PDA

View Full Version : தமிழகத்து அனைத்து அரசியல் கட்சி தலைமைகளுக்கு நன்றிமறத்தமிழன்
08-10-2008, 04:40 PM
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
08.10.2008

தமிழக உடன்பிறப்புக்களுக்கு.....

ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு குமுறிக்கொண்டிருக்கும் எமது அன்பிற்குரிய தமிழகத்து உடன்பிறப்புக்களே!

உயிர்காவத்துடிக்கும் குண்டுமழைக்கும் போர் வானூர்திகளுக்கும் நடுவே விடுதலைக்காக போராடும் உங்கள் ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்காக குரல் கொடுத்திருப்பது எமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது.

ஈழத்தமிழினம் மீதான சிங்கள அரசின் இன அழிப்புப்போர் என்றும் இல்லாத வகையில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுணர்வுடன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி குரல்கொடுத்து வருவது துன்பப்பட்டு வரும் எமது மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஈழத்தமிழரை பூண்டோடு ஒழித்துக்கட்டி தமிழரின் தாயக நிலத்தை ஒரு மயான பூமியாக்கும் விருப்புடன் சிங்கள அரசு இன அழிப்புப்போரை தொடுத்துள்ளது. இதற்கு சிங்களத்தின் அனைத்துக்கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு கொடுத்துள்ளன. சிங்களப்படைக்கான ஆட்திரட்டலில் அனைத்துச் சிங்களக்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள இனம் ஒன்றுபட்டுத் தமிழரை அழித்தொழிக்க படை நடத்தி வருகின்றது.

இந்தப் போர் நெருப்பில் சிக்குண்டு எமது மக்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குண்டுகள் போட்டு எமது மக்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குடியெழுப்பிக் கலைக்கின்றார்கள். நிலம் விழுங்கி முன்நகரும் சிங்களப்படைகளிடம் இருந்து உயிர்பிழைக்க எமது மக்கள் நாள்தோறும் இடம்பெயர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். மானத்துடனும் மிடுக்குடனும் வாழ்ந்து வந்த தமிழர்களை ஒரு நாடோடிக் கூட்டம் போல் மரநிழல்களுக்குக்குக் கீழும் தெருவோரங்களிலும் வாழ சிங்கள இனவெறியரசு நிர்ப்பந்தித்துள்ளது.

அவலப்படும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ உயிர்கொடுக்கவோ உலகில் எவரும் இல்லையென்ற இறுமாப்புடன் தமிழின அழிப்பை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒன்றுதிரண்டு ஒருமித்த உணர்வுடன் தமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது சிங்கள இனவாத அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழினம் நாதியற்ற இனமல்ல. பூண்டோடு அழிப்பதற்கு விட்டில் பூச்சிகளுமல்ல. பெயரோடும் புகழோடும் இந்தப்பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் ஒரு வீர இனம்.

உலகின் மூத்த குடிகளில் தமிழினமும் ஒன்று. கொடியுடனும் படையுடனும் மாட்சியுடன் வாழ்ந்துவந்த பெருமைக்குரிய தமிழினம் இன்று தனக்கென ஒரு நாடில்லாது தவிப்பது ஒரு வரலாற்றுச்சோகம்.

தமிழர்க்கென்றொரு தனியரசை ஈழ மண்ணில் உருவாக்க உயிர்கொடுத்துப் போராடி வரும் உறவுகளுக்காகக் கடல்தாண்டிக் கரம் நீட்டும் தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வை நாம் நன்றியுடன் பற்றிக்கொள்கின்றோம்.

தமிழ்நாட்டின் உதவி ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் கிடைக்காதென்று சிங்கள அரசு கற்பனையில் மூழ்கியிருந்தவேளையில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் கொதித்தெழுந்து சிங்கள அரசிற்கெதிராகக் கோபத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள்.

சிங்கள அரசு நினைப்பதுபோல தமிழ்நாடு ஒரு சக்தியற்ற மாநிலமல்ல. அது ஆறுகோடி தமிழர்களின் தாய்நிலம். உலகத்தமிழரின் பண்பாட்டு மையம். இந்திய அரசியலில் முக்கிய அரசியல் சக்தியாக திகழும் மாநிலம்.

