PDA

View Full Version : போர்க்கரங்கள் வழியே ஒரு காதல் கடிதம்shibly591
08-10-2008, 06:47 AM
ஷெல் சப்தங்களின்
உக்கிரங்களுக்கும்
உஷ்ணங'களுக'கும் நடுவே
எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
உனக்காக ஒரு காதல்கடிதம்...

இம்மடல் உன் கரம்
சேரும் தறுவாயில்
எனது உயிர் எனக்குச்சொந்தமற்றுப்போகலாம்
அல்லது
உனது உயிர் உனக்குச்சொந்தமற்றுப்போகலாம்..

சுவாசிக்கக்கூட சுதந்திரமற்ற
உலகில்
நமக்கான உதய சூரியன் அஸ்தமித்ததே கிழக்கில்தானே...?

இற்றுப்போன கனவுகள் பற்றியோ
துருப்பிடித்த நமது முத்தங்கள் பற்றியோ
பரிமாறிய மௌன வார்த்தைகளின்
ஏகாந்த வலிகள் பற்றியோ
வாழவே நிராதரவற்ற நிர்ப்பந்தத்தில்
எப்படி மனக்கண்ணில் நிறுத்தி வைத்திருப்பேன்..??

உன் எழில் முகம்
கனவில் விரியும்போதெல்லாம்
காது கிழிக்கும் வன்முறைச்சப்தங்கள்
எனது தூக்கத்தையும் துளியூண்டு நிம்மதியையும்
துகள் துகளாய் தூர்த்தெறியும்..

இருள் சூழ்ந்த வாழ்க்கை
பேயறையும் தனிமை
உணர்வு தின்னும் வலி
உருக்குலைந்த நிம்மதி
இன்னும்
இன்னும்
இன்னும்
வேறெதனை மடல் வழியே உனக்குரைப்பேன்...?

படுகொலை செய்யப்பட்ட
இருத்தலின் நீட்சி குறித்து
நீயும்
எதனையும் தர்க்கிக்க வேண்டாம்..

நிர்க்கதியான வினாடிகளின்
கானல் நம்பிக்கையில்
உனக்கான என் காதல் கடிதம் எழுதி முடிக்கப்பட்டாயிற்று

இப்போதுதான் அந்தக்கேள்வி எனக்குள் எழுகிறது..
இதை
எந்த முகவரிக்கு அஞ்சலிடுவது?
இப்போது நீ எங்கிருக்கிறாய்..?
ஏலவே எழுதப்பட்ட காதல் மடல்களின்
குப்பைக்கூடையில் இதுவும் சேரப்போகிறதோ...??
உன் கரம் கிட்டாமலே........

இளசு
18-10-2008, 10:00 AM
புயலின் மையக்கருவில் ரோஜா..
பார்க்கும் மனம் பதைக்கிறது..

பதற வைத்த கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி!

சாம்பவி
18-10-2008, 11:30 AM
சுவாசிக்கக்கூட சுதந்திரமற்ற
உலகில்
நமக்கான உதய சூரியன் அஸ்தமித்ததே கிழக்கில்தானே...?

அப்போ மேற்கில் அஸ்த்தமித்திருந்தால் சம்மதமோ.... ????
சொற்பிழை பொறுக்கத்தக்கது.......
பொருளில் பிழையிருப்பின்...
கவிதை பிழைப்பதில்லை... !!!

நெருடுகிறது ஷிப்லி.... !!!

"ஓடும் நிமிடம்... உறையும் வருடம்.." இதுப் போனற*...
ஹை*ஃபை தத்துவங்கள்.... திரைப்பட பாடலாசிரியர்களோடு போகட்டும்.....
நமக்கு வேண்டாமே...
வாழ வைக்க வேண்டாம்...
அவளை..
வதைக்காதிருப்போமே.... !!!!!

