PDA

View Full Version : இலவச மென்பொருள் - nCleaner

பாரதி
08-10-2008, 07:58 AM
nCleaner

அன்பு நண்பர்களே,

நம்மில் பலரும் cCleaner மென்பொருளை உபயோகித்திருப்போம் என நம்புகிறேன். இப்போது அதனினும் மேம்பட்டதாக உள்ள nCleaner second என்ற மென்பொருளை பற்றி அறிய நேர்ந்தது.

இந்த மென்பொருளும் வர்த்தக நோக்கமில்லா பயன்பாட்டிற்கு இலவசமாகும். இந்தகோப்பின் அளவு 875 கேபி மட்டுமே. விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2003, விஸ்டா ஆகிய இயங்குதளங்களில் இணைந்து பணியாற்றக்கூடியது.

இந்த மென்பொருள் நமது கணினியில் இருக்கும் தேவையற்ற மென்பொருட்கள், ரெஜிஸ்ட்ரி பதிவுகள், குப்பைகள் என பலவற்றையும் கண்டறிந்து நீக்கும் சக்தி வாய்ந்தது.

நண்பர்கள் உபயோகிக்கும் முன்னர் கவனமாக உதவிக்குறிப்புகளை படித்து விட்டு கையாளவும். ஓரளவுக்கு கணினி அறிந்தவர்கள் இதை எளிதாக கையாளலாம்.

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள, பதிவிறக்கி பயன்படுத்த விரும்புவோர் தட்ட வேண்டிய சுட்டி :

http://www.nkprods.com/ncleaner/

மன்மதன்
08-10-2008, 12:09 PM
பகிர்தலுக்கு நன்றி பாரதி.

நான் CCleanerதான் உபயோகிக்கிறேன்..

பாரதி
08-10-2008, 12:14 PM
அன்பு மன்மதன்,

நானும் cCleaner தான் உபயோகித்து வந்தேன். nCleaner பல வகைகளிலும் அதனை விட மிகவும் பலனுள்ளது. சற்று கவனத்துடன் கையாண்டால் மிகுந்த பலன் தரக்கூடியது.

உபயோகித்து விட்டுக் கூறுங்கள். கருத்துக்கு நன்றி.

சூரியன்
08-10-2008, 01:13 PM
இந்த மென்பொருள் எதற்கு பயன்படுகிறது அண்ணா?

பாரதி
08-10-2008, 01:30 PM
அன்பு சூரியன்...

இந்த மென்பொருள் நமது கணினியில் இருக்கும் தேவையற்ற மென்பொருட்கள், ரெஜிஸ்ட்ரி பதிவுகள், குப்பைகள் என பலவற்றையும் கண்டறிந்து நீக்கும் சக்தி வாய்ந்தது.

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள, பதிவிறக்கி பயன்படுத்த விரும்புவோர் தட்ட வேண்டிய சுட்டி :

http://www.nkprods.com/ncleaner/

இந்த மென்பொருள் எதற்கு பயன்படுகிறது அண்ணா?

செல்வா
08-10-2008, 01:30 PM
இந்த மென்பொருள் எதற்கு பயன்படுகிறது அண்ணா?

உங்கள் கேள்வியின் பதில் இதோ இங்கே... அவரது பதிவிலேயே இருக்கிறதே சூரியன்.

இந்த மென்பொருள் நமது கணினியில் இருக்கும் தேவையற்ற மென்பொருட்கள், ரெஜிஸ்ட்ரி பதிவுகள், குப்பைகள் என பலவற்றையும் கண்டறிந்து நீக்கும் சக்தி வாய்ந்தது.

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள, பதிவிறக்கி பயன்படுத்த விரும்புவோர் தட்ட வேண்டிய சுட்டி :

http://www.nkprods.com/ncleaner/

பகிர்தலுக்கு மிக நன்றி அண்ணா...

சூரியன்
08-10-2008, 01:41 PM
அதை சரியாக கவனிக்கவில்லை,
தவறுக்கு மன்னிக்கவும்.

praveen
08-10-2008, 02:58 PM
மிக்க நன்றி, ஆனால் இது விண்டோஸ் 2000ல் இயங்காதாகையால் என்னால் தினப்படி உபயோகிக்க முடியவில்லை. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் அதற்கு பிந்தைய பதிப்புகளில் சிறப்பாக வேலை செய்கிறது.

இது பிரைவசி விரும்புவர் அனைவருக்கும் தேவையான ஒன்று. பிரைவசி மட்டும் இல்லாமல் தேவையில்லாத பைல் மற்றும் ரிஜிஸ்ட்ரி மற்றும் செட்டிங்களை களைவதால் சிஸ்டம் நன்றாக வேலை செய்யும். டெம்ப் போல்டரில் இருந்து இயங்கும் வைரஸ் தொற்று மற்றும் அநேக தினப்படி மென்பொருட்களின் டெம்ப் பைல்கள் தொந்தரவும் நீங்கும்.

பாரதி
08-10-2008, 03:52 PM
கருத்துக்களுக்கு நன்றி செல்வா, சூரியன், பிரவீண்.
உண்மைதான் பிரவீண் - சமீபத்தில் நான் கண்ட மிகச்சிறந்த இலவச மென்பொருட்களில் இதுவும் ஒன்று!

இளந்தமிழ்ச்செல்வன்
09-10-2008, 07:31 PM
வழக்கம்போல் பயனுள்ள தகவல். நன்றி நண்பரே