PDA

View Full Version : இயக்குநர் ஸ்ரீதர் மரணம்!



mgandhi
20-10-2008, 07:01 AM
http://www.alaikal.com/news/wp-content/00091.jpg
இயக்குநர் ஸ்ரீதர் மரணம்!


சென்னை: தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவடையச் செய்த படைப்பாளிளுள் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இயக்குநர் ஸ்ரீதர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார்.

கடும் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் அவரை அடையாறு மலர் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

மிகச் சிறந்த படைப்பாளி:

ரத்தப்பாசம் (சிவாஜி நடித்தது அல்ல... இது ஸ்ரீதர் எழுதிய நாடகம், பின்னாளில் திரைப்படமானது) என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், பழைய கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்த தமிழ் சினிமாவுக்கு அறுபதுகளில் புது ரத்தம் பாய்ச்சியவர்.

அவரது இயக்கத்தில் உருவான கல்யாணப் பரிசையும், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் இன்றும் திரையுலகம் கொண்டாடுகிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள்தான் என்றாலும் அவற்றின் திரைக்கதையில் தெரியும் புத்துணர்ச்சியை வேறு படங்களில் பார்ப்பது அரிது.

ஸ்ரீதரின் படங்களில் கண்ணியமும் கதை நயமும் நிறைந்திருக்கும்.

நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தமிழில் விலை போகுமா என்ற சந்தேகத்தோடு சிலர் பார்த்தபோது, அதன் தமிழ் வடிவம் மட்டுமல்ல, தில் ஏக் மந்திர் என்ற பெயரில் அதன் இந்தி வடிவத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கி சாதனைப் படைத்தவர் ஸ்ரீதர்.

1961ல் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுதினார். அவரால் சூப்பர் ஸ்டார்களையும் இயக்க முடிந்தது, புதுமுகங்களையும் எளிதாக நடிக்க வைக்க முடிந்தது.

இன்று முன்னணி நடிகராகத் திகழும் விக்ரம் தனது வாழ்க்கையைத் துவங்கியது ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் மூலம்தான்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக ரஜினியும் கமலும் உருவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும் வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்தது.

கமர்ஷியல், கிளாஸிக் என தொட்டது அனைத்திலும் வெற்றி பெற்ற உன்னதக் கலைஞர் ஸ்ரீதர்.

மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து அவர் இயக்கிய உரிமைக்குரல், மீனவ நண்பன் இரண்டுமே வசூலில் சிகரம் தொட்டவை.

அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பல மைல் கற்களைப் படமாகத் தந்தவர் ஸ்ரீதர்.

சிவாஜி கணேசனின் சிவந்த மண் திரைப்படத்தை தமிழ் திரையுலகம் மறக்க முடியுமா?

திரையுலகிலிருந்து அவர் முழுமையாக விலகினாலும் அவர் மனம் கடைசி மூச்சு நிற்கும்வரை சினிமாவையே சுவாசித்துக் கொண்டிருந்தது. தனது 78வது வயதிலும் கூட சினிமாவுக்காக திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதர். இன்றைய முன்னணி இயக்குநர்கள் பி.வாசு, இயக்குநராக இருந்து நடிகராகிவிட்ட சந்தானபாரதி, சிவி ராஜேந்திரன் என பல இயக்குநர்களை உருவாக்கியவர்.

தமிழ்ல் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றிக் கொடி கட்டியவர் ஸ்ரீதர்.

கலையுலகம் கண்ணீர்:!

இயக்குநர்களின் இயக்குநரான ஸ்ரீதரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக இயக்குநரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ராம நாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் தட்ஸ்

சிவா.ஜி
20-10-2008, 07:16 AM
சந்தேகமேயில்லாமல்....சொல்லலாம் இவர் சாதனையாளரென்று....ட்ரெண்ட் செட்டர் என்று சொல்லுமளவுக்கு தமிழ்த் திரையுலகத்தில் முத்திரை பதித்த மகா இயக்குநர். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். தமிழ் திரையுலகம் இருக்கும்வரை ஸ்ரீதர் அவர்களின் புகழ் இருக்கும்.

மதி
20-10-2008, 07:17 AM
தமிழ் சினிமாவிற்கு பல நல்ல படங்களைத் தந்தவர். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

poornima
20-10-2008, 07:27 AM
திரையுலகில் வியத்தகு மாற்றங்கள் தந்த வித்தக நெறியாளர்..
வெறுக்கடிக்க கூடிய அளவில் படமாக்கப்பட்ட காதல் காட்சிகளை
கூட விரும்பத்தக்க முறையில் மாற்றியமைத்த இரசவாதகாரர்..
உடல் நலம் சரியில்லாது இருந்த போதும் கூட இன்னொரு படம் எடுக்க
விருப்பமுள்ளதாய் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் தெரிவித்த
தன்னம்பிக்கையாளன்..