அமரன்
18-10-2008, 05:06 PM
ஷிப்லி ஈழத்தின் கிழக்குப் பிரதேசத்தை சேர்ந்தவர். இந்தக்கோணத்தில் பார்த்தால் பிழை இருப்பதாய் தெரியலையே.

சாம்பவி
18-10-2008, 07:04 PM
சுவாசிக்கக்கூட சுதந்திரமற்ற
உலகில்
நமக்கான உதய சூரியன் அஸ்தமித்ததே கிழக்கில்தானே...?
ஷிப்லி ஈழத்தின் கிழக்குப் பிரதேசத்தை சேர்ந்தவர். இந்தக்கோணத்தில் பார்த்தால் பிழை இருப்பதாய் தெரியலையே.

அலசுவோம் வாங்கோ...

காதலர்கள் இவர்களின் வாழ்வில் இருட்டு...
ஏன்... ???
அஸ்தமனம்...

எப்படி இந்த அஸ்தமனம் நிகழ்ந்தது... ??

உதிக்க வேண்டிய உதய சூரியன் அஸ்தமித்திருக்கிறான்
காலத்தின் காட்சிப்பிழை... !!
ஆக தப்பு அஸ்தமனத்தில்... !

இவர்களின் தேவை தான் என்ன..
கிழக்கா.. ??
அஸ்தமனமா... ?
இரண்டுமே இல்லை.....
உதயம்...
சூரிய உதயம்...

இப்போ ஷிப்லியின் வரிகளை வாசிக்கலாம்.. வாங்கோ...
உதய சூரியன் அஸ்தமித்ததே கிழக்கில் தானே....

அஸ்தமித்ததே கிழக்கு தானே அப்படின்னா...
அவன் அஸ்தமித்ததில் தப்பில்லை......
ஆனால்...
கிழக்கில் அஸ்தமித்ததில் தான் தவறு...
அப்படின்னு அர்த்தம் வருது......
அதாகப்பட்டது...
இவர்களின் தேவை.. அஸ்தமனம்.. ?????
கவிதை வரிப்படி........
அது கிழக்காகிப் போனதனால் மட்டுமே குளறுபடி...... !!!

வரிகள் சொல்லும் வாக்கு
அது சரியோ... ???

கொஞ்சம் பழுதும் பார்ப்போமே......

தவறு... எங்கே... ??
வார்த்தைகளிலா... ??
இல்லை... !!

அப்போ எங்கே தான் தவறு.. ??
வார்த்தையின் வரிசையில்... !!!!

சொற்கள் இடம் மாற..
பொருளும் தடம் மாறும்... !!!!
அனைத்து மொழிகளுக்கும்
இது பொருந்தும்... !!
கமா கில்ட் அ மேன்.....
தெரிந்தது தானே...

வார்த்தையை மாற்றிப் போடுங்கோ ஆசானே... !!!!

தீபா
18-10-2008, 07:29 PM
அடடே !! நல்ல அலசல்...

அசத்திட்டீர்கள் சாம்பவி அவர்களே.

நல்லதொரு கவிதை ஷிப்லி..

shibly591
19-10-2008, 04:38 AM
புயலின் மையக்கருவில் ரோஜா..
பார்க்கும் மனம் பதைக்கிறது..

பதற வைத்த கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி!

நன்றிகள் அண்ணா

shibly591
19-10-2008, 04:40 AM
ஷிப்லி ஈழத்தின் கிழக்குப் பிரதேசத்தை சேர்ந்தவர். இந்தக்கோணத்தில் பார்த்தால் பிழை இருப்பதாய் தெரியலையே.

அதைத்தான் நானும் கவிதையில் சொன்னேன் நணபர்களே..

கிழக்கு ஒரு குறியீடாகவே இக்கவிதையில் பொருள்படும் திசையை அல்ல..

புரிதலுக்கு நன்றிகள்

shibly591
19-10-2008, 04:42 AM
அடடே !! நல்ல அலசல்...

