PDA

View Full Version : இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்



aren
09-10-2008, 03:00 AM
இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான டெஸ்ட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் பெங்களூரில் இன்று இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பிக்கிறது.

எனக்குத் தெரிந்து இந்திய டீம் இதுவாகத்தான் இருக்கும்:

1. ஷேவாக்
2. காம்பீர்
3. திராவிட்
4. டெண்டுல்கர்
5. லஷ்மன்
6. கங்குலி
7. தோனி
8. கும்ளே
9. ஹர்பஜன்
10. ஜாஹீர்கான்
11. இஷாந்த் ஷர்மா

எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலியா டீம் இதுவாகத்தான் இருக்கும்:

1. ஹேடன்
2. காடிச்
3. பாண்டிங்
4. கிளார்க்
5. ஹஸ்ஸி
6. வாட்சன்
7. ஹாடின்
8. வையிட்
9. லீ
10. ஸ்டூவர்ட் கிளார்க்
11. கிரெட்ஸ் (ஆஃப் ஸ்பின்னர்)

மிட்சல் ஜாக்ஸனிற்கு இடம் இருக்குமா என்று தெரியாது.

டாஸ் வெல்பவர்களுக்கு டெஸ்டை வெல்ல வாய்ப்பிருக்கிறது.

கங்குலிக்கு கடைசி தொடர்.

திராவிட் 100 டெஸ்டுகள் மூன்றாவது ஆட்டக்காரராக களத்தில் இறங்கப்போகிறார்.

76 ரன்களே இன்னும் பாக்கி இருக்கிறது டெண்டுல்கர் லாராவின் ரெகார்டை முறியடிக்க.

என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அன்புரசிகன்
09-10-2008, 03:58 AM
இம்முறை சச்சின் நிச்சயம் அந்த சாதனையை செய்வார்...

முன்வாழ்த்துக்கள் அவருக்கு... கங்குலி வராமல் விடுவது மேல். அவுஸ்திரேலியர்களுடன் முதல் இனிங்ஸ் நிதானமாகவும் இரண்டாவதை அதிரடியாகவும் ஆடினால் தான் வெல்லமுடியும். நிச்சயம் இளம் சாதனையாளர்கள் அவசியம்...

சூரியன்
09-10-2008, 06:55 AM
கங்குலிக்கு இது கடைசி தொடர்.
பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

rajatemp
09-10-2008, 10:40 AM
பார்க்க என்ன இருக்கிறது எப்பவும் போல 0 தான்

ராஜா
18-10-2008, 07:22 AM
பார்டர் - கவாஸ்கர் சுழற்கோப்பை டெஸ்ட் தொடர்.

2 வது டெஸ்ட் / 2ம் நாள் / 2 வது ஆட்ட வேளை. (மொஹாலி.)

தற்போதைய நிலவரம்..

இந்தியா 437 / 7.

தோனி 63*

ராஜா
18-10-2008, 07:34 AM
ஹர்பஜன் வீழ்ந்தார்..

வீ கேமரன் ஒய்ட். 01.

442/8

ராஜா
18-10-2008, 07:58 AM
92 ஓட்டங்களுடன் ஆட்டங்காட்டும் தோனி சதமடிப்பாரா..?
தோனி சதமடிப்பாரா..?


ஒரு ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு ஜாகீர்கானை (2) பலிகடா ஆக்கிவிட்டார்..

469 - 9

ராஜா
18-10-2008, 08:04 AM
புதிய வருகை...

அமித் மிஸ்ரா..!


92 ல் தோனியின் சதம் மிஸ்'ரா..!


இந்திய முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் : 469.

கங்கூலி 102.

தோனி 92.

சிடில், ஜான்சன் தலா 3 விக்கெட்.

ராஜா
18-10-2008, 08:25 AM
ஆஸி. அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி..!


ஜாகீர் பந்தில் ஹெய்டன் வீழ்ந்தார். (4/1)

சைமன் கடிச் ஆட்டத்தில் தன்னம்பிக்கை தெரிகிறது.

ராஜா
18-10-2008, 09:01 AM
தேனீர் இடைவேளை நிலவரம்.

