PDA

View Full Version : வன்மங்களின் அடர்த்தியில் எனக்கான கவிதை



shibly591
16-10-2008, 06:08 AM
வன்மங்கள் நிரம்பி வழியும்
உலகில் எனக்கான கவிதையை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்..

ஒரு பறவையின் பாடலாக
நுரை ததும்பும் அலையோசையாக
புல்நுனியில் புரளும் வசந்த ரம்யமாக
அது இருக்கக்கூடும்..

நீண்ட மலைச்சரிவில புரண்டுவிழும்
நீர்வீழ்ச்சிகளின் ஓயா ரீங்காரமாகவோ..
மழை நாளின் குளிரில் நடுங்கும்
மெல்லிய இலைத்தூறலின் சில்லிடுப்பாகவோ..
முகிலற்ற வானில் கவிந்திருக்கும்
பௌரணமி நிலவின் ஒளிக்கற்றையாகவோ
அது இருக்கக்கூடும்...

இன்னும்
ஒரு குழந்தையின் கதறலாக
கனவுகள் செதுக்கும் கற்பனை ஓவியமாக
அந்திமாலை செஞ்சுடர் தீபமாக
ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பாக
யாரோ ஊதிச்செல்லும் புல்லாங்குழல் ராகமாக
ஏன்
தனியறையின் இருள் சூழ்ந்த மௌனமாகக்கூட
அது இருக்கலாம்...

வன்மங்கள் நிரம்பி வழியும்
உலகில் எனக்கான கவிதையை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்..

Maruthu
16-10-2008, 06:49 AM
நண்பரே,

வெளியே எங்கும் தேடவேண்டாம் உங்களுக்கான கவிதை உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது. அதை நீங்கள் தேடினால் கிடைக்காது, எனவே தேட வேண்டாம். ஒன்றுமே செய்ய வேண்டாம். வெற்று மூங்கிலாய் இருங்கள், விழிப்புணர்வுடனே இருங்கள். அப்பொழுது உங்களுக்கான கவிதை தானாய் வெளிப்படும்.


அன்புடன்...
மருது.

shibly591
16-10-2008, 06:53 AM
நண்பரே,

வெளியே எங்கும் தேடவேண்டாம் உங்களுக்கான கவிதை உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது. அதை நீங்கள் தேடினால் கிடைக்காது, எனவே தேட வேண்டாம். ஒன்றுமே செய்ய வேண்டாம். வெற்று மூங்கிலாய் இருங்கள், விழிப்புணர்வுடனே இருங்கள். அப்பொழுது உங்களுக்கான கவிதை தானாய் வெளிப்படும்.


அன்புடன்...
மருது.

நன்றி மருது...

எதையும் தனக்குள் தேடும்போதுதான் கவிதை பிறக்கிறது

நன்றிகள்

சுகந்தப்ரீதன்
16-10-2008, 10:07 AM
புறத்தேடல்களைவிட அகத்தேடல்களே ஆனந்தம் அளிக்கக்கூடியது நண்பரே..!!

உங்கள் கையெழுத்தே சொல்கிறதே வாழ்க்கை புதுக்கவிதை மட்டுமல்ல.. அது புதிர்கவிதையென்று.. விடைக்கிடைக்கிறதோ இல்லியோ எல்லோரும் தேடிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள் உங்களைப் போலவே..!!

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!!

shibly591
17-10-2008, 05:29 AM
புறத்தேடல்களைவிட அகத்தேடல்களே ஆனந்தம் அளிக்கக்கூடியது நண்பரே..!!

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!!

உண்மைதான்...

கவிதையை

எனக்குள் ஒலிக்கும் ஏகார்த மௌனத்தில் கூட அது ஒளிந்திருக்கலாம்..

என்றும் முடித்திருக்க முடியும் என்று இப்போதுதான் தோன்றுகிறது

அமரன்
17-10-2008, 07:27 AM
இந்தபயணியின் பாதையெங்கும்
சிதறிக் கிடக்கும் கவிதைகளில்
எனக்கான கவிதையைக் கண்டெடுக்க
ஒரு கணம் போதும்...


வாழ்த்துக்கள் ஷிப்லி.