PDA

View Full Version : நீண்ட ஒரு நாவலும் நீளும் ரணங்களும்



shibly591
08-10-2008, 06:46 AM
அது ஒரு நீண்ட நாவல்

இரண்டு தசாப்தங்கள் தாண்டியும்
இன்னும் முடிவதாயில்லை

பாதியில்தான் நான் படிக்கத்துவங்கினேன்
முழுக்கதையும் தொடர்ந்து படிப்பவர்கட்கே
சரி வர புரிவதாயில்லை

நாவலின் ஒவ்வொரு வலியிலும்
உயிர் துளைக்கும் உண்மை வலிகளின்
தத்ருபம் நிரம்பி வழிகிறது...

துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய
தம்மாத்துண்டு கதை அது...

ஒரு சிறுவனை ஒரு பெரியவன்
அடக்கத்துவங்கும்போது நேரும்
படிமுறைச்சிக்கல்கள் ஒவ்வொரு பக்கத்திலும்
பயங்கர விஞ்ஞாபனமாய் விரிந்து செல்கிறது..

இடையில் இன்னொரு சிறுவன்
வேண்டுமென்றே சீண்டப்படுகிறான்..

சிறுவன் சிறுவர்களாக
பெரியவன் பெரியவர்களாக
உரிமைக்கான போராட்டமொன்று பீறிடத்தொடங்குகிறது

இடையில்
பேச்சுவார்த்தை
வன்முறை நிறுத்தம்
உடன்படிக்கை என்று
நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை..

சீணடப்பட்ட மற்றைய சிறுவர் கூட்டம்
காரணிமின்றி
கொல்லப்படுகிறது
கொளுத்தப்படுகிறது
அடக்கப்படுகிறது
முடக்கப்படுகிறது

இந்த நாவலை சிலர்
அவ்வப்போது படிக்கிறார்கள்
சிலர் படிப்பதேயில்லை

வாசகர் வட்டம் பற்றிய எந்தக்கரிசனையுமின்றி
தொடர்ந்துகொண்டேயிருக்கிறது நாவல்

ஆயுதங்களே பிரதான பாத்திரங்கள்
எல்லாப்பக்கத்திலும் கொலைச்செய்தியும்
இரத்த வாடையும் விரவிக்கொண்டேயிரக்கின்றன..

மர்ம நாவல் என்று சிலர் சொல்வதை
ஏற்க முடியவில்லை

முதலில் சிறுகதையாகத்தான் துவங்கியிருக்கும்
வலுக்கட்டாயமாக நாவலானதா
என்பது பற்றி எனக்கொன்றும் தெரியாது..

உடன்பாடுகளின்றி முரண்பாடுகளில்
வளர்ந்து செல்லும் அந்நாவலை
ஒற்றுமையாக்கி யாராவது சுபம் போடுங்களேன்..

இன்னும் இதன் பயணம் நீண்டால்
நாவலை படிக்கக்கூட யாருமிலர்

இவ்வளவு சொல்லிவிட்டேன்
நாவலின் பெயரைச்சொல்லவும் வேண்டுமா...???

இளசு
17-10-2008, 08:22 PM
சோகமும் ரணமும் விரவிக்கிடக்கும்
இக்கோர நாவல் முடியத்தான் வேண்டும் -
விரைவில்!

வலிக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி!

poornima
18-10-2008, 07:17 AM
அந்த நாவல் வேண்டவே வேண்டாம்..
கற்றுக் கொள்ள ஏதுமில்லை - சில நாவல்கள்
கற்றுக் கொள்ளத் தேவையே இல்லை - சில நாவல்கள்..

நெஞ்சை அழுத்தும் ரணங்களை தருவது நல்ல நாவலாய் இருக்க முடியாது

shibly591
20-10-2008, 09:36 AM
சோகமும் ரணமும் விரவிக்கிடக்கும்
இக்கோர நாவல் முடியத்தான் வேண்டும் -
விரைவில்!

வலிக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி!

நன்றிகள் அண்ணா..

shibly591
20-10-2008, 09:37 AM
அந்த நாவல் வேண்டவே வேண்டாம்..
கற்றுக் கொள்ள ஏதுமில்லை - சில நாவல்கள்
கற்றுக் கொள்ளத் தேவையே இல்லை - சில நாவல்கள்..

நெஞ்சை அழுத்தும் ரணங்களை தருவது நல்ல நாவலாய் இருக்க முடியாது

நன்றி பூர்ணிமா...

நாவல் வேண்டவே வேண்டாம் என்று எங்கள் துயரங்களில் பங்கு கொள்ளும் உங்கள் மனதிற்கு என்றும் நன்றியுடையவன் நான்..

சுகந்தப்ரீதன்
20-10-2008, 10:09 AM
முதலில் சிறுகதையாகத்தான் துவங்கியிருக்கும்
வலுக்கட்டாயமாக நாவலானதா
என்பது பற்றி எனக்கொன்றும் தெரியாது..
துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய
தம்மாத்துண்டு கதை அது...
என்று - நீங்களே கூறிவிட்டீர்களே..!! இதிலிருந்தே தெளிவாக தெரிகிறதே வாசிப்பவரை திருப்திப்படுத்தத்தான் வலுக்கட்டாயமாய் நாவலாக்கப்பட்டிருக்கிறதென்று..!! வாசிப்பவன் எழுதுபவனின் வலியை உண்ர்ந்திருந்தால் என்றோ முடிந்திருக்கும் இச்சிறுகதையும் ஒருக்குறுங்கதையாய்..!!