ஆஸி. 13/1.

மேத்யூ ஹெய்டன் 0.


ஒரே தொடரில் இரண்டு முறை (அடுத்தடுத்த டெஸ்டில், ) மூன்றாவது பந்தில் ஹெய்டன் ஆட்டமிழந்திருப்பது ஒரு அதிசயமே..!

ராஜா
18-10-2008, 09:12 AM
ரிக்கி பாண்டிங் ஆட்டமிழந்தார்..

விமுகா இஷாந்த் 5.

17/2.

ராஜா
18-10-2008, 09:44 AM
மைக்கேல் ஹஸி, சைமன் கடிச் இவ்விருவரும் ஆஸிக்கு நல்லதொரு எண்ணிக்கையைத் தரக்கூடும்.

30/2

ராஜா
20-10-2008, 09:40 AM
தற்போதைய நிலவரம்..

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட அணி திணறல்...

58 / 5.

வெற்றிக்கு இன்னும் 458 ஓட்டங்கள் தேவை.

shibly591
20-10-2008, 09:49 AM
வாவ்..

அவுஸ்திரேலியர்களின் கர்வத்துக்கு இந்தியா போடப்போகிறது முற்றுப்புள்ளி..

இந்தியா வெற்றி பெற வாழ்த்துகிறேன்..

ராஜா
20-10-2008, 09:59 AM
ஆம் ஷிப்லி... இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெறும்..

ஆஸி. 70/5.

வியப்புக்குரிய வீரர் மிஸ்ரா பந்துவீச அழைக்கப்பட்டுள்ளார்..

shibly591
20-10-2008, 10:02 AM
ஆம் ஷிப்லி... இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெறும்..

ஆஸி. 70/5.

வியப்புக்குரிய வீரர் மிஸ்ரா பந்துவீச அழைக்கப்பட்டுள்ளார்..



இலங்கைக்கு எப்படி அஜந்த மெண்டிஸோ இந்தியாவுக்கும் ஒரு மிஸ்ரா கிடைத்திருக்கிறார்..

ஆசியா சுழற்பந்து சாம்ராஜ்யம் இன்னும் பலமேறுகிறது..

ராஜா
20-10-2008, 10:52 AM
மைக்கேல் க்ளார்க் (31 ) & ஹாடின் (19 ) இணை சாதித்த அரைசத பங்களிப்பின் பயனால், ஆஸி. ஸ்கோர் 108/5. ஐ எட்டியது.

நான்காம் நாளான இன்று, இன்னும் 10 ஓவர்களே மீதமுள்ளன.

ராஜா
20-10-2008, 10:58 AM
அமித் மிஷ்ராவின் பந்துகள், க்ளார்க் & ஹாடின் இணையால் நாற்புறமும் சிதறடிக்கப்படுகின்றன.

118/5.

9 ஓவர்கள் பாக்கி.

ராஜா
20-10-2008, 11:34 AM
4 ம் நாள் ஆட்ட முடிவு நிலவரம்..

க்ளார்க், ஹாடின் இணையின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் (ஒரு கட்டத்தில் 58க்கு 5 விக்கெட் என்ற நிலையில் தள்ளாடிய) ஆஸி. அணி 141 க்கு 5 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியிருக்கிறது.

நாளை ஒரு நாள் மீதமிருக்கின்ற நிலையில், மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும். ஒருவேளை ஆஸி 5 விக்கெட்டுகளையும் இழக்காமலிருந்தால் ஆட்டம் சமன் ஆகும்.

ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து ஆஸி. 516 ஓட்டங்களை எட்டினால் வெற்றி பெறலாம்.

அறிஞர்
21-10-2008, 01:11 PM
320 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியான விசயம்.

இந்திய அணித்தலைவர் தோனி இரு போட்டியிலும் நன்கு விளையாடினார்.

எல்லாத்துறைகளிலும் இந்தியா ஜொலித்தது...

இன்னும் இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாண்டால் நன்றாக இருக்கும்.

ஓவியன்
21-10-2008, 02:02 PM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்களும்....

