PDA

View Full Version : சச்சின் உலக சாதனை!



பாரதி
17-10-2008, 09:07 AM
சச்சின் டெண்டுல்கர் உலக சாதனை படைத்தார்!

மட்டைப்பந்துப் போட்டிகளில் பல வருடங்களாக விளையாடி வரும் நட்சத்திர விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து நாள் போட்டியின் போது 16 ஓட்டங்களை எட்டிய போது பிரையன் லாராவின் உலக சாதனையான 11953 ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்தார்.

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

முதன்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் 1989 ஆம் ஆண்டு விளையாடத் தொடங்கினார்.

ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 417 போட்டிகளில் விளையாடி, 42 சதங்கள் உட்பட 16361 ஓட்டங்களை சேகரித்துள்ளார்.
ஐந்து நாள் போட்டிகளில் இதுவரை 151 போட்டிகளில் கலந்துகொண்டு,39 சதங்கள் உட்பட 11877 ஓட்டங்களை சேகரித்துள்ளார்.

பொதுவாக எந்தவிதமான பிரச்சினைகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாத சச்சினின் மட்டைப்பந்து ஆட்டத்திற்கு உலகெங்கிலும் ஏராளமான இரசிகர்கள் உள்ளனர்.

மறைந்த மிகச்சிறந்த மட்டைப்பந்து வீரர் டான் பிராட்மேனைப் போலவே விளையாடுவதாக அவராலேயே பாராட்டப்பட்டவர் சச்சின்.

கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்த சச்சினின் இந்த சாதனையை எதிர்நோக்கி இருந்த ஏராளமான இரசிகர்களுக்கு இன்று உற்சாகமான நாள்.
நாமும் அவரைப் பாராட்டுகிறோம்.

சிவா.ஜி
17-10-2008, 09:22 AM
சாதனை நாயகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

உதயசூரியன்
17-10-2008, 09:53 AM
சாதிப்பதற்கென்றே பிறந்த சச்சின் டெண்டுல்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்
உங்களின் அந்த மைதானத்தில் நிற்கும் மெச்சூரிட்டியின் அழகே தனி..
இன்றளவும்..
ஜூனியர் வீரர்களுக்கு இணையாக ஏன்.. அவர்களை விட வேகமாக ஓடும் வீரர்..
குறுகிய தூரத்தில் பந்தை தட்டி விட்டு ஓட்டம் எடுக்கும் நேரத்தில் எனது கண்கள்.. சச்சினின் உடல் அசைவை கண் அசராமல் பார்க்கும்..

பாராட்டுக்கள்..
கிரிக்கெட் உலக நாயகனுக்கு..
வாழ்க தமிழ்

பாரதி
17-10-2008, 10:40 AM
மேலும் ஒரு புதிய சாதனை!

ஐந்து நாள் போட்டிகளில் சச்சின் இன்று தனது 50வது அரை சதத்தைக் கடந்து, 61 ஓட்டங்களை எட்டிய போது, உலகிலேயே 12000 ஓட்டங்களைக் கடந்த முதல் மட்டைப்பந்து வீரராக புதிய சாதனையைப் படைத்தார்.

நடுவரின் பிழையால் ஆட்டமிழக்காத கங்கூலி இன்று 40 ஓட்டங்களைக்கடந்த போது 7000 ஓட்டங்களைக் கடந்தார்.

உதயசூரியன்
17-10-2008, 10:53 AM
நடுவரின் பிழையால் ஆட்டமிழக்காத கங்கூலி இன்று 40 ஓட்டங்களைக்கடந்த போது 7000 ஓட்டங்களைக் கடந்தார்.

என்ன பிழை பாரதி அவர்களே..?/
வாழ்க தமிழ்

பாரதி
17-10-2008, 11:23 AM
கங்கூலி 35 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஒயிட்டின் பந்து வீச்சில் விக்கெட்கீப்பரால் "ஸ்டம்பிங்" செய்யப்பட்டதும் ஆஸ்திரேலியா அணியினர் நடுவரிடம் முறையிட்டார்கள். ஆனால் அதை மூன்றாவது நடுவரிடம் ஆலோசனை கேட்க மைதானத்தில் இருந்த நடுவர்கள் தவறி விட்டார்கள். தொலைக்காட்சியில் கங்கூலி ஆட்டமிழந்தது தெளிவாகத்தெரிந்தது. ஆனால் நடுவர் எதுவும் செய்யாததால் கங்கூலி தொடர்ந்து ஆடி வருகிறார்!

இளசு
17-10-2008, 04:51 PM
பதிவுக்கு நன்றி பாரதி..


--------------------------

திரையுலகில் கண்ணதாசன் போல், கிரிக்கெட்டில் சச்சின்..

வாலிகள், டிராவிட்கள் - தவறே இந்த ஜாம்பவான்களின் சமகாலத்தில், சமகளத்தில்
நிற்பதுதான்...

மற்றவர் நன்றாகச் சாதித்தாலும் இந்தச் சூரியன்கள் முன் மங்கிப்போவதே நடக்கும்..
தவிர்க்க இயலாத உலக நடப்பு இது..


சச்சினுக்கு வாழ்த்துகள்!

ராஜா
17-10-2008, 05:11 PM
வாழ்த்துகள் சச்சின்..!

ப்ரையன் லாராவை முந்த அவரைவிட அதிக டெஸ்ட்கள் தேவைப்பட்டாலும், மற்ற பிரிவுகளில் லாரா எண்ணிப்பார்க்கக்கூட முடியாத உயரத்தில் சச்சின் நிற்கிறார்.

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் சச்சின். நிறைய பேரை கிரிக்கெட்டுக்கு இரசிகர்களாக்கிய சாதனை சச்சினுடையது.
அவர் உபயோகிக்கும் கனத்த மட்டையும், உயரக்குறைவும், அவர் விளையாடும் சில சிக்கலான ஷாட்களும் அவரது முதுகெலும்பை பலவீனப்படுத்தியுள்ளபோதிலும், அடுத்த கடவுள் கிடைக்கும்வரை, ஓய்வு எடுத்து... ஓய்வு எடுத்து உழைக்க வேண்டியிருக்கும்..!

மாதவர்
17-10-2008, 05:28 PM
வயதானாலும் சாதித்து காட்டியுள்ளார்
வாழ்த்துக்கள்

arun
17-10-2008, 07:16 PM
சச்சினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

அக்னி
17-10-2008, 07:31 PM
சாதனைச் சச்சின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும்...

அந்தச் சாதனைக் கணப்பொழுது இங்கே...

http://www.youtube.com/watch?v=wdNTs9wF4aw

மதி
18-10-2008, 04:37 AM
சச்சினுக்கு வாழ்த்துகள் ....

செல்வா
18-10-2008, 05:35 AM
வாழ்த்துக்கள் சச்சின்....

Narathar
18-10-2008, 05:44 AM
சச்சின் இந்தியர்களுக்கு மட்டுமல்ல
முழு ஆசியாவுக்குமே பெருமை சேர்த்துள்ளார்.

வாழ்த்துக்கள் சச்சின்!