அசத்திட்டீர்கள் சாம்பவி அவர்களே.

நல்லதொரு கவிதை ஷிப்லி..

நன்றி தென்றல்..

(இது காதல் கவிதை அல்ல போர்க்கவிதைதான்)

shibly591
19-10-2008, 04:44 AM
நண்பரே...(சாம்பவி)

புரிகிறது நீங்கள் சொல்ல வருவது..

இங்கே பிரச்சினை காதலர்களோ அஸடதமனமோ அல்ல..

யுத்தம் கொடூர யுத்தம்..அதுதான் பிரச்சினை...

உங்கள் அலசலுக்கு நன்றிகள்..ஆனாலும் அது கவிதையின் கருவை பாதிக்கவில்லைதானே...???

தீபா
19-10-2008, 04:50 AM
நன்றி தென்றல்..

(இது காதல் கவிதை அல்ல போர்க்கவிதைதான்)

என்ன சார், எழுதிய நீங்களே இப்படி சொல்லலாமா?

இது காதல் கவிதை இல்லை என்பதைவிட,

போர்க்காதல் கவிதை என்று சொல்லியிருக்கலாமே!

shibly591
19-10-2008, 04:54 AM
என்ன சார், எழுதிய நீங்களே இப்படி சொல்லலாமா?

இது காதல் கவிதை இல்லை என்பதைவிட,

போர்க்காதல் கவிதை என்று சொல்லியிருக்கலாமே!

அது சரி...

சும்மா சொன்னேன் நண்பரே..

நன்றிகள்

சாம்பவி
19-10-2008, 05:22 AM
நண்பரே...(சாம்பவி)

புரிகிறது நீங்கள் சொல்ல வருவது..

இங்கே பிரச்சினை காதலர்களோ அஸடதமனமோ அல்ல..

யுத்தம் கொடூர யுத்தம்..அதுதான் பிரச்சினை...

உங்கள் அலசலுக்கு நன்றிகள்..ஆனாலும் அது கவிதையின் கருவை பாதிக்கவில்லைதானே...???

யுத்தத்தினால்...
நித்தம் நித்தம்
ரத்தம் சிந்தி.,
இரவே விடியாது.,
உதயம் பொய்த்ததனால்
வந்த அஸ்தமனம் என்றே
பொருள் கொள்கிறேன் ஷிப்லி.,

உதயமே பொய்த்ததே
விடிவே இல்லையா....
என்று ஆதங்கப்பட்டால்
அது
உலக சமாதான விரும்பல்... !!!

உதயம் ...
"கிழக்கில்" பொய்த்ததே...
என்று உங்கள் கவிதை நாயகன்
ஆதங்கப்படுவானேயானால்..
மேற்கில் ..
யுத்தத்தின் சத்தத்தைப் பற்றி...
அவனுக்கு கவலையில்லை என்று பொருள்
அது...
சுய நலத்தின் உச்சக் கட்ட வெம்பல்... !!!

இதில் யார் உங்களின் கவிதை நாயகன்... ???

poornima
19-10-2008, 06:55 AM
கடித வரிகள் மனதை கனக்க வைக்கிறது..

//படுகொலை செய்யப்பட்ட
இருத்தலின் நீட்சி குறித்து
நீயும்
எதனையும் தர்க்கிக்க வேண்டாம்..
//

போர்க்கள வாழ்க்கையில் இருத்தலை பற்றி தர்க்கிக
இனியும் என்ன இருக்கிறது?

//இப்போதுதான் அந்தக்கேள்வி எனக்குள் எழுகிறது..
இதை
எந்த முகவரிக்கு அஞ்சலிடுவது?
//

நெஞ்சில் அறையும் கேள்விகளுடனே
முடிகிறது இதுபோல் எல்லாவிதமான
முடிவுறாத கடிதங்களும்..

