PDA

View Full Version : தமிழ் சினிமாவில் எனது பாடல்shibly591
13-10-2008, 08:00 AM
ஒரு பெண் முதன்முறை காதல் வயப்படும் சூழலை அடிப்படையாகக்கொண்டு புதியதொரு தமிழ் படத்தில் பாடல் எழுத வாய்ப்புக்கிடைத்தது..

இது பாடலாகி படம் திரைக்கு வருமா..என்பது நிச்சயமற்றது..ஆயினும் எனது முயற்சி வெற்றிபெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

வரிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்..???

பல்லவி

இதயமோ முதன்முறை விழுகிறதே...
என் உயிரிலே உன் திருமுகம் வழிகிறதே..
இரவுகள் தனிமையில் தவிக்கிறதே
பெண் ரகசியம் என்னவென்று புரிகிறதே..

கண்மூடிக்கிடந்தாலும உன் விம்பம் மறைவதில்லை
போ என்று சொல்லி வா என்று அழைத்தேனே

சிரிக்கிறேன் சிரிக்கிறேன்
உன்னை எண்ணி சிலிர்க்கிறேன்
தனிக்கிறேன் தவிக்கிறேன்
வெட்கப்பட்டு சிவக்கிறேன்

சரணம்-01

இரவின் நிழலில்
உன் விரலைப்பற்றிக்கொண்டு
உனக்குள் வாழ்ந்திட ஆசை
விடியும் வரையில்
உன் வதனம் பார்த்துக்கொண்டு
உலகம் மறந்திட ஆசை
இன்னும் என்ன எந்தன் ஆடவா...
என் பெண்மையை நீ ஆளவா..
காதல் கனவுகள் செய்யும் லீலைகள்
பிடிக்குதே ரொம்ப பிடிக்குதே
நெஞ்சுக்குள்ளே காதல் வந்து கத்திச்சண்டை போடுதே.....


சரணம்-02

இடைவிடாமல்
கொட்டும் மழைபோல அன்பை
எனக்குள் பொழிந்திட வாடா...
அருகில் வந்து
நூறு நூறு கவிதைகள்
இதழில் எழுதிட வாடா...
என்னைக்கண்டேன் உந்தன் பார்வையில்
தத்தளித்தேன் நான் போர்வையில்
கூவும் குயிலென காதல் உரைத்திட
துடிக்குதே உள்ளம் துடிக்குதே
கண்களுக்குள் உன்னை வைத்து காதல் பூட்டு பூட்டினேன்....

சரணம்-03

கனவில் உளற
எனக்கிங்கு கற்றுத்தந்து
உறக்கம் பறித்தவன் நீதான்..
மனதில் விரியும்
விண்ணை முட்டும் சிறகுகள்
முளைக்க வைத்தவனும் நீதான்..
திசையெல்லாம் உன்னைத்தேடினேன்
காணவில்லை நான் வாடினேன்.
பூக்கும் பூவிடம் ஜன்னல் நிலவிடம்
புலம்பினேன் சொல்லிப்புலம்பினேன்
உன்னுயிரில் என்று எந்தன் உயிர் வந்து சேருமோ...?

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-10-2008, 09:05 AM
வெற்றி நடை போட வாழ்த்துகிறேன். வரிகள் மிகவும் அழகு. ரம்மியமாக அழகாய் சொல்லியிருக்கிரீர்கள் அத்தோடு மெட்டும் நன்றாய் அமைந்து விட்டால் கண்டிப்பாய் பரவும் இந்த வரிகள்.

shibly591
13-10-2008, 09:08 AM
வெற்றி நடை போட வாழ்த்துகிறேன். வரிகள் மிகவும் அழகு. ரம்மியமாக அழகாய் சொல்லியிருக்கிரீர்கள் அத்தோடு மெட்டும் நன்றாய் அமைந்து விட்டால் கண்டிப்பாய் பரவும் இந்த வரிகள்.

நன்றி சுனைத்..

எழுதுவது வரைதானே நம் கடமை....??

படம் வெளியவாவது பற்றியோ...பாடல்கள் பதிவாவது பற்றியோ நிச்சயப்படுத்த முடியாது..கடைசி நேரத்திலும் பாடல் படத்தை விட்டு தூக்கப்படலாம்..இருந்தும் ஒரு நப்பாசை..

