PDA

View Full Version : மழை நனைக்கும் காதல் தேவதை

shibly591
22-10-2008, 07:02 AM
எனது 1000 வது பதிவு இது...

மழையில் நீ நனைகிறாய்..
அதனால்தான் தூறலாய் விழுந்த மழை
அடைமழையாய் அவதாரம் கொள்கிறது

குடை மறந்த உன் கைகள்
குளிரில் நடுங்கும்போது
என் உயிர் அதிகமாக நடுங்குகிறது

நனைந்த உன் ஆடைகளிலிருந்து
விழும் மழைத்துளிகளைப்பார்த்த
எனக்குள் வேர்விட்டது கொலை வெறி

இப்போது புரிகிறது
ஏன் இதன் பெயர்
"பருவ மழை" என்பது....

நனையும்போது சிரிக்கிறாய்
மின்னல்
வானிலா..?மண்ணிலா..?

நடக்கும்போது பாவாடையை
உயர்த்துகிறாய்
நிமிடத்துக்கு இருநூறை தாண்டப்போகிறது
என் உயிர்த்துடிப்பு

ஈரம் சொட்டும் கலைந்த கூந்தலை
விரல்களால் சரிசெய்கிறாய்..
நனையாத என் மனசு
மெல்ல மெல்ல கலைகிறது..

நீ நனையும் மழைநாளில்
நானும் மறந்து விடுகிறேன்..
என் கைகளில் குடை இருப்பதை..

எல்லோரும் உன்னையே பார்க்கிறார்கள்
என்னைப்போலவே..

அவர்கள் பார்வையில் தாபம்
எனது பார்வையில் தாகம்..

எதிர்பாரா கணமொன்றில்
சட்டென்று நின்றுபோனது மழை
நான் மட்டும் இன்னமும் நனைகிறேன்
என் காதல் நினைவுகளின் ஈரம் சொட்ட சொட்ட..!

சிவா.ஜி
22-10-2008, 07:17 AM
பருவ மழையின் பதம் சொன்ன வரிகள் அழகு. வண்ணங்களில் எண்ணம் சொன்ன அனைத்துமே அருமை. வானவில்லை கவிதையில் காட்டிய ஷிப்லிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

shibly591
22-10-2008, 07:21 AM
பருவ மழையின் பதம் சொன்ன வரிகள் அழகு. வண்ணங்களில் எண்ணம் சொன்ன அனைத்துமே அருமை. வானவில்லை கவிதையில் காட்டிய ஷிப்லிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

நன்றிகள் சிவா.ஜி...

நேற்று அடைமழையொன்றில் நனைந்தபடி ஒரு பெண் சென்று கொண்டிருந்தபோது எனக்குள் தோன்றிய எண்ணங்களே இவைகள்..

அந்தப்பெயர் தெரியாப்பெண்ணுக்கே எல்லாப்பெருமைகளும் சேரட்டும்..

1000 வது பதிவாக எதை எழுதுவது என்ற கேள்விக்கும் அந்தப்பெண்ணே விடையளித்தாள்....

சிவா.ஜி
22-10-2008, 07:29 AM
ஒரு கவிஞனுக்குக் காணும் பொருளெல்லாம் கவிதைக்குக் கரு கொடுக்கும். பல காலமாய் பாடு பொருளாய் இருக்கும் பருவப் பெண்ணை, அதுவும் மழை நனைத்த மங்கையைப் பார்த்தால்..........வண்ணக்கவிதை எண்ணத்தில் தோன்றாதா...? உங்களுக்குத் தோன்றியதில் வியப்பில்லை....விதைத்த வரிகளிலும் குறையில்லை.

shibly591
22-10-2008, 07:31 AM

நன்றிகள் அண்ணா....

பாபு
22-10-2008, 09:04 AM
நான் மட்டும் இன்னமும் நனைகிறேன்
என் காதல் நினைவுகளின் ஈரம் சொட்ட சொட்ட..!

வரிகள் அழகு !!

மன்மதன்
22-10-2008, 03:26 PM
பருவ மழையாய் பொழிந்த
ஷிப்லியின் 1000வது படைப்புக்கு
வாழ்த்துகள்..:icon_b:

கவிதையில் காதலையும்
தூக்கி இருக்கலாம்..

(கலர் கொடுக்கும் போது லைட் கலர் கொடுக்காதீங்க.
படிக்க சிரமமா இருக்கு.:))

பிச்சி
22-10-2008, 03:29 PM
ஜூரம் பிடித்துவிட்டது அண்ணா..

அன்புடன்
பிச்சி

shibly591
23-10-2008, 06:30 AM
நான் மட்டும் இன்னமும் நனைகிறேன்
என் காதல் நினைவுகளின் ஈரம் சொட்ட சொட்ட..!

வரிகள் அழகு !!

