PDA

View Full Version : கோப்புகளை மறைப்பது எப்படி?

பாரதி
08-10-2008, 06:32 AM
எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை நோட்பேட்(Notepad)-ஐத் திறந்து அதில் சேமிக்கவும். அந்த வாக்கியங்களில் இருக்கும் "type your password here" என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு உங்களுக்குத் தேவையான கடவுச்சொல்லை தாருங்கள் (மேற்கோள்கள் இன்றி தரவும்). இதை எந்தக்காரணம் கொண்டும் மறக்க வேண்டாம். அந்த கோப்பை ஏதாவது ஒரு பெயர் கொடுத்து *.bat கோப்பாக சேமிக்கவும். உதாரணமாக hide.bat என கோப்பின் பெயரைக்கொடுத்து சேமிக்கவும்.

----------------------------------------------------------
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%=="type your password here" goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
-------------------------------------------------------------

நீங்கள் சேமித்த hide.bat கோப்பை இரண்டு முறை சொடுக்கினால் Locker என்ற ஃபோல்டர் உங்கள் கண்களுக்குத் தென்படும். நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்குள் சேமியுங்கள்.

இப்போது மீண்டும் hide.bat கோப்பினை இரண்டு முறை சொடுக்குங்கள். 'கோப்பினைப் பூட்டிவிடவா' என செய்தி வரும் MSDOS செய்திப்பெட்டியில் y என தட்டச்சினால் Locker மறைந்து விடும்.

மறைந்த Locker-ஐ காண விரும்பினால் மீண்டும் hide.bat-கோப்பை இரண்டு முறை சொடுக்குங்கள். கடவுச்சொல்லைத் தரும்படி கேட்கும் செய்திப்பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை தாருங்கள். Locker உங்கள் கண்முன்பு வரும்.

குறிப்பு:
கூடுதல் பாதுகாப்பு தேவை என கருதினால் hide.bat கோப்பினை வேறொரு இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லது வேறொரு வட்டில் சேமித்துக்கொண்டு, இந்தக்கோப்பை நீக்கி விடுங்கள்.

நண்பர்கள் யாருக்கேனும் இந்தத்தகவல் பயன்பட்டால் மகிழ்வேன்.

தகவலை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.

praveen
08-10-2008, 06:51 AM
நல்ல தகவல் இதோ அந்த தகவலுக்கான வீடியோ

http://www.metacafe.com/watch/765129/lock_folder_without_any_software_password_systeam/

பாரதி
08-10-2008, 07:28 AM
எளிதாக காண்பதற்கு வழி காட்டிய பிரவீணுக்கு நன்றி.

ஷீ-நிசி
08-10-2008, 07:31 AM
நல்ல தகவல்....

எந்த பிரச்சனையுமில்லை... நன்றி பாரதி அவர்களே!

அன்புரசிகன்
08-10-2008, 08:05 AM
இது எனக்கு புதிது... நன்றி அண்ணா...

=============

எனக்கு தெரிந்த ஒரு வழி...
---

இன்னொரு எனக்கு தெரிந்த வழி இது...

command prompt ஐ திறந்து எந்த கோப்பை மறைக்கவிருக்கிறீர்களோ அது உள்ள drive or folder ற்கு செல்லுங்கள் ஏதுவாக்குங்கள். சாதாரணமாக C:\Documents and Settings\Administrator> இவ்வாறு இருக்கும். உதாரணமாக நீங்கள் D Drive > barathi என்ற folder ற்கு செல்லவேண்டும் எனின்

cd\ என அழுத்தினால் அது C:\> என வரும். இல்லாவிட்டால் d: enter தட்டினால் d:\> என வந்திடும். பின்னர் cd barathi என தட்டினால் C:\barathi> இவ்வாறு வந்திடும்...

பின்னர் D:/barathi>attrib +h +s என தட்டிவிடுங்கள். barathi என்ன folder ற்குள் உள்ள அனைத்து கோப்புக்களும் மறைந்திடும். பின்னர் தெரியவைக்க D:/barathi>attrib -h -s என தட்டினால் வந்திடும்.

நீங்கள் கடவுச்சொல்லாக நினைக்கும் சொல்லை கோப்பாக போட்டுவிட்டு மறைக்கலாம். இல்லாவிட்டால் இந்த வழிமுறை தெரிந்தவர்கள் நீக்கிவிடுவார்கள்...

இவ்வாறு மறைக்கும் கோப்புக்களை வேறு எந்த வகையிலும் கண்டுபிடிக்க இயலாது. (show hidden files or Advance search)

முயன்று பாருங்கள்... ஏற்கனவே தெரிந்தால் மன்னிக்க...