நன்றிகள்

பாரதி
13-10-2008, 10:10 AM
சிறப்பான முயற்சி ஷிப்லி. உங்கள் முயற்சி கனிந்து, இப்பாடலும் படமாக்கப்பட்டு, திரைப்படம் சிறப்புடன் வெளிவந்து வெற்றியடைய வாழ்த்து.

gans5001
13-10-2008, 10:19 AM
அனைத்தும் பெற வாழ்த்துக்கள்.

தீபா
13-10-2008, 12:00 PM
வாழ்த்துக்கள் சார். நீங்க பெரிய பாடலாசிரியரா வரணும்.. நம் மன்றத்தை பிரபலப்படுத்தணும்.. வாழ்த்துக்கள்...

மதி
13-10-2008, 12:05 PM
வாழ்த்துகள் ஷிப்லி.
பாடல் படமாக்கப்பட்டு மிகப் பெரிய ஹிட்டாக வாழ்த்துகள்.

அமரன்
13-10-2008, 12:59 PM
திரைத்துறையிலும் உங்கள் காலடி அழுத்தமாகப் பதிய வாழ்த்துக்கள். பாடலைக் கேட்டபிறகு மிச்சம்.

மன்மதன்
13-10-2008, 01:00 PM
வாழ்த்துகள் ஷிப்லி.. திரையுலகில் வெற்றி பெற்று சிறப்பாக வர வாழ்த்துகிறேன்..

Narathar
13-10-2008, 01:03 PM
வாழ்த்துக்கள் ஷிப்லி.....
அது தென்னிந்திய திரைப்படமா?
இல்லைன்னா நம்மூர்திரைப்படமா?

ஐரேனிபுரம் பால்ராசய்யா
13-10-2008, 01:29 PM
அன்புள்ள ஷிப்லி அவர்களுக்கு
இசையின் தவத்திற்க்கு வார்த்தை வரம் தந்துவிட்டீர்கள்
இனி உங்கள் பாட்டுவரிகள் பாடலாகும், அதை கேட்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

உனக்குள் வாழ்ந்திட ஆசை
உலகம் மறந்திட ஆசை
போன்ற வரிகள் நல்ல நயம் சேர்க்கிறது

முயற்சிதிருவினையாக்கும்

பாராட்டுக்கள்

செல்வா
13-10-2008, 01:30 PM
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... ஆம் நாரதரின் கேள்வி என்னிடமிருந்தும் ... :)

Keelai Naadaan
13-10-2008, 02:25 PM
பாடல் வரிகள் பொருள் பொதிந்ததாகவும் ரசிக்கும்படியும் உள்ளது. வாழ்த்துக்கள்.

poornima
13-10-2008, 02:37 PM
அன்பு ஷீப்லி..

பாராட்டுகள் உங்கள் முயற்சிக்கு..விரைவில் திரைப்பட பாடலாசிரிய
தாரகையாய் திரைவானில் மின்ன என் வாழ்த்துகளும்+பிரார்த்தனைகளும்..

இனி உங்கள் பாடல்வரிகள் பற்றி கொஞ்சம்

சினிமாப் பாடல்களுக்கு தத்தகாரம் தேவை என்பதை நீங்கள்
அறிந்திருக்க கூடும்.அந்த வகையில் இந்த பாடலை தத்தகார இசைகொடுத்து
வாசிக்கையில் ஆங்காங்கே நெருடின..

இரவின் நிழலில்
உன் விரலைப்பற்றிக்கொண்டு
உனக்குள் வாழ்ந்திட ஆசை - இது சரி..
விடியும் வரையில்
உன் வதனம் பார்த்துக்கொண்டு
உலகம் மறந்திட ஆசை ஆனால் இங்கு வதனம் என்று
படிக்கையில் கொஞ்சம் நெருடலாய் இருக்கிறது.வதனம் என்ற வார்ர்த்தையை எம்கேடி பாடியதற்கு பின்னால் அநேகமாய் நீங்கள்தான் பயன்படுத்தியிருக்க
கூடும் என்று நினைக்கிறேன் (வதனமே சந்திர பிம்பமோ..)

இன்னும் என்ன எந்தன் ஆடவா...
என் பெண்மையை நீ ஆளவா..

