PDA

View Full Version : உலகம் எத்தனை விநோதமானது பார்....



shibly591
19-10-2008, 04:38 AM
உலகம் எத்தனை விநோதமானது பார்....

நிமிடந்தோறும் நிறம் மாற்றும்
உறவுகளின் பொய் முகங்கள் பற்றி நான் எழுதும்
கடைசிக்கவிதை இது..
(இப்படிச்சொல்லிச்சொல்லியே இன்னும் எழுத வைத்துவிடாதீர்கள்)

கனவுகள் இயலபாக்கப்பட்ட
எனது மனசின் நிஜங்களை
நீங்களெல்லாம் கிழித்தெறிவது பற்றி
எந்தச்சலனமும் எனக்கில்லை..

துரோகம் என்பதே
உங்களுக்குப்பிடித்த வார்த்தை
தூற்றுவதே
உங்கள் தாய்மொழி

எனக்குப்புரியாதது ஒன்றே
ஒன்றுதான்..
நீங்களெல்லாம் என்னோடு
மட்டும்தானா இப்படி...
அல்லது
எல்லோருடனும் இப்படியா..???


(என்னை நம்பவைத்து கழுத்தறுத்த அந்த ஒருத்திக்காக மட்டுமே இந்தக்கவிதை அனல் வீசப்படுகிறது)

தீபா
19-10-2008, 04:58 AM
அடப்பாவமே, திரு.ஷிப்லியை ஒருத்தி ஏமாற்றினாரா?

கஷ்டகாலம்.. அந்த ஒருத்திக்காக இக்கவிதை என்றால்.... எனது விமர்சனமும் இவ்வளவுதான்.. :)

shibly591
19-10-2008, 05:00 AM
அடப்பாவமே, திரு.ஷிப்லியை ஒருத்தி ஏமாற்றினாரா?

கஷ்டகாலம்.. அந்த ஒருத்திக்காக இக்கவிதை என்றால்.... எனது விமர்சனமும் இவ்வளவுதான்.. :)

இது காதலித்து ஏமாற்றிய ஏமாற்றமில்லை..

வேறொரு துரோகம்..

அதைப்பற்றி பிறகு பேசலாம்..

ஒற்றை வரி பின்னூட்டத்துக்கு நன்றிகள்

அமரன்
24-10-2008, 08:51 AM
நிறம் மாறுவது
பச்சோந்தியின் குணமல்ல
வாழ்வாதாரம்!

பாராட்டுகள் ஷிப்லி.

ரங்கராஜன்
24-10-2008, 09:41 AM
நன்றாக இருந்தது நண்பரே ஆனால் நான் எப்பொழுதும் நம்பும் ஒரு சித்தாந்தம்

தீதும் நன்று பிறர் தர வாரா

shibly591
28-10-2008, 09:50 AM
நிறம் மாறுவது
பச்சோந்தியின் குணமல்ல
வாழ்வாதாரம்!

பாராட்டுகள் ஷிப்லி.

நன்றி அமர்..

நிறம் மாறுவது சரிதான்...ஆனால் சொந்த நிறத்திலும் சில கணங்களாவது வதழ வேண்டும் இல்லையா..??

shibly591
28-10-2008, 09:51 AM
நன்றாக இருந்தது நண்பரே ஆனால் நான் எப்பொழுதும் நம்பும் ஒரு சித்தாந்தம்

தீதும் நன்று பிறர் தர வாரா

நன்றி நண்பரே...