PDA

View Full Version : எனது உலகம் பொம்மைகளாலானது



shibly591
19-10-2008, 04:35 AM
பொம்மைகளாலான
எனது உலகம்
ரொம்பவே விநோதமானது...

பொம்மை வானம்
பொம்மை பூமி
பொம்மை மான்
பொம்மை புலி
பொம்மை சிங்கம்
பொம்மை கரடி

அங்கு பொம்மைத்திருமணம்
எப்போது நிகழ்ந்தவண்ணமிருக்கும்..
மான் புலியை
சிங்கம் கரடியை
அது இதனை
இது அதனை...

பொம்மை மழையில் நனையும்
என் பொம்மை உலகம் ரொம்பவே அழகானது..

பொம்மைதான் எல்லாம் என்றாலும்
யார் கையிலும் நூல் இல்லை..

பெயரில் மட்டுமில்லை
காணும் திசையெங்கும் சுதந்திரம்
சூழ்ந்திருக்கக்காண்பீர்..

அனர்த்தங்கள்
யுத்தம்
வன்முறை
இரத்தம்
இவைகளுக்கெல்லாம் அங்கு இடமேயில்லை
ஏன்
குறைந்தது
கண்ணீர்த்துளிகளே அங்கில்லை

ஆனந்தக்களியாட்ட்தில்
திளைத்திருக்கும் என் பொம்மை உலகை
அழித்துவிட என்றுமே நான் விரும்பியதில்லை..
அப்படித்தான் அழித்துவிடவேண்டும் என்றால்
பெரிதாக ஒன்றும் செய்யத்தேவையில்லை
நுழைத்துவிடுவேன்
ஒரு பொம்மை மனிதனை....!

தீபா
19-10-2008, 04:45 AM
சிறார்களின் உலகம் இப்படிப்பட்டதுதான்.

சில சமயங்கள், நாம் ஒரு பொம்மையாகவே இருந்திடக்கூடாதா என்று தோன்றும்..

shibly591
19-10-2008, 04:55 AM
சிறார்களின் உலகம் இப்படிப்பட்டதுதான்.

சில சமயங்கள், நாம் ஒரு பொம்மையாகவே இருந்திடக்கூடாதா என்று தோன்றும்..

உண்மைதான் நண்பரே..

அப்படி ஒரு ஏக்கத்தில் பிறந்த வார்த்தைகளே இவைகள்..

நன்றி நண்பரே