PDA

View Full Version : வளைந்தாலும் வில்லாயிரு!!!!



சிவா.ஜி
13-10-2008, 12:22 PM
பரபரப்பில்லாத ஞாயிற்றுக்கிழமை காலை. சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ஜன்னலோரம் அமர்ந்து சாலையை நோக்கிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி. பதினேழு, பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவன் அவரது வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். உடலை வளைத்து கைகளால் முழங்கால்களைத் தாங்கித் தாங்கி சிரமப்பட்டு வந்துகொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கதவைத் திறந்த சுந்தரமூர்த்தி அந்த இளைஞனின் கைகளில் வைத்திருந்த காகிதத்தையும், முகத்தில் வழிந்த பரிதாபத்தையும் பார்த்ததுமே தெரிந்துகொண்டார் அவனது வரவின் நோக்கத்தை.

”சார்....”

அவன் தொடங்குமுன்னமே...

“ இல்லப்பா என்னால உனக்கு எந்த உதவியும் செய்யமுடியாது. தயவு செய்து எதையும் என்கிட்ட எதிர்பார்க்காதே..”

என்று அவர் சொன்னதும் அந்த இளைஞன்,

” என்ன சார் இது வீடு, காருன்னு வசதியா வாழற நீங்களே உதவி செய்யமுடியாதுன்னு சொன்னா எப்படி சார். அதுவும் என்னோட இந்த நிலைமையைப் பாத்தும்.......” என்று தன் வளைந்து சிறுத்திருந்தக் காலகளைக் காட்டியபடி கேட்டதும்,

“உன்னோட இந்த நிலையைப் பாத்துதாம்ப்பா உதவமுடியாதுன்னு சொல்றேன். இதே வயசுல நானும் உன்னைப் போல அடுத்தவங்க உதவியில வாழ நினைச்சிருந்தா இன்னைக்கும் நான் உன்னை மாதிரியே வீட்டுக் கதவுகளைத் தட்டிக்கிட்டிருந்திருப்பேன். ஆனா உழைச்சு முன்னேறனுன்னு நினைச்சுக் கஷ்டப்பட்டேன். இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கேன்.” சொன்னவரைப் பார்த்து,

“சார் நான் இப்படி இருக்கும்போது எப்படி சார் என்னால...” அவனை மேலே பேச விடாமல்,

“முடியும்ப்பா...முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமில்ல.”

என்று சொல்லிவிட்டு அதுவரை நிற்பதற்கு உதவியாய் பிடித்துக்கொண்டிருந்தக் கதவிலிருந்து தன் கைகளை எடுத்து, வளைந்து, தன் முழங்கால்களைப் பிடித்துக்கொண்டு, அந்த இளைஞனைவிட சிரமமாய் விந்தலுடன் நடந்து உள்ளே போன சுந்தரமூர்த்தியைப் பார்த்து....அந்த இளைஞன் விக்கித்தான்.

கையிலிருந்த உதவிக்கேட்கும் காகிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டு திரும்ப நடந்தவனின் நடையில் முன்னைவிட அதிக உறுதி தெரிந்தது.

தீபா
13-10-2008, 12:36 PM
அருமையான குறுங்கதை. நம்பிக்கை என்னும் விளக்கால் தான் வாழ்கை ஒளிரும்.

மதி
13-10-2008, 12:56 PM
அழகான கதை சிவாண்ணா.....!

பாரதி
13-10-2008, 04:07 PM
அம்பாய் மனதை தைக்கும் கதை!

பாராட்டு சிவா.

செல்வா
13-10-2008, 05:57 PM
தவழ்ந்தாலும் தளர்வில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16164) என்றத் தங்களின் கவிதையின் இன்னொரு பார்வை சிறுகதை வடிவத்தில் வளைந்தாலும் வில்லாயிரு..... முதலில் என்னைக் கவர்ந்தது தலைப்பு தான்.

கதை.... நறுக்கென்று தைக்கிறது...

வாழ்த்துக்கள் அண்ணா.....

ஆமா அடுத்த தொடர்கதை எப்போ?

சிவா.ஜி
14-10-2008, 04:04 AM
பாராட்டிய தென்றல், மதி, பாரதி மற்றும் செல்வாவுக்கு அன்பான நன்றிகள்.

( தொடர் குறித்து இன்னும் சிந்திக்கவில்லை செல்வா.)

Narathar
14-10-2008, 04:48 AM
மனதை தொடும் நம்பிக்கை கதை!
இது கதையல்ல நிஜம்
இன்னும் தொடருங்கள் சிவா.ஜி

சிவா.ஜி
14-10-2008, 05:36 AM
ஊக்கம் தரும் உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி நாரதர். நிச்சயம் முயலுவேன்.

