PDA

View Full Version : டோரண்டுகள் குறித்து ....



பாரதி
12-10-2008, 12:30 PM
அன்பு நண்பர்களே,

பல்வேறு டோரண்டுகளில் எதை நீங்கள் கணினியில் நிறுவி உள்ளீர்கள்?
அதில் என்ன என்ன மாற்றங்களை செய்தால் வேகமாக கோப்புகளை பதிவிறக்கம் செய்ய உதவியாக இருக்கும் என்பதை அறியத்தருவீர்களா?

இணையத்தில் தேடினால் பல்வேறு வகையான விடைகள் வருகின்றன. எனவே, நண்பர்கள் நடைமுறையில் கையாண்டு வரக்கூடிய முறைகளை தந்தால் மிக மிக உதவியாக இருக்கும்.

நன்றி.

rajatemp
12-10-2008, 03:56 PM
utorrent பயன்படுத்துங்கள் நன்றாக உள்ளது

Narathar
12-10-2008, 04:24 PM
நான் Bit Torrent பயன்படுத்துகின்றேன்......
ஆரம்பத்திலிருந்து அதை பயன்படுத்திவருவதால் மற்ற செயலிகளைப்பற்றி தெரியாது!

ஆனால் சில படங்களை தரவிறக்கம் செய்ய நாட்கணக்கில் ஆகிறது...

இதைவிட வேகமானது இருந்தால் யாராவது தெரிந்தவர்கள் தக்க காரணங்களுடன் பரிந்துரைப்பீர்களா?

வெற்றி
13-10-2008, 06:00 AM
யூ டோரண்ட் எளிய மின் பொருள் கிளைண்ட்
விளக்கம் இங்கே
http://www.utorrent.com/faq.php?client=utorrent1810

ஏற்க்கனவே இருக்கும் ஒரு திரி
டொரண்ட்(torrent) கோப்புகளை தரவிறக்கம் செய்வதெப்படி? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14548)

பாரதி
13-10-2008, 07:30 AM
கருத்துக்களுக்கு நன்றி ராஜா,நாரதர், மொக்கச்சாமி.

நானும் "ம்யூ" டோரண்ட்டைதான் உபயோகிக்கிறேன்.

சில நேரங்களில் பதிவிறக்கம் நன்றாக இருக்கிறது.
சில நேரங்களில் படுமோசமாக இருக்கிறது (சீடர்கள் (!?) அதிகம் இருந்தாலும் கூட).

இணையத்தில் தேடினால் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறான வழிமுறைகள் தருகிறார்கள். சிலவற்றை அவர்கள் கூறியபடி செய்தாலும் கூட பதிவிறக்கத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லை.

ஆகவேதான், நடைமுறையில் டோரண்டை உபயோகிப்பதில் என்ன என்ன மாற்றங்களை செய்தால், பதிவிறக்கம் வேகமாக அல்லது சிறப்பாக இருக்கும் என்பதை அறிய விரும்பியதால், அந்த வழிமுறைகளைக் கூறுமாறு வேண்டுகிறேன்.

வெற்றி
14-10-2008, 07:31 AM
சில நேரங்களில் பதிவிறக்கம் நன்றாக இருக்கிறது.
சில நேரங்களில் படுமோசமாக இருக்கிறது (சீடர்கள் (!?) அதிகம் இருந்தாலும் கூட).
இணையத்தில் தேடினால் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறான வழிமுறைகள் தருகிறார்கள். சிலவற்றை அவர்கள் கூறியபடி செய்தாலும் கூட பதிவிறக்கத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லை.
.


