PDA

View Full Version : சுழற்சிகள்!!- பணவீக்கம் ஒரு எளிய விளக்கம்



கண்மணி
22-10-2008, 07:29 AM
இது ஜோக்கா மின்னஞ்சலில் வந்தது. படிச்சுப் பார்த்தா சிரிப்பும் வந்தது சிந்தனையும் வந்தது. ஆனால் பணவீக்கத்தை இவ்வளவு எளிதா விளக்கமுடியுமான்னு தெரியலை.

சிரிப்பு வரலைன்னா மன்ற நிர்வாகிகள் சரியான பகுதிக்கு இதை மாத்திடுங்கோ.


ஒரே ஒரு உலகத்தில ஒரே ரு தீவு இருந்தது, (ஹி.. ஹி..)

அந்தத் தீவில மூணு பேரு இருந்தாங்க. மதி, பென்ஸ், சிவாஜி..

நம்ம மதிக்கு அந்த தீவில் இருக்கிற நிலம் சொந்தம்.

பென்ஸ் கிட்ட ஒரு 100 ரூபா பணம் இருந்திச்சி

சிவாஜி கிட்ட 100 ரூபா பணம் இருந்திச்சு.

அப்ப தீவோட பணமதிப்பு 200 ரூபாய்.

சிவாஜி குடும்பஸ்தர்.. சரி சரி சும்மா பணமா வைக்காம நிலம் வாங்கிப் போடலாம்னு 100 ரூபாயைக் கொடுத்து மதிகிட்ட இருந்து நிலத்தை எழுதி வாங்கிட்டாரு.

மதியும் சந்தோஷமா வித்துட்டாரு.. விடலைப் பையனாச்சே..

அப்ப தீவோட மதிப்பு 300 ரூபாய் நில மதிப்பையும் சேர்த்து.

பென்ஸ் யோசிச்சாரு.. ஆஹா நிலம் மதிப்பு உயருமே அப்படின்னு மதியை தாஜா பண்ணி 100 ரூபா கடன் வாங்கி 200 ரூபா குடுத்து சிவாஜி கிட்ட நிலத்தை வாங்கிட்டாரு.

இப்ப நிலத்தோட விலை 200 ரூபா. சிவாஜி கிட்ட இருநூறு ரூபா ஆக தீவோட மொத்த மதிப்பு 400 ரூபா ஆச்சு. பென்ஸ் மதிக்கு 100ரூபா தரணும்.

மதிக்கு வேற சொந்த இடம் இல்லாததால கல்யாணம் தட்டிப் போயிகிட்டே இருந்ததா, மெல்ல சிவாஜியை நைஸ் பண்ணி 200 ரூபா கடன் வாங்கினாரு.. பென்ஸ் மொதல்லயே 100 ரூபா தரணும் இல்லியா? அதோட சேர்த்து 300 ரூபாய்க்கு நிலத்தைப் பேசி முடிச்சாரு..

இப்ப தீவோட மதிப்பு, நிலம் 300 ரூபா, பென்ஸோட கையில 200 ரூபா ஆக 500 ரூபா ஆயிடுச்சி.. மதி சிவாஜிக்கு 200 ரூபா தரணும்.

அடுத்து சிவாஜி மதிகிட்ட இருந்து அந்த நிலத்தை வாங்கினாரு. எப்படி? பென்ஸ்கிட்ட 200 ரூபா கடன் வாங்கி, மதி ஏற்கனவே 200 ரூபா தரணுமே அதையும் காட்டி 400 ரூபாய்க்கு வாங்கிட்டார்.

நிலம் சிவாஜிக்கு 400 ரூபாய் மதி கையில 200 ரூபாய். தீவோட மதிப்பு 600 ரூபா. சிவாஜி பென்ஸூக்கு 200 ரூபா தரணும்.

இப்படி சிவாஜி, பென்ஸ், மதி மூணு பேரும் மாத்தி மாத்தி ஒருத்தர்கிட்ட ஒருத்தர் வாங்கி வித்ததினால நிலத்தின் விலை 5000க்கு மேல எகிறிடுச்சி.. ஒருத்தொருக்கொருத்தர் கொடுக்க வேண்டிய கடனும் எகிறிடுச்சி..

இன்றைய நிலை. நிலம் சிவாஜி வசம். மதிப்பு 5000 ரூபாய்.
சிவாஜி பென்ஸூக்கு தரவேண்டியது 200 ரூபாய். ஆகத் தீவின் மதிப்பு 5200 ரூபாய். மதி கையில 200 ரூபா இருக்கு. பென்ஸூக்கு சிவாஜி 200 ரூபா தரணும்.


மதிக்கு நிலம் வாங்கற ஆசையே போயிடுச்சி. பென்ஸ் பணம் கேட்டு நெருக்கறாரு. சிவாஜிக்கோ நிலத்தை விக்க முடியலை. என்ன செய்ய?

கடன் கொடுத்த பென்ஸ் கையில ஒண்ணுமில்லாம பூவாவுக்கு சிங்கியடிக்க ஆரம்பிச்சிடறார். உடனே சிவாஜி மேல கேஸ் போடறாரு.

சிவாஜி வேற வழியில்லாம நிலத்தை பென்ஸூக்கே எழுதிக் கொடுத்துட்டாரு..