இங்கும் அப்படியே.. இன்னும் என்பதற்கான அடி எதுகை என் என்பது சரியாய் இருந்தாலும் பின்னும் முன்னும் என்று வருவது சந்தத்தை இன்னும் அழகுபடுத்தும்
ஆடவா என்று ஆண்மகனை அழைப்பது கொஞ்சம் முரண்படுகிறது.. ஏனெனில் அடுத்து ஆளவா என வருகிறதல்லவா.. வல்லவா என்னை வெல்லவா என்பது போல் கொஞ்சம் எகனை மொகனைகள் இன்னும் நல்ல சந்தத்தை கொடுக்கும் என்று
நினைக்கிறேன்..

//திசையெல்லாம் உன்னைத்தேடினேன்
காணவில்லை நான் வாடினேன்.
//

திசையெல்லாம் உன்னைத்தேடினேன்
தேடித் தேடி நான் வாடினேன் என்று வந்தால் கொஞ்சம்
தேவலையோ என்று தோன்றியது..

திருத்தங்கள் அதிகப்பிரங்கித்தனமாக இருந்தால் மன்னிக்கவும். மறுபடி
உங்கள் முயற்சிக்கு என் வந்தனங்கள்

பிச்சி
13-10-2008, 03:00 PM
பூரணிக்க்கா, இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்களே. வாழ்த்துக்கள் சிப்லி அண்ணாவுக்கும் அக்காவுக்கும்.

பிச்சி..../...

aren
14-10-2008, 01:59 AM
நான் ஒரு சில வாரங்களுக்கு முன் சொன்னது அப்படியே பலித்துவிட்டது உங்களுக்கு.

திறமை உள்ளவர்களுக்கு தமிழ்த்திரையுலகம் என்றைக்குமே வரவேற்பு தந்திருக்கிறது. திறமை உள்ள உங்களையும் வரவேற்கிறது.

உங்கள் பாடல் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மக்களே, பாடல் கேசட்டை பணம் கொடுத்து வாங்குங்கள்.

shibly591
14-10-2008, 09:16 AM
வாழ்த்துக்கள் அத்தனைக்கும் நன்றி நவில்கிறேன்..

இது தென்னிந்திய படமொன்றுக்கான பாடல்..

மீண்டும் மீண்டும் நன்றிகள்

shibly591
14-10-2008, 09:22 AM
அன்பு ஷீப்லி..

பாராட்டுகள் உங்கள் முயற்சிக்கு..விரைவில் திரைப்பட பாடலாசிரிய
தாரகையாய் திரைவானில் மின்ன என் வாழ்த்துகளும்+பிரார்த்தனைகளும்..

இனி உங்கள் பாடல்வரிகள் பற்றி கொஞ்சம்

சினிமாப் பாடல்களுக்கு தத்தகாரம் தேவை என்பதை நீங்கள்
அறிந்திருக்க கூடும்.அந்த வகையில் இந்த பாடலை தத்தகார இசைகொடுத்து
வாசிக்கையில் ஆங்காங்கே நெருடின..

இரவின் நிழலில்
உன் விரலைப்பற்றிக்கொண்டு
உனக்குள் வாழ்ந்திட ஆசை - இது சரி..
விடியும் வரையில்
உன் வதனம் பார்த்துக்கொண்டு
உலகம் மறந்திட ஆசை ஆனால் இங்கு வதனம் என்று
படிக்கையில் கொஞ்சம் நெருடலாய் இருக்கிறது.வதனம் என்ற வார்ர்த்தையை எம்கேடி பாடியதற்கு பின்னால் அநேகமாய் நீங்கள்தான் பயன்படுத்தியிருக்க
கூடும் என்று நினைக்கிறேன் (வதனமே சந்திர பிம்பமோ..)

இன்னும் என்ன எந்தன் ஆடவா...
என் பெண்மையை நீ ஆளவா..

இங்கும் அப்படியே.. இன்னும் என்பதற்கான அடி எதுகை என் என்பது சரியாய் இருந்தாலும் பின்னும் முன்னும் என்று வருவது சந்தத்தை இன்னும் அழகுபடுத்தும்
ஆடவா என்று ஆண்மகனை அழைப்பது கொஞ்சம் முரண்படுகிறது.. ஏனெனில் அடுத்து ஆளவா என வருகிறதல்லவா.. வல்லவா என்னை வெல்லவா என்பது போல் கொஞ்சம் எகனை மொகனைகள் இன்னும் நல்ல சந்தத்தை கொடுக்கும் என்று
நினைக்கிறேன்..