தன் கையில் ஞாபகச் சின்னமாக டோனி எடுத்து வந்த ஸ்டம்புகளில் ஒன்றை வெறும் கையுடன் வரும் கங்குலியிடம் கொடுத்தாரென கிரிகின்ஃபோ செய்தி வெளியிட்டிருந்தது....

டோனியின் நல்ல மனதுக்கும் என் வாழ்த்துக்கள்...!! :)

டோனி இந்திய டெஸ்ட் அணியின் தலைவராகும் நாளும் நெருங்குகிறது...

ராஜா
01-11-2008, 06:44 AM
பார்டர் கவாஸ்கர் சுழற்கோப்பை; 3rd டெஸ்ட்..

தற்போதைய நிலவரம்..( டிராவை நோக்கி...)

ஆஸி : 436/6.

இந்திய எண்ணிக்கையைவிட 177 ஓட்டங்கள் குறைவு.

சேவாக் 4/115.

பாண்டிங் 87.

ஹெய்டன் 83.

ராஜா
01-11-2008, 08:12 AM
ஆஸி. அணியினரின் விடாப்பிடித் துடுப்பாட்டம்..

512/6

ராஜா
01-11-2008, 08:33 AM
கேமரான் ஒய்ட் என்பார் 44 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கிறார்..

சேவாக்கின் முதல் "5 டெஸ்ட் விக்கெட் கைப்பற்றும்" சாதனை..!


532/7.

முன்னதாக, 90 களில் துடுப்பெடுத்தாடும் மைக்கேல் கிளார்க் அளித்த எளிய பிடியை லக்ஸ்மண் நழுவவிட்டார்..!

ராஜா
01-11-2008, 08:44 AM
மைக்கேல் கிளார்க் சதம்..!

டெஸ்ட் வாழ்வின் எட்டாவது மற்றும் இந்தியாவுக்கெதிரான மூன்றாவது சதமும் ஆகும்.

539 /7.

உதிரிகள் எண்ணிக்கை ; 51 .. :)

ராஜா
01-11-2008, 10:56 AM
டிராவை நோக்கி 3வது டெஸ்ட்..

இந்திய முதல் இன்னிங்ஸ் எண்ணிக்கையைவிட, 46 ஓட்டங்கள் குறைவாக எடுத்த நிலையில் ஆஸி.யின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கிய இந்தியா 27 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ப்ரெட் லீயின் பந்துக்கு சேவாக் இரையானார்.

29/1.

65 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா உள்ளது. இரவுக் காவலாக இஷாந்த் ஷர்மா வந்துள்ளார்.

இன்று 4 ஓவர்களும், நாளை ஒரு நாள் ஆட்டமும் உள்ள நிலையில் போட்டி டிராவை நோக்கி பயணிக்கிறது.

ராஜா
01-11-2008, 11:19 AM
இரவுக் காவலர் இஷாந்த் அவுட்.

ஒற்றை ஓட்டத்திலேயே திருப்தியுற்ற அவர், ஸ்டூவர்ட் கிளார்க் பந்தில் பிடிகொடுத்து வெளியேறுகிறார்..

34/2.

70 ஓட்டங்கள் முன்னணி. புதிய வருகை... ராகுல் திராவிட்.

ராஜா
06-11-2008, 03:51 AM
ஏர்டெல் பார்டர் கவாஸ்கர் சுழற்கோப்பை.

4வது டெஸ்ட்/முதல்நாள்/முதல் ஆட்டவேளை நிலவரம்.

இந்தியா : முதல் இன்னிங்ஸ். 50/0

விஜய் : 20*

சேவாக் 28*

ராஜா
06-11-2008, 04:03 AM
இந்திய அணியில் புதுமுகம் எம். விஜய்.

ஆஸி. அணியில் புதுமுகம் சுழற்பந்து வீச்சாளர் 'ஜேசன் கிரேசா'..!

ஆஸி.யின் கிரிக்கெட் வர*லாற்றில் 404 வது மற்றும் இத்தொடரின் 3 வது புதுமுகம்..!

ராஜா
06-11-2008, 04:14 AM
சேவாக் அரை சதம்..!