அநேகமாக உங்கள் நெருப்புச்சுவர் தடுக்க கூடும் ...
அல்லது ஆண்டி வைரஸ் சாப்ட் தடுக்க கூடும் .இதை எப்படி தீர்ப்பது என நான் கொடுத்த லிங்கில் உதவி இருக்கிறது
கீழே இருக்கும் வழி முறைகள் என் செட்டிங்ஸ்
படம் ஒன்று (இது போல் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என பொருள்
http://i254.photobucket.com/albums/hh109/sampathsaran/tamil/test.jpg

படம் :2 ஒரு சமயத்தில் இரு பதிவிறக்கம் இரண்டு சீடிங் என மொத்தம் அதிக பட்சம் 4 இருப்பது நல்லது (அதிகமான பதிவிறக்கம் அல்லது சீடிங்கை ஒரே சமயத்தில் செய்வும்ம் போது நிகழ கூடும்

http://i254.photobucket.com/albums/hh109/sampathsaran/tamil/test2-1.jpg
படம் :3
பேண்டு விர்த் இது போல் இருத்தல் நலம்
http://i254.photobucket.com/albums/hh109/sampathsaran/tamil/test1-1.jpg
இந்த லாஜிக்கை சொல்லித்தந்தவர் பிரவீண் :):):)

நன்பர் பிரவீனின் சிபாரிசான azureus பயன் படுத்துபாருங்கள் ப்ரவீன் உங்கள் சந்தேகம் தீர்ப்பார் ..

பாரதி
14-10-2008, 04:47 PM
வழிமுறைகளுக்கு நன்றி சாமி.

நானும் பிரவீணிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். அவர் பணிப்பளு குறையும் சமயத்தில் இதை கவனிப்பார்.

நீங்கள் கொடுத்திருக்கும் படங்களில் முதலாவது படத்தில் இருப்பதைப்போல எனக்கு இல்லை. அந்த இடத்தில் ஆச்சரியக்குறி தென்படுகிறது. மற்ற படங்களில் இருப்பதைப்போல எனது கணினியில் மாற்றங்களை செய்து விட்டேன். இப்போது பதிவிறக்கும் வேலை முடிந்தபின்னர் அதை கவனிக்க வேண்டும்.

உங்கள் கணினியில்,டோரண்டில் அதிகபட்ச பதிவிறக்க வேகம் எவ்வளவு என்பதைக்குறிப்பிட இயலுமா நண்பரே?

அன்புரசிகன்
14-10-2008, 06:59 PM
உங்கள் கணினியில்,டோரண்டில் அதிகபட்ச பதிவிறக்க வேகம் எவ்வளவு என்பதைக்குறிப்பிட இயலுமா நண்பரே?

அண்ணா... என்னுடைய 2 MB கணக்கிற்கு 300kb/s என்ற வேகத்தை கூட டொரண்ட் பதிவிறக்கம் வந்துள்ளது... ஆகவே இது சீடர்கள் லீசர்கள் உங்கள் இணைய வேகம் போட் ஆகியவற்றில் தங்கியுள்ளது... உங்களுடைய இணைய இணைப்பு 512 ஆக இருந்தால் 50 - 60 ஐ அடைந்தால் அது அதிக பட்ச வேகம் எனலாம்....

பாரதி
14-10-2008, 10:38 PM
தகவலுக்கு மிக்க நன்றி அன்பு.
எப்போதாவது நான் பெறும் அதிகபட்ச வேகம் 27kBps.
சீடர்கள் இல்லாவிட்டால் பெரும்பாலான நேரங்களில் 4-8 கிடைக்கிறது.

praveen
15-10-2008, 07:04 AM
தகவலுக்கு மிக்க நன்றி அன்பு.
எப்போதாவது நான் பெறும் அதிகபட்ச வேகம் 27kBps.
சீடர்கள் இல்லாவிட்டால் பெரும்பாலான நேரங்களில் 4-8 கிடைக்கிறது.

என்னை கேட்டதற்கு நன்றி பாரதி,

பொதுவாக இந்த டோரண்ட்களின் பதிவிறக்க வேகம் குறைவது கீழே கண்டவற்றை வைத்து அமையும்.

