PDA

View Full Version : உலக சதுரங்கப்போட்டி



பாரதி
18-10-2008, 01:46 AM
உலக சதுரங்கப்போட்டி

ஜெர்மனியில் உள்ள பான் நகரில் ஆனந்திற்கும் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கிற்கும் இடையிலான உலக சதுரங்க வாகையர் சதுரங்கப்போட்டி அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

முதல் இரண்டு ஆட்டங்கள் சமனில் முடிந்த நிலையில், நேற்றைய மூன்றாவது ஆட்டத்தில் கருப்புக்காய்களுடன் விளையாடிய ஆனந்த் கிராம்னிக்கை 42 நகர்த்தலில் வெற்றி கண்டார்.

அக்டோபர் 17ஆம் தேதியன்று உள்ள நிலவரம்:
ஆனந்த் 2 புள்ளிகள் - கிராம்னிக் 1 புள்ளி.

மொத்தம் 12 ஆட்டங்களைக்கொண்ட இந்த போட்டி அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முடிவடைகிறது. 12 ஆட்டங்களின் முடிவில் சமநிலை இருப்பின் நவம்பர் 2ஆம் தேதி இறுதியாக வெற்றிபெற்றவர் யாரென்பதற்கான போட்டி நடைபெறும்.

போட்டிகள் நடக்கும் போது நேரடியாக காண விழைவோர் செல்ல வேண்டிய சுட்டி:
http://www.uep-chess.com/index_live.html

ஆட்டத்தைப்பற்றிய விளக்கத்திற்கு செல்ல வேண்டிய இணைய முகவரி:
http://live.chessdom.com/kramnik-anand-2008-g3.html

ராஜா
18-10-2008, 04:47 AM
ஆனந்த் வெற்றிபெற வேண்டுதல்களுடன் கூடிய வாழ்த்துகள்..!

இளசு
18-10-2008, 09:38 AM
பதிவுக்கு நன்றி பாரதி..

நம்மவர் ஆனந்த் வாகைசூடிட வாழ்த்துகள்!

சதுரங்கத்தை உலகுக்கு அளித்த இந்தியாவுக்கு தக்க பெருமை சேரட்டும்!!

பாரதி
18-10-2008, 04:36 PM
கருத்துக்களுக்கு நன்றி இராஜா, அண்ணா..

இன்று நடைபெற்ற நான்காவது போட்டி 29 நகர்த்தல்களில் சமனில் முடிந்தது.
இன்றைய நிலவரம் : ஆனந்த் 2.5 - கிராம்னிக் 1.5

விகடன்
19-10-2008, 04:52 AM
நல்ல தகவலும் பிரயோசனமான சுட்டி பகிர்தலும்.
நன்றி பாரதி

shibly591
19-10-2008, 05:03 AM
பயனுள்ள தகவல்..

(நானும் பல்கலைக்கழகத்தின் பழைய செஸ் சாம்பியனுங்க...ஆனந்த் கூட அடிக்கடி செஸ் மாஸ்டர் மென்பொருளில் விளையாடி சகல தடவைகளும் அவருடன் தோற்ற பெருமை எனக்குண்டு)

பாரதி
19-10-2008, 07:26 PM
கருத்துக்களுக்கு நன்றி விராடன், ஷிப்லி..!
ஷிப்லி நீங்களும் என்னைப்போலத்தானா,,,! ஹஹஹா...

உலக சதுரங்கப்போட்டியில் இன்று ஓய்வு நாள்.

shibly591
20-10-2008, 08:50 AM
கருத்துக்களுக்கு நன்றி விராடன், ஷிப்லி..!
ஷிப்லி நீங்களும் என்னைப்போலத்தானா,,,! ஹஹஹா...

உலக சதுரங்கப்போட்டியில் இன்று ஓய்வு நாள்.

அப்படியா....

நல்லது நல்லது

நன்றிகள் நண்பரே

பாரதி
20-10-2008, 04:08 PM
இன்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் கறுப்புக்காய்களுடன் ஆடிய ஆனந்த் 35 நகர்த்தல்களில் வெற்றி பெற்றார்!

இன்றைய நிலவரம் : ஆனந்த் 3.5 புள்ளிகள் - கிராம்னிக் 1.5 புள்ளிகள்.

aren
20-10-2008, 04:11 PM
இந்தப்போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு இருப்பதாக எங்கோ படித்தேன். ஆகையால் அவர் வெற்றி பெற நாம் பிரார்த்திப்போம்.

பாரதி
21-10-2008, 05:23 PM
பின்னூட்டத்திற்கு நன்றி ஆரென்.
-----------------------------------------------------------------------

இன்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் 47 நகர்த்தல்களில் வெற்றி பெற்றார்!