45 பந்துகளில்..

77/0

ராஜா
06-11-2008, 04:20 AM
இந்த போட்டியில்...

ஹர்பஜன் சிங் தன் டெஸ்ட் வாழ்வின் 300 வது விக்கெட்டை ( இந்திய மண்ணில் 200 வதும்கூட..) வீழ்த்த இருக்கிறார்..

இதுவரை 299 விக்கெட்டுகள் அவர் வசம்..!

ராஜா
06-11-2008, 04:30 AM
விஜய் வாட்சன் பந்தில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து (33 ஓட்டங்களுக்கு) ஆட்டமிழக்கிறார்..



98/1

ராஜா
06-11-2008, 04:35 AM
புதுமுகம் ஜேசன் கிரேசாவின் முதல் விக்கெட்..!

ராகுல் திராவிட் முட்டை..!


99-2

ராஜா
06-11-2008, 04:40 AM
இந்தியா நூறு ஓட்டங்களைக் கடக்கிறது..!

சேவாக் 64*

டெண்டுல்கர் 0*

ராஜா
06-11-2008, 04:56 AM
ஜேசன் கிரேசாவின் அடுத்த வேட்டை..

சேவாக்கின் (66) விக்கெட்டைப் பெயர்க்கிறார்..

116/3

ராஜா
06-11-2008, 04:58 AM
புதிய நுழைவாளரான வெங்கிப்பரப்பு வெங்கட சாய் லக்ஸ்மணின் 100 வது டெஸ்ட் இது..!

ராஜா
06-11-2008, 05:08 AM
உணவு இடைவேளை நிலவரம்..

இந்தியா 122*/3.

டெண்டுல்கர் 16*

லக்ஸ்மன் 4*

இந்தியப் புதுமுகம் முரளி விஜய் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸி.புதுமுகம் ஜேசன் கிரேசாவின் முதல் 3 ஓவர்களில் 32 ஓட்டங்கள் எடுக்கப்பட்டாலும், மனம் தளராமல் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வாட்சனின் பொறிபறக்கும் பந்துவீச்சுக்கு ஒரு விக்கெட்.

98 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்த இந்தியா அடுத்து 24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ராஜா
06-11-2008, 06:30 AM
2வது ஆட்ட*வேளை நிலவரம்..

இந்தியா 153/3.

டெண்டுல்கர் 35*

லக்ஸ்மன் 12*

ராஜா
06-11-2008, 06:40 AM
ஆஸி. கிரிக்கெட் வரலாற்றில் இது 700வது டெஸ்ட்..!

முதல் 50வது மற்றும் ஒவ்வொரு 100வது டெஸ்டையும் அவ்வணி வென்றிருக்கிறது..!

ராஜா
06-11-2008, 06:47 AM
சச்சின் (41) மற்றும் லக்ஸ்மணின் (19) அரைசத பங்களிப்பு..!

166/3

அமரன்
06-11-2008, 06:56 AM
அட..
அதிவேகமாக ஆட்டநிலவரத்தையும் தொடர்புபட்ட தகவலையும் தந்து அசத்துறீங்களேண்ணா.

ராஜா
06-11-2008, 06:59 AM
டெண்டுல்கர் அரை சதம்..!

தொடக்கம் முதலே வெகு உற்சாகமாகவும் நேர்மறையாகவும் பந்துகளை எதிர்கொண்ட சச்சின் 65 பந்துகளில் அரை சதமடித்தார்.

இது இவரது 52 வது டெஸ்ட் அரை சதம்..!

181/3

ராஜா
06-11-2008, 07:04 AM
அட..
அதிவேகமாக ஆட்டநிலவரத்தையும் தொடர்புபட்ட தகவலையும் தந்து அசத்துறீங்களேண்ணா.

நன்றி அமர்..!

ராஜா
06-11-2008, 07:09 AM
இப்போட்டியில் இந்தியச் சுவரை (ராகுல் திராவிட் 10363 டெஸ்ட் ஓட்டங்கள்) ஆஸி. தலைவர் ( ரிக்கி பாண்டிங் 10333 ஓட்டங்கள் ) தாண்டுவாரா..?

