PDA

View Full Version : காரணீ... (புதிய அகநானூறு 28)



gans5001
13-10-2008, 11:20 AM
எனது சாதனை ஏடுகளின்
பக்கங்கள் முழுக்க
தவிர்க்கவே முடியாமல்
உனது பாதச்சுவடுகள்!
உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்...
அது நீ நடந்து சென்றதால் ஏற்பட்டதல்ல..
உனக்காய் துடித்த
என்னிதயத்தை
நீ மிதித்து சென்றதால் என்று..

தீபா
13-10-2008, 11:32 AM
புதிய கோட்பாடுகள்... (ஒரே பாடு தான்..)

பழைய கருவினில் புதிய பிள்ளை, பிரசவம் பாக்கியம்..

துடித்த இதயம் பாதத்தை ரணப்படுத்தியதோ என்னவோ? பக்கங்களைப் புரண்டிக் கொண்டிருக்கிறதே!!! :D

வாழ்த்துக்கள் திரு. க(கே)ன்ஸ்5001.

gans5001
13-10-2008, 01:40 PM
அன்று மறுத்தாய் நான் வாழ்வில் எளியவன் என்று.
நீ மறுத்தாலும் வாழ்வில் நான் சாதித்துக் காட்டுவேன் என்ற வைராக்கியத்தை மனதில் பதித்து சென்றன அவளின் காலடிச்சுவடுகள்..
எனவேதான் திரும்பும் பக்கம் முழுவதும் தொடர்கதையாய் அவள் சுவடு.

இளசு
16-10-2008, 05:01 AM
உத்தரத்தில் தொங்க -
சிகரத்தில் தடம் பதிக்க..

கயிறு ஒன்றுதான் -
கரங்கள் வேறு!

சபாஷ் கண்ஸ்!