இப்போ பணமா மதிகிட்ட 200 ரூபா இருக்கு, பென்ஸ் கிட்ட மதிப்பே இல்லாத நிலம் இருக்கு. சிவாஜி போண்டி ஆயிட்டாரு. ஆக தீவின் பணமதிப்பு மறுபடியும் 200 ஆயிடுச்சி.


ஆக,

200 ரூபா வீங்கி வீங்கி 5200 ஆகி திடீர்னு வெடிச்சு சுருங்கி மறுபடி 200ரூபா ஆயிடுச்சி.

முழிச்சுகிட்ட மதி பொழைச்சுகிட்டான். அவன் தான் இப்பொ தீவோட பணக்காரன். சொத்தை கடைசியா வாங்கிய சிவாஜி சொத்தையாகிட்டாரு. மாட்டிகிட்டு முழிச்ச பென்ஸ் பொறம்போக்கு...... நிலத்திற்கு சொந்தக்காரர் மாதிரி ஆயிட்டாரு.

(சிவாஜி, பென்ஸ், மதி ஆகியவர்களின் "தலை"விதியைப் பார்த்து இந்தக் கதை உண்மையோ என்றுச் சந்தேகிப்பதற்கு கதாசிரியர் பொறுப்பல்ல.:D:D:D)

இந்தக் கதை எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்குங்களா? இதுதானே தினம் தினம் நடக்கிற பங்குச்சந்தை வியாபாரம், சொத்துவியாபாரம் இப்படி. இதை ஸ்பெகுலேஷன் மார்க்கெட் அப்படின்னுச் சொல்றாங்க..

இதில இருந்த் தப்பிக்க வழி இருக்கா? இருக்கு மாதிரியும் தெரியுது இல்லாத மாதிரியும் தெரியுது, ஆனா இந்தப் பணம் சுத்துற சுத்துல தலை சுத்துதுங்களே.. பூமி, சூரியன், நட்சத்திரக் கூட்டங்கள், பேரண்டம் எல்லாம் இதனாலதான் கிறுகிறுத்துப் போய் சுத்திகிட்டே இருக்குதுங்களாம்.

எதுக்கும் கொஞ்சம் உட்கார்ந்து ஒரு டம்ளர் ஜில்லுன்னு மோர்குடிச்சு ஆசுவாசப்படுத்திகிட்டுப் போங்க.

வர்ட்டா!:icon_b:

shibly591
22-10-2008, 07:37 AM
வாவ்....

பணவீக்கம் பற்றி மணிக்கணக்கில் பல்கலையில் படித்தும் கிடைக்காத தெளிவு உங்களது இக்கதையை ( ! ) படிக்கையில் கிடைத்தது...

பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே.....

சிவா.ஜி
22-10-2008, 07:37 AM
எத்தனை நாளா திட்டம் போட்டீங்க கண்மணி....? கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கிற முடியையும் பிச்சிக்க வெச்சுட்டீங்களே....!:frown:

நிலத்து மதிப்பு எகிறன விதத்தைப் படிச்சு முடிக்கறதுக்குள்ள....முதுகுப் பக்கம் திருப்பிக்கிட்ட முகத்தை முன் பக்கமா மாத்த முடியல....!!

ஆனாலும் ஸ்பெக்குலேஷனைப் பற்றி என்னைப் போல சாமான்யனும் புரிஞ்சிக்கற மாதிரிதான் இருக்குன்னு நினைக்கிறேன்...

நல்லாருக்கு கண்மணி.....நல்லாருங்க....!!!!!!!!!!!!:sauer028:

அன்புரசிகன்
22-10-2008, 07:57 AM
முடியல....................... :D

ஓவியன்
22-10-2008, 08:08 AM
டேய் யாரங்கே கண்மணியை அப்படியே அசையாம கெட்டியாகப் பிடிச்சு வையுங்க, நான் கோடாரியுடன் வர்றேன்...........

:violent-smiley-010:

கண்மணி
22-10-2008, 09:27 AM
டேய் யாரங்கே கண்மணியை அப்படியே அசையாம கெட்டியாகப் பிடிச்சு வையுங்க, நான் கோடாரியுடன் வர்றேன்...........

:violent-smiley-010:
ஓ உங்க கதையை எழுதலியேன்னு கோபமா? எழுதிட்டாப் போச்சு.:lachen001::lachen001::lachen001:

சுகந்தப்ரீதன்
22-10-2008, 09:54 AM
ஓஓஓஓஓ... இதைத்தான் சுத்தி சுத்தி கும்மியடிச்சி ஓஞ்சு உட்காந்துட்டான்னு சொல்றாங்களா...??:mini023:

சும்மா சொல்லக்கூடாது கண்மணி... இதுக்கு மேல எளிமையா பணவீக்கத்தை யாராலயும் பெருக்க முடியாதும்மா....!!:wuerg019:

கண்மணி
22-10-2008, 09:55 AM
ஹி ஹி மக்கள் பண வீக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கணும். அதான் கொஞ்சம் கதையை முதல்ல மாத்தி எழுதிட்டேன்.

இப்போ பிரேக் ஈவன்.. அதாவது சமநிலையைக் கடத்தல் பற்றிச் சொல்லணும். அப்பதான் தெளிவாக் குழப்ப முடியும்.

