PDA

View Full Version : அப்பப்பா



ஐரேனிபுரம் பால்ராசய்யா
13-10-2008, 11:31 AM
மாலாவுக்கு வரன் பார்த்த விஷயத்தை அவளிடம் சொன்ன போது வேண்டாமென்று மறுத்தவளை வெறுப்புடன் பார்த்தார் மணிமாறன்.
``அப்பா ரொக்கம் நகையின்னு ரெண்டு லட்ச ரூபாய் இல்லாம என்னை யாருக்கும் உங்களால கட்டி வைக்க முடியாது. அந்தப் பணத்த என்கிட்ட குடுத்துடுங்க. காட்டன் வலை தயாரிக்குற கம்பெனிக்கு வேலைக்குப் போற நானே, சுயமான காட்டன் வலை தயாரிக்குற கம்பெனி ஆரம்பிச்சு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணி நிறைய இலாபம் சம்பாதிச்சு தர்றேம்பா, எனக்கும் என் தங்கச்சி கல்யாணத்துக்கும் அது உதவும்ப்பா!'' மாலாவின் வார்த்தைகளைக் கேட்டதும் மணிமாறனுக்கு அது நகைப்பாய் தோன்றியது.
``இருக்குற பணத்தைத் தொலைக்கிறதுக்கு வழிசொல்ற!'' என்று மறுத்தார் மணிமாறன்.
``யாரையோ மாப்பிள்ளையின்னு நம்பி பணத்தக் குடுக்கத் தயாரா இருக்கற நீங்க, பெத்த பொண்ண நம்பமாட்டேங்கறீங்க!'' மாலாவின் கேள்வி நன்றாகவே உறைத்தது மணிமாறனுக்கு.
``எப்போ கம்பெனி ஆரம்பிக்கப் போற!'' என்ற அவரது பதிலில் நம்பிக்கைகள் மெல்ல மெல்ல சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்தன..

தீபா
13-10-2008, 11:52 AM
குமுதத்திலே வந்த கதைதானே!!! இரட்டை பாராட்டுக்கள் சார்.

குறுகதை எழுதுவது எத்தனை சிரமம் என்பதை உணர்ந்தவள் நான். எளிய எழுதும் உங்களுடன் பழகுவது பாக்கியமே!

மதி
13-10-2008, 12:06 PM
வாழ்த்துகள் பால்ராசைய்யா..!
நல்லாயிருக்கு கதை..

சிவா.ஜி
13-10-2008, 12:24 PM
நல்ல கருத்து. நறுக்கென கொடுத்துள்ளீர்கள் பால் ராசய்யா அவர்களே. பாராட்டுக்கள்.

அமரன்
15-10-2008, 08:38 AM
பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும்-தேவையான கதை.

சொந்தக்காலில் நிற்பதால் பந்தக்கால் தள்ளிப்போகக்கூடாது-பல பெண்களைப் பெத்த அப்பாவுக்கு இருக்க வேண்டிய கவலை.

இரண்டும் கலந்த நல்ல கலவை. பாராட்டுகள் பா.ரா

ஐரேனிபுரம் பால்ராசய்யா
15-10-2008, 10:14 AM
என் கதையை படித்து, பிடித்துபோனதில் பின்னூட்டமிட்ட தீண்டும் தென்றலுக்கும், அறிவான நிலவு மதிக்கும், சிந்தனை கதைகளை தரும் சிவாவுக்கும், அறிஞர் அமரனுக்கும் கதையை படித்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் என் நன்றிகள்

Narathar
15-10-2008, 10:19 AM
அழ்ந்த அர்த்தங்களை
மிக சுறுக்கமாகவும்,
புரியும்படியும் சொல்லியிருக்கின்றீர்கள்


வாழ்த்துக்கள்

Maruthu
15-10-2008, 10:41 AM
மாலாவுக்கு வரன் பார்த்த விஷயத்தை அவளிடம் சொன்ன போது வேண்டாமென்று மறுத்தவளை வெறுப்புடன் பார்த்தார் மணிமாறன்.
``அப்பா.......... ஆரம்பித்தன..




கதை நன்றாகவே உறைத்தது பால்ராசைய்யரே!...

பாராட்டுக்கள்!...


அன்புடன்...
மருது.

இளசு
16-10-2008, 05:06 AM
சிறிய பச்சை மிளகாய் போல் சுள்ளென உறைக்கும் குறுங்கதை!

குமுதம் இதழில் வந்தமைக்கும் சேர்த்து இரட்டைப் பாராட்டுகள் பால்ராசய்யா அவர்களே!

ஓவியன்
24-01-2009, 06:25 AM
குமுதத்தில் உங்கள் பெயரைப் பார்த்த போது, நம்ம மன்ற உறவு ஒருவரின் கதை இதுவென பெருமையுடன் மனைவியிடம் காட்டினேன்...

அன்றே பின்னூட்ட நினைத்தேன், முடியவில்லை...


மனதார்ந்த வாழ்த்துக்கள் பால்ராசையா அவர்களே, இன்னும் இன்னும் பல கதை முத்துக்களைப் படையுங்கள்...