"தானாடா விட்டாலும் தன் தசையாடும்" என்பதுபோல ஈழத்தமிழர்கள் அல்லற்படும்போதெல்லாம் தமிழ்நாடு தன் உணர்வலைகளை வெளிப்படுத்துவது வழமை. ஈழத்தமிழர்களின் இன்னல்களை போக்க இந்திய மத்திய அரசு உதவவேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

இத்தகைய அரசியல் சூழலில்தான் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தமிழின உணர்வுடன் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவு தெரிவித்து ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன. சிங்கள அரசு நடத்தும் இன அழிப்புப்போருக்கு இந்தியாவின் பகைநாடுகள் ஆயுத உதவிகளை கொடுத்து வருகின்றன. உலகிலுள்ள மேலும் சில நாடுகள் சிங்கள அரசிற்கு பொருளாதார உதவிகள் செய்துவருகின்றன. இவ்விதம் உலக நாடுகளின் ஒத்தாசையுடன் சிங்கள அரசு போரை நடத்துகின்றது.

நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகளினூடாக பலத்தையும் வளத்தையும் ஒன்றுதிரட்டி ஈழத்தமிழ் மக்களின் நியாயபூர்வமான விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க சிங்கள அரசு முனைகின்றது.

ஆனால், ஈழத்தமிழர்களோ தமது உரிமைக்காகக் கடந்த முப்பது ஆண்டு காலமாக அளப்பரிய தியாகங்கள் செய்து அர்ப்பணிப்புணர்வுடன் விடுதலைக்காகப் போராடுகின்றனர். ஈழத்தமிழரின் சுதந்திரப்போராட்டத்திற்கான ஆதரவையும் உதவிகளையும் எமது உடன்பிறப்புக்களான தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம்.

தொப்புள் கொடி உறவுகளுக்காக நீங்கள் வழங்கும் ஆதரவு தமிழீழ மக்கள் என்றென்றும் தலைநிமிர்ந்து வாழ வழிசமைக்கும். கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்நாட்டுத்தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்காக காட்டியுள்ள ஒருமித்த ஆதரவுகண்டு ஈழத்தமிழர்களும் எமது விடுதலை அமைப்பும் மகிழ்ச்சி அடைவதோடு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்நாட்டுத்தலைவர்கள் காட்டிவரும் இந்தத் தார்மீக ஆதரவு செயல்வன்மை மிக்க அரசியல் ஆதரவாக முழுமைபெற வேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் அவாவாகும்.

வாழ்க தமிழ் - மலர்க தமிழர்களின் ஒற்றுமை

நன்றி

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்."

பா.நடேசன்
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.

நன்றி : புதினம்

rajatemp
08-10-2008, 05:01 PM
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி உண்மையாயினும் வாசகம் தவறானது
தமிழரை அழிக்க இந்த போரல்ல விடுதலை புலிகளை அழிக்கத்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்க

விடுதலை புலிகள் இயக்கம் உலகளவில் தடுக்கப்பட்ட இயக்கம் என்பதை நினைவில் கொள்க

அன்புரசிகன்
08-10-2008, 05:10 PM
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி உண்மையாயினும் வாசகம் தவறானது
தமிழரை அழிக்க இந்த போரல்ல விடுதலை புலிகளை அழிக்கத்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்க

விடுதலை புலிகள் இயக்கம் உலகளவில் தடுக்கப்பட்ட இயக்கம் என்பதை நினைவில் கொள்க

இதுவரை எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். எத்தனை விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்???

இலங்கை நிலவரம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் 1% ஆவது தெரியுமா?

rajatemp
08-10-2008, 05:52 PM
அனைத்தும் தெரிந்த அன்பரே
ஒரு பகுதியின்மீது போர் தொடுக்கும் போது அப்பகுதி மக்கள் இறப்பது தவிர்க்க முடியாதது
அது யாராக இருந்தாலும் தமிழர் என்று அல்ல

மறத்தமிழன்
08-10-2008, 05:54 PM
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி உண்மையாயினும் வாசகம் தவறானது
தமிழரை அழிக்க இந்த போரல்ல விடுதலை புலிகளை அழிக்கத்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்க

விடுதலை புலிகள் இயக்கம் உலகளவில் தடுக்கப்பட்ட இயக்கம் என்பதை நினைவில் கொள்க

உலகத்தில் எல்லோருக்கும் புரிந்தது உங்களுக்கு புரியவில்லையே. தவறில்லை. உங்களில் பிழை இல்லை. எங்கே ஐயா இருக்கிறீர்கள்?
முடியல.................................

rajatemp
08-10-2008, 06:18 PM
எது புரியவில்லை அன்பரே

அன்புரசிகன்
08-10-2008, 06:29 PM
அனைத்தும் தெரிந்த அன்பரே
ஒரு பகுதியின்மீது போர் தொடுக்கும் போது அப்பகுதி மக்கள் இறப்பது தவிர்க்க முடியாதது
அது யாராக இருந்தாலும் தமிழர் என்று அல்ல