ராஜா
06-11-2008, 07:36 AM
இந்தியா 200 ஓட்டங்களை எட்டியது..!

சச்சின் : 61*

லக்ஷ்மண் : 33*

ராஜா
06-11-2008, 07:40 AM
மின் தடை..

பின்னர் சந்திக்கிறேன்..!

ராஜா
06-11-2008, 03:26 PM
முதல் நாள் நிலவரம்..

இந்தியா 311/5.

சச்சின் 109.

சேவாக் 66.

லக்ஷ்மண் 64.

விஜய் 33.

கங்கூலி 27*


ஜேசன் கிரேஷா 3/138.

வெங்கட்
07-11-2008, 03:18 PM
2ம் நாள் ஆட்ட நேர முடிவில்

இந்தியா 411/10 (ஜேசன் கிரஜா 8 விக்கெட்டுகள்)
ஆஸ்திரேலியா 189/2

ராஜா
07-11-2008, 03:29 PM
நன்றி வெங்கட்..!

இன்று தன் பரம வைரி ரிக்கி பாண்டிங்கை வீழ்த்தியதன் மூலம், 300 விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஹர்பஜன் சிங் இணைந்தார்..

முன்னதாக ஜேசன் கிரேஷா, 8 விக்கெட் வீழ்த்தி, அறிமுகப் போட்டியிலேயே 8 விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் 4 வது ஆளாக இடம்பிடித்தார்.

வெங்கட்
08-11-2008, 06:56 AM
3ம் நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் நிலவரம் ( எனக்கு இன்று விடுறைங்கோ)
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்ஸில் 265/5 (முன்னதாகஇந்தியா 441/10)
ஹட்டின் 0*
வாட்சன் 1*

இன்று ஆட்டமிழந்தவர்கள்
காடிச் 102 ( ஜா.கான்),
கிளார்க் 8 (இ.சர்மா),
ஹசி 90 ( ரன் அவுட்)

இந்தியா முதல் இன்னிங்ஸ்ஸில் 100 ஓட்டங்கள் முன்னிலை பெற்றால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.

சிவா.ஜி
08-11-2008, 07:15 AM
கிரிக்கெட் நிலவரம் மட்டுமல்லாது, சுவையானத் துணுக்குச் செய்திகளையும் உடன் தரும் ராஜா சாருக்கு மிக்க நன்றி.

வெங்கட் அவர்களுக்கும் நன்றி.

ராஜா
08-11-2008, 07:17 AM
268/6

ராஜா
08-11-2008, 08:16 AM
நத்தையாக நகரும் இறுதி டெஸ்ட்..!

287/6

ராஜா
08-11-2008, 08:32 AM
ஆஸி. 300 ஓட்டங்களை எட்டுகிறது ..!


இந்தியாவைவிட இன்னும் 141 ஓட்டம் பின் தங்கியுள்ளது.

ராஜா
08-11-2008, 08:33 AM
இந்த போட்டி நடக்கும் 'விதர்பா கிரிக்கெட் கழக அரங்கம்' (நாக்பூர்), புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒன்று.

புதிய களங்களில் இந்திய அணிச்சாதனை பெருமைப்படும்படியாக இருந்ததில்லை..

அவ்வாறான 19 நிகழ்வுகளில் 4 முறையே இந்தியா டெஸ்ட் வெற்றியைச் சுவைத்திருக்கிறது..!

ராஜா
08-11-2008, 08:56 AM
மிஸ்ராவுக்கு விக்கெட்..!

ப்ராட் ஹாடீன் 28.

318/7.

ராஜா
08-11-2008, 09:36 AM
இஷாந்த் ஷர்மாவுக்கு விக்கெட்..!

ஜேசன் கிரெய்ஜா 5.

333/8.

ராஜா
08-11-2008, 09:55 AM
ஆஸி. பற்றாக்குறை இப்போது இரட்டை இலக்கங்களில்...

342/8.

ராஜா
08-11-2008, 10:13 AM
ஹர்பஜனுக்கு விக்கெட்..!

