PDA

View Full Version : பெரியார்-ஒரு காலக் கணக்கீடு



shibly591
15-10-2008, 09:23 AM
1.வாழ்நாள்:
------------
ஆண்டுகள்:94(3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள் :1131
வாரங்கள் :4919
நாள்கள் :34,433
மணிகள் :8,26,375
நிமிடங்கள்:4,95,82,540
விநாடிகள்:297,49,52,400

2.சுற்றுப்பயணம்:
-----------------
நாள்கள்:8200
வெளிநாடுகளில்:392
தொலைவு:8,20,000 மைல்கள்
ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும்
உள்ள தொலைவைப்போல் 3 மடங்கு.

3.கருத்துரையும் நிகழ்ச்சிகளும்:
----------------------------
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700
கருத்துரை ஆற்றிய காலம்:
-------------------------
மணிகள் :.......21,400
நாள்கணக்கில்:....891
நிமிடங்களில்:.....12,84,000
வினாடிகளில்:.....77,04,000

சிறப்புக்குறிப்பு:
-------------
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது
2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே
இருக்கும்

பெரியார்-பகுத்தறிவாளர் நாட்குறிப்பிலிருந்து(1984)

பாபு
15-10-2008, 10:30 AM
அற்புதமான தகவல் !!

ராஜா
15-10-2008, 10:45 AM
பகுத்தறிவுப் பகலவன், பெரியார் அவர்கள் சுயமரியாதைச் சுடரொளி பரப்பவும் ஆதிக்க சக்தியினரிடையே அடிமைப்பட்டுக் கிடந்தோரின் அறியாமை இருளை அகற்றவும் சுற்றிவந்த அளவைக் கணக்கிட்டுத் தந்த அன்பு ஷிப்லிக்கு ஆயிரம் நன்றிகள்..

உதயசூரியன்
15-10-2008, 11:31 AM
மிக மிக வித்தியாசமான பதிவு..
பெரியாரின் கணக்கீடு.. காலத்தால் அழிக்க முடியாத பிரமிப்பு..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

rajatemp
15-10-2008, 11:37 AM
:lachen001::lachen001::lachen001:

Maruthu
15-10-2008, 11:38 AM
பகுத்தறிவு பகலவனின் வாழ்க்கை பாதையை
பகுத்து அறிந்ததில் பெற்ற புதையலை மன்றத்து உறவுகளுடன்
பகிர்ந்தமைக்கு நன்றி சிப்லி...


அன்புடன்...
மருது.

தீபா
15-10-2008, 12:08 PM
நல்ல தொகுப்பு... வாழ்த்துக்கள்.

சிலை உடைத்தவருக்கு சிலை வைத்திருக்கிறார்களாம்.. அதை கழக முக்கிய நபர் ஒருவர் திறக்கப் போகிறாராம்.... கவனித்தீர்களா பகுத்தறிவன் பட்டறையில் பட்டைத்தீட்டப்பட்ட மொன்னைக் கத்திகளை?

ஓவியா
15-10-2008, 12:33 PM
அசந்து போனேன் ஷிப்லி, பகிர்வுக்கு நன்றிகள்.

என் இந்திய திருத்தணி சுற்றுலா முடிந்தபிந்தான் பெரியாரின் ஆவேசம் எதற்க்காக என்று நன்கு புரிந்தது.

ஜாதி/மத போர்வையில் மக்கள் எப்படி சுயனலம் காண்கின்றனர் என்றும் அவர்கள் தாழ்ந்த மக்கள் என்று சிலரை எப்படி அடிமைபடுத்தி வைத்துள்ளனர் என்றும் அறிந்தேன். அவர் எதையெல்லாம் கண்டு இது அடிமைத்தனம் என்று வெகுண்டு எழுந்தாறே அதெல்லாம் எனக்கும் தோன்றியது.

(தயவு செய்து என் பின்னூட்டத்தை சர்ச்சையாக்காதீர்கள். நன்றி. :))

சூரியன்
15-10-2008, 12:46 PM
அழகான தகவல்.

ராஜா
15-10-2008, 01:06 PM
அசந்து போனேன் ஷிப்லி, பகிர்வுக்கு நன்றிகள்.