கதையில் ப்ரேக்கிங் பாயிண்ட் அவ்வளவுதூரம் இருக்கறதில்லை. ஷேர் மார்க்கெட்ல இதை எதுவோ ஒரு ரேசியோ அப்படின்னு சொல்லுவாங்களாம். இப்போ கதையில் பிரேக் எங்க விழும் என்று பார்ப்போம்.


நிலம் சிவாஜிக்கு 400 ரூபாய்
மதி கையில 200 ரூபாய்.
தீவோட மதிப்பு 600 ரூபா.
சிவாஜி பென்ஸூக்கு 200 ரூபா தரணும்.

இப்போ மதி அந்த நிலத்தை வாங்கணும்னா 200 ரூபாதான் கொடுக்க முடியும்.
பென்ஸ் வாங்கணும்னா 200 ரூபா கடன் வாங்கி 200 ரூபாய் கடனுக்கு நேர் செய்து 400 ரூபாய்க்கு தான் வாங்க முடியும்.. அதுக்கு மேலப் போகணும்னா கற்பனைப் பணத்தில தானே விளையாட முடியும்...

பென்ஸ் சடக்குன்னு முழிச்சுகிட்டாரு.. கனவில வந்த 5000 ரூபா விலை மாயம்னு தெரிஞ்சுகிட்டு சிவாஜிகிட்ட என்னோட 200 ரூபாயைக் குடு இல்லாட்டி வட்டியைக் குடுன்னு கேட்கிறாரு..

சிவாஜி முழிக்கிறாரு.. அச்சச்சோ யோசிக்காம 400 ரூபா போட்டு இந்த இடத்தை வாங்கிட்டமே என்ன செய்யறதுன்னு யோசிச்சு, மதியைக் கெஞ்சராறு 200 ரூபாய்க்கு இடத்தை வாங்கிக்கோன்னு.

மதி யோசிச்சுப் பார்த்துட்டு இல்லீங்க வேணாம். அந்த இடம் எனக்கு ராசியில்லை. அதோட வாஸ்து சரியில்லை. அது என்கிட்ட இருந்தப்ப என் கையில பணமேயில்லை, அதை வித்த பின்னாடிதான் பணக்காரன் ஆனேன் அப்படின்னு சொல்லிடறாரு.

வேற வழியில்லாம நம்ம சிவாஜி மஞ்சக் கடுதாசி குடுக்கவேண்டியதாப் போச்சி.(Bankrupt) நிலத்தை பென்ஸூக்கு குடுத்திடறாரு..

பென்ஸ் நிலச் சுவான்தார் ஆகிடறார். ஆனால் என்ன பிரயோசனம். பணமில்லை.

ஹி ஹி.. இப்பொ கண்ல விளக்கெண்ணை விட்டுகிட்டு வந்து சாவகாசமா கதையில இன்னும் என்ன தப்பு இருக்குன்னு கண்டு பிடிங்க.

கண்மணி
22-10-2008, 09:57 AM
ஓஓஓஓஓ... இதைத்தான் சுத்தி சுத்தி கும்மியடிச்சி ஓஞ்சு உட்காந்துட்டான்னு சொல்றாங்களா...??:mini023:

சும்மா சொல்லக்கூடாது கண்மணி... இதுக்கு மேல எளிமையா பணவீக்கத்தை யாராலயும் பெருக்க முடியாதும்மா....!!:wuerg019:

மலர்கிட்டச் சேராதேன்னு சொன்னா கேக்கறீங்களா? இப்போ பாருங்க...

சமநிலை உடைபாடு அப்படின்னு ஒரு அடி விழுந்திருக்கு...:D:D:D

இன்னும் என்னென்ன இருக்கோ! ஆண்டவா!

கண்மணி
22-10-2008, 10:15 AM
இப்போ இதையே கொஞ்சம் பெரிசாக்கிப் பார்ப்போம். 3 பேரு என்பது 10 பேராகி 200 ரூபா என்பது 2000 ஆனால் என்ன ஆகும்னு யோசிச்சுப் பார்த்தால்..

யாரவது ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் பணக்காரங்க ஆகியிர்ப்பாங்க. சிலர் செயற்கை பண வீக்கம் பெற்று வெடித்து பேங்க்ரப்ட் ஆகி போண்டியாகி இருப்பாங்க. பத்தில 5 பேராவது இந்தப் பேங்க்ரப்ச்யால பாதிக்கப் பட்டு இருப்பாங்க. ஏழைகள் அதிகமா இருப்பதற்கும், திடீர் பணக்காரர்கள் உண்டாவதற்கும், நொடித்துப் போவதற்கும் என்னவோ ஆண்டவன் சதி செஞ்சிட்டான்.. அதிர்ஷ்டம் அது இதுன்னு பழியைப் போடறவங்க இது எத்தனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளா நடந்துகிட்டு இருக்குன்னு ஆராய்ந்து பார்த்தால் இதில பகவான் ஒண்ணும் சதி செய்யலைன்னு ஈசியாப் புரிஞ்சிக்கலாம்.

வேகமான பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் சக்தியைப் பொருத்தது என்பது மேற்கத்தியப் பொருளாதாரம். அதுதான் இது.

ஆனால் பணத்திற்கு மதிப்பு என்பது கீழை நாட்டுக் கலாச்சாரம். இது மெதுவாய்த்தான் வளரும். ஆனால் கொஞ்சம் பலமாக இருக்கும்.