யாவற்றையும் விட மரணம் மட்டுமே நிரந்தரமானதும் - உண்மையானதுமாய்
இருக்கிறது..

கடைசி காலம் வரை தம் கண்ணுக்குள் பொத்தி வைத்துக் காத்த
அவர் துணைவியார் அந்த அம்மையாருக்கு இதைத் தாங்கிக் கொள்ளும்
வலிமையை இரைவன் தரட்டும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் - அவரை இழந்து வாடும் அக்குடும்பத்தினர்
ஆறுதல் பெறவும் பிரார்த்திப்போம்

ஆதி
20-10-2008, 07:33 AM
முதல் முதலில் தமிழ் திரையுலகில் இயக்குனருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஸ்ரீதரின் வருகைக்கு பிறகுதான்..

எம்.ஜி.யார் சிவா.ஜி ஸ்ரீதர் என்று சொன்னால் மிகையாகாது..

எம்.ஜி.யாரே அழைத்து எனக்கு ஒரு படம் பண்ணிதரனும் என்று கேட்டுக்கொண்ட இயக்குனர் ஸ்ரீதர்.. அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவர்..


நெஞ்சில் ஓர் ஆலயம் பாடல்கள் இன்றும் இளமை மாறாதவை.. இன்னும் எட்டுத்தலைமுறை கடந்தாலும் ரசிக்க கூடியவை..

முத்தான முதல்லவோ..

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்

சொன்னது நீதானா

எங்கிருந்தாலும் வாழ்க..

எல்லாம் பாடல்களும் கண்ணதாசன் மேலான என் காதலை இன்னும் அதிகமாக்கியவை..

ரசிகர்களின் இதயத்தில் மிக மென்மையாக நுழைந்து அதிகனமான தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை ஸ்ரீதரின் திரை சித்திரங்கள்..

இயக்குனர்களின் இயக்குனர் ஸ்ரீதர் என்று சொல்வது அவருக்கு சாலப்பொருந்தும்..
அவர் மறைந்தாலும் திரையுலக நெஞ்சம் மறப்பதில்லை என்றும்.. கற்றானவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்..

ராஜா
20-10-2008, 09:31 AM
காதல் காட்சிகள் என்றாலே கதா காலட்சேபம் போலவோ, வினாடி வினா போலவோ அல்லது தந்தி மொழி போலவோ இருந்த வழிமுறைகளை மாற்றி, இயல்பாக... இரசிக்கத்தக்கதாக மாற்றிய பெருமை ஸ்ரீதரையே சாரும்.

ஸ்ரீதர் நகைச்சுவைக்கும், பாடல்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்.

திரையுலகின் தூண்களில் ஒருவர் ஸ்ரீதர் என்று சொன்னால் அது மிகையாகாது.

shibly591
20-10-2008, 09:32 AM
ஆழ்ந்த அனுதாபங்கள்..

அவரது ஆத்மசாந்திக்காய் பிரார்த்திப்போம்...

பாரதி
20-10-2008, 09:39 AM
ஆழ்ந்த அனுதாபங்கள். காலத்தால் அழியாத திரைப்படங்கள் அவர் பெருமையை என்றென்றைக்கும் பேசிக்கொண்டிருக்கும்.

ஓவியா
20-10-2008, 11:21 AM
என் வருத்தங்களும் கண்ணீர் அஞ்சலியும் சமர்ப்பணம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

திரையுலகம் என்றும் இவர் புகழ்ப்பாடும் என்பது அழிக்க முடியாத ஒன்று.

நெஞ்சில் ஒர் ஆலயம் படத்தை நான் முதல்முறை கண்டதுமே அழுது விட்டேன். அழகான டாக்டர் (கல்யாண் குமார் அங்கிளை) முடிவில் கொன்றுவிட்டாறே என்று, ஆனால் தேவிகாவின் மஞ்சள-குங்குமமுகம் துக்கத்தை மறைத்தது, ஒரு தமிழ் பெண்ணுக்கு தகுந்தாற்ப்போல் அன்று அது ஒரு அருமையான முடிவு.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும் யாரும் மறக்க முடியாது, ரஜினி ஜெயசித்திரா தோண்றும் சில காட்சிகள் அருமையானவை. அதைப்போல் சிவந்தமண் பட முடிவு காட்சியையும் என்னால் மறக்கவே முடியாது..:)

பிச்சி
20-10-2008, 11:37 AM
இவர் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். இவர்தான் ஸ்டுடியோவிலிருந்து வெளிப்புறத்திற்கு காமிராவை எடுத்து வந்தாராம்.
ஈடு செய்யமுடியாத இழப்பு,

உதயசூரியன்
20-10-2008, 01:30 PM
எந்த ஒரு கதையையும் ஆழமாக அனுபவித்து படம் எடுத்தவர்..
அருமையான இயக்குனர்..
திரைக்கதைகளை கையாண்ட விதம்..அருமை..
அவரின் படங்கள் அனைத்துமே அவருக்கு மகுடம் தான்..
என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்..
வாழ்க தமிழ்

aren
20-10-2008, 04:02 PM
அருமையான இயக்குனர். பல மேதைகளை உருவாக்கியவர்.

ஜெயலலிதா அவர்களையும், ரவிச்சந்திரன், காஞ்சனா, முத்துராமன், ஸ்ரீகாந்த், வென்னிறாடை நிர்மலா போன்ற பெரிய நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் இவர்.

கல்யாணப்பரிசு, நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், சிவந்தமண், காதலிக்க நேரமில்லை, உத்தரவின்றி உள்ளேவா, இளமை ஊஞ்ஜலாடுகிறது, மீனவ நண்பன், உரிமைக்குரல், அழகே உன்னை ஆராதிக்கிறேன், நினைவெல்லாம் நித்யா இப்படி பல படங்களை இயக்கியவர் ஸ்ரீதர் அவர்கள்.

இயக்குனர் பி. மாதவன் அவர்கள் இவருடைய கண்டுபிடிப்பு.

அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

அவர் இப்பொழுது நம்மிடையே இல்லாவிட்டாலும் அவருடைய படைப்புகள் என்று நம் மனதில் இருக்கும் என்பது நிச்சயம்.

aren
20-10-2008, 04:03 PM
முக்கோனக்காதலின் முன்னோடி ஸ்ரீதர் அவர்கள் என்றால் மிகையாகாது.

மாதவர்
20-10-2008, 06:07 PM
நெஞ்சம் மறப்பதில்லை!

Narathar
20-10-2008, 07:00 PM
நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாண பரிசு போன்ற காதல் படங்களாகட்டும்,

சிவந்த மண் போன்ற புரட்சிப்படங்களாகட்டும்

காதலிக்க நேரமில்லை போன்ற நகைச்சுவைப்படங்களாகட்டும்,

நினைவெல்லாம் நித்தியா, இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற இளமை கொப்பளிக்கும் படங்களாகட்டும்,

அனைத்திலும் தனி முத்திரை பதித்த்வட் ஸ்ரீதர் அவர்கள். அன்னாரது ஆன்மா சாந்திக்காக பிரார்த்திப்போம்

rajeshkrv
20-10-2008, 11:20 PM
ஸ்ரீதருக்கு ஒரு வரியில் அஞ்சலி செலுத்திவிட முடியாது
ஒரு தனி கட்டுரையுடன் வருகிறேன்..

இவர் தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான சிற்பி. இவரது மறைவு கலைத்தாய் இன்னொரு பிள்ளையை இழந்து தவிக்கிறாள்

இளசு
22-10-2008, 06:46 AM
செய்தி அறிந்தவுடன்.. என் நெஞ்சில்
மளமளவென பொங்கிவந்த எண்ணங்களை
ஒரு கட்டுக்குள் அடக்க இயலவில்லை..
சுமை தாங்கவில்லை..

ஒன்றா இரண்டா , வரிசையாக்கிச் சொல்ல?
ரசிக நெஞ்சங்களை ஆலயமாக்கிய கலைத்தேவன்

குருவின் கட்டுரை காணக் காத்திருக்கிறேன்..

நெஞ்சிருக்கும் வரை அது ஸ்ரீதர் அவர்களை மறப்பதில்லை!

மன்மதன்
22-10-2008, 03:30 PM
இளைய தலைமுறைகளுக்கும்
பிடித்த இயக்குனர்..

எனக்கு இவர் படங்கள் மிகவும் பிடிக்கும்..

காதல் பாட்டுகளை மென்மையாக
பாடகர்களை பாட வைத்தவர்..

எனது அஞ்சலி..!!