PDA

View Full Version : தீர்வின் அவசரம் சொல்லும் கரையொதுங்கிய சடலம்

shibly591
08-10-2008, 06:45 AM
கரையோரக்காற்றின்
குளுமைகளைத்தாண்டி
அலையென மிதந்து வந்த
அந்தச்சடலம் பற்றி
ஏதோவொரு கவிதை
எழுதுவேனென்ற எந்தச்சலனமும்
நேற்றுவரை எனக்குள் இருககவில்லை

மீன் புசித்த விழிகள்
கடலரித்த தேகம்
சுளிக்க வைக்கும் வாடை
நிறைய இரத்தக்காயங்கள்
இவைகளை வைத்து
யாரென அடையாளம் காண்பது?

தற்கொலைக்கான
எந்தத்தடயமும்
அவன் சரீரத்தில் இல்லவே இல்லை

வேடிக்கை பார்க்கவென
குழுமிய கூட்டத்தில்
எனது கண்களும் இறுமாந்து போனது..

எப்படிச்செத்திருப்பான்
என்பதை ஊகிக்க முடிந்த
என்போல பலரும்
ஊமையாய் நிற்கிறார்கள்

சூழவும் பேசப்பட்ட
ஆயிரம் வதந்திகளில்
ஏதோவொன்றை
எப்படியோ நம்பிக்கொண்டு
பரிதாப வார்த்தைகளை மிதக்கவிட்டு
வீடு சேர்கிறார்கள்..

வாய்திறந்த நிலையில்
உயிர் பிரிந்தபோது
யார் பெயரை உச்சரித்திருப்பான்?
என்னதான் நிகைத்திருப்பான்?

கூப்பியபடி வளைந்து கிடைக்கும்
அவன் கரங்கள்
அவனது கடைசிக்கணப்போராட்டங்களை
ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது

இப்படித்தான்
கரையொதுங்கும் சடலங்களில்
சில அடையாளங்காணப்படும்
சில அடையாளமிழந்து போகும்
சில எரிக்கப்படும்
சில புதைக்கப்படும்

நாளை இன்னொரு உடலும்
இதே கடல் வழியே மிதந்து வரக்கூடும்

நேர்ந்தது எங்கனம்
என்னும் ஆராயச்சிகளை
கிழித்தெறிந்து விட்டு
இனி நேராதிருக்க என்ன வழி
என்பதே இனி நமது வேள்வி..
அது தொடங்கும்வரை இதுபோல்
சடலங்கள் மாரி மழையாய்
எல்லாத்திசைகளிலும் சிதறிக்கொண்டேயிருக்கும்

இளசு
18-10-2008, 10:04 AM
நிறுத்தியே ஆகவேண்டிய தீக்கொடுமை..

தீர்வு தேவை - அவசரமாய்!

எடுத்தியம்பும் அவசியக் கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி..

சாம்பவி
18-10-2008, 01:43 PM
வேடிக்கை பார்க்கவென
குழுமிய கூட்டத்தில்
எனது கண்களும் இறுமாந்து போனது..

இறுமாந்து ...???? :O

இறந்தவனுக்காய்
இரங்காது...
இறுமாந்தீரோ.... ???

ஏன்... ??
எதற்கு... ????
எப்படி ... இப்படி... ??

என்ன கொடுமை ஷிப்லி இது... :(

ராஜா
18-10-2008, 04:14 PM
அப்பாவிகளின் உயிர் செல்லாக்காசாகும் அவலம் என்றுதான் தீருமோ..?

கூப்பிய கரங்கள் இறுதியாக எதை யாசித்திருக்குமோ என்ற நினைவு மனதை அலைக்கழிக்கிறது.

தீபா
18-10-2008, 08:07 PM
போர்க்கரங்கள் வழியே ஒரு காதல் கடிதம்
தீர்வின் அவசரம் சொல்லும் கரையொதுங்கிய சடலம்
எனது கிராமம் அன்றும் இன்றும்
கொடுங்கோல் உலகில் எனக்கானதொரு இருப்பிடம்
முகாரி ராகம் வழியே நீளும் போர்ப்பாடல்
அவன் சொல்லாமலே எனக்குத்தெரியும்....!

