கலந்த கண்டிப்பு..

தன் காதலியிடம் காட்டும் அந்த வெட்கம் கலந்த சீண்டல்..

கொய்யாப் பழம் விற்கும் சிறுவனின் வெகுளி/தந்திர பதில் உக்தி..

இறுதியில் அடிபட்டவரின் மரண வார்த்தைகள்.. சூழலுக்கான பதட்டம்... மனம் இன்னும் அடித்துக் கொண்டே இருக்கிறது..

அனைத்தும் சேர்ந்து என்னவோ செய்கிறது..

பெரியண்ணா உங்களை கண்டால் உச்சி முகர்ந்து முத்தமிட்டிருப்பார்... அரிய கதை.. ஆக்கம் அற்புதம்..

உளம் கனிந்த பாராட்டுகள் தக்ஸ்..

--

உங்கள் கதையை முடிந்தளவு ஒரே மூச்சாக படிக்க திட்டமிட்டிருந்தேன்.. படித்த அத்தனை கதைகளின் கனமும் சேர்த்து என்னை அழுத்துகிறது.. இந்த வலி தீர சில நாட்கள் ஆகுமென்றே தோன்றுகிறது..

என் முயற்சியில் தோற்றுவிடுவேன் தக்ஸ்.. அது உங்கள் கதைகளுக்கு வெற்றி என்றே கொள்ளலாம்..

கலக்கல் தக்ஸ்... (பெரிய ஆளானா எங்களை எல்லாம் மறந்துடாதீங்க.... :))

ரங்கராஜன்
19-03-2009, 05:24 AM
நன்றி பூமகள்

உங்களின் விமர்சனங்களுக்கு, வாழ்த்துகளுக்கும், தொடருங்கள்

dellas
20-08-2015, 12:38 PM
பழைய பதிவுகளை அசை போடுவதில் ஒரு சுகம்.

அருமையான கதை. உயிர்(கள்) மீது நேசம் கொண்ட இருவரின் எண்ணங்களும் இதயத்தை துளைத்து விட்டது.

பாராட்டுக்கள்.

Keelai Naadaan
22-08-2015, 04:50 AM
கதையை படித்து விட்டு வெகு நேரம் வரை அந்த மனிதர்களைப் பற்றிய சிந்தனையிலிருந்து வெளியே வர இயலவில்லை.

கதாசிரிய நண்பருக்கு பாராட்டுக்கள்