//திசையெல்லாம் உன்னைத்தேடினேன்
காணவில்லை நான் வாடினேன்.
//

திசையெல்லாம் உன்னைத்தேடினேன்
தேடித் தேடி நான் வாடினேன் என்று வந்தால் கொஞ்சம்
தேவலையோ என்று தோன்றியது..

திருத்தங்கள் அதிகப்பிரங்கித்தனமாக இருந்தால் மன்னிக்கவும். மறுபடி
உங்கள் முயற்சிக்கு என் வந்தனங்கள்

நன்றி பூர்ணிமா...

உங்கள் தரமான விமர்சனங்களில் நிறைய ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் எனக்கு..

வதனம் என்பதற்கு பதில் முகம் என்று போட்டது மெட்டை இடிக்கிறது..

அதே பிரச்சினைதான் நீங்கள் சொன்ன மற்றைய வரிகளுக்கும்...

மேற்படி பாடல் முதலில் எழுதப்பட்டு பிறகே மெட்டமைக்கப்படும் என்கிற பட்சத்தில் நீங்கள் சொன்ன மாற்றங்கள் சாத்தியமே..

ஆனால் மெட்டுக்கு பாடல் எழுதும்போது கவித்துவம் பாடல் அமையும் சூழல் போன்றவைகளால் நமது முழுக்கவித்துவத்தையும் பயன்படுத்துவதில் சிரமங்கள் நேர்கின்றன..

உங்கள் விமர்சனத்திலிருந்து சில வரிகளை மீள நான் பாடலை மாற்ற நேர்ந்தால் அனுமதி தாருங்கள்..

முதல் பாடல் எனும்போது அதுவும் ஒரு பெண் பாடும் பாடல் எனும்போது 100 சதவீதம் என்னால் திருப்தியாக எழுத முடியாமல் போனது உண்மையே..

இருந்தும் உங்கள் விமர்சனத்திற்கு என் நன்றிகள் உரித்தாகுக..

மதுரை மைந்தன்
14-10-2008, 11:08 AM
வாழ்த்துகள் ஷிப்லி.
பாடல் படமாக்கப்பட்டு மிகப் பெரிய ஹிட்டாக வாழ்த்துகள்

விகடன்
14-10-2008, 11:48 AM
வழமையாக படத்திற்குத்தான் பாடல்வரிகளை செதுக்குவார்கள். ஆனால் ந்நீங்களோ பாடலை எழுதிவிட்டு அந்த சந்தப்பத்திற்கு அமைய படத்தை அமைக்க சொல்லச்சொல்கிறீர்களே....


எது எப்படியோ...
வரிகள் நன்றாக உள்ளது. படமாக வந்துவிட்டால் நம்மன்ற சிப்லியின் பாடல் என்று சொல்லித்திரிவேன். அப்போது விராடனை உங்களுக்கு தெரியும் என்று சொல்ல மற்றந்திடாதீர்கள்.

poornima
14-10-2008, 01:12 PM
நன்றி பூர்ணிமா...

உங்கள் தரமான விமர்சனங்களில் நிறைய ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் எனக்கு..

புரிந்துணர்வுக்கு நன்றி.. எப்போது விமர்சனங்களை எழுதிய அதே
மனப்பக்குவத்துடன் ஏற்றுக்கொள்கிறீர்களோ அப்போதே வலி தாங்கும்
வழியும் தெரிந்துவிட்டது உங்களுக்கு..

சினிமாவுக்கு பாடல் எழுத தினம் நூறு பேர் வருகிறார்கள். திறமையுடன்
அங்கு கொஞ்சம் அதிர்ஷடமும் தேவைப்படுகிறது.

நல்ல பாடுபொருள் உள்ள பாடல் நல்ல கவிநயம் உள்ள பாடல் இவை
வெற்றி பெற்றும் உள்ளன.. வீழ்ந்துபோயும் உள்ளன.. காட்டாக ஒரு நூறு
பாடல் சுட்ட முடியும் என்னால்..

எளிமையான வரிகளை கொண்ட பாடல்களே எல்லோரையும் ஈர்த்திருக்கின்றன..காலத்தால் நின்றிருக்கின்றன..

