PDA

View Full Version : குறுக்கு விசாரணைகளும் கிறுக்கு பதில்களும்



மதுரை மைந்தன்
20-10-2008, 05:44 AM
வக்கீல் சாட்சியிடம்: அவன் நாயை காதுகளைப் பிடித்து தூக்கினானா?

சாட்சி: இல்லை

வக்கீல்: அப்போ நாயின் காதுகளுடன் அவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

சாட்சி: நாயின் காதுகளை காற்றில் உயர தூக்கினான்

வக்கீல்: அப்போ நாய் எங்கே இருந்தது?

சாட்சி: காதுகளுடன் ஒட்டிக் கொண்டிருந்தது
________________________________________________________________________

வக்கீல்: மிஸஸ் ஜான்ஸன் உங்களுடய முதல் திருமணம் எப்படி முறிந்தது?

மிஸஸ் ஜான்ஸன் : ஒரு இறப்பினால் முறிந்தது?

வக்கீல்: யாருடய இறப்பினால் என்று கூற முடியுமா?

மிஸஸ் ஜான்ஸன்: ஞாபகம் இல்லை
__________________________________________________________________________

நீதிபதி: நீ வாட்சைத் திருடினதை 5 பேர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படியம் ஏன் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுக்கிறாய்?

குற்றவாளி: யுவர் ஹானர் நான் வாட்சைத் திரடியதை பார்க்காத 500 பேர்களை என்னால் காட்ட முடியும்
__________________________________________________________________________

வக்கீல்: யுத்தத்தில் மடிந்தது நீயா இல்லை உனது சகோதரனா?

குற்றவாளி: நிச்சயமாக நான் இல்லை
__________________________________________________________________________

வக்கீல்: நீங்க குற்றம் காட்டப் பட்டுள்ள டேவிஸ் என்பவனது அம்மா என்று நினைக்கிநேன்.

சாட்சி: ஆமாம்

வக்கீல்: அவரை உங்களுக்கு எத்தனை நாட்களாகத் தெரியும்?

சாட்சி: அவனுடய பிறந்த தேதி ஞாபகம் இல்லை
_________________________________________________________________________

வக்கீல்: இறந்த ஜோசப் உங்களுக்கு அறிமுகமானவரா?

சாட்சி: ஆமாம்

வக்கீல்: இறப்பதற்கு முன்னரா இல்லை பின்னரா?

சாட்சி: இறந்த பிறகு அவரை நான் பார்க்கவில்லை

செல்வா
20-10-2008, 06:58 AM
நீதிபதி: நீ வாட்சைத் திருடினதை 5 பேர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படியம் ஏன் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுக்கிறாய்?

குற்றவாளி: யுவர் ஹானர் நான் வாட்சைத் திரடியதை பார்க்காத 500 பேர்களை என்னால் காட்ட முடியும்
__________________________________________________________________________

வக்கீல்: யுத்தத்தில் மடிந்தது நீயா இல்லை உனது சகோதரனா?

குற்றவாளி: நிச்சயமாக நான் இல்லை
__________________________________________________________________________

வக்கீல்: நீங்க குற்றம் காட்டப் பட்டுள்ள டேவிஸ் என்பவனது அம்மா என்று நினைக்கிநேன்.

சாட்சி: ஆமாம்

வக்கீல்: அவரை உங்களுக்கு எத்தனை நாட்களாகத் தெரியும்?

சாட்சி: அவனுடய பிறந்த தேதி ஞாபகம் இல்லை

பதில்கள் கிறுக்குத்தனமா இருக்கோ இல்லியோ கேள்விகள் கிறுக்குத்தனமா இருக்கு.....
கிறுக்கு விசாரணைகள் என்றே தலைப்பு வைத்திருக்கலாம் போல... :D:D:D
பகிர்தலுக்கு நன்றி அண்ணா... :D:D:D

shibly591
20-10-2008, 10:42 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

மதுரை மைந்தன்
20-10-2008, 11:40 AM
நகைச்சுவையை ரசித்து பாராட்டியமைக்கு செலவா, ஷிப்லி க்கு நன்றி.

மேலும் சில குறுக்கு விசாரணைகளும் கிறுக்கு பதிலகளும்
__________________________________________________________________________

வக்கீல்: அவன் அடுத்து என்ன சொன்னான்

சாட்சி: அவன் சொன்னான் " உன்னைக் கொல்லப் போகிறேன். நீ உயிரோடு இருந்தால் என்னைக் காட்டிக் கொடுத்து விடுவாய்"

வக்கீல்: பிறகு அவன் உன்னைக் கொன்றுவிட்டானா?
_______________________________________________________________________

வக்கீல்: மிஸஸ் மரகதம் நீங்க ரொம்ப உணர்ச்சி வசப் படறவங்களா?

மரகதம்: அடிக்கடி உணர்ச்சி வசப்படறதுண்டு

வக்கீல்: எத்தனை தடவை தற்கொலை பண்ணியிருக்கீங்க?

