PDA

View Full Version : பாரத மத்திய அரசுக்கு 2 வாரகால காலக்கெடு...அன்புரசிகன்
15-10-2008, 04:34 AM
பாரத மத்திய அரசுக்கு தமிழக பாராளுமன்ற உறுப்பினரால் 2 வாரகால காலக்கெடு...

இரண்டு வார கால காலக்கெடு ஒன்று தமிழக அரசியல் கட்சிகளால் மத்திய அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த இந்த காலக்கெடுக்குள் மத்திய அரசு அவர்களுக்கு தகுந்த நடவெடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தவறும் பட்ச்சத்தில் இந்திய பாராளுமன்றத்திலுள்ள 40 தமிழக உறுப்பினர்களும் பதவிவிலகுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களின் சுருக்கம் இதோ...
1. ஈழத்தீவில் அமைதியும் சகவாழ்வு நிரந்தரமாகிட இந்திய அரசு நடவெடிக்கை எடுக்கப்படவேண்டும்.
2. இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகள் இலங்கை அரசால் துர்ப்பிரயோகம் செய்வதால் அவற்றை நிறுத்தவேண்டும்.
3. இலங்கையில் இரண்டுவாரகாலங்களில் (!!!???) போர்நிறுத்தம் ஏற்படவேண்டும்.
4. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு சகலவழிகளிலும் உதவிடவேண்டும். (உணவு உறையுள் மருந்து உட்பட)
5. மனிதாபிமான முறையில் உதவிவரும் அரச சார்பற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களின் முயற்ச்சியை திசைதிருப்பாது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் நேரடியாக உதவிட வழிவகை செய்யவேண்டும்
6. இந்திய மீனவர்கள் இந்துசமுத்திரத்தில் இலங்கை அரசால் சாகடிக்கப்படுவதை நிறுத்தல்.

மேற்கூறப்பட்ட தீர்மானங்கள் செயல்வடிவில் வராதபட்சத்தில் அந்த 40 தமிழக உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவர் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது...

முழுமையான செய்தி இங்கே... (http://www.puthinam.com/full.php?2e4YOA4cb3ae6DR34d31VoA2a03S4AAe4d4YIm4c00aeoMVHde2dD1eo2cc04cYK3e)

நன்றி - புதினம் இணையம்...
-----------------

இது நடக்குமா?? நடந்தால் நன்றாக இருக்கும். நல்லதையே நினைப்போம்...

ராஜா
15-10-2008, 05:26 AM
//////////// மேற்கூறப்பட்ட தீர்மானங்கள் செயல்வடிவில் வராதபட்சத்தில் அந்த 40 தமிழக உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவர் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது...///////////

ஹி..ஹி...

யாரும் சண்டைக்கு வராதீங்கப்பு... தேர்தலுக்கு இன்னும் 4 1/2 வருடம் இருந்தால் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பாங்களான்னு சந்தேகமா இருக்குங்கண்ணா..!

எப்படியோ... நல்லது நடந்தாச் சரிதேன்..!

தீபன்
15-10-2008, 07:49 AM
எதிர்மறை விமர்சனங்களின் மத்தியிலும் ஆதரவு அலை தீவிரம் பெறுவது நம்பிக்கையளிக்கிறது. பதவி துறப்பு அரசியல் நாடகமானாலும் பாதகமில்லை... ஆதரவளிக்க பயந்துகொண்டிருக்கும் சாதாரண மக்களுக்கு அது உந்துசக்தியாயாவது அமையும். அரசியல் கட்சிகளை தாண்டி பொது அமைப்புக்களும் ஆதரவு குரல் கொடுக்கும் நிலை தோன்ற காரணமே இன்றைய அரசியல் கட்சிகளின் போக்குத்தானென்பதால் அவற்றின் உள்நோக்கங்களை தாண்டி ஈழத்தமிழர் பிரச்சினையில் இவ்விடையங்கள் வரவேற்கத்தக்கனவே.
தொடரட்டும்... பரவட்டும்.

