PDA

View Full Version : கிரெடிட் கார்டு !பாபு
21-10-2008, 09:56 AM
கிரெடிட் கார்டு

அனந்தராமனுக்காக
அவன் ஆபிஸ் வாசலில் காத்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து அவன் வந்தான்.
"டேய்.. எப்படிடா இருக்கே?", அவன் தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டே
வந்தான். சிறு வயதிலிருந்து நாங்கள் பால்ய சினேகிதர்கள்.

"நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்கே?"

"நல்லா இருக்கேன். Wife சீக்கிரம் வரச்சொன்னா. வெளில போகிறோம். என்ன விஷயம் சொல்லு", அவசர அவசரமாக கேட்டான்.

"ஒண்ணுமில்லடா. இந்த மாசம் கொஞ்சம் பணக்கஷ்டம்டா..அதான் உங்கிட்டே கொஞ்சம் ஐயாயிரம் ரூபா ...." என்று இழுத்தேன்.

"அடடா..சாரிடா..இப்போ
என்கிட்ட அவ்வளவு பணமில்லட..மாமனார் மெடிக்கல் செலவு ஜாஸ்தியாயிட்டதனால
நானே சிரமப்பட்டுகிட்டு இருக்கேன்டா, என்னை மன்னிச்சுக்கடா"

"பரவாயில்லடா..நோ
ப்ராப்ளம்", சொல்லிவிட்டு எதிரில் உள்ள வங்கி ATM கௌண்டரை நோக்கி
நடந்தேன். கையில் இன்னொரு நண்பன் கடனாய் கொடுத்த அவனது கிரெடிட் கார்டு
இருந்தது, வட்டியோடு திரும்பக் கேட்டிருந்தான்.

கிரெடிட் கார்டை செருகி ரூபாய் ஐயாயிரம் என்று அழுத்தினேன்.

ஐயாயிரம் ரூபாய் வந்து விழுந்தது

அதே
வங்கியின் பின்புறத்திலிருந்து அனந்தராமன் தன்னுடைய சேமிப்புக்கணக்கில்
கட்டிய அதே ஐயாயிரம் ரூபாய் என்று இருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை !!

ஓவியன்
21-10-2008, 10:04 AM
அனந்தராமன் சேமிப்பிலிட்ட பணத்தைப் போல சில விடயங்கள் பலருக்கும் தெரியாமல் இருப்பது ஒரு விதத்தில் நல்லதுதான்...

இல்லையென்றால் நல்ல உறவுகளாக நாம் நினைக்கும் பல வெளுத்து போய்,
பூலோகம் நரகமாகி விடும்...!!

கடுகு சிறிதென்றாலும் காரம் அதிகமென உணர்த்திய கதை, மனதார்ந்த :)வாழ்த்துக்கள் பாபு..!!

poornima
21-10-2008, 11:12 AM
பாபு பாராட்டுகள் நன்றாக எழுதுகிறீர்கள்..

சேமிப்பு கணக்கில் கட்டிய பணம் உடனே தானியங்கி பணம் தரும் இயந்திரத்துக்கு
வந்து விடுமா என்ன? :-)

சும்மா அறியாப் பொண்ணு லாஜிக் பார்க்குது.. கண்டுக்காதீங்க பாபு :-)

நிறைய எழுதுங்க வாழ்த்துகள்.

ஓவியன்
21-10-2008, 11:45 AM
பணத்தை வைப்பு செய்யும் தானியங்கி இயந்திரங்களும் இருக்கின்றனவே பூர்ணிமா.....??

கண்மணி
21-10-2008, 12:13 PM
கிரெடிட் கார்டு என்றாலே கடன்தான். கடனட்டையையே கடன் கொடுப்பதா? அந்த நண்பரை நமக்கெல்லாம் அறிமுகம் செய்யாம விட்டுட்டாரே கதாசிரியர். :D:D:D

ATM கார்டு, கிரெடிட் கார்டு இதையெல்லாம் கடனாக் குடுக்கக் கூடாதுங்க. ஏன்னா பணம் எடுக்க, ரகசிய எண்ணையும் கொடுக்க வேண்டியது வரும்.. அதெல்லாம் சரிப்படாது.வேணும்னா பணம் எடுத்துக் கொடுக்கலாம். இல்லைன்னா அவரோட போய் அவருக்கு வேண்டியதை வாங்கித் தரலாம்.

இல்லைன்னா கார்டைக் கொடுத்துட்டுக் காணாமப் போயிடுச்சின்னு உடனே கம்ப்ளெயிண்ட் பண்ணிரலாம்.:lachen001::lachen001::lachen001:

ஆனால் மாமனாருக்கு மருத்துவச் செலவு செய்யற அனந்தராமன் பாராட்டப்படவேண்டியவர். இந்தக் காலத்தில யார்தான் மனைவியோட பெத்தவங்களைக் கண்ணும் கருத்துமா பார்த்துக்கறாங்க.?:)

பாரதி
21-10-2008, 12:24 PM
நல்ல முயற்சி பாபு.
இன்னும் எழுதுங்கள்.
இனிய பாராட்டு.

மன்மதன்
21-10-2008, 01:11 PM
தொடர்ந்து எழுதுங்க பாபு..

சுகந்தப்ரீதன்
21-10-2008, 02:41 PM
கதை நன்று.. இன்னும் கொஞ்சம் முயலுங்கள் ..!!
வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள் பாபு..!!


இந்தக் காலத்தில யார்தான் மனைவியோட பெத்தவங்களைக் கண்ணும் கருத்துமா பார்த்துக்கறாங்க.?:)
அப்ப அந்த காலத்துல கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டாங்களா கண்மணி..??:sprachlos020:

anbudayan
21-10-2008, 04:04 PM
மிக அருமை நண்பரே

அமரன்
24-10-2008, 04:42 PM
கதையைப் படித்து முடித்ததும் வட்டிக்கு ஆசைப்பட்டு நட்பு உடைந்து விடக்கூடாதென்ற நினைவு வந்தது.
பாராட்டுகள் பாபு