என சமீபத்திய உங்கள் கவிதைகள் எதிலும் ஈழம், வலி, ஷெல், இரத்தம் என்று ஒரே அலை திரும்பத்திரும்ப அடிக்கிறது.. வேறு வேறு ரூபத்தில்..

ஷிப்லி சார், நீங்கள் இன்னும் உங்கள் நாட்டிலேயே இருப்பதாகப் படுகிறது...

கவிஞர்களுக்கு நாடல்ல உலகம்.

எல்லாவற்றுக்கும் சமான நிலை அளிப்பதன் மூலம் தராசுத்தட்டை சமப்படுத்தலாம்... நீதி. கவிஞனுக்கும் அப்படி இருக்கவேண்டும். கவிஞனிடம் எல்லா ரசங்களும் வழிய வேண்டும். ஒத்த ரசத்தை ருசிக்க யாருக்கும் பிடிக்காதல்லவா.

உங்களது போட்டிக்கவிதை விமர்சனத்தின்போதும் இதைச் சொல்லியிருந்தேன். ஆனால் காதல் கவிதைகளும் தானெழுதியிருப்பதாக மறுதலித்தீர்கள். அவை மட்டுமா கவிதைகள் சொல்வது?

வலி என்பது யாவருக்கும் உண்டு. ஈழமக்களின் வலியை எல்லாமக்களாலும் உணர்ந்திட முடியாது. கவிதைகள் உணர்த்திடச் சொல்லுமே தவிர உணர்வூட்டாது. உங்கள் நூலிற்க்காக நீங்கள் வலி நிறைந்த கவிதைகள் எழுதலாம். ஆனால் சற்று திரும்பிப் பார்த்தால்,

வாழ்வில் மட்டுமல்ல, கவிதையிலும் வலிகளை அப்புகிறோமோ என்ற சந்தேகம் இருக்கும்..

ஏதோ என் கருத்துக்குச் சொன்னேன். அதை + அல்லது - ஆக எடுத்துக் கொள்வது உங்களது விருப்பம்.

அன்புடன்
தென்றல்.

shibly591
19-10-2008, 04:19 AM
நிறுத்தியே ஆகவேண்டிய தீக்கொடுமை..

தீர்வு தேவை - அவசரமாய்!

எடுத்தியம்பும் அவசியக் கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி..

நன்றி அண்ணா..

shibly591
19-10-2008, 04:21 AM
இறுமாந்து ...???? :O

இறந்தவனுக்காய்
இரங்காது...
இறுமாந்தீரோ.... ???

ஏன்... ??
எதற்கு... ????
எப்படி ... இப்படி... ??

என்ன கொடுமை ஷிப்லி இது... :(

மன்னிக்கணும் நண்பரே...

இறுமாந்து என்பதற்கு அதிர்ச்சியில் உறைந்துபோன கண்கள் என்றும் பொருள் சொல்ல முடியும் என்பதாலே அந்த வார்த்தைப்பிரயோகம்..

நன்றி நண்பரே

shibly591
19-10-2008, 04:21 AM
அப்பாவிகளின் உயிர் செல்லாக்காசாகும் அவலம் என்றுதான் தீருமோ..?

கூப்பிய கரங்கள் இறுதியாக எதை யாசித்திருக்குமோ என்ற நினைவு மனதை அலைக்கழிக்கிறது.

நன்றிகள் ராஜா அண்ணா..

shibly591
19-10-2008, 04:31 AM
போர்க்கரங்கள் வழியே ஒரு காதல் கடிதம்
தீர்வின் அவசரம் சொல்லும் கரையொதுங்கிய சடலம்
எனது கிராமம் அன்றும் இன்றும்
கொடுங்கோல் உலகில் எனக்கானதொரு இருப்பிடம்
முகாரி ராகம் வழியே நீளும் போர்ப்பாடல்
அவன் சொல்லாமலே எனக்குத்தெரியும்....!