விகடன்
15-10-2008, 10:33 AM
முதற்ற்கட்டமாக கனிமொழி இராஜினாம செய்துவிட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

ஓவியா
15-10-2008, 01:35 PM
முதற்ற்கட்டமாக கனிமொழி இராஜினாம செய்துவிட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

இன்னும் செய்யவில்லை, கடிதத்தை தன் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார், அவ்வளோதான்.

********************************************************************************************************

அரசியல் நோக்கம் இருப்பினும், சிங்கல அரசாங்கம் கொஞ்சம் ஆட்டங்கண்டுள்ளது நல்ல விசயமே. தமிழ் மக்களுக்கு விடிவெள்ளி பிறக்கவேண்டும் என்பதே அனைவரின் அவா.

ஒரு கேள்வி
40 தமிழக உறுப்பினர்களும் பாராளுமன்றத்தை விட்டு விழகினால் ஆட்சி எதிர்கட்சிக்கு சாதகமாகுமா? எதிர் அணி ஆட்சிக்கு வருமா?

மாதவர்
15-10-2008, 02:58 PM
பாரளுமன்ற தேர்தல் விரைவில் வந்துவிடும் என்பது மட்டும் உறுதி!!

Ranjitham
15-10-2008, 04:04 PM
தமிழருக்கு எதிராக இலங்கைக்கு இந்தியாவின் இரனுவவுதவி ஒருக்காலமும் எந்த ஒரு தமிழணாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.வெளிவந்தது இதுமட்டுமே வெளிவராதது எத்தனையோ. ஆண்டவா அப்பவிகளை காப்பாற்று.

ஆவேசத்துடன்
இரன்சிதம்

kampan
15-10-2008, 04:48 PM
போரினால் துவண்டு போயுள்ள தங்கள் ஈழத்தமிழருக்கு சார்பான கருத்துக்களும் போராட்டங்ளும் எமக்கு ஆதரவையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரை உலகத்தினர், மாணவர்கள், மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

Keelai Naadaan
15-10-2008, 05:51 PM
தமிழக முதல்வரின் இந்த முயற்சி வரவேற்கதக்கது.
மேலும் முதல்வர் அவர்கள் "நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம்" எனவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி இங்கே (http://www.dailythanthi.com/article.asp?NewsID=444512&disdate=10/15/2008)

நல்லது நடக்கும் என நம்புவோம்

அமரன்
15-10-2008, 07:52 PM
தமிழக முதல்வரின் இந்த முயற்சி வரவேற்கதக்கது.
மேலும் முதல்வர் அவர்கள் "நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம்" எனவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்லது நடக்கும் என நம்புவோம்

:icon_b::icon_b::icon_b::icon_b:

ஈழத்தமிழர் விடயத்தில் இனி மேல் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும்
விழலுக்கிறைத்த நீராகாதிருக்க அனைத்து தரப்பினரும் உறுதி பூணுவோம்.
உப்புக் கண்டத்தில் வசந்தம் வீச பிரார்த்திப்போம்..

தீபன்
16-10-2008, 03:26 AM
எதிர்வரும் நாட்களில் நடபெறவிருக்கும் திரையுலகினரின் ஆதரவு போராட்டத்தில் தமிழை சுவாசிக்கும் தமிழ் பேசும் தமிழுக்காய் வாழும் உச்ச நட்சத்திரங்கள் தங்கள் குரலை ஒலிக்குமா...? இல்லை, அரசியல் ஈடுபாடெமக்கில்லை என தமக்கிருக்கும் தார்மீக கடப்பாடுகளிலிருந்து விலகிக்கொள்ளுமா...?
அனைவரின் ஒருமித்த ஆதரவையும் எதிர்பார்த்து ஈழத்தமிழினம் நம்பிக்கையோடு காத்திருக்கிறது...!

ராஜா
16-10-2008, 07:00 AM
உங்கள் நம்பிக்கையைச் சிதற வைக்கும் முயற்சி என்று தயவு செய்து தவறாக கணக்கிட்டுவிடாதீர்கள்..

இந்த ஈழப்பிரச்னையை நான் கால் நூற்றாண்டாக அவதானித்து வருகிறேன்.. 1980 களின் முற்பகுதியில் ஈழத்தவர்க்கு ஆதரவாக தமிழக மக்களின் மனதில் இருந்த எழுச்சியிலும், போராட்ட உணர்விலும் நானும் அன்று கலந்திருந்தேன். போராளிகளுக்கு ஆதரவாக கண்காட்சிகள் வைப்பது, நிதி திரட்டுவது, இன்னும் வெளியில் விவரிக்க இயலாத சாகசங்கள் புரிவது எதுவுமே அன்று அரசாங்கத்தின் கண்களில் தவறாகப் படாத காலகட்டமும் கூட. நடுவணரசில் இரும்புப் பெண்மணி இந்திரா அம்மையார் பொறுப்பேற்றிருந்தார். மக்கள் ஆதரவு, சிங்களரின் அன்றைய அட்டூழியங்கள் ( இங்கு தமிழன் கறி விற்கப்படும்.. தமிழ்ப் பெண்கள் கற்பழிப்பு... குட்டிமணி, செகன் கண்கள் பறிப்பு...இன்னபிற ) சர்வதேச ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு ஈழமக்கள்பால் உலகளாவிய அனுதாபம், முதலிய சாதக அம்சங்கள் நிறைய இருந்த அன்றைய காலகட்டம் ஈழமக்களின் இன்னல்கள் தீர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்தது.(இன்று ஈழப்பிரச்னை குறித்து வாதம் செய்வோரில் பலர் அன்று விரல் சூப்பும் குழந்தைகளாக இருந்திருக்கக்கூடும்.)

அன்றுமட்டும் அரசியல்வாதிகள், இந்திய மக்களின் எதிர்பார்ப்பிணங்க, தம் மாச்சரியங்களை மறந்துவிட்டு மத்திய அரசை வலியுறுத்தியிருந்தால், இந்திரா அம்மையார் எத்தகைய முடிவையும் ( வங்க தேசத்தில் நிகழ்ந்ததைப்போல) துணிவாக எடுத்திருப்பார்.
அவ்வளவு எழுச்சியும் ஆதரவும் மக்களிடம் காணப்பட்ட காலத்தில்கூட, அரசியல்வாதிகள் ஆளுக்கொரு பிரிவாகப் பிரிந்து அரசியல் செய்துகொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர். விடுதலைப்புலிகளை ஆதரித்தால், கலைஞர் டெலோவை ஆதரிப்பார்.

ஆனால், ஈழ விடுதலை இன்னார் கையால் கிடைத்தது என்னும் புகழ் எதிரிக்குப் போக மாற்றுக்கருத்துள்ளோருக்கு மனம் ஒப்பவில்லை. ஈழ மக்களின் துயர் தீர்வதைவிட, எதிரி நல்லபெயர் பெற்றுவிடக்கூடாது என்று கீழறுப்பு வேலைகள் நிறையச் செய்தார்கள்.

அந்த அரசியல்வாதிகளால் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று இன்னமும் நம்பும் பரிதாபத்துக்குரியோரை என்னவென்று சொல்ல..?

மறத்தமிழன்
16-10-2008, 08:35 AM
உங்கள் நம்பிக்கையைச் சிதற வைக்கும் முயற்சி என்று தயவு செய்து தவறாக கணக்கிட்டுவிடாதீர்கள்..

(இன்று ஈழப்பிரச்னை குறித்து வாதம் செய்வோரில் பலர் அன்று விரல் சூப்பும் குழந்தைகளாக இருந்திருக்கக்கூடும்.)

அந்த அரசியல்வாதிகளால் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று இன்னமும் நம்பும் பரிதாபத்துக்குரியோரை என்னவென்று சொல்ல..?

என்ன ராஜா அவர்களே! விரல் சூப்பும் குழந்தைகள் இப்போது அரசியல் கதைக்க கூடாதா? எல்லோரும் அப்படித்தான்,

தமிழக எழுச்சியை எந்த அடிப்படையில் நீங்கள் பார்த்தாலும் ஈழத்தமிழன் என்கிற ரீதியில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். எழுச்சி அரசியல்வாதியில் இருந்து மாணவர், திரைத்துறையினர், வணிகர்கள், தொழிலாளர்கள் , மக்கள் என சகல மட்டங்களுக்கும் விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த எழுச்சி எல்லா தமிழ்மக்களிடமும் பேரெழுச்சியாக விரியவேண்டும். அதிலே தமிழீழ மலர்ச்சி தெரிய வேண்டும்.