இன்றைய நிலவரம் : ஆனந்த் 4.5 புள்ளிகள் - கிராம்னிக் 1.5 புள்ளிகள்.

ஓவியன்
22-10-2008, 01:49 AM
நல்ல செய்திப் பகிர்வுக்கு நன்றிகள் பாரதி அண்ணா....

ஆனந் தொடர்ச்சியாக வென்று தன் நிலையைத் தக்க வைக்க என் வாழ்த்துக்களும்....

shibly591
22-10-2008, 07:14 AM
வெற்றி பெற்ற ஆனந்துக்கு வாழ்த்துக்கள்

பாரதி
22-10-2008, 03:21 PM
நன்றி ஓவியன், ஷிப்லி.

இன்று போட்டியின் ஓய்வு நாள். நாளை ஏழாவது போட்டியில் வெள்ளைக்காய்களுடன் ஆனந்த் விளையாடுவார்.

பாரதி
23-10-2008, 04:09 PM
சில நிமிடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஆனந்த்- கிராம்னிற்கு இடையேயான ஏழாவது போட்டி 37 நகர்த்தல்களில் சமனில் முடிந்தது.

இன்றைய நிலவரம்: ஆனந்த் 5 புள்ளிகள் ; கிராம்னிக் 2 புள்ளிகள்.

பாரதி
24-10-2008, 04:40 PM
சில நிமிடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஆனந்த்- கிராம்னிற்கு இடையேயான எட்டாவது போட்டி 39 நகர்த்தல்களில் சமனில் முடிந்தது.

இன்றைய நிலவரம்: ஆனந்த் 5.5 புள்ளிகள் ; கிராம்னிக் 2.5 புள்ளிகள்.

அறிஞர்
24-10-2008, 05:45 PM
ஆனந்த் மூன்றாம் முறையாக பட்டத்தை வெல்வார் என நம்புகிறேன்.

பாரதி
26-10-2008, 07:01 PM
நன்றி அறிஞரே,

சில நிமிடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஆனந்த்- கிராம்னிற்கு இடையேயான ஒன்பதாவது போட்டி 45 நகர்த்தல்களில் சமனில் முடிந்தது.

இன்றைய நிலவரம்: ஆனந்த் 6.0 புள்ளிகள் ; கிராம்னிக் 3.0 புள்ளிகள்.

பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள ஆனந்திற்கு இன்னும் 0.5 புள்ளியே தேவை.

இளசு
27-10-2008, 10:59 PM
நல்ல நிலைமை.. வெற்றி கனியட்டும்..

தொடர் செய்திகளுக்கு நன்றி பாரதி!

பாரதி
28-10-2008, 08:32 PM
நன்றி அண்ணா,

நேற்று நடந்து முடிந்த ஆனந்த்- கிராம்னிற்கு இடையேயான பத்தாவது போட்டியில் 29 நகர்த்தல்களில் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இப்போதைய நிலவரம்: ஆனந்த் 6.0 புள்ளிகள் ; கிராம்னிக் 4.0 புள்ளிகள்.

பாரதி
29-10-2008, 05:17 PM
சில நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆனந்த் - கிராம்னிற்கு இடையேயான 11வது சுற்று சதுரங்க ஆட்டம் 24 நகர்த்தல்களில் சமனில் முடிந்தது.

இதனால் 0.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த் உலக சதுரங்க வாகையர் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

நாமும் ஆனந்தை வாழ்த்துவோம்.

அமரன்
29-10-2008, 06:10 PM
பாரதி அண்ணாவின் பதிவுகள் அனைத்தும் போட்டியின் விறு விறுப்பை சொல்கின்றன. நன்றி அண்ணா.
ஆனந்தை ஆனந்தத்துடன் வாழ்த்துகிறேன்.

வெங்கட்
29-10-2008, 07:39 PM
இந்தியாவிற்கு உலக அரங்கில் மேலும் பெருமை சேர்த்த ஆனந்த் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.(வாழ்த்த வயதில்லாததால்.)

தகவலை உடனடியாக பதிவேற்றம் செய்த பாரதி அவர்களுக்கு எனது நன்றி.

இளசு
30-10-2008, 08:25 AM
இதயத்துடிப்பைக் கூட்டி, பின் பரபரப்புடன் கிடைத்த வெற்றி..

பாரதியின் தொடர் பார்வைக்கு நன்றி..

நம் ஆனந்த் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்..

shibly591
30-10-2008, 09:00 AM
வெற்றி பெற்ற ஆனந்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...