PDA

View Full Version : எந்த சுவிட்ச் எந்த பல்புக்கு? (மூளைக்கு வேலை)

gans5001
13-10-2008, 01:30 PM
பூட்டப்பட்ட ஒரு கதவுக்கு வெளியே நிற்கிறீர்கள். கதவுக்கு மறுபுறம் முற்றிலும் பூட்டப்பட்ட ஒரு அறை உள்ளது. அதற்கு வேறு கதவுகளோ அல்லது ஜன்னலோ கிடையாது. அந்த அறையில் நுழைய ஒரே வழிஉங்கள் முன்னே உள்ள கதவு மட்டுமே. அந்த அறையின் உள்ளே மூன்று பல்புகள் உள்ளன. அந்த பல்புகளுக்கான மூன்று சுவிட்சுகளும் நீங்கள் நிற்கும் கதவிற்கு அருகே (அறைக்கு வெளியே) உள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியது.; எந்த சுவிட்ச் எந்த பல்புக்கானது என்பதை கண்டுபிடிப்பது தான். ஒரே ஒரு கண்டிஷன்.. ஒரே ஒரு முறை மட்டுமே கதவைத் திறந்து அறையின் உள்ளே செல்லலாம். வெளியே வரும் போது 100% எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கண்டுபிடித்திருக்க வேண்டும்.

மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்ளவும்.. ஒரு முறை மட்டுமே அறைக்குள் செல்லலாம். அறைக்குள் செல்ல ஒரே ஒரு வழிதான் உண்டு.. உங்கள் முன் உள்ள கதவு.. சுவிட்சுகள் அனைத்தும் வெளியே.. பல்புகள் அனைத்தும் அறையின் உள்ளே..

கசக்குவோமா நம் மூளையை?

அமரன்
13-10-2008, 01:45 PM
ஒரு சுவிட்சை போடுவேன். சிறிது நேரத்தின் பின்னர் அணைப்பேன். சிறிது நேரம் காத்திருந்து பிறகு இன்னொரு சுவிட்சை போடுவேன். சிறு நேரத்தின் பின்னர் அதையும் அணைப்பேன். உடனடியாக மூன்றாவது சுவிட்சை போட்டு விட்டு கதவை திறந்து பார்ப்பேன். பல்ப் ஒளிர்ந்தபடி இருந்தால் மூன்றாவதாகப் போட்ட சுவிட்ச். ஒளிரவில்லை எனில் பல்பை தொட்டுப் பார்ப்பேன். சூட்டை வைத்து சுவிட்சை கண்டு பிடிப்பேன்.

மன்றத்தில் எற்கனவே இதை படி(தி)த்ததாக நினைவு.

செல்வா
13-10-2008, 02:46 PM
இதோ இங்கே..... :) (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=346029&postcount=39)

Maruthu
15-10-2008, 06:08 AM
பூட்டப்பட்ட ஒரு கதவுக்கு வெளியே நிற்கிறீர்கள். கதவுக்கு மறுபுறம் முற்றிலும் பூட்டப்பட்ட ஒரு அறை உள்ளது. அதற்கு வேறு கதவுகளோ அல்லது ஜன்னலோ கிடையாது. அந்த அறையில் நுழைய ஒரே வழிஉங்கள் முன்னே உள்ள கதவு மட்டுமே. அந்த அறையின் உள்ளே மூன்று பல்புகள் உள்ளன. அந்த பல்புகளுக்கான மூன்று சுவிட்சுகளும் நீங்கள் நிற்கும் கதவிற்கு அருகே (அறைக்கு வெளியே) உள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியது.; எந்த சுவிட்ச் எந்த பல்புக்கானது என்பதை கண்டுபிடிப்பது தான். ஒரே ஒரு கண்டிஷன்.. ஒரே ஒரு முறை மட்டுமே கதவைத் திறந்து அறையின் உள்ளே செல்லலாம். வெளியே வரும் போது 100% எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கண்டுபிடித்திருக்க வேண்டும்.

மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்ளவும்.. ஒரு முறை மட்டுமே அறைக்குள் செல்லலாம். அறைக்குள் செல்ல ஒரே ஒரு வழிதான் உண்டு.. உங்கள் முன் உள்ள கதவு.. சுவிட்சுகள் அனைத்தும் வெளியே.. பல்புகள் அனைத்தும் அறையின் உள்ளே..

கசக்குவோமா நம் மூளையை?