மரகதம்: நாலு தடவை
________________________________________________________________________

வக்கீல்: குற்றவாளிக்கு எத்தனை குழந்தைகள்?

சாட்சி: நாலு குழந்தைகள்

வக்கீல்: அதில் எத்தனை பையன்கள்?

சாட்சி: ஒருத்தரும் இல்லை

வக்கீல்: சரி. ஏதாவது பெண் குழந்தை உண்டா?
__________________________________________________________________________

வக்கீல்: டாக்டர் இறந்த முருகனோட பாடியை போஸ்ட் மார்டம் எப்ப பண்ணீங்க?

டாக்டர்: இரவு 8.30 மணிக்கு

வக்கீல்: அப்போ முருகன் இறந்துட்டதா உறுதியா சொல்ல முடியுமா?

பிச்சி
20-10-2008, 11:52 AM
:D :D :D

சிவா.ஜி
20-10-2008, 12:12 PM
உண்மையாகச் சொன்னால்.....மன்னிக்கவும், அத்தனை ரசிக்கும்படியாக இல்லை.

மனோஜ்
21-10-2008, 06:57 AM
நல்.............ல கிறுக்கு பதிகள்:aetsch013: நன்றி

மன்மதன்
21-10-2008, 12:47 PM
ஹாஹ்ஹ்ஹா.. கிறுக்கு கேள்விகளேதான்.. ரசித்தேன் :lachen001:

மதுரை மைந்தன்
21-10-2008, 07:30 PM
கிறுக்கு கேள்விகளையும் அதி கிறுக்கு பதில்களையும் ரசித்துப் பாராட்டிய பிச்சி, மனோஜ் மற்றும் மன்மதன் நண்பர்களுக்கு நன்றிகள்

மதுரை மைந்தன்
21-10-2008, 07:42 PM
உண்மையாகச் சொன்னால்.....மன்னிக்கவும், அத்தனை ரசிக்கும்படியாக இல்லை.

அன்பு நண்பர் சிவா.ஜி

இந்த நகைச்சுவையை நீங்கள் ரசிக்காதது சற்று ஏமாற்றமாக உள்ளது.

இந்த நகைச்சுவைகள் அனைவரும் ரசித்த ஒரு பழைய நகைச்சுவையின் தொடர்ச்சி. அதை இங்கு தருகிறேன்.

" உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?"
" இரண்டு குழந்தைகள்"
" உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா?"

இங்கு தரப்பட்டுள்ள நகைச்சுவைகளை சன் டி.வி யின அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை முத்து தனக்கே உரித்தான பாணியில் கூறினால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீரகள் என நம்புகிறேன்.

மதுரை மைந்தன்
22-10-2008, 04:37 AM
மேலும் சில குறுக்கு விசாரணைகளும் கிறுக்கு பதிலகளும்
_________________________________________________________________________

வக்கில்: இந்தப் படத்தில் இருப்பவர் யார்?

சாட்சி: நான் தான்

வக்கீல்: அப்போ படம எடுக்கப் பட்ட சமயம் நீங்கள் அங்கு இருந்தீர்கள்?
_________________________________________________________________________

வக்கீல்: குற்றவாளிக்கும் உங்களுக்கும் என்ன உறவு?

சாட்சி: அவன் எனது மகன்

வக்கீல்: குற்றம் நடந்த அன்றும் அப்படித்தானா?
__________________________________________________________________________

வக்கீல: நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கணும் சரியா? உங்க பெயர் என்ன?

சாட்சி: உண்மை
_________________________________________________________________________

வக்கீல்: நீங்கள் சொல்கிறீர்கள் படிக்கட்டு கீழே நிலவறைக்கு சென்றது என்று சரியா?

சாட்சி: ஆமாங்க

வக்கீல: அப்போ நிலவறையிலிருந்து மேலே வர படிக்கட்டு இருந்ததா?

shibly591
22-10-2008, 07:42 AM
சூப்பரே சூப்பர்..

என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு கிறுக்கு கேள்வி...

"மதுரை வீரன் இதை தடடச்சு செய்தது நீங்கள் என்றால் தட்டச்சு செய்யும்போது பக்கத்திலா இருந்தீர்கள்..?????"

ஹைய்யா..........ஒருத்தரை குழப்பியாச்சு

Narathar
22-10-2008, 08:57 AM
பதில்கள் கிறுக்குத்தனமா இருக்கோ இல்லியோ கேள்விகள் கிறுக்குத்தனமா இருக்கு.....
:D:D:D

:) இதைத்தான் நானும் சொல்கின்றேன்....
இப்படியும் கிறுக்கு கேள்வி கேட்பார்களா?

உமாமீனா
15-02-2011, 09:03 AM
சிலது கடி ஜோக்கு பரவாயில்லை:icon_wacko::medium-smiley-002::medium-smiley-077: