PDA

View Full Version : கண்ணதாசனின் சிலேடை



பாரதி
10-10-2008, 12:42 PM
இன்று கண்ட வலைப்பூவில் இருந்த சிலேடை..! நண்பர்களின் பார்வைக்காக இங்கு தரப்படுகிறது.
-------------------------------------------------------------
கண்ணதாசன் சொன்ன சிலேடை நகைச் சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது.

உலகெங்கிலுமுள்ள மடங்களின் தலைவர்களின் மாநாடு.

எல்லோரும் வந்து விட்டனர்.

கடைசியாக ஒருவர் வருகிறார்.
அவரது சொந்த ஊர் "கடைமடை."

மடத்தின் தலைவர் வரவேற்கிறார்.

"வாரும் கடைமடையரே!"

(கடைமடை என்கிற ஊரைச் சேர்ந்தவரே வாரும்/ இன்னொரு விதத்தில் கடைசியாய் வந்த மடையரே வாரும், எனவும் அர்தத்ம்)

இப்போது வந்தவர் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, மிகப் பணிவாக சொன்ன பதிலைப் பாருங்கள்.

"வணக்கம்! மடத் தலைவரே!"

இதறகு நான் அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை.

:-)
-----------------------------------------------------------
நன்றி: நேர்மறைச்சிந்தனைகளின் கிரியா ஊக்கி - வலைப்பூ

தீபா
10-10-2008, 02:57 PM
அருமை.. ஆனால் முன்பே படித்துவிட்டேன்.

அமரர்.கண்ணதாசன் குறித்து திரு.இளையராஜா அவர்கள் சொன்னதைக் கண்டு மலைத்தேன்... நேற்று யாரேனும் ராஜ் தொலைக்காட்சியை தொலைசாதனத்தில் பார்த்தீரா?

மன்மதன்
10-10-2008, 03:12 PM
அருமை .. நன்றி பாரதி..

அமரன்
10-10-2008, 08:04 PM
அருமை அண்ணா..
முன்பும் நீங்கள் சிலேடைகள் பலதை பகிர்ந்துள்ளீர்கள். சிலேடைகள் மீது உங்களுக்கு தனிக்காதலோ. எனக்கு தீவிரக் காதல். நன்றி அண்ணா.

பாபு
11-10-2008, 03:53 AM
ஹா ஹா..அருமை !!

சிவா.ஜி
11-10-2008, 05:23 AM
கடை மடையரை, மடத்தலைவர் வார....இவர் திரும்ப அவரைக் குப்புறக்கவிழ்க்க...அடடா...அருமையான சிலேடை. பகிர்தலுக்கு நன்றி பாரதி.

மன்மதன்
11-10-2008, 11:47 AM
இதே மாதிரி சிலேடை ஒன்றை நானும் ஒன்று படித்திருக்கிறேன்.

‘வாரும் இரும்படியும்’ என்று புலவரிடம் மன்னர் சொல்வதாக வரும்..