PDA

View Full Version : கனவு மெய்ப்படவேண்டும் (புதிய அகநானூறு 27)



gans5001
13-10-2008, 11:08 AM
நான்
கனவுகளையும் உன்னையும் மட்டுமே
காதலித்துக் கொண்டிருந்த
அந்த நாட்களில்
நீ அறிமுகப்படுத்திய
நிஜ நெருப்புகளில் தான்
எனது குளிர் இரவுகள் அத்தனையும்
இன்னமும் சூடாய் இருக்கின்றன...
கனவுகளோ இன்னமும் மெய்ப்படாமல்!

தீபா
13-10-2008, 11:43 AM
காதல் வந்தவர்களுக்குக் காண்பதெல்லாம் காதலாகாதோ? (பட்டாத்தான் தெரியும்)

அவள்(ன்) அறிமுகப்படுத்தியவை ஏதாவது ஒன்றின் வெளிப்பாடாக இருக்கலாம்
அதில் குளிர் காய்வது காதலை எரிப்பதாகக் கொள்க. :)

உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகிறேன். (கலாமுக்கு ஜே!)

அன்புடன்
தென்றல்

gans5001
13-10-2008, 12:00 PM
நன்றி.. தென்றல்.

உங்கள் கடைசி வரியில் தெரிந்த (கலாமுக்கு ஜே!) நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்..

இளசு
16-10-2008, 04:57 AM
தூரத்தில் நெருப்பை வைத்து
சாரத்தைத் தந்தாய் போற்றி -

சூரியனை வாழ்த்திய கவியரசர் வரி!

குளிருக்கு அனல் - வெள்ளோட்டம்!
அனலில் மூழ்க - மனவோட்டம்!

காதல் மனம் - ஒரு ஃபீனிக்ஸ் பறவைதான்!

பாராட்டுகள் கண்ஸ்!