PDA

View Full Version : அவர் நிச்சயம் வருவார்!



இறைநேசன்
17-10-2008, 06:46 AM
வானில் தோன்றும் கதிர் வராமலே போகலாம்!
வேனில் காலமது இலாமலே போகலாம்!
வீசும் தென்றல் காற்று மாசாகிப் போகலாம்!
வாச மலர்கள் கூட மணமிழந்து போகலாம்!

பேசும் கிளிகளின் ஓசை ஒழித்து போகலாம்
தேசமெல்லாம் கூட அழிந்து போகலாம்
வானத்தின் கூரை வலுவிழந்து போகலாம்
ஞானத்தின் வாசல்கள் அடைபட்டு போகலாம்

ஆசை கடலில் மனிதன் அமிழ்ந்து போகலாம்!
அன்பு என்னும் நேசம் அறவே ஒழியலாம்!
வம்பிழுக்கும் கூட்டம் பெருகிப் போகலாம்!
நெஞ்ஞிருக்கும் உறுதி தளர்ந்து போகலாம்!

ஆனால்
எல்லாமே இல்லாமல் போனாலும்!
என்மனம் எப்போதும் துவளாது! எனென்றால்
என்றாவது ஒருநாள் அவர் நிச்சயம் வருவார்
எல்லாவற்றையும் எனக்காக புதுப்பிப்பார்!

பளிங்கு போன்ற புது தண்ணீரை தருவார்!
பள்ளங்களையும் மேடுகளையும் பசுமை ஆக்குவார்!
துள்ளித்திரியும் மான்களை உருவாக்குவர்!
தூறல் போடும் மேகங்களை புதிதாக்குவர்!

வண்ண வண்ண மலர்களால் தோரணம் செய்தே
மண்ணையே ஒரு சொர்க்கமாக மாற்றி தருவார்!
உண்ண உண்ண தெவிட்டாத கனிகள் தந்தே
உள்ளம் எல்லாம் பொங்கும் இன்பம் தருவார்!

இம்மை வாழ்வை இங்கு நான் முடிக்கும் போது
எம்மை அவர் தன்னோடு சேர்த்துக்கொள்வர்
அவரோடு அனுதினம் நான் களித்திடுவேன்
ஆனந்த சொர்க்கத்தில் என்றும் நான் வாழ்ந்திடுவேன்!

ஆம் அவர் நிச்சயம் வருவார்!

அன்புடன்
இறைநேசன்

அமரன்
17-10-2008, 06:57 AM
அவர் தினமும் வருகிறார் என்பது எனது நம்பிக்கை. அந்த பய பக்தியில் சரியாக நடந்துகொள்ள முயல்கிறேன்.

துள்ளு தமிழில் தெள்ளு கவிதை. வாழ்த்துகள்.

Maruthu
17-10-2008, 08:24 AM
வானில் தோன்றும் கதிர் வராமலே போகலாம்!
வேனில் காலமது இலாமலே போகலாம்!
வீசும் தென்றல் காற்று மாசாகிப் போகலாம்!
வாச மலர்கள் கூட மணமிழந்து போகலாம்!


ஆம் அவர் நிச்சயம் வருவார்!

அன்புடன்
இறைநேசன்






இரைநேசரே அவர் நிச்சயம் வரமாட்டார்...

அவர் சென்றால் தானே வரமுடியும், அவர் எப்பொழுதும் இங்கேயே தான் இருக்கிறார்...

கனவிலிருந்து விழித்தெழும், கண்களை திறந்து பாரும், அவர் உம்முன் உமக்காய் எதிர் நோக்கியிருக்க காண்பீர்...

அவர் அன்று சொன்னதை நினைவு கூரும்...

"கண்களுடையவன் பார்க்கக்கடவன்".

கண்களை மூடிக்கொண்டு தேடாமல், கண்களை பயன்படுத்தும் பயனடைவீர்.

வார்த்தை தொகுப்பு பிரமாதம்!... விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள்!...



அன்புடன்...
மருது.

இறைநேசன்
17-10-2008, 08:53 AM
இரைநேசரே அவர் நிச்சயம் வரமாட்டார்...

அவர் சென்றால் தானே வரமுடியும், அவர் எப்பொழுதும் இங்கேயே தான் இருக்கிறார்... மருது.

அன்பர் மருது அவர்களே!

அவர் வருவார் என்று நான் குறிப்பிடுவதன் காரணம், மனிதனால் பொலிவிழந்து, அழகிழந்து அழிவை நோக்கி போய் கொண்டிருக்கும் இந்த அருமையான பூமியை மீண்டும் புதுப்பிக்க வருவார் என்ற கருத்திலேயே!

வர மாட்டார், புதுப்பிக்க மாட்டார் என்று கருதுபவர்களுக்கு அது நடக்காது!

அவர் இங்கேயே தான் இருக்கிறார் என்று சொல்வதும் சரிதான்! இங்கேயே இருந்து இத்தனை அழியாட்டங்க்ளும் பண்ணும் உலகத்தின் அதிபதி ஒருவன் இருக்கிறார் அவன் தான் உங்கள் கண்ணுக்கு அவர் போல தெரிகிறான் என்று கருதுகிறேன்!
நன்றி
இறைநேசன்

இளசு
18-10-2008, 12:21 PM
Utopian கனவுகள் உண்டு..
ஜெஹோவா நம்பிக்கைகளும் உண்டு..

நல்விளைவு மட்டுமே தரும் நம்பிக்கைகள் நன்றே -
நிதர்சனம் மறக்கும் அளவுக்கு கனவுகள் மறைக்காதவரை!

பாராட்டுகள் இறைநேசன் அவர்களே!