அவரைக்குப் பூ அழகு என்று கவிஞர் எழுதியதை கவிஞனால் மட்டும்
தான் ரசிக்க முடிந்திருக்கிறது.. அவரையின் அழகு அந்த தாவரம் முற்றாமலும் அதன் காய்கள் கெடாமலும் நல்ல முறையில் விற்றாக
வேண்டுமே என்ற கவலையுடைய விவசாயிக்கு இருக்க அவனிடம் இதைப்
போய் பாட ரசிக்க இயலாது..

நீங்கள் உங்கள் விருப்பபடி எழுதுங்கள்..படைப்பாளியின் சுதந்திரத்தை
ஓரம் கட்டி ஒரு பாடல் உருவாக்குவது அவனை சப்பையாக்குவதற்கு
சமம்..ஆனால் ஒரு வேண்டுகோள். சினிமாவுக்கு எழுதுகையில் இன்னொரு
விதியையும் கொள்ளவேண்டும்.. உங்கள் விருப்பபடி - மக்கள் ரசிக்கும்படி
என்னும்படியும் இருக்க வேண்டும்.

வதனம் என்பதற்கு பதில் முகம் என்று போட்டது மெட்டை இடிக்கிறது..

விடியும் வரையில் உந்தன்
மடியில் கிடந்து இந்த
உலகம் மறந்திட ஆசை

என மாற்றிப்பாருங்களேன்.. நான் தத்தகாரம் சொல்கிறேன்

தனன தனன தன
தனன தனன தன
தனன தனன தனனா..


உங்கள் விமர்சனத்திலிருந்து சில வரிகளை மீள நான் பாடலை மாற்ற நேர்ந்தால் அனுமதி தாருங்கள்..
ஐயோ நான் அனுமதிப்பா.. நான் விமர்சிப்பவள்.. ஊக்கம் மட்டுமே
ஆக்கத்தில் எல்லாம் ம் ஹும்


முதல் பாடல் எனும்போது அதுவும் ஒரு பெண் பாடும் பாடல் எனும்போது 100 சதவீதம் என்னால் திருப்தியாக எழுத முடியாமல் போனது உண்மையே..

இல்லை.. உங்களால் முடியும்

வைரமுத்துவுக்கு ஒரு சினேகிதனே - வெற்றிபெறவில்லை..?
முடியும்..கவிஞனால் முடியாவிட்டால் பின் யாரால்..?
மீண்டும் உங்கள் நல்ல புரிந்துணர்வுக்கு என் நன்றிகள்

"பொத்தனூர்"பிரபு
15-10-2008, 02:05 AM
இரவின் நிழலில்
உன் விரலைப்பற்றிக்கொண்டு
உனக்குள் வாழ்ந்திட ஆசை
விடியும் வரையில்
உன் வதனம் பார்த்துக்கொண்டு
உலகம் மறந்திட ஆசை


...............அழகான வரிகள் வாழ்த்துக்கள்

"பொத்தனூர்"பிரபு
15-10-2008, 02:07 AM
......
தனன தனன தன
தனன தனன தன
தனன தனன தனனா..
...........
நன்பர்களே யாராவது தத்தகாரம் பற்றி சொல்லித்தர முடியுமா???

பென்ஸ்
15-10-2008, 03:10 AM
மன்றத்தில் பலமுறை நான் சொக்கி போய் நிற்ப்பது இதனால்தான்....

நம் மன்ற கவிகளில் சிறப்பான நமது ஷிப்லி திரைபத்தில் பாடல் எழுதுகிறார் என்ற சந்தோச இன்பத்தில் நிற்க்கும் போது....

அந்த கவி இன்னும் சிறப்பாக துலங்க வேண்டும் என்ற ஆவலில் தன் ஆர்வத்தாலும், கூரிய பார்வையாலும் கண்டவற்றை தைரியமாக , ஒரு உற்ற நண்பனிடம் இனிமையாய் சொல்லுவது போல் சொல்லி ... சொல்ல வந்ததை இருவரும் புரிந்து ஒத்து போய்....

மெய் சிலிக்கிறது....

பாராட்டுகளும் நன்றியும் இருவருக்கும்....

shibly591
15-10-2008, 05:42 AM
மன்றத்தில் பலமுறை நான் சொக்கி போய் நிற்ப்பது இதனால்தான்....

நம் மன்ற கவிகளில் சிறப்பான நமது ஷிப்லி திரைபத்தில் பாடல் எழுதுகிறார் என்ற சந்தோச இன்பத்தில் நிற்க்கும் போது....