தத்துவம் 2008:icon_ush:

மறத்தமிழன்
09-10-2008, 05:04 PM
தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டைபிரசண்டன். ம்ம்ம்ம்ம் போர் என்று நீங்கள் கூறிக்கொண்டு ஈராக்,ஆப்கானிஸ்தான்,ஈழம் இங்கெல்லாம் அப்பாவிகளை அல்லவா கொல்கிறீரகள். 6000 ம் தடவைகள் விமானப்படை குண்டு போட்டதாக கோத்தா சொல்லியிருக்கிறாரே, உண்மையில் அதில் விடுதலைப்புலிகள் மீது விழுந்ததை விரல் விட்டு எண்ணலாம். மேலே விமானம் பறந்தால் இயக்கதிண்ட காம்ப்புக்குள் போனால் தப்பாலாம் என்ற மனோபாவம் இன்னமும் மக்களிடம் இருக்கிறது. காரணம் மக்கள் மீது போட்டதே ஏராளம். இதுதான் போர் முறையா? ஐய்யா RAJATEMP பல்குழல்பீரங்கி (Multy Barrel) கேள்விப்பட்டீருக்கிறீர்களா? அடித்தால் அல்லது அடிக்கும் போது எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஐயா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவத்திற்காக நிற்கிறேன். 50மீற்றர் தொலைவில் பல்குழல் அடிக்கிறான் ஆமி. புறப்படும் போது பயங்கரமாக இருக்கும். குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் விழுந்து படுக்கிறார்கள். இவை எல்லாம் எல்லைகளில் பாவிக்க வேண்டியவை. சிறிலங்கா இராணுவமோ மக்கள் மத்தியில் வைத்து அடிக்கிறான். இதுதான் யுத்த நீதியோ? நிறையபேர் தகவல் தெரியாமல் தான் கதைக்கிறார்கள். ஒரு நாள் யுத்தம் நடைபெறும் இடத்தில் நில்லுங்கள் அப்போது புரியும் உங்களுக்கு. பக்கத்தில் படுத்துக்கிடந்தவன் செத்துப்போனான். பார்த்து அழக்கூட முடியாமல் காகத்துக்கு இரையாக உடலத்தை விட்டுப்போன அனுபவம் உண்டா? பால்ய நண்பன் குண்டடிபட்டு இறந்தபின் கல்லறைகளில் மலர்தூவியுள்ளீர்களா? எப்படி உணர்த்துவது. நீங்கள் மற்றோரை விட வலி கண்டவராக இருக்கலாம். உண்மையாக கண்டிருந்தால் நீங்கள் இப்படி கதைக்க மாட்டீர்கள்!

தீபன்
10-10-2008, 05:48 AM
ஆதரவளிக்கும் சொந்தங்களுக்கு தமிழனுக்கேயுரிய நன்றி சொல்லும் பாங்கில் போராடும் தரப்பின் முனைப்பான அமைப்பின் நன்றி அறிக்கை. இதில் உடன்பாடில்லாவிட்டாலும் சொன்ன நன்றியை அவமதிப்பதுபோல் பேசுவது அழகல்ல. அங்கீகரிக்க முடியாதாயின் அமைதியாயிருப்பதே இவ்விடத்தில் மேல்.
ஆரம்பிக்கும் எல்லா திரிகளையும் பூட்டவைக்கும் எண்ணத்தோடு சிலர் புறப்படுகிறார்களோவென எண்ணத்தோன்றுகிறது.
நன்றி சொல்வதும் நன்றியை ஏற்பதும் தமிழனின் பண்பு.
அதை கொச்சப்படுத்துவது நம்மை நாமே அவமதிப்பதுபோல்.
நிர்வாகத்தினரின் ஆலோசனைப்படி நமது வாதங்களை தனி திரியாக்கி தொடரலாம்.

நதி
10-10-2008, 09:35 AM
நாம் தேனீக்களல்ல
கல்லெறிபவரை
விரட்டி விரட்டிக் கொட்ட.

உணர்வுகளை
ஒற்றைப் புள்ளியில் இருத்தி
வீரத் தீ மூட்டி
தியாகத்தினை சொரிந்து
யாகம் நடத்தும்
சுதந்திரப் போராளிகள்.


திரண்டு வரும் வெண்ணைத்தாழியுடைய
காரணம் நாமுமாக வேண்டுமா????
இந்த நேரத்தில் விவாதம் தேவையா???