என சமீபத்திய உங்கள் கவிதைகள் எதிலும் ஈழம், வலி, ஷெல், இரத்தம் என்று ஒரே அலை திரும்பத்திரும்ப அடிக்கிறது.. வேறு வேறு ரூபத்தில்..

ஷிப்லி சார், நீங்கள் இன்னும் உங்கள் நாட்டிலேயே இருப்பதாகப் படுகிறது...

கவிஞர்களுக்கு நாடல்ல உலகம்.

எல்லாவற்றுக்கும் சமான நிலை அளிப்பதன் மூலம் தராசுத்தட்டை சமப்படுத்தலாம்... நீதி. கவிஞனுக்கும் அப்படி இருக்கவேண்டும். கவிஞனிடம் எல்லா ரசங்களும் வழிய வேண்டும். ஒத்த ரசத்தை ருசிக்க யாருக்கும் பிடிக்காதல்லவா.

உங்களது போட்டிக்கவிதை விமர்சனத்தின்போதும் இதைச் சொல்லியிருந்தேன். ஆனால் காதல் கவிதைகளும் தானெழுதியிருப்பதாக மறுதலித்தீர்கள். அவை மட்டுமா கவிதைகள் சொல்வது?

வலி என்பது யாவருக்கும் உண்டு. ஈழமக்களின் வலியை எல்லாமக்களாலும் உணர்ந்திட முடியாது. கவிதைகள் உணர்த்திடச் சொல்லுமே தவிர உணர்வூட்டாது. உங்கள் நூலிற்க்காக நீங்கள் வலி நிறைந்த கவிதைகள் எழுதலாம். ஆனால் சற்று திரும்பிப் பார்த்தால்,

வாழ்வில் மட்டுமல்ல, கவிதையிலும் வலிகளை அப்புகிறோமோ என்ற சந்தேகம் இருக்கும்..

ஏதோ என் கருத்துக்குச் சொன்னேன். அதை + அல்லது - ஆக எடுத்துக் கொள்வது உங்களது விருப்பம்.

அன்புடன்
தென்றல்.

உண்மைதான் நண்பரே....

கவிதை என்பது காலத்தின் கண்ணாடி..இன்றைய திகதிகளில் அடியேன் எழுதும் கவிதைகளில் தெரிவது யுத்தத்தின் விம்பம்..

தற்போது தீவிரமடைந்துவரும் இலங்கை யுத்தம் பற்றி எந்த ஊடகங்களிலும் உண்மையான தகவல்களை உங்களால் பெற முடியாத அளவு கொடுமையான யுத்தம் பல வழிகளில் இலங்கையில் நிகழ்ந்து வருகிறது..

எனது கண்களுக்கு முன்னால் கற்பழிப்பு ஒன்று நிகழும்போது என்னால் "நாக்க முக்கா நாக்க முக்கா என்று பாட முடியுமா..???

கவிதையில் உயிர்ப்பு இருக்கவேண்டும் என்பதால் எனக்குத்அதரியாத விடயப்பரப்புகளில் நான் கால் ஊன்றி கவிதையின் உள்ளார்ந்தங்களை சிதைக்க விருப்பமில்லை..

புதிய தளங்கள் புதிய பார்வை புதிய கோணங்களிலான கவிதை முயற்சிகளில் ஈடுபட்டு இலக்கியம் என்ற பெயரில் அதை கொச்சைப்படுத்த அஞ்சுகிறேன்..

எங்கள் வலிகளை நீங்களும் அறிய வேண்டும் என்பதே அத்தகு கவிதைகளின் நோக்கம்..

மற்றபடி ஒரு எழுத்தாளனாக நான் மிளிரவேண்டுமாயின் நீங்கள் சொல்லும் மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்தேயாகவேண்டும் என்பது கண்கூடு..

முயற்சிக்கிறேன்..மன்றமும் உங்களைப்போன்ற ஊக்கம் தரும் நண்பர்களும் இருக்கும் வரை அடியேன் எப்படியும் ஒரு எழுத்தாளன் ஆகிவிடுவேன் என்பது இமாலய நம்பிக்கை..