அனைத்து தமிழக உடன்பிறப்புக்களுக்கும் நன்றிகள்!

உதயசூரியன்
16-10-2008, 08:52 AM
முன்பு நடந்த நிகழ்ச்சிகளின் காரணமாக இன்னும் தங்களுக்கு தானே.. ஈழ தமிழர்களின் விடுதலை பற்றிய எழுச்சி இருக்க வேண்டும் ராஜா அவர்களே..
கலைஞரே மவுனத்தை கலைத்து.. இப்பிரச்சினைக்காக.. கடைசியாக விடுத்த வேண்டுகோளில்.. அருமையாக சொல்லியுள்ளாரே..
னம்மில் பேசி கொள்ளும் எந்த ஒரு எதிர்பேச்சுக்களும்.. எதிரிக்கு சாதகமாக அமைய கூடாது..
போராடுபவர்களின் எழுச்சியை குறைக்கவும் கூடாது அல்லவா..
பழையதை பற்றி நினைக்காமல்.. புதிய அத்தியாயம் படைக்க மக்களாகிய நாம் பங்கெடுப்போம்..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

lolluvathiyar
16-10-2008, 09:50 AM
பாரளுமன்ற தேர்தல் விரைவில் வந்துவிடும் என்பது மட்டும் உறுதி!!

இவர்கள் ராஜினாமா செய்யாவிட்டாலும் கூட பாராளுமன்ற தேர்தல் வந்து விடும். காரனம் பாராளுமன்றத்துக்கு தேதி முடிய இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கிறது. 4.5 ஆன்டுகள் ஆட்சியில் இருந்தாகி விட்டது. ஒவ்வொரு எம்பியும் மூன்று ஆன்ட்கள் எம் பியாக இருந்தாலே போது கடைசிவரை பென்சன் சலுகைகள் வாங்கலாம்.

ராஜா
16-10-2008, 02:59 PM
விரல் சூப்பும் குழந்தைகள் என்று குறிப்பிட்டது, இன்று நீங்கள் அரசியல் கதைக்க கூடாதவர்கள் என்பதற்காக அல்ல..

அன்று நடந்தவற்றை அறியும் அளவுக்கு உங்களுக்கு வயதும் வாய்ப்பும் இருந்திருக்காது என்று சுட்டிக்காட்டதான்.. எல்லோரும் விரல் சூப்பித்தான் இன்று வளர்ந்து நிற்கிறோம்..

இந்த ஒரு சிறு விஷயத்தையே நீங்கள் புரிந்துகொள்ளுமளவுக்கு என்னால் சொல்ல முடியவில்லை என்றால், வேறு என்னத்தைச் சொல்லி புரியவைக்கப் போகிறேன்.

உங்கள் நம்பிக்கைக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை.

காலம் எல்லோருக்கும் எல்லாவற்றையும் புரியவைக்கட்டும்..

Narathar
16-10-2008, 05:41 PM
ஈழ விடுதலை இன்னார் கையால் கிடைத்தது என்னும் புகழ் எதிரிக்குப் போக மாற்றுக்கருத்துள்ளோருக்கு மனம் ஒப்பவில்லை. ஈழ மக்களின் துயர் தீர்வதைவிட, எதிரி நல்லபெயர் பெற்றுவிடக்கூடாது என்று கீழறுப்பு வேலைகள் நிறையச் செய்தார்கள்.

அந்த அரசியல்வாதிகளால் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று இன்னமும் நம்பும் பரிதாபத்துக்குரியோரை என்னவென்று சொல்ல..?

சரியாகச்சொன்னீர்கள்!

நான் இங்கு தமிழ் நாட்டிலுள்ள ஈழ மகன் பால் உண்மையான அன்பு கொண்டுள்ள தமிழ் மக்களை சொல்ல வரவில்லை. தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்.

எதை அரசியலாக்கலாம்?
எப்படி எனது வாக்கு வங்கியை பெருக்கலாம்?
என்று ஓட்டுக்கணக்கு போடும் அரசியல் வாதிகளால் ஒரு போதும் ஈழ மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை....

கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு, தூரத்தில் தெரிவது காணல் நீர் என்பது தெரியும், ஆனால் தண்ணீர் இருக்கின்றது என்று சும்மா தங்களுக்கு தாமே நம்பிக்கையூட்டிக்கொள்ளத்தான் இந்த தமிழக அரசியல் விளையாட்டுக்களை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஏன் ஆதரித்து அறிக்கைகள் கூட விடுகின்றார்கள். நமக்கு ஆதரவாக பேச அள் இருக்கின்றார்கள் என்ற ஆவலை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள் அவ்வளவே என்பது என் தனிப்பட்ட கருத்து. :)

பொதுவாக இவ்வாரான திரிகளில் நான் இங்கு மன்றத்தில் கருத்துக்களை தெரிவிப்பது குறைவு. என்றாலும் சமீபகாலத்திலேற்பட்டிருக்கும் மாற்றங்களாவது... எனது கொள்கையை கொஞ்சம் மாற்றி வருகின்றது.

அமரன்
16-10-2008, 08:48 PM
அன்புள்ள ராஜா அண்ணா மற்றும் நாரா..

இந்த விடயம் அரசல் புரசலாக காதில் விழுந்தது முதலாக என்னுள் பல எண்ணவோட்டங்கள். அவற்றை வெளிப்படுத்தி எவருடனும் மோதி எவரையும் இழக்க மன்றமகனாக விரும்பவில்லை. ஈழ ஆதரவிலிருந்து எவரையும் விலகிச்செல்ல விட ஈழமகனாக இஸ்டம் இல்லை.

யாரையும் குறை சொல்லவில்லை. யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை. என்னையே நான் கேட்கின்றேன். உங்களை நீங்களே கேளுங்கள். பதிலைப் பகிரவேண்டாம். பரிகாரம் என்னவென்பதை கண்டு செயல்படுங்கள்.

இந்தியா தலையிடுகிறது. போர் நிறுத்தம் வருகிறது. பேச்சு வார்த்தை ஆரம்பிக்கிறது. ஈழத்தமிழரின் ஆகக்குறைந்த அபிலாசை என்ன? எதிர்தரப்பு தரக்கூடிய உச்சபட்ச அதிகாரம் என்ன? ஈழப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிட்டுமா? எல்லா வினாவுக்கும் ஆம் என்ற பதிலை பெற நான் என்ன செய்யவேண்டும்?

Ranjitham
17-10-2008, 05:24 AM
உங்கள் நம்பிக்கையைச் சிதற வைக்கும் முயற்சி என்று தயவு செய்து தவறாக கணக்கிட்டுவிடாதீர்கள்..

இந்த ஈழப்பிரச்னையை நான் கால் நூற்றாண்டாக அவதானித்து வருகிறேன்.. 1980 களின் முற்பகுதியில் ஈழத்தவர்க்கு ஆதரவாக தமிழக மக்களின் மனதில் இருந்த எழுச்சியிலும், போராட்ட உணர்விலும் நானும் அன்று கலந்திருந்தேன். போராளிகளுக்கு ஆதரவாக கண்காட்சிகள் வைப்பது, நிதி திரட்டுவது, இன்னும் வெளியில் விவரிக்க இயலாத சாகசங்கள் புரிவது எதுவுமே அன்று அரசாங்கத்தின் கண்களில் தவறாகப் படாத காலகட்டமும் கூட. நடுவணரசில் இரும்புப் பெண்மணி இந்திரா அம்மையார் பொறுப்பேற்றிருந்தார். மக்கள் ஆதரவு, சிங்களரின் அன்றைய அட்டூழியங்கள் ( இங்கு தமிழன் கறி விற்கப்படும்.. தமிழ்ப் பெண்கள் கற்பழிப்பு... குட்டிமணி, செகன் கண்கள் பறிப்பு...இன்னபிற ) சர்வதேச ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு ஈழமக்கள்பால் உலகளாவிய அனுதாபம், முதலிய சாதக அம்சங்கள் நிறைய இருந்த அன்றைய காலகட்டம் ஈழமக்களின் இன்னல்கள் தீர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்தது.(இன்று ஈழப்பிரச்னை குறித்து வாதம் செய்வோரில் பலர் அன்று விரல் சூப்பும் குழந்தைகளாக இருந்திருக்கக்கூடும்.)