நன்றிகள் பாபு...

shibly591
23-10-2008, 06:33 AM
கவிதையில் காதலையும்
தூக்கி இருக்கலாம்..

(கலர் கொடுக்கும் போது லைட் கலர் கொடுக்காதீங்க.
படிக்க சிரமமா இருக்கு.:))

நன்றி நண்பரே...

காதலையும் தூக்கி இன்னொரு கவிதை எழுதி விட்டால் போச்சு...அதற்கென்ன..முயற்சிக்கிறேன்..

லைட் கலர் கொடுத்திருக்கும் வரிகளை மவுஸினிலால் செலெக்ட் செய்து வாசிங்க..அது லைட்டாத்தான் சொல்லப்படணும்...அப்படி ஒரு தணிக்கையான விசயம் அது நண்பரே..

நன்றிகள்

shibly591
23-10-2008, 06:34 AM
ஜூரம் பிடித்துவிட்டது அண்ணா..

அன்புடன்
பிச்சி

பிச்சி...

மருந்து மாத்திரை எழுதித்தருகிறேன்..அதற்குண்டான 3500 ரூபாவை செட்டில் பண்ணிடுங்க...

நன்றி தங்கையே..(உங்களுக்கும் நான் அண்ணன்தானா...?????)

அமரன்
24-10-2008, 08:40 AM
தூய்மையான மங்கை
தூய்மையான ஆகாயகங்கை
ஒன்றையொன்று
காதலிப்பதில் வியப்பில்லை.

பயணிகள் பாடுதான் திண்டாட்டம்.

கண்டதை எல்லாம் கவிதை ஆக்கும் பாங்குக்கு பாராட்டுகள் ஷிப்லி.

shibly591
24-10-2008, 04:57 PM
தூய்மையான மங்கை
தூய்மையான ஆகாயகங்கை
ஒன்றையொன்று
காதலிப்பதில் வியப்பில்லை.

பயணிகள் பாடுதான் திண்டாட்டம்.

கண்டதை எல்லாம் கவிதை ஆக்கும் பாங்குக்கு பாராட்டுகள் ஷிப்லி.

நன்றி அமரன்..

கவிதை என்பது எங்கோ ஒளிந்திருப்பதுதானே..அதை தேடிக்கண்டுபிடிப்பதே நம் பணி இல்லையா..??

தீபா
25-10-2008, 03:05 AM
மழை எப்போதுமே கவிஞனின் காதலி.

அப்பப கவிஞனின் காதலி???

மழையும் காதலியும் இணைந்துவிட்டால் கவிதைகளுக்குக் கொண்டாட்டம்.. வாழ்த்துக்கள் திரு.ஷிப்லி.

shibly591
25-10-2008, 05:54 PM
மழை எப்போதுமே கவிஞனின் காதலி.

அப்பப கவிஞனின் காதலி???

மழையும் காதலியும் இணைந்துவிட்டால் கவிதைகளுக்குக் கொண்டாட்டம்.. வாழ்த்துக்கள் திரு.ஷிப்லி.

நன்றிகள் நண்பியே...

மழை கவிஞனின் காதலி என்றால் அது பெண்பாலா..???உண்மைதான் அழகாயிருப்பதால் அது பெண்பால்தான்..அப்பப்ப வெள்ளப்பெருக்கு என்று பயமுறுத்துவதில் கூட அது பெண்பால் என்பதை நிரூபிக்கிறது (அய்யோ..அஷஇது ஒரு காமெடி..மன்றமகளிர் அமைப்புக்கள் என்னோடு சண்டைக்கு வரவேண்டாம்..)

தீபா
26-10-2008, 02:01 AM

பெரும்பாலும் நான் கவிஞனுக்கு பால் பேதம் பார்ப்பதில்லை. ஏனெனில் கவிதை என்று வரும்பொழுது, அது ஆண்பெண் வித்தியாசம் இல்லாமல் இருக்கவேண்டும் என்று எண்ணுபவள்.

காதலன், காதலி - இவர்களுக்குப் பொதுப்பெயர் ஒன்றிருக்குமேயானால் அதை உபயோகப்படுத்தியிருப்பேன்...

அதைவிட,

நீங்கள் சொன்னதுதான் சரி...

சூரியனைத் தவிர, மற்ற எல்லா இயற்கையும் பெண்ணாகவே கருதப்படுகிறது. சந்திரன் அரவாணியாகக் கருதப்படுகிறாள்.

shibly591
26-10-2008, 04:16 PM
சூரியனைத் தவிர, மற்ற எல்லா இயற்கையும் பெண்ணாகவே கருதப்படுகிறது. சந்திரன் அரவாணியாகக் கருதப்படுகிறாள்.

நன்றி..

சந்திரன் அரவாணி என்று புதிய தகவல் சொன்னமைக்கு நன்றிகள்..