கேமரான் ஒய்ட் 46.

352/9

ராஜா
08-11-2008, 10:15 AM
இறுதி மட்டையாளராக களம் வந்திருப்பவர்..

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரெட் லீ..!

ராஜா
08-11-2008, 10:19 AM
ஆஸி அணி 355 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

மிஸ்ராவின் இன்னொரு விக்கெட்டாக மிஷேல் ஜான்சன் (5).

இந்தியா 86 ஓட்டங்கள் முன்னிலை..!

ராஜா
08-11-2008, 10:27 AM
ஆஸி. வீச்சாளர் ஜேசன் கிரெய்ஜா'வைப் போல இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் களத்திலிருந்து அதிக விக்கெட் அறுவடை செய்யாத நிலையில், 86 ஆட்டங்கள் முன்னிலையைக் கொண்டு இந்தியா எவ்வளவு தூரம் சாதகமாக ஆட்டத்தை திசை திருப்பும் என்று சொல்ல இயலாது.

இன்று 6 பந்துகள் மட்டுமே ஆட இந்தியாவுக்கு நேரமிருக்கிறது.

ராஜா
08-11-2008, 10:33 AM
மூன்றாம் நாள் ஆட்ட முடிவு நிலவரம்..

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) 441.

ஆஸ்திரேலியா (முதல் இன்.) 355.

இந்தியா ( 2வது இன்னிங்ஸ்) 0/0.

இந்தியா 86 ஓட்டங்கள் முன்னிலை.

வெங்கட்
08-11-2008, 11:43 AM
இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆஸி. வீரர்கள் உள்ளதால் அவர்கள் மிகவும் போராடுவார்கள். நாளை இந்திய அணி விரைவாக 350 ஓட்டங்களை எடுத்து ஆஸி. க்கு 420 ஓட்டங்கள்(சுமார் 100 ஓவர்களில்) என இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்புள்ளது. அதுவும் பந்து வீச்சாளர்கள் கடைசி நாளில் விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி சாத்தியம் இல்லாவிடில் போட்டி சமனில் முடியும். 400-க்கும் குறைவான ஓட்டங்கள் 100க்கும் அதிகமான ஓவர்கள் என இலக்கு நிர்ணயித்தால் ஆஸி. தொடரை 1-1என சமன் செய்து விட வாய்ப்புக்கள் அதிகம். எனவே நாளை நமது வீரர்கள் எடுக்கும் ஓட்டத்தைப் பொறுத்தே இப்போட்டியின் முடிவு அமையும்.

ராஜா
08-11-2008, 12:18 PM
நாளை ஒரே நாளில் இந்திய வீரர்களால் 350 ஓட்டங்கள் ( சராசரியாக ஓவருக்கு 4 ஓட்டங்கள்) குவிக்க இயலாதென்றே கருதுகிறேன்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

arun
10-11-2008, 02:26 AM
ஆஸி அணிக்கு இலக்காக 382 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

வெற்றி பெற இன்னும் 369 ரன்கள் தேவை

arun
10-11-2008, 02:29 AM
ஆஸி அணியினர் முதலில் தடுப்பு ஆட்டத்தை தான் ஆட விரும்புவார்கள் என்பது எனது கணிப்பு

ராஜா
10-11-2008, 03:58 AM
ஆஸி. அணியினர் அதிரடியாகவே இலக்கு நோக்கிய பயணத்தைத் துவக்கியுள்ளனர்..

தற்போதைய ஓட்ட விகிதம் 5.64.

குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழும்பட்சத்தில் ரன் விகிதம் இடர்படக்கூடும்..!

ராஜா
10-11-2008, 04:09 AM
ஹர்பஜனின் முதல் ஓவரில் ஹெய்டன் கொடுத்த எளிய பிடியை தோனி நழுவ விட்டுவிட்டார்..

69/2.

ஹெய்டன் 30*

ராஜா
10-11-2008, 04:30 AM
இஷாந்த் ஷர்மா வீசிய அற்புதமான பந்தில் மைக்கேல் கிளார்க் 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்..

82/3.