அன்றுமட்டும் அரசியல்வாதிகள், இந்திய மக்களின் எதிர்பார்ப்பிணங்க, தம் மாச்சரியங்களை மறந்துவிட்டு மத்திய அரசை வலியுறுத்தியிருந்தால், இந்திரா அம்மையார் எத்தகைய முடிவையும் ( வங்க தேசத்தில் நிகழ்ந்ததைப்போல) துணிவாக எடுத்திருப்பார்.
அவ்வளவு எழுச்சியும் ஆதரவும் மக்களிடம் காணப்பட்ட காலத்தில்கூட, அரசியல்வாதிகள் ஆளுக்கொரு பிரிவாகப் பிரிந்து அரசியல் செய்துகொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர். விடுதலைப்புலிகளை ஆதரித்தால், கலைஞர் டெலோவை ஆதரிப்பார்.

ஆனால், ஈழ விடுதலை இன்னார் கையால் கிடைத்தது என்னும் புகழ் எதிரிக்குப் போக மாற்றுக்கருத்துள்ளோருக்கு மனம் ஒப்பவில்லை. ஈழ மக்களின் துயர் தீர்வதைவிட, எதிரி நல்லபெயர் பெற்றுவிடக்கூடாது என்று கீழறுப்பு வேலைகள் நிறையச் செய்தார்கள்.

அந்த அரசியல்வாதிகளால் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று இன்னமும் நம்பும் பரிதாபத்துக்குரியோரை என்னவென்று சொல்ல..?

இவை அனைத்திற்க்கும் காரனம் அன்றுமுதல் இன்றுவரை ஈழதமிழர் அல்லது ஈழதமிழ் குழுக்களின் ஒற்றுமை இன்மையே. அல்லது என்றோ தமிழ் ஈழகொடி பறந்திருக்கவேண்டும்.
இலங்கை அரசால் அரசியல் வாயிலாக உலகலவில் உதவிகள் தடைகள் பெற்றுவிடக்கூடும் என்றால் ஈழதமிழ் குழுக்களின் அரசியல்
வேண்டும்.
நன்றியுடன்
இரன்சிதம்.

Narathar
17-10-2008, 05:43 AM
இந்தியா தலையிடுகிறது.
போர் நிறுத்தம் வருகிறது.
பேச்சு வார்த்தை ஆரம்பிக்கிறது.
ஈழத்தமிழரின் ஆகக்குறைந்த அபிலாசை என்ன?
எதிர்தரப்பு தரக்கூடிய உச்சபட்ச அதிகாரம் என்ன?
ஈழப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிட்டுமா?
எல்லா வினாவுக்கும் ஆம் என்ற பதிலை பெற நான் என்ன செய்யவேண்டும்?

இந்தக்கேள்விக்கு நீங்கள் சொன்னதுபோல்
பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை ஆமரரே....

நமக்கு நாமே கேட்டுக்கொண்டாலே போதும்! :)

சுகந்தப்ரீதன்
18-10-2008, 05:46 AM
ஈழ மக்களின் துயர் தீர்வதைவிட, எதிரி நல்லபெயர் பெற்றுவிடக்கூடாது என்று கீழறுப்பு வேலைகள் நிறையச் செய்தார்கள்.அண்ணா.. இப்போதும் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களின் எண்ணம் எப்போதும் ஈடேறப்போவதில்லை.. புடுங்கி எறிய தமிழினம் ஒன்றும் புல்பூண்டு அல்ல.. அது ஆலமரம் போன்றது.. வேர்கள் விழுந்தாலும் விழுதுகள் தாங்கும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது..!!

ராஜா
18-10-2008, 06:37 AM
கீழறுப்பு வேலை செய்ப*வர்கள் எண்ணம் ஈடேறாமல் போகட்டும். ஆனால் அவர்களின் செய்கைகளால் ஈழத்தவரின் விடுதலை பிந்திப்போகிறதே... !

