PDA

View Full Version : தொல்லை கொடுக்கும் டெலிமார்கெட்டிங்களுக்கு சவுக்கடி



namsec
13-10-2008, 05:18 AM
தொல்லை கொடுக்கும் டெலிமார்கெட்டிங்களுக்கு சவுக்கடி

தொல்லை தந்த டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் 10 ஆயிரம் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு : 'டிராய்' அதிரடி நடவடிக்கை
அக்டோபர் 13,2008,00:21




புதுடில்லி : விதிமுறைகளை மீறி, மொபைல் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு கொடுத்த, டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் 10 ஆயிரம் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ளன. தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் தொல்லை தரும் அழைப்புகளால், தங்களுக்கு பிரச்னை ஏற்படுவதாக, மொபைல் வாடிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, இது போன்ற தொல்லை தரும் அழைப்புகளை விரும்பாதவர்கள், 'தேசிய விரும்பத்தகாத அழைப்புகள்' பதிவேட்டில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இப்படி பதிவு செய்யும் முறை, 2007 அக்டோபர் 12ல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, 1.8 கோடி பேர், இந்த பதிவேட்டில், தங்களின் பெயரையும், மொபைல் எண்ணையும் பதிவு செய்தனர். இதையும் மீறி, பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், மொபைல் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டன. இதனால், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம், கடந்த ஆறு மாதங்களில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. இதையடுத்து, டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் 10 ஆயிரத்து 151 தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க 'டிராய்' அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்த இணைப்புகளில் 8,600க்கும் மேற்பட்டவை, தொலை தொடர்புத்துறையில் பதிவு செய்யாத டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு சொந்தமானது. மேலும், விதிமுறைகளை மீறியதற்காக இந்நிறுவனங்களுக்கு 500 மற்றும் 1,000 ரூபாய் என, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 19 ஆயிரத்து 163 டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறையில் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில், விதிமுறைகளை மீறி செயல் பட்ட இந்த டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என, விளக்கம் கேட்டு மொபைல் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


நன்றி தினமலர்

மன்மதன்
13-10-2008, 01:10 PM
வெளிநாடுகளில் இப்படிபட்ட இம்சை இருக்கா?

இல்லை இந்தியாவில் மட்டும்தானா?