இரண்டு தசாப்தங்களை தாங்கள் காட்சிபடுத்திய விதம் வியப்பை தருகிறது.. பாராட்டுக்கள் நண்பரே..!!

shibly591
20-10-2008, 10:11 AM
துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய
தம்மாத்துண்டு கதை அது...
என்று - நீங்களே கூறிவிட்டீர்களே..!! இதிலிருந்தே தெளிவாக தெரிகிறதே வாசிப்பவரை திருப்திப்படுத்தத்தான் வலுக்கட்டாயமாய் நாவலாக்கப்பட்டிருக்கிறதென்று..!! வாசிப்பவனுக்கு எழுதுபவனின் வலி புரிந்திருந்தால் என்றோ முடிந்திருக்கும் இச்சிறுகதையும் ஒருக்குறுங்கதையாய்..!!

இரண்டு தசாப்தங்களை தாங்கள் காட்சிபடுத்திய விதம் வியப்பை தருகிறது.. பாராட்டுக்கள் நண்பரே..!!

புரிதலுக்கு நன்றிகள் நண்பரே..

இப்போது அந்த நாவலில் வக்கிரமங்கள் உக்கிரமடைந்து கொண்டிருக்கின்றன..

உங்கள் பதிலில் சிறு திருத்தம்..."இரண்டு தசாப்தம் இல்லை"..."மூன்றாகப்போகிறது..."

நன்றிகள் நண்பரே...

சுகந்தப்ரீதன்
20-10-2008, 10:20 AM
உங்கள் பதிலில் சிறு திருத்தம்..."இரண்டு தசாப்தம் இல்லை"..."மூன்றாகப்போகிறது..."...தங்கள் வயதை கருத்தில்கொண்டு பதிவிட்டேன் நண்பரே.. பரவாயில்லை.. மூன்றாவதற்க்குள்ளாவது முற்றும்போடப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் ஆகும்..!!

shibly591
20-10-2008, 10:24 AM
தங்கள் வயதை கருத்தில்கொண்டு பதிவிட்டேன் நண்பரே.. பரவாயில்லை.. மூன்றாவதற்க்குள்ளாவது முற்றும்போடப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் ஆகும்..!!

அதே வேண்டுதலே என் போன்ற இளைய தலைமுறையினரின் பிரார்த்தனை...

பிரார்த்திப்போம்

அமரன்
20-10-2008, 11:34 AM
உங்களைப் போல் எனக்கும்
நாவலின் கடைப்பக்கத்தை பார்க்கும்
ஆவல் மிகுகிறது.

நாவல் விளம்பரத்தில் சில தவறுகள்.

நாவல் தொடங்கப்பட்டு
அரைசகாப்தம் ஆகிறது.
ஆயுதங்களால்
நாவல் எழுதப்படுகிறது.
அடக்குமுறைகளால்
பக்கங்கள் வடிவமைக்க படுகின்றன.

பாத்திரங்கள் மூன்று.
சிறுவர்கள் ஒன்று சேரவில்லை
அதைவைத்துக் கூட
அத்தியாயங்கள் எழுதப்படுகின்றன.

பாராட்டுகள் ஷிப்லி.

அமரன்
20-10-2008, 11:41 AM
துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய
தம்மாத்துண்டு கதை அது...
என்று - நீங்களே கூறிவிட்டீர்களே..!! இதிலிருந்தே தெளிவாக தெரிகிறதே வாசிப்பவரை திருப்திப்படுத்தத்தான் வலுக்கட்டாயமாய் நாவலாக்கப்பட்டிருக்கிறதென்று..!! வாசிப்பவனுக்கு எழுதுபவனின் வலி புரிந்திருந்தால் என்றோ முடிந்திருக்கும் இச்சிறுகதையும் ஒருக்குறுங்கதையாய்..!!

புரியும்படி இன்னும்
வலிமையாக எழுதவேண்டுமோ:eek:


பொழுது போகாதவர்கள்
பார்த்துப் பெருக்கும் நெடுந்தொடராக
நீட்டப்படுகிறது துயர்.

விருப்பு மிகுந்து
பார்ப்பதற்கென்று நேரமொதுக்கும்
இன்னும் சிலர்.

முடியட்டும் தொடர் விரைவினில்.
"முடி"யட்டும் கூந்தலை யாவரும்.

சுகந்தப்ரீதன்
20-10-2008, 12:04 PM
புரியும்படி இன்னும்
வலிமையாக எழுதவேண்டுமோ:eek:.பொருள் மாறிப்போனதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன் அண்ணா.. "வாசிப்பவன் எழுதுபவனின் வலியை உணர்ந்திருந்தால்.." என்று வந்திருக்க வேண்டுமென்பதை உணர்கிறேன்..!!

shibly591
28-10-2008, 10:16 AM
பொருள் மாறிப்போனதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன் அண்ணா.. "வாசிப்பவன் எழுதுபவனின் வலியை உணர்ந்திருந்தால்.." என்று வந்திருக்க வேண்டுமென்பதை உணர்கிறேன்..!!

நன்றி நண்பரே...

அதைப்படிக்கும்போது கொஞ்சம் குழப்பம் இருந்தது..தெளிவாக்கியமைக்கு நன்றிகள்

ஆதி
06-11-2008, 08:02 AM
விகார ஜுவாலையின் உக்கிரத்தை மன வக்கிரங்களால் ஊதாமல்.. அரசியல் குளிர் காயாமல்.. நேர்மையாக அனுகி நியாயமான முடிவுகள் எழுத வேண்டும் இந்த நாவலுக்கு..

shibly591
06-11-2008, 08:05 AM
விகார ஜுவாலையின் உக்கிரத்தை மன வக்கிரங்களால் ஊதாமல்.. அரசியல் குளிர் காயாமல்.. நேர்மையாக அனுகி நியாயமான முடிவுகள் எழுத வேண்டும் இந்த நாவலுக்கு..

நன்றி ஆதி...

உங்கள் பிரார்த்தனைதான் எனக்கும்