அந்த கவி இன்னும் சிறப்பாக துலங்க வேண்டும் என்ற ஆவலில் தன் ஆர்வத்தாலும், கூரிய பார்வையாலும் கண்டவற்றை தைரியமாக , ஒரு உற்ற நண்பனிடம் இனிமையாய் சொல்லுவது போல் சொல்லி ... சொல்ல வந்ததை இருவரும் புரிந்து ஒத்து போய்....

மெய் சிலிக்கிறது....

பாராட்டுகளும் நன்றியும் இருவருக்கும்....

நன்றி பென்ஸ்..

நமது மன்றம் அன்பால் கட்டுண்டு போனதல்லவா...???

புரிந்துணர்வு எப்படி இல்லாமல் போகும்..

உங்களுக்கும் நன்றிகள்

சூரியன்
15-10-2008, 05:50 AM
வாழ்த்துக்கள் அண்ணா.
இந்த பாடல் திரையில் வர வாழ்த்துக்கள்.

ராஜா
15-10-2008, 07:16 AM
பாராட்டுகள் ஷிப்லி..!

வியாபாரத்துக்கு முதலிடம் கொடுக்கும்,

அர்த்தமற்ற நம்பிக்கைகளும், சமரசங்களும் நிரம்பிக்கிடக்கும்..

கனவுத் தொழிற்சாலையில் உங்கள் சுயத்தை ஓரளவேனும் காப்பாற்றிக்கொள்ள முடியுமானால் அதுவே பெரும் வெற்றியாக அமையும்.

சரணங்களின் கடைசி வரிக்கு முந்தைய வரி, இசை வடிவம் பெற்றபின்னர் பரவலாக முணுமுணுக்க வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

விடாமுயற்சியுடன் போராடுங்கள்.. !

தீபன்
15-10-2008, 08:10 AM
வாழ்த்துக்கள் நண்பரே. பாடல் வெளியீட்டிற்கான அளைப்பிதளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்....

poornima
15-10-2008, 09:56 AM
......
தனன தனன தன
தனன தனன தன
தனன தனன தனனா..
...........
நன்பர்களே யாராவது தத்தகாரம் பற்றி சொல்லித்தர முடியுமா???

வரிகளை வாசிப்பதற்கு முன்னால் அதற்கான இசையொலியை
மீட்டிப்பார்ப்பது என எளிமையாக சொல்லலாம்..

எல்லாப் பாடல்களுமே ஓரளவு தத்தகாரம் அமையப் பெற்றதுதான்.
இதை டியூன் போட்டு முடித்தவுடன் பாடகருக்கு இசையமைப்பாளர்
பாடி காட்டுவார்.பாடலாசிரியர் அந்த இசையொலியை வரிகளால்
செதுக்குவார்.

ஓவியா
15-10-2008, 01:23 PM
அடடே நம்ப ஷிப்லியா திரைபட கவிஞரா பதிவியேற்ற போகிறார்.

நினைக்கும் பொழுதே மனம் தேனாய் இனிக்கின்றது.

பாராட்டுக்கள் ஷிப்லி.

பூமாலை, புகழ்மாலை என இரண்டும் உங்களுக்கு இனி அடிக்கடி சொந்தமாக வாழ்த்துக்கள்.


ஒரு சின்ன வேண்டுகோள்,
எந்த சூழ்நிலையிலும் ஆங்கில கலவையை சேர்க்காதீர்கள். தமிழ் பாடல்களை எழுதி சஞீவி மலைப்போல் குவியுங்கள். :)

உங்கள் கவிதையை வாசித்தேன், திரையில் முதல் கவிதை என்பதால் இசையுடன் கேட்டு விட்டு விமர்சனம் தருகிறேன்.

மாதவர்
15-10-2008, 03:09 PM
வாழ்த்துக்கள்!!

இளசு
15-10-2008, 05:41 PM
வாழ்த்துகள் ஷிப்லி..

இப்பாடல் திரைக்குவந்து வெற்றி பெற வாழ்த்துகள்..

(தடங்கல் வந்தாலும் தளரவேண்டாம்...)

பெண்மைக்குள் நுழைந்து, மெட்டுக்குள் சிக்கி
நீங்கள் கோர்த்த கவி வரிகள் அழகு..

பூர்ணிமாவின் கூரிய பார்வை - அழகுக்கு அழகு!

புரிந்துணர்ந்த கலந்துரையாடல் - அழகுகளின் உச்சம்!