வேகமா வளருவதைப் புற்று நோய் என்பார்கள். சீரான வளர்ச்சிதான் முக்கியம் இல்லையா?

ஆமாங்க, நம்ம இந்தியப் பொருளாதாரத்திற்கு இந்தப் புற்று நோய் பீடிச்சிருச்சா இல்லியா?

சுகந்தப்ரீதன்
22-10-2008, 10:16 AM
மலர்கிட்டச் சேராதேன்னு சொன்னா கேக்கறீங்களா? இப்போ பாருங்க...
சமநிலை உடைபாடு அப்படின்னு ஒரு அடி விழுந்திருக்கு...:D:D:D
இன்னும் என்னென்ன இருக்கோ! ஆண்டவா!அம்மணி நீங்க குந்தவச்சு கும்மியடிக்க நாங்கத்தான் கிடைச்சமாக்கும்...:cool::cool::cool:

aren
22-10-2008, 10:37 AM
கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கிற முடியையும் பிச்சிக்க வெச்சுட்டீங்களே....!:frown:

sauer028:

உங்களுக்கு கொஞ்சமாவது முடி இருக்குதே பிச்சுக்கிறதுக்கு. ஆனால் அதுவும் இல்லாமல் ஒரு சிலர் இங்கே இருக்காங்களே, அவர்களைப் பற்றி என்ன சொல்வது!!!

aren
22-10-2008, 10:41 AM
முதல்ல நல்லா இருந்தது, ஆனால் அதை மேலும் குழப்பி இப்பொழுது எது சரி எது சரியில்லை என்று கணிக்க முடியாமல், குழம்பி போய்விட்டேன்.

சரி ஆளை விடுங்கப்பா!!!

தீபா
22-10-2008, 10:52 AM
உங்களுக்கு கொஞ்சமாவது முடி இருக்குதே பிச்சுக்கிறதுக்கு. ஆனால் அதுவும் இல்லாமல் ஒரு சிலர் இங்கே இருக்காங்களே, அவர்களைப் பற்றி என்ன சொல்வது!!!

நீங்க இந்தக் க்கதையில வருகிற ஒருத்தரைத்தான் சொல்றீங்கன்னு நான் யார் கிட்டையும் சொல்லமாட்டேன்.... :D

ஓவியன்
22-10-2008, 11:01 AM
முதல்ல நல்லா இருந்தது, ஆனால் அதை மேலும் குழப்பி இப்பொழுது எது சரி எது சரியில்லை என்று கணிக்க முடியாமல், குழம்பி போய்விட்டேன்.!!!

இதை நான் வழிமொழிகிறேன்......!!! :D:D:D

கண்மணி
22-10-2008, 11:03 AM
புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

1. ஒரு பொருளின் விலை மதிப்பு கூடும் என்ற எதிர்பார்ப்பில் வாங்கப் படுகிறது. இதற்குப் பெயதான் சொத்துக்கள். இவை உபயோகமுள்ள பொருட்கள் அல்ல. நிலம், தங்கம், வைரம், எனப் பலவகைப்படும்.

2. இதில் வாங்கியவர் பலர் இன்னும் விலைகூடும் இன்னும் விலைகூடும் என வாங்கி வாங்கிச் சேர்க்கின்றனர்..

3. இப்படி அதிகம் வாங்க வாங்க விலையேறிக் கொண்டே போகிறது.

4. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிலர் விலை அளவு கடந்துவிட்டதை அறிகின்றனர். தம்மிடம் உள்ளதை விற்க ஆரம்பிக்கின்றனர்

5. மக்கள் விற்பனைக்குப் போவதால் வாங்குபவர் குறைவதால் சொத்தின் மதிப்பு குறைய ஆரம்பிக்கிறது.

6. முதலில் வாங்கி முதலில் விற்றவர்கள் நல்ல லாபம் அடைகிறார்கள்.

7. மத்தியில் வாங்கி ஆரம்பத்திலேயே விற்காதவர்கள் இழுபறியில் சிக்கிக் கொள்கின்றனர். விற்பதா வேண்டாமா என்றக் குழப்பத்தில் பாதிக்கு மேல் இழக்கின்றனர்

8. ஐய்யய்யோ பஸ்ஸை மிஸ் பண்ணிடுவோமே எனக் கடைசியில் வேகவேகமாக வந்து வாங்கியவர்கள் ஆண்டியாகி விடுகின்றனர்.


இதெல்லாம் உழைக்காமல் வாங்கி விற்கும் வியாபாரங்கள். யூக வணிகங்கள். இந்த யூக வணிகங்கள் பொருளாதாரத்தைத் தாக்கும் நோய்கள்,

பணவீக்கம் என்பதன் படிகள் - அதிகப் படியான கொள்முதல் - விலைவாசி உயர்வு

வெடிப்பு, பணமதிப்பு வீழ்ச்சி என்பதன் படிகள் - விலைவாசி உயர்வால் வியாபாரக்குறைவு - உற்பத்தி முடக்கம் - பணத்தட்டுப்பாடு - திவால் - நஷ்டக் கணக்குகள்

பண்வீக்கத்தைக் குறைக்க - செயற்கையாக ரிசர்வ் வங்கி பணத்தட்டுப்பாட்டை உண்டாக்குவது.. அதாவது வட்டி விகித அதிகரிப்பு. இதனால் கடன் பெறுதல் குறைகிறது. சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படுத்தப் பட்டு விலைவாசி உயர்வு வேகம் மட்டுப்படுத்தப் படுகிறது.

