PDA

View Full Version : (மீண்டும்?!!!) காதலித்து விடு!!!



poo
04-04-2003, 05:36 PM
மொட்டைமாடியில் நான்..
மொட்டுப்பருவத்தில் உதிர்ந்த
உன்னால் காதலென சொல்லப்படுகிற
உணர்வுகளை உணராமல்..

வீட்டுப்பாடமே இன்றுதான்..
வாழ்க்கைப்பாடம் அன்றே போட முயன்றிருப்பாயென
நான் புரிந்துகொள்ள வாய்ப்புண்டோ?!!!

பிஞ்சிலேயே பழுக்கும்..
மொட்டிலேயே பூக்குமா?!!..
(அவ்வாறேயாயினும் அதன் பெயர் என்ன?!!)

விவரம் தெரியா வயதில்
வருவது காதலா?!!!

வாழ்க்கை சாலையில்
சேலையோடு நீ கைகோர்த்து நடைபோட
ஏதுவான பருவமென்றே
கற்பனையில் கூட்டமில்லா பொழுதுகளிலும்
இறுக்கமாய் உணர்கிறேன்..
ஆனால் நீயோ தாவணிக்கனவுகளை
அசைப்போட்டுக் கொண்டிருக்கிறாய் காதலென..

ஒருமுறை வந்து கருகியதே
காதலெனில் உனக்கும் தூக்கம்
தூக்குப்போட்டுக் கொண்டதேன்?!!..

எப்போதாவது எதிர்ப்படும்
தருணத்தில் எதையோ
சொல்ல வந்து அவஸ்தையாய் ..

"இந்தக் குறிப்புகள் எல்லாம்
எனக்குப் புரியாமல் இல்லை"

பெண்ணே இப்போதுதான் நீ காதலிக்கும்
தகுதியடைந்துள்ளாய்....

ஆகவே..
இனக்கவர்ச்சியை காதலென
குழம்பி உன் கண்ணுக்கு தெரியாத
வாழ்க்கையைத் தேடாதே..

நமக்குள் பூக்கத்துடிக்கும்
பூவை நசுக்க முயலாதே...

இளசு
04-04-2003, 06:05 PM
வலிமையான கேள்விகள்
மென்மையான வார்த்தைகள்
காதலில் இது சாத்தியந்தான்.....
அவள் செவி சாய்த்தால்....
காதலும் சாத்தியந்தான்....

மன்மதன்
23-11-2004, 03:02 PM
கவிதையின் மறுபக்கம்...
அன்புடன்
மன்மதன்

அமரன்
05-10-2007, 06:02 PM
பருவம் தப்பிய மழைபோல வந்த காதல் அடித்துச்சென்றதை நினைத்து பருவத்தே வரும் காதலை பொய்த காலமாக வரிந்து, கடந்தகால இருட்டில் எதிர்கால ஒளிமயமான வாழ்வை தொலைப்போருக்கு ஏற்ற கவிதை கொஞ்சும் சாட்டையாக... கொஞ்சம் காட்டமாக...
பருகத்தந்த அனைவருக்கும் நன்றி.

யாழ்_அகத்தியன்
06-10-2007, 08:49 AM
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.