PDA

View Full Version : இந்திய நடுவண அரசு அலுவலகங்களில் குறையா?

பாரதி
10-10-2008, 01:51 PM
அன்பு நண்பர்களே,

நடுவண அரசுத்துறைகளில் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு உரிய முறையில் தீர்க்கப்படாமல் உள்ளனவா..? அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்களா?

அப்படியெனில் இந்த சுட்டியில் உள்ள வலைத்தளத்திற்கு சென்று உங்கள் பிரச்சினைகளை முறையிடுங்கள்.
http://pgportal.gov.in/

எந்தெந்த அரசுத்துறைகளுக்கு இந்த முறையில் நீங்கள் புகார் செய்யலாம் என்பதை அறிய இங்கே செல்லுங்கள்.
http://dpg.gov.in/purview.htm

இதில் இந்திய தொடர்வண்டித்துறை, தபால்துறை, தொலைத்தொடர்புத்துறை, இந்திய விமானத்துறை, இந்திய கப்பல் துறை, இந்திய போக்குவரத்துத்துறை, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பிராந்திய கடவுச்சீட்டு ஆணையம், நடுவண பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 20 வகையான துறைகளில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கொண்டு செல்ல முடியும்.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாமும் நமக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது, ஏன் இந்த வழிமுறையை கையாளக்கூடாது? முயற்சித்துதான் பார்ப்போமே நண்பர்களே, சரிதானே?

செல்வா
11-10-2008, 05:01 AM
அடடே.. இதெல்லாம் இருக்கா... பகிர்தலுக்கு மிக்க நன்றி அண்ணா...

அரசு அலுவலகங்களில் புகார்ப் பெட்டி என்று ஒன்று துருப்பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும். யாரும் கவனிப்பாரின்றி... அப்படியே யாராவது புகார் அளித்தாலும் அதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே திறந்து பார்ப்பதால் எந்த உபயோகமும் இல்லாமல் இருந்தது..
இந்த முறை பயன்தரக்கூடும். யாருக்கேனும் புகார் செய்த அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

சிவா.ஜி
11-10-2008, 05:18 AM
பயனுள்ள தகவலை எங்கிருந்தாலும் தேடிக் கொணர்ந்து பகிர்ந்து கொள்ளும் பாரதிக்கு மிக்க நன்றி. செல்வா சொன்னதைப்போல இந்த முறையில் யாருக்கேனும் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருந்தால் இங்கே பகிர்ந்து கொள்லலாம்.

பாரதி
11-10-2008, 03:30 PM
கருத்துக்களுக்கு நன்றி செல்வா, சிவா.
இந்தத்தகவலை நான் முன்பே முறையாக அறிந்திருந்தால் எனது குடும்பத்தினருக்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெறுவதற்கு நான் பட்ட அலைச்சலை குறைத்திருக்கும் என நினைக்கிறேன். ஹும்.... என்ன செய்ய?

Ranjitham
12-10-2008, 04:25 AM
மானில அரசுக்கு ஏதேனும் உண்டா?
அன்புடன்
இரன்சிதம்

பாரதி
12-10-2008, 11:54 AM
அன்பு நண்பரே,

கீழே உள்ள சுட்டியில் இருக்கும் தகவலின் படி, மத்திய குற்றப்புலனாய்வுத்துறை குற்றங்களை கண்டறிவதற்காக சில
ஏற்பாடுகளை செய்துள்ளது. நீங்கள் நடுவண அரசு நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளைக்குறித்து குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் புகார் செய்யலாம். நேரடியாக தொலைபேசி மூலமும் புகார் செய்யலாம். புகார் செய்பவர்களின் தகவல் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு குறித்த புகார்கள் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு இலாகாவிற்கு அனுப்பப்படும் எனவும் அச்செய்தி கூறுகிறது.

குறுந்தகவல் அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 9444049224
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: sp1acchn@cbi.gov.in (sp1acchn@cbi.gov.in)
நேரடியாக புகார் செய்ய வேண்டிய தொலைபேசி எண் 044-28255899

மேலதிக தகவல்களுக்கு சுட்டியைத் தட்டுங்கள். http://www.hindu.com/2008/08/19/stories/2008081954100400.htm

நன்றி : தி ஹிந்து நாளிதழ்

மேலும் எப்படி கையூட்டுக்குறித்த விபரங்களை அனுப்புவது என்பதைக் குறித்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவுகள் குறித்தும் அறிய கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லுங்கள்.

http://www.tn.gov.in/citizen/dirvac.htm

மாதவர்
15-10-2008, 02:56 PM

நல்ல முயற்சி
யாராவது மின்ஞ்சல் அனுப்பி பார்த்தால்தான் நடவடிக்கை எப்படி என்று தெரியும்!

மாதவர்
20-10-2008, 06:06 PM
அண்மையில் சென்னையில் ஓடும் ரயிலில் சி.பி.ஐ இரயில்வே உயர் அதிகாரியிடம் ஆறு இலட்சம் பிடித்து உள்ளார்கள்! உண்மையில் அவர்களை பாராட்டலாம்
இன்னும் நீதி சாகவில்லை!!