வெற்றிக்கு இன்னும் 300 ஓட்டங்கள் தேவை..!

அன்புரசிகன்
10-11-2008, 04:34 AM
பெங்கோல் புலி இறுதிப்போட்டிக்கு களமிறங்கும் போது.............
http://newsimg.bbc.co.uk/media/images/45190000/jpg/_45190015_ganguly416.jpg

ராஜா
10-11-2008, 04:34 AM
இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர்.. (இதுவரை..)

இஷாந்த் 15.

ஜான்சன் 13.

ஜாகீர், பஜ்ஜி, ஜேசன் தலா 11.

ராஜா
10-11-2008, 04:40 AM
ஹர்பஜனின் பந்தில் ஹஸி கொடுத்த பிடியை ராகுல் திராவிட் நழுவ விட்டார்..!

90 / 3.

ஹஸி 6*

ராஜா
10-11-2008, 04:50 AM
20 ஓவர்களில் ஆஸி 100 ஓட்டங்கள் எடுத்தது..!

ஹெய்டன் : 43*

ஹஸி : 7*

ராஜா
10-11-2008, 06:03 AM
ஹெய்டன் : 72*



148/3

மன்மதன்
10-11-2008, 06:22 AM
வெற்றி இலக்கை நோக்கி இந்தியா..


வெல்லுமா?

ராஜா
10-11-2008, 06:31 AM
ஆஸி. அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

மைக்.ஹஸி மற்றும் ஹெய்டன் ஆட்டமிழந்தனர்..

ராஜா
10-11-2008, 06:32 AM
மேலும் ஒரு விக்கெட்..

161/6

ராஜா
10-11-2008, 06:33 AM
வெற்றிக்குத் தேவை : 221 ஓட்டங்கள்..!

ராஜா
10-11-2008, 06:39 AM
வாட்சன் 5*

ஒய்ட் 4*

167/6

மதி
10-11-2008, 06:43 AM
இன்னும் நான்கே விக்கட்கள்..! :)

மன்மதன்
10-11-2008, 06:57 AM
இன்னும் நான்கே விக்கட்கள்..! :)

மூன்று.. வாட்சன் ..அவுட்சன்..

ஓவியன்
10-11-2008, 07:03 AM
கிட்டத்தட்ட வென்ற மாதிரித்தான்....

வாயால் விளையாடிய அவுஸ்திரேலியர்களுக்கு, மைதானத்தில் விளையாட்டுக் காட்டுகிறது இந்திய அணி...

ராஜா
10-11-2008, 07:09 AM
189/7

ராஜா
10-11-2008, 07:13 AM
மிஸ்ராவின் 3வது விக்கெட்..!

கிரேஜா ஸ்டம்ப்ட் தோனி..

190/8

ராஜா
10-11-2008, 07:21 AM
வெற்றியின் விளிம்பில் நிற்கும் இந்தியா பெருவாய் படைத்த ஆஸி.அணியின் சவப்பெட்டியில் இறுதி ஆணியை அறைகிறது..

பார்டர் கவாஸ்கர் கோப்பை நம் வசமாகிறது..!!

வாழ்த்துக்கள் இந்தியா..!!!

ராஜா
10-11-2008, 07:22 AM
ஹர்பஜனின் ஆல கால சுழற்சிக்கு பிரெட் லீ இரையானார்..

191/9

ராஜா
10-11-2008, 07:24 AM
ஓய்வு பெறும் தாதா, கோப்பையைத் தா..தா.. எனப்பெற்று தன் நிறைவுச்சேவையாக இந்திய ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கும் தருணமிது..!

மன்மதன்
10-11-2008, 07:46 AM
ஹுர்ரே............ வென்றாச்சு..

வாழ்த்துகள்..!!!

ராஜா
10-11-2008, 07:49 AM
ஏர்டெல் பார்டர் கவாஸ்கர் சுழற்கோபை டெஸ்ட் தொடரை இந்தியா 2க்கு 0 என்ற கணக்கில் வென்று சாதனை படைக்கிறது..!

நாக்பூர் டெஸ்டில் 172 ஓட்டங்கள் வேறுபாட்டில் ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பிழந்தது..!