வீழ்ச்சிக்குப் பிறகு : ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து பணப் புழக்கத்தை அதிகமாக்குகிறது. இதனால் வியாபாரம் சோம்பல் முறித்து மெதுவாக நகரத் துவங்குகிறது,

இப்படி அப்பப்ப பிரேக் போட்டு வண்டியை ஓட்டினா கொஞ்சம் பாதுகாப்பாப் போகலாம். இல்லைன்னா....

:rolleyes::rolleyes::traurig001::traurig001:

கண்மணி
22-10-2008, 11:17 AM
முதல்ல நல்லா இருந்தது, ஆனால் அதை மேலும் குழப்பி இப்பொழுது எது சரி எது சரியில்லை என்று கணிக்க முடியாமல், குழம்பி போய்விட்டேன்.

சரி ஆளை விடுங்கப்பா!!!

இதுக்கு மேல சிரிக்க முடியாதுதாண்ணே! ஏன்னா அடிமடியிலே பகீர் பகீர்னு அனலடிக்குது இல்லையா?

aren
22-10-2008, 12:05 PM
பணவீக்கம் இதுதான் இப்பொழுது இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை.

நீங்கள் சொல்றதைவிட்டு வேறு விதமாகவும் இதை அலசலாம்.

இப்பொழுது ஒரு ஊரில் 100 பேர் வேலை செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அவர்கள் 100 பேருக்கும் தேவையான வேலைகள் கிடைத்து அவர்களுக்கும் சம்பளம் வேலைக்கு தகுந்தமாதிரி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

என்னுடைய கம்பெனியில் 10 பேர் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

எனக்கு திடீரென்று ஒரு புதிய ஆர்டர் வருகிறது அதை உடனடியாக செய்து முடிக்கவேண்டும்.

நான் வேறு கம்பெனியில் வேலை செய்பவர்களை என்னிடம் வந்து வேலை செய்யும்படி அழைக்கிறேன்.

அவர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் கொடுத்தால் வேலைக்கு வருகிறேன் என்கிறார்கள். நானும் சரியென்று சொல்லி அவர்களை அழைத்து வேலை கொடுக்கிறேன்.

இப்பொழுது என்னுடைய பொருளின் அசல்விலை அதிகமாகிறது. ஆகையால் நான் விற்கும் விலையைவிட கொஞ்சம் அதிகம் வைத்து விற்றால்தான் எனக்கு லாபம் கிடைக்கும். இதனால் பொருளின் விலை ஏறுகிறது.

வேறு கம்பெனியிலிருந்து என்னிடம் வேலைக்கு சிலர் வந்துவிட்டதால் அந்த கம்பெனியில் ஆட்கள் தட்டுப்பாடு, அவர்கள் அதிக சம்பளம் கொடுத்து இன்னொரு கம்பெனியிலிருந்து ஆட்களை எடுக்கிறார்கள். ஆகையால் அவர்களும் அவர்களுடைய பொருள்களை அதிக விலைக்கு விற்கிறார்கள்.

ஆனால் இப்பொழுது புதிதாக வேலை மாற்றியிருப்பவர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதால் அவர்களுக்கு நிறைய பணம் சேமிக்க முடிகிறது. ஆகையால் அவர்கள் தங்களுடைய செலவுகளை கொஞ்சம் ஆடம்பரமாக செய்கிறார்கள்.

பொருட்களின் விலை ஏறினாலும் கவலைப்படாமல் பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.

இதனால் இன்னும் விலை ஏறுகிறது.

இப்படி ஒவ்வொரு பொருளின் விலையும் ஏறும்பொழுது, குறைந்த சம்பளத்தில் இருப்பவர்கள் அதிகம் சம்பளம் கேட்பார்கள். அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும்பொழுது கம்பெனியில் தயாரிக்கும் பொருட்களின் அசல்விலை அதிகமாவதால் அவர்கள் விற்கும் விலையும் அதிகமாகும்.

விலைவாசி இப்படி உயர்ந்துகொண்டே போனால், பணவீக்கம் அதிகமாகும். அதாவது நம்மிடம் இருக்கும் பணத்திற்கு குறைவான பொருட்களையே வாங்கமுடியும்.

இரண்டு வருடத்திற்கு முன்பாக 10 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி வாங்கியிருந்தால் இப்பொழுது அதே பத்து ரூபாய்க்கு 800 கிராம் தக்காளி மட்டுமே வாங்கமுடியும். இதைத்தான் பணவீக்கம் என்று சொல்வார்கள்.

இதற்கு எது காரணம். அனைவருக்கும் வேலை கொடுத்ததால் வந்த பிரச்சனையா? மேலே சொன்ன காரணங்களைப் பார்த்தால், அனைவரும் வேலையில் இருந்ததால் ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனியிலிருந்து ஆட்களை அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுக்கவேண்டியிருந்தது.

இதனால் வந்த சங்கிலி பிரச்சனைதான் விலைவாசி உயர்வு.