விடியல் கிடைக்க பிரார்த்தனைகள் ஷீப்லி

ஓவியன்
19-10-2008, 08:09 AM
எப்போதும், எங்கும் போர்க்களத்திலுள்ள போராளிகளின் கடிதங்களில் அது காதல் கடிதமாக இருந்தால் கூட ஒரு தெளிவு, ஒரு முடிவு இருக்கும் ஷிப்லி..!!

ஆனால் உங்கள் கவிதையில் அது விடுபட்டுப் போய், நான் ஏன் போராடுகிறேன் என்ற தெளிவு கூட குறைந்து போன ஒருவனின் கடிதமாகப் படுகிறதெனக்கு ஷிப்லி..!!

பல பிரசித்தமான போராளிகளின் கடிதங்கள், பலருக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளன, அந்த வகையில் உங்கள் கவிதைக் கடிதம் ஏன் அமைந்திருக்கக் கூடாதென்ற ஏக்கமெனக்கு........!!??

இளசு
19-10-2008, 09:10 AM
உளிகளைத் தாங்கும் நற்சிலையாக ஷிப்லியைக் காண்கிறேன்..

இன்னும் பொலிவீர்கள் ஷிப்லி..

உங்கள் ஏற்புரைகளே கட்டியம்..

ஷீ-நிசி
19-10-2008, 11:07 AM
துருப்பிடித்த முத்தம்....

மிக வளமான சொல்லாடல்...

வாழ்த்துக்கள்!

அமரன்
19-10-2008, 06:45 PM
உள்ளூர்வாசிகளுக்கான கடிதமிது.:)

இலங்கையின் சமாதானகாலம். கிழக்கில் வெளுப்புக் கோலம்.
பறவைகள் இறண்டு காதல் வானில் சிறகடிக்கின்றன..

கிழக்கின் முகம் வெளுக்க கோலம் கலைகிறது.
"கிழக்கின் உதயம்" என்ற பெயருடன் போர்க்கரங்கள் வளைக்கின்றன. அடக்குமுறை ஆள்கிறது.
காதல் பறவைகள் திசைக்கொன்றாய் பறக்கின்றன.

கிழக்கிலேயே தங்கிவிட்ட பறவை தொங்கிவிட்ட காதலுடன்
போர்க்கரங்களில் வழியே ஜோடிப்பறவைக்கு கடிதம் எழுதுகிறது.
அதன் வழியே உலகுக்கு எதையோ உணர்த்த முயல்கிறது.... ....

shibly591
20-10-2008, 08:26 AM
யுத்தத்தினால்...
நித்தம் நித்தம்
ரத்தம் சிந்தி.,
இரவே விடியாது.,
உதயம் பொய்த்ததனால்
வந்த அஸ்தமனம் என்றே
பொருள் கொள்கிறேன் ஷிப்லி.,

உதயமே பொய்த்ததே
விடிவே இல்லையா....
என்று ஆதங்கப்பட்டால்
அது
உலக சமாதான விரும்பல்... !!!

உதயம் ...
"கிழக்கில்" பொய்த்ததே...
என்று உங்கள் கவிதை நாயகன்
ஆதங்கப்படுவானேயானால்..
மேற்கில் ..
யுத்தத்தின் சத்தத்தைப் பற்றி...
அவனுக்கு கவலையில்லை என்று பொருள்
அது...
சுய நலத்தின் உச்சக் கட்ட வெம்பல்... !!!

இதில் யார் உங்களின் கவிதை நாயகன்... ???

எனது கவிதை நாயகன் புலருமா புலராதா என ஏங்க வைக்கும் யுத்த நிறுத்தமும் சமாதானமுமே..

shibly591
20-10-2008, 08:27 AM
எப்போதும், எங்கும் போர்க்களத்திலுள்ள போராளிகளின் கடிதங்களில் அது காதல் கடிதமாக இருந்தால் கூட ஒரு தெளிவு, ஒரு முடிவு இருக்கும் ஷிப்லி..!!