அமரன்
10-11-2008, 07:49 AM
கிரிக்கெட் தாதாவுக்கு நல்ல அடி.
இந்திய அணி பறித்தது வெற்றிக் கனி.
வாழ்த்துகள் இந்திய அணி.
நீ தொடர்ந்து வெற்றி அணி.

aren
10-11-2008, 07:54 AM
வெற்றி பெற்ற இந்தியாவிற்கு என் வாழ்த்துக்கள்.

ராஜா
10-11-2008, 07:56 AM
ஆஸி. ஒரே தொடரில் இரு போட்டிகளை மூன்று வருடங்களுக்கு முன்னர் இழந்திருந்தது..

தொடரை இழப்பதோ 7 ஆண்டுகளுக்குப்பின் இதுவே முதன்முறை..!

சிவா.ஜி
10-11-2008, 07:58 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்களுடன் பூச்செண்டுகள்....!!!:icon_b:

ஆதி
10-11-2008, 08:00 AM
9-ஆம் விக்கட்டின் சரிவுக்கு பிறகு அணித்தலமையை கங்குலிக்கு கொடுத்ததுவும்.. இதே நாளில் எட்டு வருடத்திற்கு முன் கங்குலி முதல்முறையாய் தலைமைப் பொறுப்பை ஏற்றதை நினைவும் கூர்ந்ததுவும் நெகிழ வைத்த நிமிடங்கள்..

வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு.. வளரட்டும் வெற்றியின் எண்ணிக்கைகள்..

மதி
10-11-2008, 08:04 AM
உண்மையில் நெகிழ்ச்சியான தருணங்களாய் இருந்திருக்கும். வெற்றிக்கனியை சுவைக்கும் நேரத்தில் தலைமைப்பதவியை கங்கூலிக்கு தந்து அவரைப் பெருமைப்படுத்தி தானும் உயர்ந்துவிட்டார் தோனி. உண்மையில் இவரைப் பற்றிய தாமரையின் கணிப்பு சரியானதே..

வாழ்த்துகள் இந்திய அணியினருக்கு.

ஓவியன்
10-11-2008, 08:18 AM
என்ன இருந்தாலும் கங்குலி இந்திய கிரிக்கட் வரலாற்றில் ஒரு தசாப்தம்...
அதனை உணர்ந்து, அவரைப் பெருமைப் படுத்தி, தன்னையும் பெருமைப் படுத்தி விட்டார் தோனி..!!

வெற்றித் தருணங்களில் கும்ளேயும் பங்கெடுத்துக் கொண்டார்...

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..!!

மன்மதன்
10-11-2008, 01:28 PM
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இந்தியாவிற்கு பெஸ்ட் தொடராக அமைந்து விட்டது..

அறிஞர்
10-11-2008, 01:32 PM
சூப்பர் வெற்றி...
ஆஸ்திரேலியாவுக்கு நல்ல அடி கொடுத்த
இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
10-11-2008, 01:45 PM
வாழ்த்துக்கள் இந்தியா!

இது போன்ற வெற்றிகள் தொடரவேண்டும்!

aren
11-11-2008, 03:47 AM
ஆஸ்திரேலியா அணிக்கு உதவிட கிரெக் சாப்பலை நியமித்து இருந்தார்கள்.

இந்தியா வெற்றி பெற்றதால் கங்குலி அவருக்கு தன் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று கங்குலியை அழகாக வழி அனுப்பி வைத்தார் தோனி. அவருக்கு என் பாராட்டுக்கள்.

சிறுபிள்ளை
11-11-2008, 04:32 AM
இந்த போட்டியில் வெற்றி பெற்றது தோணியின் கருணை உள்ளமும் அவரின் எளிய அனுகுமுறையும்தான்... கடைசி நேரத்தில் கங்குலிக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து கும்ளேவையும் அழைத்து வெற்றிக்கோப்பையை வாங்கினாரே... இதுவல்லவோ மனிதத்தனமை என்பது.

தோணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பலப்பல கோப்பைகளை வாங்கி குவிப்பார்.