கதவு தானியங்கி இல்லையெனில், கதவுக்கு வேறு விதிமுறைகள் (உ.ம்: வெளியே வந்தவுடன் கதவு தானாக அடைந்துவிடும்) இல்லையெனில், நம்மால் திறந்து மூட முடியுமெனில் பல்பை கையால் தொடாமலேயே எந்த சுவிட்ச் எந்த பல்புக்கு என்று கண்டுபிடிக்க முடியும்.

முதலில் ஒரு சுவிட்சை ஆன் செய்வேன், கதவை திறந்து எந்த பல்பு ஒளிர்கிறது என்று பார்ப்பேன்.

வெளியே வந்தவுடன் வேகமாக முதல் சுவிட்சை ஆப் செய்துவிட்டு இன்னொரு சுவிட்சை ஆன் செய்வேன். உடனே அறைக்குள் எந்த பல்பு ஒளிர்கிறது என்று திரும்பி பார்ப்பேன். கதவை அடைப்பேன்.

இப்பொழுது இரண்டு பல்புகளுக்கான சுவிட்சுகள் எதுவென்று தெரியும். எனவே மூன்றாவது பல்பு மூன்றாவது சுவிட்சுக்கு உடையது என்று அறியலாம்.

இப்படியும் அறியலாம் அல்லவா நண்பரே!...

அன்புடன்...
மருது.

அன்புரசிகன்
15-10-2008, 06:31 AM
ஐயோ ஐயோ மருது... இப்படி ஓவரா மூளையை கசக்கீட்டீங்களே...

இதிலும் நான் வெளியே நிற்க நீங்கள் உள்ளே போய் பார்த்து நான் கேட்க்க கேட்க்க நீங்கள் பதில் சொல்ல சொல்ல....

ஹையோ ஹையோ....

இதுக்குத்தான் சொல்றது. எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்...

ஹி ஹி ஹி.... :D :D :D

தீபா
15-10-2008, 08:26 AM
நான் என்னுடன் ஒருவரை அழைத்துச் சென்று, அவர் வெளியே நிற்க, நான் உள்ளே நிற்க,

எந்த ஸ்விட்சுக்கு எந்த பல்பு என்று கண்டு பிடித்துவிடுவேன்.. :D

shibly591
15-10-2008, 09:17 AM
பிச்சு உடறுவது என்பது இதைத்தானா...???????????????????

விகடன்
15-10-2008, 10:39 AM
இரண்டு ஆளிகளை போட்டுவிட்டு அறைக்கு உள்ளே சென்று எந்த மின்குமிழ் ஒளிராமல் இருக்கின்றது என்பதை கவனித்துக் கொள்ளல் வேண்டும். அதிலிருந்து போடாத ஆளிக்குரியவர் அந்த மின்குமிழ் என்பதை அறிந்துகொள்ளலாம்.

வெளியே வந்த போட்ட ஆளியில் ஒன்றை நிறுத்திவிட்டு உள்ளே சென்று எரியும் மின்குமிழிற்கான ஆளியை அறிந்துகொள்ளலாம்.

மூன்றாவது மின்குமிழையும் அதற்கான ஆளியையும் கண்டுபிடிப்பது இனி சிரமமிருக்காதே...

rajatemp
15-10-2008, 11:32 AM
நீங்கள் செய்ய வேண்டியது.; எந்த சுவிட்ச் எந்த பல்புக்கானது என்பதை கண்டுபிடிப்பது தான். ஒரே ஒரு கண்டிஷன்.. ஒரே ஒரு முறை மட்டுமே கதவைத் திறந்து அறையின் உள்ளே செல்லலாம். வெளியே வரும் போது 100% எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கண்டுபிடித்திருக்க வேண்டும்.

மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்ளவும்.. ஒரு முறை மட்டுமே அறைக்குள் செல்லலாம்.

ஐயா கூறியது போல ஒரு முறை உள்ளே செல்லலாம்.
ஆனால் கதவை சாத்த தேவையில்லை
அப்புறம் என்ன ஒவ்வொரு சுவிட்ச்சாக போட்டு எது எரிகிறது என்று எட்டி பார்க்கவேண்டியதுதான்

mathura
17-10-2008, 04:38 PM
திரு அமரன் சொன்னது போல் முதலில் ஒரு பல்பை போட்டு சிறிது நேரம் கழித்து அதை அணைத்துவிட்டு, இன்னொரு பல்பை எரியவிட்டு உள்ளே சென்றால் இப்போது 2 பல்புக்கான சுவிச் தெரியும். பிறகு 3வது சுவிச் கண்டுபிடிப்பது சுலபம்