PDA

View Full Version : காதல(ல்)ப்பா



தீபா
13-10-2008, 11:49 AM
ஒண்மை உயர்வெண் முடியாள் ஒருமுக
நுண்துளை நூற்மனதால் நூற்ற - புலமிகு
வண்குழை வாயெழுத்து வெண்ணிற மீனுறங்கும்
விண்ணை விறைக்காதோ சொல்.


கண்ஸ் அண்ணே! நாங்களும் புதுசா அகநானூறு எழுதியிருக்கோம்ல.... :D

இளசு
17-10-2008, 07:31 PM
வாங்க தென்றல்..

நல்லதா இலக்கண சுத்தமா எழுதியிருக்கீங்கன்னு தெரியுது..

அப்படியே கோனார் உரை போல பொழிப்புரை, பதவுரையும் சொன்னால்,
பிழைப்பேன்..

முன்நன்றிகள்..

தீபா
18-10-2008, 11:06 AM
நன்றி திரு.இளசு அவர்களே!

இலக்கணமா சுத்தமா என்பதைக் காட்டிலும் இது ஒரு முயற்சியாக இருக்கட்டும் என்றுதான்.

ஒரு முதிய காதல் பற்றிய பா"விது.

ஒண்மை = அழகு

ஒண்மை உயர் = அழகில் உயர்ந்த

வெண் முடியாள் = வெண்மை நிற (நரைத்த) முடிகொண்ட கிழவி
ஒருமுக = ஒரேமுகமாய்
நுண்துளை = நுண்ணிய துளையால்
நூற்மனதால் = நூற்ற மனதால்.. (நூற்ற என்பதற்கு சரியான வழக்கு தமிழ் தெரியவில்லை செய்த என்று கூட சொல்லலாம். )
நூற்ற = செய்த
புலமிகு = புலமை மிகுந்த
வண்குழை = வண்மை மிகுந்த
வாயெழுத்து = வாய் எழுதும் எழுத்து = பேச்சு
வெண்ணிற மீனுறங்கும் = வெண்ணிறமாய் சுடரும் மீன்கள் உறங்கும்
விண்ணை - வானை
விறைக்காதோ சொல்......

நன்றி நவில்கிறேன் நண்பர்களே!

இளசு
18-10-2008, 11:58 AM
நன்றி தென்றல்..

வெண்முடியாள் என்பதில் தொக்கி நின்று பொருள் முழுமை உணராமல் சிக்கிக்கொண்டேன்..

முதிய காதல் என்ற புதிய பார்வையில்..
பொருளுரை சொல்ல - தெளிந்தேன்..

நன்றி.. பாராட்டுகள்..

சின்ன சந்தேகம் இன்னும் -
வண்குழை - வண்மை மிகுந்த என்றால்?

வன்மை தெரியும். வண்மை?

தீபா
18-10-2008, 04:23 PM
நன்றி தென்றல்..

வெண்முடியாள் என்பதில் தொக்கி நின்று பொருள் முழுமை உணராமல் சிக்கிக்கொண்டேன்..

முதிய காதல் என்ற புதிய பார்வையில்..
பொருளுரை சொல்ல - தெளிந்தேன்..

நன்றி.. பாராட்டுகள்..

சின்ன சந்தேகம் இன்னும் -
வண்குழை - வண்மை மிகுந்த என்றால்?

வன்மை தெரியும். வண்மை?

மன்னிக்கவும்.. அவசரத்தில் பதில் எழுதினேன்... இப்போது ஒரு அதிகப்பிரசங்கித்தனமாக பதில்...

வண்ணம் - அழகு

வண்ணம் ஒரு பண்பு. அதிலும் எவ்வண்ணமும் அழகு நிறைந்த பண்புகள்.

வண்ணம் நிறைந்த பூக்கள், வண்ணத்துப் பூச்சிகள்.. நிறமற்றவை என்று எதுவும் சொல்லவியலாது. ஏனெனில் நிறமற்றவைகளும் ஒரு நிறம்தானே!

அழகு..

வண்ணம் = திருமுகம்.
வண்ணன் = அழகு நிறைந்தவன்.

வண்மையும் அழகென்றே பொருளாகும்.

இன்னொன்று,

வன்மை = கடுமை,
வன்சொல் = கடுஞ்சொல்....

இது எதிர்மறையாக அல்லாமல், இப்படிச் சொல்லலாம்..

வன்மை = உறுதி
வன்சொல் = உறுதியான சொல்..

இதில் தவறு இருந்தால் உடனே கூறலாம்...

நன்றி இளசு சார்.

shibly591
19-10-2008, 05:05 AM
ஒண்மை உயர்வெண் முடியாள் ஒருமுக
நுண்துளை நூற்மனதால் நூற்ற - புலமிகு
வண்குழை வாயெழுத்து வெண்ணிற மீனுறங்கும்
விண்ணை விறைக்காதோ சொல்.


கண்ஸ் அண்ணே! நாங்களும் புதுசா அகநானூறு எழுதியிருக்கோம்ல.... :D

வாவ் பின்றீங்களே

வாழ்த்துக்கள்
(ஆனா ஒண்ணுமே புரியல)

poornima
19-10-2008, 06:45 AM
வெண்பா வடிவில் அகநானூறு முயற்சி..
பாராட்டுகள் தென்றல்...
இன்னும் தொடர்க..

இளசு
19-10-2008, 09:04 AM
வண்மை - புதிய பொருள்கள் கற்றேன்..

நன்றி தென்றலுக்கு..