1)நமது கம்ப்யூட்டரில் வேறு ஏதாவது இனையத்தை பயன்படுத்தி கொண்டிருந்தால்

2)நாம் பதிவிறக்கி கொண்டிருக்கும் டோரண்ட் சீட் எதுவும் இல்லாமால் இருந்து பீர்(லீச்சர்) மட்டுமே இருந்திருந்தால்

3)நாம் பதிவிறக்க்கிய தளத்தில் மெம்பராக இல்லாமால் வேறு வழியில் அந்த டோரண்ட் பைல் கிடைத்து இருந்தால் (அநேக தளங்கள் அனுமதிக்காது, சில குறைந்த பேண்ட் வித் மட்டும் அனுமதிக்கும்).

4)நமது கம்ப்யூட்டர் பயர்வால் அல்லது ரவுட்டரினால் சில போர்ட்கள் அடைக்கப்பட்டிருந்தால்

5)நமது இனையசேவை வழங்குநர் இம்மாதிரி டோராண்ட் வழி பைல் பரிமாற்றத்தை தடுத்திருந்தால் (இலங்கை மற்றும் சீனாவில் இப்படி செய்கிறார்கள் என்று கேள்விபட்டேன், இங்கே இந்தியாவில் சமயத்தில் பி.எஸ்.என்.எல் செய்வதாக அறிகிறேன்).

6)நமது இனைய இனைப்பின் அப்லோடும் டவுன்லோடும் ஒரே வேகத்தில் இருக்க வேண்டும். டவுன்லோடு 32KByte(256Kbitesps)அப்லோடு 8KByte(64Kbitesps) என்றாலும் ஆரம்பத்தில் நல்ல வேகத்தில் பதிவிறக்கம் ஆகி பின் மெதுவாக வேகம் இழந்து விடும். இந்த வித்தியாசம் ரிலயன்ஸ் நெட்வொர்க்கில் உள்ளது.

7)நாம் டோரண்ட் பதிவிறக்கிய தளத்தில் நமது ரேசியோ 1:1 க்கு சமமாக அல்லது அதற்கு மேலே (1:1.6 இப்படி) இருக்க வேண்டும் மாறாக 1:0.5 என்று குறைவாக இருந்தால் இப்படி ஆகும். இது எல்லா தளங்களும் கடைபிடிப்பதில்லை. சில பாஸ்வேர்டு கொடுத்து உள் நுழைந்து தான் பைல் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்று உள்ள தளங்களில் இப்படி.

8)இது போக நமது டோரண்ட் கிளையண்ட்(ம்யூடோரண்ட், அசுரஸ் இப்படி) டவுண்லோடு வேகம் அதிகமாக full or unlimited) வைத்து அப்லோடு 5கேபி என்று வைத்தாலும் இப்படி ஆகி விடும். பின்னே நான் பதிவிறக்க மட்டும் செய்வோம் மற்றவருக்கு தரமாட்டோம் என்றால் டோரண்ட் சமூகம் எப்படி உயிர்ப்புடன் இயங்கும் :).

நீங்கள் உங்களை (டோரண்ட்)பற்றி தகவல் தராததால் நான் இவ்வளவு டைப் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள் பாரதி(யாரே) :)

பாரதி
15-10-2008, 07:21 AM
தகவலுக்கு நன்றி பிரவீண்.

நான் உபயோகிப்பது தோஷிபா மடிக்கணினி.
இயங்குதளம் : விண்டோஸ் எக்ஸ்-பி
உபயோகிக்கும் டோரண்ட் ; ம்யூ டோரண்ட் 1.8.1

நான் ஏன் இந்தத்திரியை தொடங்கினேன் எனில் ம்யூ டோரண்ட்டை நிறுவிய போது பதிவிறக்கம் கிட்டத்தட்ட 30-40 kBps என்ற அளவில் இருந்தது.

சில தினங்கள் கழித்து, அதே இணைய தளத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரே அளவு சீடர்கள் மற்றும் பீர்கள் இருக்கும் சமயத்தில் பதிவிறக்கம் செய்த போது வெகுவாக வேகம் குறைந்து விட்டது - கிட்டத்தட்ட 3-5 kBps மட்டுமே!

இணையத்தில் தேடி கிடைக்கும் வழிமுறைகளை எல்லாம் உபயோகித்துப்பார்த்து பார்த்து வேகம் எதுவும் கூடவே இல்லை. வெறுப்பாகி விட்டது!

