PDA

View Full Version : எனது கிராமம் அன்றும் இன்றும்



shibly591
08-10-2008, 06:45 AM
1)
தேவதைகள் நடைபயின்ற
இந்த வீதிகளில்
பிசாசுகளின் பிறாண்டல்களை இப்போது நீங்கள்
காணலாம்...

2)
அதோ
தென்னை மரம்
வயல் வெளிகள்
கட்டிடங்கள்
எல்லாமும் இருக்கின்றன
வேரறு விழுந்தபடியும்
கீறலாய் சிதைந்தபடியும்

3)
நேற்று
திருவிழா கலகலப்பு
இன்று
மயான அமைதி
நாளை
யாருக்குத்தெரியும்..?

4)
இளவேனில் காலம்
உதிர்ந்து போனது
இலையுதிர்காலம்
துளிர்த்துக்கொண்டேயிருக்கிறது

5)
ஊர் ஒதுக்குப்புறத்தில்
கல்லறை ஒன்று இருந்தது..
கல்லறைகளின் ஒதுக்குப்புறத்தில் ஊர் இருக்கிறது

6)
இலைகளில் தேன்துளிகள்
சருகுகளில் கண்ணீர்த்துளிகள்

7)
வரவேற்று விருந்தளித்தோம்
எச்சரித்து துரத்தப்பட்டோம்

8)
மாறாப்புன்னகை
மனசிலும் முகத்திலும்
ஆறாக்காயம்
உடலிலும் உணர்விலும்..

இளசு
18-10-2008, 09:46 AM
வாழ்ந்து சிதிலமடைந்த பிம்பங்கள்..
என்றும் நசிந்தவையைக் காண்பதைவிடக்
கூடுதல் சோகம் வரவைக்கும்..

ஒப்பிட்டு தேம்பும் மனதைத் தேற்றுவது அரிதே!

வரியோவியக் கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி!

shibly591
19-10-2008, 04:44 AM
வாழ்ந்து சிதிலமடைந்த பிம்பங்கள்..
என்றும் நசிந்தவையைக் காண்பதைவிடக்
கூடுதல் சோகம் வரவைக்கும்..

ஒப்பிட்டு தேம்பும் மனதைத் தேற்றுவது அரிதே!

வரியோவியக் கவிதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி!

நன்றிகள் அண்ணா