தட்டிக்கொடுக்கும் உங்கக்கு நன்றிகள் கோடி கோடி

தீபா
19-10-2008, 04:45 AM

நன்றி...

என் கருத்தை பணிவுடன் எடுத்துக் கொண்டமைக்கு.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். என்றாலும்,

புதிய கோணங்கள் என்ற பெயரில் எவ்விதம் இலக்கிய சிதைவு நிகழும்? புதுமையை என்றுமே இலக்கியம் ஏற்றுக் கொள்ளும் இல்லையா...

ஒரு நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர்தான் கவிதைகள் எளிமையாக வடிக்கப்பட்டன. அதன் மதில் சுவர் உடைத்தெறியப்பட்டு புதுமைச் சுவர் கட்டப்பட்டது...

இன்று அதே சுவரின் மீது இசப் பூச்சுக்கள் பூசி மேலும் புதுமையாக்கப்படவில்லையா? இவைய்ல்லாம் இலக்கியச் சிதைவுகள் ஆகா.

நீங்கள் ஒரு அற்புதமான எழுத்தாளர் என்பது சில கவிதைகளிலேயே கண்டிருக்கிறேன். ஆதலின் அச் சந்தேகம் வேண்டா. ஆயின் எழுத்தாளன் அற்புதமாக இருப்பதைக் காட்டிலும் எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப் போல எவ்வடிவத்திலும் புகும் எழுத்தாளனாக இருக்கவேண்டும்.

தொடருங்கள்...

சாம்பவி
19-10-2008, 04:46 AM
மன்னிக்கணும் நண்பரே...

இறுமாந்து என்பதற்கு அதிர்ச்சியில் உறைந்துபோன கண்கள் என்றும் பொருள் சொல்ல முடியும் என்பதாலே அந்த வார்த்தைப்பிரயோகம்..

நன்றி நண்பரே

எந்த ஊரில்... ???
இப்போ உங்கள் பதில் பார்த்து தான்
அதிர்ச்சியில் உறைந்தன என் கண்கள்.... ! :(

இறுமாந்து....... கர்வப்பட்டு.... கர்வம் தலைக்கேறி......
கர்வம் தலைக்கேறி அசட்டையாக இருத்தலே... இறுமாந்திருத்தல்....!!

அன்று.,
ஆமையாவது என்னை விட வேகமாக ஓடுவதாவது...
என்று முயல் நினைத்தது பாருங்கோ...
அதற்கு பெயர் தான் இறுமாந்து இருத்தல்......
அகராதியை மறுபடியும் புரட்டுங்கள் ... !!!!!

shibly591
19-10-2008, 04:48 AM
எந்த ஊரில்... ???

இறுமாந்து....... கர்வப்பட்டு.... கர்வம் தலைக்கேறி...... !!
அகராதியை மறுபடியும் புரட்டுங்கள் ... !!!!!

அது இறுமாப்பு கர்வம் என்ற பதம்

இறுமாந்து போதல் என்பதற்கு அகராதியில் என்னவென்று இருக்கிறது..??

கவிதையில் திருத்தம் செய்ய அது உதவும்..

நன்றி நண்பரே.

shibly591
19-10-2008, 04:51 AM
நன்றி...

என் கருத்தை பணிவுடன் எடுத்துக் கொண்டமைக்கு.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். என்றாலும்,

புதிய கோணங்கள் என்ற பெயரில் எவ்விதம் இலக்கிய சிதைவு நிகழும்? புதுமையை என்றுமே இலக்கியம் ஏற்றுக் கொள்ளும் இல்லையா...

ஒரு நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர்தான் கவிதைகள் எளிமையாக வடிக்கப்பட்டன. அதன் மதில் சுவர் உடைத்தெறியப்பட்டு புதுமைச் சுவர் கட்டப்பட்டது...

இன்று அதே சுவரின் மீது இசப் பூச்சுக்கள் பூசி மேலும் புதுமையாக்கப்படவில்லையா? இவைய்ல்லாம் இலக்கியச் சிதைவுகள் ஆகா.

