PDA

View Full Version : புதிதாக ஏதாவது

shibly591
20-10-2008, 08:35 AM
புதிதாக ஏதாவது
எழுத வேண்டும் என்று
உள்ளுணர்வு
சபித்துக் கொண்டிருக்கிறது

பெண்களைப் பற்றி
எழுதுமளவுக்கு
அனுபவம் போதாது

காதலைப்பற்றி
எத்தனை முறைதான்
எழுதித் தொலைப்பது

இயற்கையை
எழுதுவதை விட
ரசிப்பதே உகந்தது

கனவுகள்
பிரிவு
இழப்பின் வலி
துயரம்
எல்லாமே
ஏற்கெனவே எழுதப்பட்டாயிற்று

யுத்தத்தின்
அகோரங்களை
எழுதலாம்தான்
ஆனால்
அவைகள்
வெறும் வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாதவை

கடினமான
சொற்கோர்வைகளால்
எவருக்குமே புரியாதபடி
எண்ணக்கருவே
இல்லாத கவிதைகளில்
எனக்குச் சம்மதமில்லை

பின்
எதைத்தான்
புதிதாய் எழுதுவது

பார்க்கலாம்
இதை
எழுதி முடித்த பின்பாவது
ஏதாவது
தோன்றுகிறதா என்று…?

ஓவியன்
20-10-2008, 08:58 AM
என்ன ஷிப்லி இப்படி வெறுத்துப் போய் எழுதி இருக்கீங்க...

ஒரு கலைஞன் தன் எந்தப் படைப்புக்களிலும் திருப்தியடையக் கூடாது ஷிப்லி..
அப்படி திருப்தியடைந்தால் மட்டுமே எந்தக் கவிஞனுக்கும் இனி என்ன எழுதுவதென்ற வினா குறுக்கிடும்....

அதே போல எல்லோரும் புதியதாக ஒரு விடயத்தை எழுத வேண்டுமென்று நினைத்தால், ஒருவருக்கும் எழுத ஒரு விடயமும் கிடைக்காதுதான்...
பழைய விடயங்களையே புதிய கோணத்தில் தந்து பார்க்கலாமே....

எல்லோரும் விளையாடிய கிறிக்கட் என்பதற்காக, நாம் இன்று நடைபெறும் போட்டிகளைப் பார்க்காமல் விட்டு விடுகிறோமா, என்ன...??

அது போலத்தான் இதுவும் ஷிப்லி..!!

கண்களையும், செவிகளையும் எப்போதும் விழிப்பாக வைத்திருங்கள் ஷிப்லி...
அப்படி வைத்திருந்தால் எழுத விடயங்கள் கிடைக்காது போகாது,
மாறாக எல்லாவற்றையும் எழுதி முடிக்க நேரம்தான் கிடைக்காமல் போகும்....

எல்லாவற்றையும் எழுதி முடிக்க நேரம் கிடைக்காமல் அல்லாட என் வாழ்த்துக்கள் ஷிப்லி..!!

shibly591
20-10-2008, 09:01 AM

ச்சும்மா ஒரு வித சலிப்பில் எழுந்த கவிதை

அதை மன்றத்தில் பகிர்ந்துகொண்டேன்..

மற்றபடி தாங்களது அன்பான கருத்துக்களில் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன்..

பணிவு கலந்த நன்றிகள்

அமரன்
20-10-2008, 10:06 AM
கடந்து செல்லும் காலங்களை சிறைப்பிடித்தால் கவிதை பிறக்கும்.
இறந்த காலங்களும் என்றும் உயிருடன் இருக்கும்.
உங்கள் கவிதைகளை அதைத்தான் செய்கின்றன.
உங்களை கவிதைகளில் அதை செய்யவேண்டாம் எனவில்லை.
செய்யுங்கள்... அதே நேரம்,
கற்பனையில் ஏறி உலகைப் படியுங்கள். படித்ததை பதிவுசெய்யுங்கள்.
முன்னவர்கள் செய்த பதிவைப் படித்தவர்களும்
நீங்கள் கண்ட உலகைக் கண்டவர்களும் அலசுவார்கள்.
புதுக்கவிதைகள் பல நிச்சயம் பிறப்பெடுக்கும்.
உலகில் எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளும் எல்லாரையும் அடைய வழிபிறக்கும்.

சிற்சில சிதைவுகள் கூட இலக்கியமாகி உள்ளன ஷிப்லி. சலிப்புகள் ஏன் ஆகக்கூடாது. வாழ்த்துக்கள்.

shibly591
20-10-2008, 10:22 AM
சிற்சில சிதைவுகள் கூட இலக்கியமாகி உள்ளன ஷிப்லி. சலிப்புகள் ஏன் ஆகக்கூடாது. வாழ்த்துக்கள்.

நன்றிகள் அமரன்..

சலிப்பு என்றில்லை...ஏதோ இனம்புரியாத ஆதங்கம்..