மதுரை மைந்தன்
14-10-2008, 11:16 AM
நல்ல கருத்துள்ள கதை. கடின உழைப்பிற்கு ஈடாக வேறு எதுவும் இல்லை என்ற பாடம் புகட்டும் கதை. வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
14-10-2008, 11:37 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி மதுரைவீரன்.

விகடன்
14-10-2008, 11:44 AM
சிறந்த கதை. பாராட்டுக்கள்.
அதிலும் உழைப்பால் மட்டுமே சிகரத்தை அடைந்தவன் தன்னையொற்ற இன்னொருவனுக்கு தன்னிலமைக்கான இரகசியத்தை உரைத்திருந்தமை வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

சிவா.ஜி
14-10-2008, 11:47 AM
மிக்க நன்றி விராடன். தன்னையொத்த ஒருவரின் வார்த்தைக்கு அவரது வாழ்க்கையே அத்தாட்சியாய் இருப்பதைக் காணும் அந்த இளைஞனைப்போல இருப்பவர்கள் சற்றேனும் சிந்திப்பார்கள்.

leomohan
14-10-2008, 12:01 PM
தலைப்பு அருமை. கதையின் செய்தி மிகவும் அருமை. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரே நேரத்தில் உதவி செய்வதை அடிப்படையாக கொண்டே சிறுகதைகள் எழுதியுள்ளோம் என்பதே. வாழ்த்துகள் சிவா.

Keelai Naadaan
14-10-2008, 01:59 PM
இதே வயசுல நானும் உன்னைப் போல அடுத்தவங்க உதவியில வாழ நினைச்சிருந்தா இன்னைக்கும் நான் உன்னை மாதிரியே வீட்டுக் கதவுகளைத் தட்டிக்கிட்டிருந்திருப்பேன். ஆனா உழைச்சு முன்னேறனுன்னு நினைச்சுக் கஷ்டப்பட்டேன். இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கேன்.
என்னுடைய சில நண்பர்களை ஞாபகபடுத்தியது. நன்றிகள்.

சிவா.ஜி
15-10-2008, 06:44 AM
தலைப்பு அருமை. கதையின் செய்தி மிகவும் அருமை. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரே நேரத்தில் உதவி செய்வதை அடிப்படையாக கொண்டே சிறுகதைகள் எழுதியுள்ளோம் என்பதே. வாழ்த்துகள் சிவா.
ஆமாம் மோகன். சில நேரங்களில் சிந்தனைகள் ஒருமித்து வருவது ஆச்சர்யமளிக்கிறது. உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மோகன்.

அமரன்
15-10-2008, 08:15 AM
திறந்த கதவைப் பிடித்துக்கொண்டு நின்றதால் சுந்தரமூர்த்தி நிமிர்ந்து நின்றார். பிடியை விட்டதும் அவர் விந்த தொடங்கினார். வந்தவன் விந்தலை விலக்கினான். வாய்ப்புக் கதவுகளைத் தட்டபோகின்றான். தென்றல் சொன்னதைப் போல் சுந்தரமூர்த்தி நம்பிக்கை விளக்கை கொடுத்து விட்டார். . . .

வளைந்த வில்லிலிருந்து ஏதோ ஒன்று புறப்படும். எதிரில் உள்ள ஒன்றை வீழ்த்தும். வெற்றியை பெற்றுத் தரும்.

சிவாவுக்கு வெற்றியை பெற்றுத் தந்தது இந்தக்கதை. பாராட்டுகிறேன் சிவா.

சிவா.ஜி
15-10-2008, 08:35 AM
என்னுடைய சில நண்பர்களை ஞாபகபடுத்தியது. நன்றிகள்.
வாழ்க்கையின் சில படிமங்களைத்தானே கதைகளாக வடிக்கிறோம். இதில் உங்கள் நன்பர்களை நினைவுகூற முடிந்ததை எண்ணி மகிழ்கிறேன். நன்றி கீழைநாடான்.

சிவா.ஜி
15-10-2008, 08:38 AM
தென்றல் சொன்னதைப் போல் சுந்தரமூர்த்தி நம்பிக்கை விளக்கை கொடுத்து விட்டார். . . .


அந்த விளக்குதான் அமரன் கிடைக்கவேண்டியது. இனி அவன் பாதை பிரகாசமாக தெரிய அவனது முயற்சிதான் முக்கியம். விளக்கு அணைந்துவிடாமல் காக்கவேண்டும்.

ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி அமரன்.

Maruthu
15-10-2008, 11:27 AM
வளைந்த வில்லிலிருந்து உத்வேகதுடன் புறப்பட்டது ஒரு அம்பு இலக்கை நொக்கி...

அருமையான் கதை சிவா சார்...


அன்புடன்...
மருது.