நீங்கள் ஒரு அற்புதமான எழுத்தாளர் என்பது சில கவிதைகளிலேயே கண்டிருக்கிறேன். ஆதலின் அச் சந்தேகம் வேண்டா. ஆயின் எழுத்தாளன் அற்புதமாக இருப்பதைக் காட்டிலும் எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப் போல எவ்வடிவத்திலும் புகும் எழுத்தாளனாக இருக்கவேண்டும்.

தொடருங்கள்...

நன்றிகள் நண்பரே..

தெரியாத கோணங்களில் இலக்கிய முயற்சிகள் செய்வது இலக்கியத்தை சிதைத்துத்தானே விடும்..

தீராத வாசிப்பும்..அதீத இலக்கியப்பற்றையும் இன்னும் அதிகரிக்கவேண்டிய தேவையை நானே எனக்குள் உணர்கிறேன்...

நல்ல எழுத்தாளராக இன்னும் அதிகம் உழைக்கவேண்டியுள்ளது..

முடியுமானவரை முயற்சிக்கிறேன்..

நன்றிகள் நண்பரே

தீபா
19-10-2008, 04:54 AM
அது இறுமாப்பு கர்வம் என்ற பதம்

இறுமாந்து போதல் என்பதற்கு அகராதியில் என்னவென்று இருக்கிறது..??

கவிதையில் திருத்தம் செய்ய அது உதவும்..

நன்றி நண்பரே.

எனக்கு சரியாகப் புரியவில்லை.

இறுமாப்பு என்பதை அகந்தை என்று கூட சொல்லலாம். என்னால் விவரிக்க இயலாமல் இச்சொல் இருக்கிறது.. இறுமாப்போடு :D

இறுமாந்து, இறுமாந்தல், இறுமாத்தல், ஆகிய எதுவும் அதிர்ச்சி என்ற அர்த்தம் தராது என்பது மட்டும் உறுதி..

சரியான பதம் வழங்குங்களேன் சாம்பவி அவர்கலே!

shibly591
19-10-2008, 04:56 AM
சரியான பதம் வழங்குங்களேன் சாம்பவி அவர்கலே!

அதே அதே

சுகந்தப்ரீதன்
19-10-2008, 05:14 AM
வாழ்த்துக்கள் ஷிப்லி...
கடைசி பத்தியில் பலவிடயங்களை சிந்திக்க வைத்தமைக்கு..!!

அன்புள்ள தென்றல் அவர்களுக்கு,

கவிதை என்பதே உளவியல் மற்றும் உயிரியல் மாற்றங்களால் உருவாவது என்று நினைப்பவன் நான்.. அந்த கோணத்தில் நோக்குகையில் ஷிப்லியின் கவிதைகள் தற்போதைக்கு போர்சூழலை சார்ந்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை...!! அவருக்கான எதிர்காலம் நீண்டுகிடக்கிறது.. அவரது தளமும் பார்வையும் பரந்துவிரிய வாய்ப்புகளும் இருக்கிறது.. அப்போது அவர் அதை செய்வார் என்ற நம்பிக்கையும் அவரது எழுத்தின்மூலம் உணரமுடிகிறது..!! ஆனால் தற்கால நிகழ்வுகளை இப்போது பதிவு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் அவற்றின் தடங்களும் தாக்கங்களும் மறைந்தோ குறைந்தோ போக வாய்ப்புண்டல்லவா..?! ஆகையால் எனக்கென்னவோ அவரது இன்றைய எழுத்துக்கள் சரியென்றேபடுகிறது..!!

சாம்பவி
19-10-2008, 05:29 AM
இறந்தவனுக்காய்
இரங்காது...
இறுமாந்தீரோ.... ???

:(

சரியான பதம் வழங்குங்களேன் சாம்பவி அவர்கலே!

அதே அதே

தேவுடா..... :(

இளசு
19-10-2008, 11:04 AM
அன்புள்ள கிஷோர்

நீங்கள் வருத்தப்படும் அளவுக்கு இங்கு ஏதும் நடக்கவில்லை..

பொதுவில் இட்ட படைப்புகளுக்கு பல வகை விமர்சனம் வரும்.

