PDA

View Full Version : நச் !!!

பாபு
15-10-2008, 07:39 AM
நச் !!!

அவசர அவசரமாய் அந்த கடையை நோக்கி ஓடினான். ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி கடைக்காரரிடமிருந்து 'அதை'யும் மீதி சில்லரைகளையும் வாங்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவாறே எதிரிலிருக்கும் அந்த பூங்காவை நோக்கி நடந்தான்.

சிறிது தூரம் நடந்து, அந்த ஆலமரம் பக்கத்தில் இருக்கும் சிமெண்ட் இருக்கையில் வந்து அமர்ந்தான். கையில் உள்ள சிகரெட்டை பற்றவைத்து நிம்மதியாய் முதல் இழுப்பை இழுத்தான்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் ஒரு இழுப்பு இழுத்தான்.
மூன்றாவது இழுப்பு இழுத்துவிட்டு தன்னிச்சையாய் திரும்பிய அவன் தூரத்திலிருந்து என்னை பார்த்துவிட்டான். உடனடியாக சுதாரித்தவன், கையில் உள்ள சிகரெட்டை தூக்கிப்போட்டுவிட்டு ஓடத்துவங்கினான்.

"அரவிந்த் ! அரவிந்த் !!", நான் கூப்பிட்டதாலோ என்னவோ அவன் இன்னும் வேகத்தை அதிகரித்திருந்தான்.

அரவிந்தும் நானும் பக்கத்து பக்கத்து வீடு. இருவரும் ஒரே கல்லூரியில் தான் படிக்கிறோம்.

அவன் ஓடி மறைந்ததும், ஒன்றும் புரியாமல், நான் என் பையிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.

அமரன்
15-10-2008, 08:24 AM
பாபு.
இது உங்கள் முதல் கதை என்று நினைக்கின்றேன். வாழ்த்துக்கள்.

"ஒரு பக்கக் கதை"க்குரிய அம்சங்கள் இருந்தாலும் வீரியம் குறைந்த கதையாகப் படுகிறது. அரவிந்தன் பக்கத்தில் இருந்து பார்த்தால் கதை கனமாகத் தெரிகிறது.

தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வந்து வியக்க மன்றம் உடனிருக்கும்.

Narathar
15-10-2008, 08:28 AM
கவிதை போல உங்களுக்கு கதையும் வருகின்றது... அமரன் சொன்னதுபோல தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள் இன்னும் நன்றாக எழுதுவீர்கள்....

வாழ்த்துக்கள்

தீபா
15-10-2008, 08:29 AM
அருமை அருமை..... அழகு..... எக்ஸலண்ட்.

Maruthu
15-10-2008, 09:36 AM
நச் !!!

அவசர அவசரமாய் அந்த கடையை நோக்கி ஓடினான். ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி கடைக்காரரிடமிருந்து 'அதை'யும் மீதி சில்லரைகளையும் வாங்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவாறே எதிரிலிருக்கும் அந்த பூங்காவை நோக்கி நடந்தான்.

சிறிது தூரம் நடந்து, அந்த ஆலமரம் பக்கத்தில் இருக்கும் சிமெண்ட் இருக்கையில் வந்து அமர்ந்தான். கையில் உள்ள சிகரெட்டை பற்றவைத்து நிம்மதியாய் முதல் இழுப்பை இழுத்தான்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் ஒரு இழுப்பு இழுத்தான்.
மூன்றாவது இழுப்பு இழுத்துவிட்டு தன்னிச்சையாய் திரும்பிய அவன் தூரத்திலிருந்து என்னை பார்த்துவிட்டான். உடனடியாக சுதாரித்தவன், கையில் உள்ள சிகரெட்டை தூக்கிப்போட்டுவிட்டு ஓடத்துவங்கினான்.

"அரவிந்த் ! அரவிந்த் !!", நான் கூப்பிட்டதாலோ என்னவோ அவன் இன்னும் வேகத்தை அதிகரித்திருந்தான்.

அரவிந்தும் நானும் பக்கத்து பக்கத்து வீடு. இருவரும் ஒரே கல்லூரியில் தான் படிக்கிறோம்.

அவன் ஓடி மறைந்ததும், ஒன்றும் புரியாமல், நான் என் பையிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.

நண்பரே,
கதை நச் !!!... சென்று இருக்கிறது... ஆரம்பத்தில் மட்டும்.

சிறிது முயன்றால் இன்னும் சாதிக்கலாம்... வாழ்த்துக்கள்.

அன்புடன்...
மருது.

இளசு
16-10-2008, 05:11 AM
கதை முயற்சிக்குப் பாராட்டுகள் பாபு..

வேலியைப் பார்த்து ஓணான் பயந்தோடியதாய் கதையைச் செதுக்கியிருந்தாலும்,
பொது இடங்களில் புகைத்தடைச் சட்டம் இக்கதையோட்டத்தைப் பாதித்துவிட்டது..

அடுத்த பத்தியிலேயே புகைப்பதைச் சொல்வதால், முதல் பத்தியில் ''அதை'' என்ற மர்மச்சொல் அவசியமா என்ன?

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!