சிவா.ஜி
15-10-2008, 11:32 AM
ஒற்றை வரியில் அழகிய விமர்சனம். மிக்க நன்றி மருது.

rajatemp
15-10-2008, 11:44 AM
அருமையான கதை
ஊனம் உடலுக்குத்தான் மனதிற்கும், உழைப்புக்கும் இல்லை என்பதை உணர்த்தியது தங்களின் கதை

சிவா.ஜி
15-10-2008, 11:48 AM
மிக்க நன்றி ராஜாடெம்ப்.

இளசு
16-10-2008, 08:02 PM
பாஸீட்டீவ் ஆட்டிடியூட் என்னும் கூட்டல் மனப்பாங்கைக் கூட்டும் எதுவும் எனக்குப் பிடிக்கும்..

சிவாவின் இக்கதை என்னை மிகவும் கவர்ந்தது.

பாராட்டுகள் சிவா...

சிவா.ஜி
17-10-2008, 05:15 AM
உங்களின் இந்த பின்னூட்டமும் அதே கூட்டல் மனப்பாங்கை கூட்டும் வகையானதுதான். மிக்க நன்றி இளசு.

aren
17-10-2008, 06:11 AM
என் நெஞ்ஜினில் ஏதோ குத்தியது போலிருந்தது, பார்த்தேன், ஒரு பெரிய முள்.

எல்லாம் சரியாக இருந்தும் நாம் பிறருடைய உதவியை எதிர்பார்த்து இருக்கிறோமே என்று வெட்கப்படுகிறேன்.

நல்ல கதை. மனதை தொடுகிறது.

பாராட்டுக்கள் சிவா. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
17-10-2008, 06:21 AM
சரிதான் ஆரென். எல்லாம் சரியாயிருந்தும், சில நேரங்களில் அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கிறோம். ஏதோ சில காரணங்களால் அந்த உதவி கிடைக்காத பட்சத்தில் ஏமாற்றமடைகிறோம். ஆனால்...உதவிகிடைக்காத அந்த தருணம்தான் சுயமாய் சிந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருகிறது என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறார்கள்.

பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி ஆரென்.

ரங்கராஜன்
26-10-2008, 04:19 PM
கருத்துள்ள கதை

mukilan
31-10-2008, 09:48 PM
குறுகச் சொல்லி பெருகப் படிப்பித்த கதை. மனிதர்களை ஆராய்ந்து அதனால் வரும் அனுபவங்களை பாடமாய் தர உங்களுக்கு தெரியாதா என்ன? வழக்கம் போல முத்தாய்ப்பான கதை அண்ணா.

சிவா.ஜி
04-11-2008, 03:41 AM
குறுகச் சொல்லி பெருகப் படிப்பித்த கதை.
பணிப்பளு அழுத்தத்திலும், கதை படிக்க அவகாசமெடுத்துக்கொண்டு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அன்பு முகிலனுக்கு மனமார்ந்த நன்றி.

SathishVijayaraghavan
07-11-2008, 11:47 AM
மெய்சிலிர்க்க வைக்கிறது... வார்த்தைகள் வரவில்லை

பாபு
08-11-2008, 01:54 AM
நல்ல கதை...நம்பிக்கை தான் வாழ்க்கை ! அந்தப் பெரியவர் நம் நண்பருக்கு ஊட்டிய நம்பிக்கையை விட பெரிய உதவி எதுவும் செய்திருக்க முடியாது.

சிவா.ஜி
08-11-2008, 02:59 AM
மெய்சிலிர்க்க வைக்கிறது... வார்த்தைகள் வரவில்லை

மிக்க நன்றி சதிஷ். நீண்ட நாட்களுக்குப் பிறகு மன்றம் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

சிவா.ஜி
08-11-2008, 03:01 AM
நல்ல கதை...நம்பிக்கை தான் வாழ்க்கை ! அந்தப் பெரியவர் நம் நண்பருக்கு ஊட்டிய நம்பிக்கையை விட பெரிய உதவி எதுவும் செய்திருக்க முடியாது.

நிச்சயமாய் அந்த நம்பிக்கையூட்டலைவிட பெரிய உதவி செய்திருக்கமுடியாதுதான். பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி பாபு.

MURALINITHISH
22-11-2008, 09:32 AM
மருத்துவ மனை செல்லும் வரை தன் வலியே பெரிதாக
அங்கு சென்றவுடந்தான் தெரியும் தன் வலியே எளிதாக

சிவா.ஜி
22-11-2008, 09:44 AM
நன்றாக சொன்னீர்கள் முரளி. தன்னினும் அதிக வலியுடையவன், சாதிக்கும்போது ஏன் தன்னால் முடியாது என்று நினைத்தாலே போதும். வாழ்க்கையில் உயரமுடியும்.
நன்றி முரளி.