அதை ஏற்பதும், விளக்குவதும் படைப்பாளியின் விருப்பம்.
அதை ஷிப்லி செவ்வனே செய்கிறார். அந்த நிகழ்வுகள் இங்குள்ள திரிகளில் வெளிச்சம்.

இறுமாந்து அல்ல இரங்குவது சரியாய் இருக்கும் எனச் சுட்டுவது அலட்டலாகாது.
மன்ற உறுப்பினர் படைப்புகளில் காட்டிய அக்கறை எனதான் எடுத்துக்கொள்ள வேண்டும்..

வாராமலே, வந்தும் பாராமாலே, பார்த்தும் ஏதும் கூறாமலே கிடக்கும்
படைப்புகள் படைத்தவர்களுக்குத்தான் தெரியும் -
''அலட்டல்'' வகை கருத்துகளாவது அங்கீகாரம் அளிக்கிறதே என்ற உணர்வை..

புரிந்துணர்வுடன் பழகுகிறவர்களாகவே நான் பார்க்கிறேன் இங்கே..

உங்கள் சஞ்சலம் நீக்குங்கள்.. நன்றி..

அமரன்
19-10-2008, 08:17 PM
Originally Posted by சாம்பவி http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=386794#post386794)

இறந்தவனுக்காய்
இரங்காது...
இறுமாந்தீரோ.... ???

:(

Originally Posted by தென்றல் http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=386857#post386857)

சரியான பதம் வழங்குங்களேன் சாம்பவி அவர்கலே!

Originally Posted by shibly591 http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=386860#post386860)
அதே அதே

தேவுடா..... :(

இரங்குதல்
வாசகர் மனதில் இறக்காதென நினைத்தால்
இறுகிய கண்களை காட்டுங்கள்
ஆழமாய் இறங்கி விடும்.

தீபா
20-10-2008, 04:45 AM
தேவுடா..... :(

இதுக்குத்தான் அந்தப்பதிவிலேயே மாற்றம் செய்யக்கூடாதென்பது....

shibly591
20-10-2008, 08:21 AM
வாழ்த்துக்கள் ஷிப்லி...
கடைசி பத்தியில் பலவிடயங்களை சிந்திக்க வைத்தமைக்கு..!!

அன்புள்ள தென்றல் அவர்களுக்கு,

கவிதை என்பதே உளவியல் மற்றும் உயிரியல் மாற்றங்களால் உருவாவது என்று நினைப்பவன் நான்.. அந்த கோணத்தில் நோக்குகையில் ஷிப்லியின் கவிதைகள் தற்போதைக்கு போர்சூழலை சார்ந்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை...!! அவருக்கான எதிர்காலம் நீண்டுகிடக்கிறது.. அவரது தளமும் பார்வையும் பரந்துவிரிய வாய்ப்புகளும் இருக்கிறது.. அப்போது அவர் அதை செய்வார் என்ற நம்பிக்கையும் அவரது எழுத்தின்மூலம் உணரமுடிகிறது..!! ஆனால் தற்கால நிகழ்வுகளை இப்போது பதிவு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் அவற்றின் தடங்களும் தாக்கங்களும் மறைந்தோ குறைந்தோ போக வாய்ப்புண்டல்லவா..?! ஆகையால் எனக்கென்னவோ அவரது இன்றைய எழுத்துக்கள் சரியென்றேபடுகிறது..!!

நன்றி நண்பரே...

தெளிவான உங்கள் பதிலில் எனக்கான வாதமும் அடங்கியிருப்பதால் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்..

இளசு
20-10-2008, 04:19 PM
அன்புள்ள கிஷோர்

நமக்குள் மன்னிப்பெல்லாம் எதற்கு?

உங்கள் மனவுணர்வைப் பகிர்ந்தவுடன், நான் என் பார்வையைப் பகிர்ந்தேன்..
புரிந்துணர்வு போதும் நமக்குள்.. சரிதானே!

------

சுகந்தனின் பதிவை நானும் சிலாகித்தேன். பாராட்டுகள்..