மில்டன் கீயீன்ஸ் என்ற இங்கிலாந்து பொருளாதார நிபுணர் இதை அழகாக தன்னுடைய தியரியில் சொல்லியிருக்கிறார். இதைத்தான் கீயீனிஸியன் தியரி என்று சொல்வார்கள்.

கீயீன்ஸ் சொற்படி பார்த்தால் வேலையில்லாத் திண்டாட்டம் கொஞ்சமாவது இருக்கவேண்டும் என்பதே. அவர் குறைந்தது 10 சதவிகதமாவது வேலையில்லாதவர்கள் இருக்கவேண்டும், அப்பொழுதுதான் எப்பொழுது அதிக ஆட்கள் தேவைப்படுகிறதோ அவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தலாம், விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றார்.

ரொம்ப குழப்பிட்டேனா? இது உங்களுக்கு மட்டுமல்ல. இந்தத் தியரியை எழுதிய மில்டன் கீயீன்ஸூக்கும் ஒரு புரியாத புதிர்தான்.

தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிய
ஆரென்

மதி
22-10-2008, 12:05 PM
நல்ல கதை கண்மணிக்கா.... நல்லாவே புரிஞ்சுது.. விசயங்கல்லாம்...

கதையில வர்ற மதியை கொஞ்சம் அறிவாளியா காமிச்சிருக்கீங்க போல... ஹிஹி...

கண்மணி
22-10-2008, 12:28 PM
மில்டன் கீயீன்ஸ் என்ற இங்கிலாந்து பொருளாதார நிபுணர் இதை அழகாக தன்னுடைய தியரியில் சொல்லியிருக்கிறார். இதைத்தான் கீயீனிஸியன் தியரி என்று சொல்வார்கள்.

கீயீன்ஸ் சொற்படி பார்த்தால் வேலையில்லாத் திண்டாட்டம் கொஞ்சமாவது இருக்கவேண்டும் என்பதே. அவர் குறைந்தது 10 சதவிகதமாவது வேலையில்லாதவர்கள் இருக்கவேண்டும், அப்பொழுதுதான் எப்பொழுது அதிக ஆட்கள் தேவைப்படுகிறதோ அவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தலாம், விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றார்.

ரொம்ப குழப்பிட்டேனா? இது உங்களுக்கு மட்டுமல்ல. இந்தத் தியரியை எழுதிய மில்டன் கீயீன்ஸூக்கும் ஒரு புரியாத புதிர்தான்.

தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிய
ஆரென்

கீயின்ஸ் என்ன சொல்றது, இயற்கையே அழகாக இந்தக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துதே!.. 20 வருடங்கள் மனிதன் வளர்ந்து 40 வருடங்கள் அயராமல் உழைத்து அப்புறம் படிப்படியாய் திறன்குறைந்து போகிறான்.

ஆக புது வேலைக்காரர்படை தான் முளைச்சி வந்துகிட்டே இருக்கே, அதே மாதிரி அந்தப் பக்கத்தில பழசும் கழிஞ்சுகிட்டே இருக்கே!!!

இப்படி வாழ்க்கைச் சக்கரமா இருக்கறதினாலதான் நான் எழுதினச் சின்னக் கதை மாதிரி பொருளாதார வண்டி புதை மணலில் சிக்கினாலும் சுதாரித்து மறுபடியும் ஓட ஆரம்பிச்சிடுது,

கண்மணி
22-10-2008, 12:34 PM
நல்ல கதை கண்மணிக்கா.... நல்லாவே புரிஞ்சுது.. விசயங்கல்லாம்...

கதையில வர்ற மதியை கொஞ்சம் அறிவாளியா காமிச்சிருக்கீங்க போல... ஹிஹி...


அறிவாளி இல்லை. யதார்த்தவாதி. கையில கொஞ்சம் காசு இருக்கறப்ப கடன் வாங்கிக் கொஞ்சம் கஷ்டப்பட்டு செலவழிச்சவன் கையில காசில்லை என்றதும் அடடே 200 ரூபாய் நிலம் இப்போ 400 ரூபா ஆயிடுச்சே அடுத்த வருஷம் 600 ஆகிடும்னு கனவு கண்டிருக்கலாம். ஆனால் எந்தப் பே(க்)ங்கும் லோன் தரலை.. அப்புறம் தான் தெரியுது விலையைச் சிவாஜி குறைக்க ஆரம்பிக்கிறார்னு.. அப்ப நார்மலா எல்லா மனுஷனும் செய்யற மாதிரி மிஞ்சின வரைக்கும் லாபம்னு பணத்தைப் பதுக்கிட்டீங்க. அவ்வளவுதான்.

கொஞ்ச நாள் கழிச்சு பென்ஸ் கிட்ட குறைச்ச விலைக்கு அந்த நிலத்தை நீங்க வாங்கலாம் ஏன்னா பென்ஸ் கிட்ட பணம் கிடையாது. அதனால ரொம்ப நாள் வச்சுக்க மாட்டார். வித்துதான் ஆகணும். முடிஞ்சா சிவாஜிக்கு கஞ்சி ஊத்துங்க சாமி.. நீங்க நல்லா இருப்பீங்க.. :lachen001::lachen001::lachen001::lachen001:

aren
22-10-2008, 12:38 PM
கீயின்ஸ் என்ன சொல்றது, இயற்கையே அழகாக இந்தக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துதே!.. 20 வருடங்கள் மனிதன் வளர்ந்து 40 வருடங்கள் அயராமல் உழைத்து அப்புறம் படிப்படியாய் திறன்குறைந்து போகிறான்.