வேர்கள் விழுந்தால் விழுதுகள் தாங்கும்.. ஆனால் எல்லா விழுதுகளும் வெட்டப்படுவதற்கு முன்னர் விடுதலை கிடைக்க வேண்டுமே..!

ராஜா
18-10-2008, 06:48 AM
சரியாகச்சொன்னீர்கள்!

நான் இங்கு தமிழ் நாட்டிலுள்ள ஈழ மகன் பால் உண்மையான அன்பு கொண்டுள்ள தமிழ் மக்களை சொல்ல வரவில்லை. தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்.

எதை அரசியலாக்கலாம்?
எப்படி எனது வாக்கு வங்கியை பெருக்கலாம்?
என்று ஓட்டுக்கணக்கு போடும் அரசியல் வாதிகளால் ஒரு போதும் ஈழ மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை....

கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு, தூரத்தில் தெரிவது காணல் நீர் என்பது தெரியும், ஆனால் தண்ணீர் இருக்கின்றது என்று சும்மா தங்களுக்கு தாமே நம்பிக்கையூட்டிக்கொள்ளத்தான் இந்த தமிழக அரசியல் விளையாட்டுக்களை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஏன் ஆதரித்து அறிக்கைகள் கூட விடுகின்றார்கள். நமக்கு ஆதரவாக பேச அள் இருக்கின்றார்கள் என்ற ஆவலை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள் அவ்வளவே என்பது என் தனிப்பட்ட கருத்து. :)

பொதுவாக இவ்வாரான திரிகளில் நான் இங்கு மன்றத்தில் கருத்துக்களை தெரிவிப்பது குறைவு. என்றாலும் சமீபகாலத்திலேற்பட்டிருக்கும் மாற்றங்களாவது... எனது கொள்கையை கொஞ்சம் மாற்றி வருகின்றது.

கண்காணா தேசத்தில், சரியான முகவரி இல்லாமல் தவிக்கும்போது, சொந்த ஊர்க்காரரை கண்டது போன்ற மகிழ்ச்சி நிரம்பிய நிம்மதி உங்கள் பதிவைப் படித்ததும் கிடைத்தது.

நாம் சொல்லவருவதை சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு உள்ள்ம் இருப்பது மகிழ்வைத் தருகிறது.

நன்றி நண்பரே..!

ராஜா
18-10-2008, 06:58 AM
ஈழத்தமிழரின் ஆகக்குறைந்த அபிலாசை என்ன? எதிர்தரப்பு தரக்கூடிய உச்சபட்ச அதிகாரம் என்ன? ஈழப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிட்டுமா? எல்லா வினாவுக்கும் ஆம் என்ற பதிலை பெற நான் என்ன செய்யவேண்டும்?அன்பின் அமர்...

நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் எனக்கு மட்டுமல்ல... பலரின் உள்ளங்களிலும் அலை மோதுகின்றன.

ஈழ விடுதலை என்பது என்ன..? தனி ஆட்சி உரிமையுடன் கூடிய இலங்கையின் ஒரு மாநிலமா..? அல்லது முற்றிலும் புதிய தமிழர் நாடா..?

விடுதலைக்குப் பிந்தைய தனி ஈழ ஆட்சிமுறைக்கும், ஈழத்தின் பொருளாதாரத் தன்னிறைவுக்கும் சரியான, தெளிவான ஒரு செயல்திட்டத்தை எந்தத் தலைவராவது முன்வைத்திருக்கிறார்களா என்று ஈழ நண்பர்கள் தெரிவிக்கக் கோருகிறேன்.

ராஜா
18-10-2008, 07:01 AM
இவை அனைத்திற்க்கும் காரனம் அன்றுமுதல் இன்றுவரை ஈழதமிழர் அல்லது ஈழதமிழ் குழுக்களின் ஒற்றுமை இன்மையே. அல்லது என்றோ தமிழ் ஈழகொடி பறந்திருக்கவேண்டும்.

நன்றியுடன்
இரன்சிதம்.

நன்றி ரஞ்சி..!