ஆச்சரியகரமாக இந்த பதிவை செய்யும் நேரத்தில் பதிவிறக்க வேகம் கிட்டத்தட்ட 25 kBps! மேலும் அந்த வேகமும் சீரான வேகத்தில் இருப்பதில்லை. எப்போதும் ஏற்றமும் இறக்கமுமாகத்தான் இருக்கிறது.

அறிந்து கொண்ட விசயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி பிரவீண்.

இளசு
18-10-2008, 12:24 PM
பாரதிக்கும் ப்ரவீண் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி..

உனக்கு நினைவிருக்கா பாரதி?
நண்பர் புதுசுக்காக இதுபற்றி உன் உதவி நான் நாடியது?

என் கணினி அறிவு (??!!!!) நீ அறிந்ததே!
ஜிமெயிலில் குறள் பதிக்கவே இன்னும் தடுமாற்றம்..


நாம் நேரில் சந்திக்கும்போது, இதுபற்றி பாடம் எடு எனக்கு..

செல்வா
18-10-2008, 12:59 PM
நாம் நேரில் சந்திக்கும்போது, இதுபற்றி பாடம் எடு எனக்கு..

என்னையும் சேத்துக்கோங்க ... :) :) :)

பாரதி
02-04-2009, 07:46 AM
அண்ணா, செல்வா... உங்களிடமிருந்து நான் கற்க வேண்டியவையே அதிகம். இருக்கட்டும்.. நேரில் பார்க்கும் போது கவனித்துக்கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------

இன்று இணையத்தைத் தேடும் போது கீழ்க்கண்டவாறு செய்தால் டோரண்ட்களின் பதிவிறக்க வேகம் கூடும் ஒரு தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நானும் செய்து பார்த்தேன். வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. நண்பர்களும் சோதனை செய்து பார்ப்பதற்காக வழிமுறையை இங்கே தருகிறேன். ஆங்கிலப்பதிவிற்கு மன்னிக்கவும். கீழ்க்கண்ட முறை பி.எஸ்.என்.எல்..லின் அகலக்கற்றை இணைப்பிற்காக எழுதப்பட்டது. மற்ற வழங்கிகளுக்கு தக்க மாறுதல்களை நீங்களே செய்து கொள்ள வேண்டியதிருக்கும்.


1)Go to 192.168.1.1 in ur browser- login & password-admin
2)Then goto Advanced Setup->NAT->DMZ Host
3)Then type 192.168.1.2 as the DMZ HOST IP ADDRESS
4)Then SAVE and APPLY
5)REBOOT Modem
6)Then open utorrent
7)Go to speed guide and see the port number it will be like 45678
(5 digit no.)
8)Pls donot change this number
9)Then goto OPTIONS->PREFERENCES in utorrent
10)Go to Bit Torrent and Set The PROTOCOL ENCRYPTION to ENABLED
11)Then Goto Advanced Setup In PREFERENCES
12)Scroll Down and Find net.max half_open
13)Set it to 50.Before it wud be 8.It appears as*50.
14)Now go to Windows Security Center->Windows Firewall
15)Now goto Exceptions.
16)Click ADD PORT.
17)Now type utorrent in NAME and ur port Number in PORT NUMBER
18)Click Ok.Reboot MODEM
19)Now you will see a green tick symbol in bottom of utorrent after doing the above procedure.
20)Enjoy Torrent Speed!!!!!

இவ்விதம் செய்வதால் உண்மையிலேயே பதிவிறக்க வேகம் கூடுகிறதா என்று பரிசோதித்த நண்பர்கள் கருத்தைத்தாருங்கள். நன்றி.

பரஞ்சோதி
02-04-2009, 10:08 AM
பயனுள்ள பதிவு பாரதி அண்ணா.

அசத்தலாக சொல்லி கொடுத்த மொக்கச்சாமியார், பிரவீண் ஆகியோருக்கு நன்றிகள்.