ஆக புது வேலைக்காரர்படை தான் முளைச்சி வந்துகிட்டே இருக்கே, அதே மாதிரி அந்தப் பக்கத்தில பழசும் கழிஞ்சுகிட்டே இருக்கே!!!

இப்படி வாழ்க்கைச் சக்கரமா இருக்கறதினாலதான் நான் எழுதினச் சின்னக் கதை மாதிரி பொருளாதார வண்டி புதை மணலில் சிக்கினாலும் சுதாரித்து மறுபடியும் ஓட ஆரம்பிச்சிடுது,

அப்படி ஆரம்பிச்சுத்தானே சாஃப்ட்வேர் நிபுணர்களின் சம்பளம் வெகு வேகமாக ஏறியது. புதிதாக வேலைக்கு ஆட்கள் வந்தாலும் அதைவிட டிமாண்ட் ஏறும்பொழுது சம்பளமும் ஏறுகிறதே. கீயின்ஸ் தியரி இன்றும் சரியென்றே படுகிறதே.

கண்மணி
22-10-2008, 12:49 PM
அப்படி ஆரம்பிச்சுத்தானே சாஃப்ட்வேர் நிபுணர்களின் சம்பளம் வெகு வேகமாக ஏறியது. புதிதாக வேலைக்கு ஆட்கள் வந்தாலும் அதைவிட டிமாண்ட் ஏறும்பொழுது சம்பளமும் ஏறுகிறதே. கீயின்ஸ் தியரி இன்றும் சரியென்றே படுகிறதே.

இன்னும் அந்தச் சமன்பாடு எட்டவில்லை இல்லையா அண்ணா.. எட்டிட்டா அப்புறம் கொஞ்சம் கஷ்டம்தான்,,, அதனாலதானே புதுசு புதுசா தேவைகளை உண்டாக்கி இந்தத் தொழிலை வள்ர்த்துகிட்டே இருக்கோம். அனாவசியமானது அப்படின்னு மக்கள் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா எஸ்கேப்பிட வேண்டியதுதான்.

கீயின்ஸ் தியரியில் ஏன் 10 சதவிகிதம்னு சொன்னார் 30 சதவிகிதம் இருந்தா தப்பா?

தப்பா இருக்கலாம். ஏன்னா அப்போ வேலை குடுக்கறவன் கை ஓங்கும். அடிமாட்டு விலைக்குக் கூப்பிடுவான். பண்ணையார், ஜமீந்தார் மாதிரி அடக்குமுறை அதிகமாக, அந்தத் துறையை மக்கள் விவசாயம் மாதிரி ஒதுக்க ஆரம்பிச்சிருவாங்க.. அப்போ 30 சதவிகிதம் குறைய ஆரம்பிக்கும்... அது இயற்கையாவே சரி ஆகிடுது இல்லையா?

10 சதவிகிதம் --- இதுக்கும் இப்போ ஆரம்பிக்கப் போற திறன் அடிப்படையில் 10 சதவிகிதம் ஆட்குறைப்பு என்னும் கலாச்சாரத்துக்கும் தொடர்பு இருக்காண்ணே?

மதுரை மைந்தன்
22-10-2008, 10:13 PM
உங்க கதையிலேயிருந்து ஒன்னு தெளிவாகுது. பேராசை பெரு நஷ்டம் என்பது தான். ஆசை வேண்டும் தான் வாழ்க்கைக்கு. ஆனால் பேராசை இம்மாதிரி பங்கு சந்தையில் பண மதலீடு செய்து சரிவு வந்தவுடன் நட்டப் பட வேண்டியது தான். சிறுக கட்டி பெருக வாழ் என்ற நமது மூதாயரின் பொன் மொழியை அனைவரும் நினைவு கொள்ள வேண்டும்.

சுகந்தப்ரீதன்
23-10-2008, 01:18 PM
ஆமாங்க, நம்ம இந்தியப் பொருளாதாரத்திற்கு இந்தப் புற்று நோய் பீடிச்சிருச்சா இல்லியா?அம்மணி... இப்படியெல்லாம் இந்தியமக்கள் யாரும் கேள்வி கேட்டுடக்கூடாதுன்னுதான் மக்களோட கோவணத்தை உருவி புத்துநோய்க்கு கட்டுப்போட்டு மறைக்க பாக்குறாங்க இந்திய பொருளாதார மருத்துவர்கள் ரெண்டுபேரும்...??:icon_p:

poornima
23-10-2008, 02:05 PM
கண்மணி மிகப் பலமான பாராட்டுகள் உங்களுக்கு..
இதை இதைவிட எளிதாக விளங்க வைக்க முடியாது..
இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தைப் பிரயோகத்தை எல்லோரும்
அவசியம் விளங்கி வைத்திருப்பது இன்றியமையாததாகிறது..

அவ்வகையில் நம் மன்றத்து மக்களை வைத்து நீங்கள் விளக்கிய இந்த பதிவு
சிந்தனைகுரிய - அவசியமான பதிவு

மீண்டும் பாராட்டுகள் கண்மணி

இளசு
24-10-2008, 07:31 PM
கண்மணிக்குப் பாராட்டுகள்..