நீங்கள் மேலோட்டமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகளைப் போல இன்னும் ஆழச்சென்று மேலதிகத் தகவல்களை அந்தப்பதிவில் இட்டிருந்தேன். நல்லவேளையாகத் திருத்திவிட்டேன்.

அமரன்
18-10-2008, 10:16 AM
அன்பின் அமர்...

நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் எனக்கு மட்டுமல்ல... பலரின் உள்ளங்களிலும் அலை மோதுகின்றன.

ஈழ விடுதலை என்பது என்ன..? தனி ஆட்சி உரிமையுடன் கூடிய இலங்கையின் ஒரு மாநிலமா..? அல்லது முற்றிலும் புதிய தமிழர் நாடா..?

விடுதலைக்குப் பிந்தைய தனி ஈழ ஆட்சிமுறைக்கும், ஈழத்தின் பொருளாதாரத் தன்னிறைவுக்கும் சரியான, தெளிவான ஒரு செயல்திட்டத்தை எந்தத் தலைவராவது முன்வைத்திருக்கிறார்களா என்று ஈழ நண்பர்கள் தெரிவிக்கக் கோருகிறேன்.

அண்ணா!
உங்களதும் நாரதரதும் கருத்துகள் சொந்த சோதரன் மீதான அன்பால், கடந்தகாலங்களைப் படித்தும் சமகாலத்தை நாடிபிடித்தும் சொல்லப்பட்ட கருத்துகள் என்பதை நான் அறிவேன். அதே நேரம் பழையன கழிதலும் புதிய புகுதலும் என்ற இதர நண்பர்களின் மனநிலையையும் உணர்ந்துள்ளேன். அவர்கள் நினைப்பது நடந்தால் அவர்களைப் போல நீங்களும் மகிழ்வீர்கள் என்பதில் எள்ளவும் ஐயம் எனக்கில்லை.

அந்த ஆனந்தகாலங்கள் நெருங்கி வர என்னால் என்ன செய்யப்படவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறியவே அந்தக்கேள்விகளை விட்டுச்சென்றேன். அந்தக்கேள்வியில் முளைத்த உங்கள் கிளைக்கேள்விகளில் தீர்வுத்திட்டம் என்பதை தொட்டால் புயல் வீசும் என்ற அச்சம் என்னுள் இன்றும் உள்ளது.

அயர்லாந்து ஆட்சிமுறையை ஒத்த தீர்வே ஈழத்தமிழனின் ஆகக்குறைந்த எதிர்பார்ப்பு. கடைசியாக கடந்து சென்ற சமாதான காலத்தில் அத்தகைய ஒன்று வரையப்பட்டது. அதாவது சுயாட்சி வேண்டாம்; தன்னாட்சி வேண்டும். தமிழகத்தில் சுயாட்சி இருந்தாலும் முக்கிய துறைகள் நடுவண் அரசிடம் உள்ளன. அந்த துறைகளை தன்னகத்தே கொண்ட தீர்வுத்திட்டமே அந்த வரைபில் முதன்மையானது.

எதிர்பார்ப்பு நிறைவேறிய பிறகு தன்னிறைவடைய திட்டம் உள்ளது. ஒற்றையடிப்பாதை முதல் விமானநிலையம், வர்த்தக கேந்திர நிலையம், பொருண்மிய நடுவகம், இன்னபிற என அனைத்துத்துறை வல்லுனர்களுடன் உதவியுடன் தீட்டப்பட்ட திட்டம் ஒன்று பத்திரமாக உள்ளது. அத்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிப்பொறுப்பை தம்வசம் வைத்திருக்க விடுதலைப் போராளிகள் நினைத்ததாகவும் கருத சில சம்பவங்கள் இடம்கொடுக்கின்றன.

முதலில் பெண்ணை கண்ணை காட்டுங்கள். பிறகு குழந்தை வளர்ப்பைப் பற்றி விளக்கி விட்டு கல்யாணம் செய்துக்கிறோம் என்கிற நிலைமாறி பாடப்புத்தகங்களினூடாக அவற்றை மனங்களில் பதிக்கும் காலம் மலர்ந்துள்ளது. காலப்போக்கில் மனங்களின் பரப்பு இன்னும் அகலப்படுத்தப்படும் என்பது கணிப்பு.