PDA

View Full Version : அவன் சொல்லாமலே எனக்குத்தெரியும்....!



shibly591
16-10-2008, 06:09 AM
களியாட்ட விடுதிகள்
கணக்கற்றுக்கிடக்கும் திருநாட்டில்
பதுங்குகுழியிலும்
வாழ்க்கை நகர்வதை
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்....

இடிவிழுந்தால்
பயந்து நடுங்கும் நம்பெண்கள் மத்தியில்
செல் விழுந்தாலும்
சத்தமின்றி நகரும் பெண்களையும்
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..

கொலை என்பதற்கும்
படுகொலை என்பதற்கும்
பலத்த வேறுபாடு உண்டு என்பதையும்
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..

வாழ்க்கையில் துனபம்
என்று புலம்பிய எனக்கு
வாழ்க்கையே துன்பம்
என்று அவன் சொல்லித்தான் எனக்குததெரியும்...

போர் தின்ற கனவுகள் பற்றி
பிரிவின் இரத்த வலிகள் பற்றி
குறுக்கப்பட்ட வாழ்க்கை பற்றி
பறிக்கப்பட்ட சுதந்திரம் பற்றி
அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..

பீதி பிறாண்டிய புன்னகைகள்
உடைந்து நொறுங்கிய நம்பிக்கைகள்
கருகித்தீய்ந்த உணர்வுகள்
எல்லாமும் அவன் சொல்லித்தான் எனக்குத்தெரியும்..

இந்த நீண்ட நெடுந்துயரம்
எங்கு போய் முடியும் என்பதும்
கொடிய இருட்டு வாழ்க்கை
என்றுதான் விடியும் என்பதும்
அவன் சொல்லாமலே எனக்குத்தெரியும்..
அவன் சொல்லாமலே எனக்குத்தெரியும்....!

சிவா.ஜி
16-10-2008, 06:15 AM
அவன் சொல்லித் தெரிந்தவையெல்லாவற்றையும் விட அவன் சொல்லாமலே தெரியும் செய்திதான் வலி கூட்டுகிறது. அருமையான சொல்லாடல். பாராட்டுக்கள் ஷிப்லி.

shibly591
16-10-2008, 06:21 AM
அவன் சொல்லித் தெரிந்தவையெல்லாவற்றையும் விட அவன் சொல்லாமலே தெரியும் செய்திதான் வலி கூட்டுகிறது. அருமையான சொல்லாடல். பாராட்டுக்கள் ஷிப்லி.

நன்றி நண்பரே...

உங்களுக்கும் நான் சொல்லாமலே புரிந்திருக்குமே..????

Narathar
16-10-2008, 06:33 AM
சொல்லிப்புரிவன பல ,
ஆனால் சொல்லாமல் புரிவன சில.....
ஆனால் அந்த பலவை விட
சில தான் நம்மை அதிகம் பாதிக்கின்றன

அருமையான க்விதை ஷிப்லி.....
வாழ்த்துக்கள்!

shibly591
16-10-2008, 06:36 AM
சொல்லிப்புரிவன பல ,
ஆனால் சொல்லாமல் புரிவன சில.....
ஆனால் அந்த பலவை விட
சில தான் நம்மை அதிகம் பாதிக்கின்றன

அருமையான க்விதை ஷிப்லி.....
வாழ்த்துக்கள்!

நன்றி நாரதரே...

poornima
16-10-2008, 06:46 AM
துயரங்கள் சுமந்த வரிகளையும்
துயரங்களின் நிழல் மறைத்த வரிகளும்
சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் கவிதை..

பாராட்டுகள் ஷீப்லி..

Maruthu
16-10-2008, 06:54 AM
சொல்லாமலே புரிந்தது நண்பரே!...

அருமையான கவிதை.


அன்புடன்...
மருது.

shibly591
16-10-2008, 06:56 AM
துயரங்கள் சுமந்த வரிகளையும்
துயரங்களின் நிழல் மறைத்த வரிகளும்
சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் கவிதை..

பாராட்டுகள் ஷீப்லி..

நன்றி பூர்ணிமா

shibly591
16-10-2008, 06:58 AM
சொல்லாமலே புரிந்தது நண்பரே!...

அருமையான கவிதை.


அன்புடன்...
மருது.

புரிதலுக்கு நன்றிகள் மருது

தீபா
16-10-2008, 09:17 AM
அருமை அருமை..

சில, சிலர் சொல்லித்தான் தெரியும்.. சில சொல்லாமலே!

வாழ்த்துக்கள்.

shibly591
16-10-2008, 09:19 AM
அருமை அருமை..

சில, சிலர் சொல்லித்தான் தெரியும்.. சில சொல்லாமலே!

வாழ்த்துக்கள்.

நன்றிகள் தென்றல்..

shibly591
17-10-2008, 05:26 AM
வாழ்த்துக்கள் ஷிப்லி..
நன்றாயிருக்கிறது.

நன்றிகள் கிஷோர்

அமரன்
17-10-2008, 07:15 AM
ஷிப்லி.
அவன் மூன்று பந்தி சொல்லி முடித்ததும் உள்ளுக்குள் உடைந்து விட்டீர்கள். எனக்கு எனக்கு என்று இருமுறை தள்ளாடிவிட்டீர்கள். அவனும் அதைப் புரிந்துகொண்டான். அதனால் வேகமாகச் சொல்லி முடித்து மௌனமாகி விட்டான். அதன் பின்னர்தான் நீங்கள் சிந்திக்கின்றீர்கள். எல்லாத்துக்கும் ஒரு முடிவு உள்ளது என்ற கோட்பாட்டை பின்பற்றி புது உத்வேகம் அளித்து விட்டீர்கள்; கொண்டீர்கள்.

அவன் சொன்ன உண்மைகள் அந்த திருநாட்டின் திருவாளர் பொதுசனம் ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும். பாராட்டுகள்.