எனக்கும் விளங்குகிறாற்போல் எடுத்துச் சொன்ன வளமை - அருமை!

அன்பின் ஆரென் சொன்ன கீயின்ஸ் கோட்பாடும் கூடுதல் பார்வை தந்தது..

காமாலை வந்த வீக்கம் - நோயின் குறி!
பணவீக்கமும் ஒருவகை நோய்தான்..

இதில் மேலை/ நம் அணுகுமுறையில் இதுவரை இருந்த வித்தியாசமும்
இன்று அது குறைந்து நாமும் வீங்கிவெடிக்கும் நிலையில் இருப்பதும்...

எல்லாம் வெடித்து பழையபடி பண்டமாற்றில் தொடங்குவோமோ????!!!!

shibly591
24-10-2008, 07:49 PM
எல்லாம் வெடித்து பழையபடி பண்டமாற்றில் தொடங்குவோமோ????!!!!


ஒரு கம்ப்யுட்டருக்கு 100 கிலோ அரிசி

ஒரு செல்போனுக்கு 10 கிலோ வெங்காயம்

கடைசியில்

ஒரு மனிதனுக்கு......................

இளசு
24-10-2008, 07:55 PM
ஒரு மனிதனுக்கு......................

ஹ்ஹ்ஹா..

மாடு செத்தா மனுசன் தின்னு, தோலை வச்சு மேளம் செய்யலாம்..

மனுசனுக்கு??!!!!!!

ஒண்ணும் தேறாது.. நாக்க மூக்க...:)

கண்மணி
13-11-2008, 12:49 PM
இதில் மேலை/ நம் அணுகுமுறையில் இதுவரை இருந்த வித்தியாசமும்
இன்று அது குறைந்து நாமும் வீங்கிவெடிக்கும் நிலையில் இருப்பதும்...

எல்லாம் வெடித்து பழையபடி பண்டமாற்றில் தொடங்குவோமோ????!!!!

கீழை நாட்டு அணுகுமுறை

உழைப்பு -> வருமானம் -> அன்றாட செலவு -> அத்தியாவசியச் செலவு -> சேமிப்பு -> சொத்துக் குவிப்பு -> ஆதிக்கம் -> ஆடம்பரம் -> ஊதாரிச் செலவு -> ஏழ்மை -> உழைப்பு என்ற சக்கரம்.


மேலைநாட்டு அணுகுமுறை

உழைப்பு -> செலவு -> உழைக்கவைத்தல் -> செலவு -> வாங்கி விற்றல் -> அரசங்கத்திடம் கையேந்தல் -> செலவு

நம்முடையத பழைய பொருளாதாரக் கொள்கை - வேல்யூ பேஸ்டு - அது மதிப்புச் சார்ந்த பொருளாதாரம்

புதுமுறையான திறந்த பொருளாதாரம் - போட்டி பொருளாதாரம். யூகப் பொருளாதாரம்.. அதனால் ஒன்றுமில்லாமலேயே மதிப்பு கூடி ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.

கண்மணி
13-11-2008, 01:03 PM
ஒரு கம்ப்யுட்டருக்கு 100 கிலோ அரிசி

ஒரு செல்போனுக்கு 10 கிலோ வெங்காயம்

கடைசியில்

ஒரு மனிதனுக்கு......................

செத்த கம்ப்யூட்டரும், செல்ஃபோனும் இவ்வளவு மதிப்பு வாய்ந்ததா? அடடா..

இதைப் படிச்சிப் பார்த்தப்பறம்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15373

இதைப் பார்த்தா வெளிய வர எதாவது வழி கிடைக்கும்னு தோணுது.

மதுரா
20-11-2008, 02:42 PM
பணவீக்கம் ஒரு எளிய விளக்கம்
அக்கா
கண்மணி அக்கா....
உங்கள் ஊரில் இதுக்கு பேர் தான் எளிய விளக்கமா........:traurig001::traurig001::traurig001::traurig001:

விளங்காததை விளங்கவில்லை என்று சொன்னால்....
விளங்கினவர்கள் வந்து இது கூட இந்த பெண்ணுக்கு விளங்கவில்லையே..
கண்மணியின் வேற பதிவுகள் எல்லாம் எங்க விளங்கன்னு சொல்வதை விட
எனக்கு விளங்கினது என்று விளங்காமலே சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுவது நல்லது.....

கண்மணி
23-11-2008, 01:10 AM
அக்கா
கண்மணி அக்கா....
உங்கள் ஊரில் இதுக்கு பேர் தான் எளிய விளக்கமா........:traurig001::traurig001::traurig001::traurig001:

விளங்காததை விளங்கவில்லை என்று சொன்னால்....
விளங்கினவர்கள் வந்து இது கூட இந்த பெண்ணுக்கு விளங்கவில்லையே..
கண்மணியின் வேற பதிவுகள் எல்லாம் எங்க விளங்கன்னு சொல்வதை விட
எனக்கு விளங்கினது என்று விளங்காமலே சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுவது நல்லது.....

மது - ராவா இருக்கிறவரைக்கும் இப்படித்தான், கொஞ்சம் ஓவராப் போகும். எதையாவது கலக்குங்க.. அதான் சொல்றேன் இல்ல.. கலக்குங்க. :D:D:D:D