PDA

View Full Version : திருக்குறள் விட்ஜெட்



mbchandar
12-10-2008, 11:19 AM
அன்பு நண்பர்களே!
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அனைவரும் திருக்குறளை பற்றி நன்கு அறிவீர். வள்ளுவன் இந்த உலகிற்கு அற்பனித்த ஒப்பில்லா சொத்து. ஏரத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிவைத்த திருக்குறள் இன்றும் பேசபடுகிறது. தற்போதைய வாழ்க்கை முறைக்கும் பயன்படுகிறது. அப்படி பட்ட திருக்குறளை உலகம்.net விட்ஜெட் வழியாக இன்று முதல் வழங்க தொடங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு, இங்கே செல்லவும் http://tinyurl.com/52f9nf

mbchandar
16-10-2008, 06:02 PM
நண்பர்களே,
திருக்குறள் விட்ஜெட்டை எந்த ஒரு வலைதளத்தில் நிருவ வசதி செய்து தந்தோம். இன்னொரு முயற்சியாக, பேஸ்புக்கில் திருக்குறள் விட்ஜெட்டை நிருவமுடியும். அதாவது பேஸ்புக்கு செயலி தொழில்நுட்பத்தின் வாயிலாக, இந்த திருக்குறளை ஒவ்வொரு பேஸ்புக்கு பயனர் பக்கங்களில் பொருத்த முடியும். மேலும் அதனை பொட்டிகள்(Boxes) எனப்படும் பக்கத்தில் கூட தள்ளி தொகுத்துக்கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு (http://tinyurl.com/4bcaqm) செல்லவும்

mbchandar
16-10-2008, 06:07 PM
நண்பர்களே!,
திருக்குறளை அனைவரும் தெரிந்துகொள்ளும் முயற்சியாக திருக்குறள் விட்ஜெட் (http://ulagam.net/2008/10/12/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/) மற்றும் பேஸ்புக்கு திருக்குறள் செயலி (http://ulagam.net/2008/10/15/facebook%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/) போன்ற சேவையை உலகம்.net வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, மின்னஞ்சல் கையெழுத்தாக திருக்குறளை நிருவ உலகம்.net ஒரு புதிய சேவையை அறிமுக படுத்துகிறது. இது ஜிமெயில் பயனர்களுக்கு மட்டும் வேலை செய்யும்.

மேலும் விவரங்களுக்கு, இங்கு (http://tinyurl.com/4cq2zn) செல்லவும்

அமரன்
16-10-2008, 07:41 PM
அன்பு நண்பரே!
நல்ல பயன்மிக்க தகவல். இந்தவகை தகவல்களை இங்கே நேரடியாகக் கொடுத்தால் இன்னும் பலர் பயனடையக்கூடியதாக இருக்கும். கவனத்தில்கொள்ள வேண்டுகின்றேன். ஒத்த சாயலுடனான உள்ளடக்கத்திரிகளை ஒன்றாக இணைத்துள்ளேன் என்பதையும் உங்களுக்கு கவனப்படுத்துகிறேன்.

இளசு
16-10-2008, 07:52 PM
தகவல்களுக்கு நன்றி நண்பரே!

திரிகளை இணைத்தமைக்கு நன்றி அமரா..

கூகிள் மெயிலில் நீங்கள் சொன்னபடி முயன்றேன்..ஏனோ கையெழுத்துக் குறள் வரவில்லை.

நண்பர்கள் செய்து வென்றால், இங்கே பகிருங்கள். நன்றி!

அமரன்
16-10-2008, 08:01 PM
எனக்கு செயல்படுகிறது அண்ணா. அவர் சொன்ன முறையை அப்படியே கடைப்பிடித்தேன். கடைசியில் சொன்னது போல முதல் முறை Compose Mail ஐ சொடுக்கிய போது வரவில்லை. பின் Discard பொத்தானை அழுத்தி மீண்டும் Compose Mail ஐ அழுத்தினேன். குறள் வந்தது. திரும்பத்திரும்ப செய்ய சுழற்சி முறையில் குறள் மாறியது.

mbchandar
17-10-2008, 01:14 PM
அமரன் அவர்களே!,
ஒன்றாக இணைத்தமைக்கு நன்றி. இனிமேல் ஒத்த சாயலுடனான உள்ளடக்கத்திரிகளை ஒன்றாக தருகிறேன்.

இளசு அவர்களே!,
அமரன் அவர்கள் சொன்னது போல் செய்து பாருங்கள். குறள் கையெழுத்தின் கீழ் வரும்.

நன்றி

பாலாஜி
28-03-2009, 03:02 PM
மிக நல்ல தகவல்! நன்றி!

பா.ராஜேஷ்
29-03-2009, 06:10 AM
திருக்குறளை வளர்க்கும் இந்த முயற்சி பாராட்டிற்குரியது! வாழ்த்துக்கள் நண்பரே!

விகடன்
12-04-2009, 06:52 AM
அமரன் பச்சைக்கொடி காட்டிவிட்டார். இந்த விடயத்தை நானும் முயற்சிக்கப்போகிறேன்.

அன்புரசிகன்
12-04-2009, 07:13 AM
சிறப்பாக ஜிமெயிலில் கையெழுத்து வருகிறது. மிக்க நன்றி...

முதல் தடவை compose ஐ அழுத்தும் போது வரவில்லை. இரண்டாவது தடவைக்கு வருகிறது...