ஆனால் உங்கள் கவிதையில் அது விடுபட்டுப் போய், நான் ஏன் போராடுகிறேன் என்ற தெளிவு கூட குறைந்து போன ஒருவனின் கடிதமாகப் படுகிறதெனக்கு ஷிப்லி..!!

பல பிரசித்தமான போராளிகளின் கடிதங்கள், பலருக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளன, அந்த வகையில் உங்கள் கவிதைக் கடிதம் ஏன் அமைந்திருக்கக் கூடாதென்ற ஏக்கமெனக்கு........!!??

நன்றிகள் நண்பரே..

அடுத்தடுத்த படைப்புக்களில் இதுபோன்ற குறைகளை சரிசெய்ய முயல்கிறேன்..

shibly591
20-10-2008, 08:27 AM
துருப்பிடித்த முத்தம்....

மிக வளமான சொல்லாடல்...

வாழ்த்துக்கள்!

நன்றி நண்பரே

shibly591
20-10-2008, 08:28 AM
உளிகளைத் தாங்கும் நற்சிலையாக ஷிப்லியைக் காண்கிறேன்..

இன்னும் பொலிவீர்கள் ஷிப்லி..

உங்கள் ஏற்புரைகளே கட்டியம்..

நன்றிகள் அண்ணா..

shibly591
20-10-2008, 08:29 AM
கடித வரிகள் மனதை கனக்க வைக்கிறது..

//படுகொலை செய்யப்பட்ட
இருத்தலின் நீட்சி குறித்து
நீயும்
எதனையும் தர்க்கிக்க வேண்டாம்..
//

போர்க்கள வாழ்க்கையில் இருத்தலை பற்றி தர்க்கிக
இனியும் என்ன இருக்கிறது?

//இப்போதுதான் அந்தக்கேள்வி எனக்குள் எழுகிறது..
இதை
எந்த முகவரிக்கு அஞ்சலிடுவது?
//

நெஞ்சில் அறையும் கேள்விகளுடனே
முடிகிறது இதுபோல் எல்லாவிதமான
முடிவுறாத கடிதங்களும்..

விடியல் கிடைக்க பிரார்த்தனைகள் ஷீப்லி

அருமையான அலசல்..

நன்றிகள் பூர்ணிமா

shibly591
20-10-2008, 08:30 AM
உள்ளூர்வாசிகளுக்கான கடிதமிது.:)

இலங்கையின் சமாதானகாலம். கிழக்கில் வெளுப்புக் கோலம்.
பறவைகள் இறண்டு காதல் வானில் சிறகடிக்கின்றன..

கிழக்கின் முகம் வெளுக்க கோலம் கலைகிறது.
"கிழக்கின் உதயம்" என்ற பெயருடன் போர்க்கரங்கள் வளைக்கின்றன. அடக்குமுறை ஆள்கிறது.
காதல் பறவைகள் திசைக்கொன்றாய் பறக்கின்றன.

கிழக்கிலேயே தங்கிவிட்ட பறவை தொங்கிவிட்ட காதலுடன்
போர்க்கரங்களில் வழியே ஜோடிப்பறவைக்கு கடிதம் எழுதுகிறது.
அதன் வழியே உலகுக்கு எதையோ உணர்த்த முயல்கிறது.... ....

உலகுக்கு "எதையோ" உணர்த்த முயல்கிறது..

உணர்த்த முயலும் "அது" வலி நிறைந்ததால் வார்த்தைகளற்ற "எதுவோ" ஒன்றே "அது"

நன்றிகள் அண்ணா

சுட்டிபையன்
22-01-2009, 09:20 AM
கண்ணீர் சிந்த வைக்கும் நம்மவர்களின் காதல் கடிதம், இப்படி எத்தனையோ காதலர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறாகள், உண்மையன காதலை வாழ வைக்க