என் இந்திய திருத்தணி சுற்றுலா முடிந்தபிந்தான் பெரியாரின் ஆவேசம் எதற்க்காக என்று நன்கு புரிந்தது.

ஜாதி/மத போர்வையில் மக்கள் எப்படி சுயனலம் காண்கின்றனர் என்றும் அவர்கள் தாழ்ந்த மக்கள் என்று சிலரை எப்படி அடிமைபடுத்தி வைத்துள்ளனர் என்றும் அறிந்தேன். அவர் எதையெல்லாம் கண்டு இது அடிமைத்தனம் என்று வெகுண்டு எழுந்தாறே அதெல்லாம் எனக்கும் தோன்றியது.

(தயவு செய்து என் பின்னூட்டத்தை சர்ச்சையாக்காதீர்கள். நன்றி. :))


அதே.. அதே..!

இன்றே இப்படி இருக்கிறதென்றால், 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்..?

ஆதிக்கவாதிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்த அய்யாவின் பெயரைச் சொன்னாலே அடியில் மிளகாயை அரைத்துப் பூசியதைப் போல சிலர் அலறக்காரணமே ஒடுக்கப்பட்டோருக்காக அவர் ஓங்கிக் குரல் கொடுத்ததனால்தான்..

இன்று அந்த ஆதிக்க வர்க்கத்தின் அரசாங்கம் முன்பு போல செல்லுபடியாகவில்லை.. பலரின் பிழைப்பே மாறிப்போய்விட்டது. அந்த வஞ்சம், நஞ்சு கலந்த வார்த்தைகளாக வலம் வந்து வயிற்றெரிச்சலைப் போக்கிக்கொள்கிறது.. பாவம்..!

சுகந்தப்ரீதன்
16-10-2008, 04:41 AM
தகவல்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி ஷிப்லி..!!
இதிலிருந்து என்ன சொல்ல வருகிறீர்கள்இதுக்கூட தெரியாதவரா நீவீர்..??
இத்திரி இருப்பதே படித்ததில் பிடித்தது பகுதியில்தான்..!!

நல்ல தொகுப்பு... வாழ்த்துக்கள்.
சிலை உடைத்தவருக்கு சிலை வைத்திருக்கிறார்களாம்.. அதை கழக முக்கிய நபர் ஒருவர் திறக்கப் போகிறாராம்.... கவனித்தீர்களா பகுத்தறிவன் பட்டறையில் பட்டைத்தீட்டப்பட்ட மொன்னைக் கத்திகளை?கவனித்தோம் தென்றல்.. பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் இன்றைய திராவிட இயக்கங்கள் அத்தனை ஆர்வம் காட்டவில்லையென்று..!! அதன் வெளிப்பாடுத்தான் இத்தகைய செயல்பாடுகள்..!! தமிழகத்தில் காந்திஜி, நேருஜி பற்றி பேசுபவர்களில் எத்தனைப்பேருக்கு பெரியார், காமராஜர், கக்கன், ஜீவாவைப்பற்றி தெரியும் என்பது கேள்விக்குரிய விடயமே..!!

ஒருவேளை நாளை நம் பேரனோ பேத்தியோ பெரியாரின் சிலையைப் பார்த்து யாரிந்த தாடிவைத்த தாத்தா என்றுக்கேட்டால் அவரைப்பற்றி அவர்களுக்கு எடுத்துச்சொல்ல ஏதுவாக இந்த சிலைகள் இருக்கும் என்று எண்ணிவிட்டார்களோ எண்ணவோ... ஆனால் தாத்தாக்களுக்கே அவரைப்பற்றி தெரியாவிட்டால் பேரன்களின்நிலை பரிதாபம்தான்... பெரியார்சாமி என்று பெயரிட்டு அவருக்கு கோயில்கட்டி கும்பிட்டாலும் கும்பிடுவார்கள் அவர்கள்.. யார்கண்டார்..??

nambi
06-05-2010, 02:30 PM
தந்தை பெரியாரின் காலக்கணக்கீடு தகவல்கள் அறிய வேண்டியவை. சமீபத்தில் தில்லியில் பெரியார் மய்ய திறப்பு விழாவிலும், இது பற்றி முதலமைச்சர் கலைஞர் தனது விழாப் பேருரையின் மூலம் குறிப்பிட்டார். பகிர்ந்தமைக்கு நன்றி!