பாரதி
08-10-2008, 08:51 AM
.............................

பின்னர் D:/barathi>attrib +h +s என தட்டிவிடுங்கள். barathi என்ன folder ற்குள் உள்ள அனைத்து கோப்புக்களும் மறைந்திடும். பின்னர் தெரியவைக்க D:/barathi>attrib -h -s என தட்டினால் வந்திடும்.

நீங்கள் கடவுச்சொல்லாக நினைக்கும் சொல்லை கோப்பாக போட்டுவிட்டு மறைக்கலாம். இல்லாவிட்டால் இந்த வழிமுறை தெரிந்தவர்கள் நீக்கிவிடுவார்கள்...

இவ்வாறு மறைக்கும் கோப்புக்களை வேறு எந்த வகையிலும் கண்டுபிடிக்க இயலாது. (show hidden files or Advance search)

முயன்று பாருங்கள்...

அன்பு,

இதை விண்டோஸ் எக்ஸ்புளோரர் - டூல்ஸ் - ஃபோல்டர் ஆப்ஷன்ஸ் - வியூ - ஹிடன் ஃபைல்ஸ் அண்ட் ஃபோல்டர்ஸ் - ஷோ ஹிடன் ஃபைல்ஸ் அண்ட் ஃபோல்டர்ஸ் (Windows explorer - Tools - Folder options - View - Hidden files and folders - Show hidden files and folders ) என்பதை தேர்வு செய்வதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் அல்லவா?

அன்புரசிகன்
08-10-2008, 09:06 AM

முடியாது அண்ணா....

செய்து பாருங்களேன்...

பாரதி
08-10-2008, 09:22 AM
அன்பு, நீங்கள் கூறிய வழிமுறையில் ஒரு ஃபோல்டரை உருவாக்கி, ஒரு கோப்பை அதனுள் வைத்தேன். MSDOS முறையில் மட்டும்தான் அந்த கோப்பு மறைக்கப்படுகிறது. நான் முன்பு கூறிய முறையில் அந்த கோப்பு தெரிகிறதே..!

அன்புரசிகன்
08-10-2008, 09:50 AM
நீங்கள் சொன்ன முறையில் நான் இன்னமும் செய்துபார்க்கவில்லை. நீங்கள் சொல்லும் முறையில் நாம் command prompt ல் செய்வதை அந்த கட்டளையை bat கோப்பாக்கி செய்கிறோம். நான் விபரித்த முறையில் செய்தால் command prompt மூலம் மட்டுமே செய்யமுடியும். வேறு வகையில் மீள கண்டுபிடிக்க இயலாது என எண்ணுகிறேன். நீங்கள் சொன்ன முறையில் செய்து பின்னர் show hidden files கொடுத்ததும் தெரிந்தால் பலனில்லை. காரணம் தற்போதய இயங்கு தளங்களி்ல் status bar லேயே எத்தனை கோப்புக்கள் மறைக்கப்பட்டுள்ளன என்ற விபரங்கள் தெரிகிறது.

சிவா.ஜி
08-10-2008, 09:57 AM
ரொம்ப நன்றி பாரதி. மிகவும் உபயோகமாக உள்ளது.

பாபு
08-10-2008, 10:25 AM
நன்றி பாரதி.

பாரதி
08-10-2008, 12:04 PM
அன்பு,

எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க ...................................
...................................

நீங்கள் சேமித்த hide.bat கோப்பை இரண்டு முறை சொடுக்கினால் Locker என்ற ஃபோல்டர் உங்கள் கண்களுக்குத் தென்படும். நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்குள் சேமியுங்கள்.

இப்போது மீண்டும் hide.bat கோப்பினை இரண்டு முறை சொடுக்குங்கள். 'கோப்பினைப் பூட்டிவிடவா' என செய்தி வரும் MSDOS செய்திப்பெட்டியில் y என தட்டச்சினால் Locker மறைந்து விடும்.

மறைந்த Locker-ஐ காண விரும்பினால் மீண்டும் hide.bat-கோப்பை இரண்டு முறை சொடுக்குங்கள். கடவுச்சொல்லைத் தரும்படி கேட்கும் செய்திப்பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை தாருங்கள். Locker உங்கள் கண்முன்பு வரும்.

இந்த முறையில் செய்தால், locker-ஐ மூடிய பின்னர், அதனுள் வைக்கப்பட்டிருக்கும் எந்த கோப்பையும், ஏன் locker-யும் கூட காண முடிவதில்லை. விண்டோஸில் இருக்கும் search-ல் மறைக்கப்பட்ட கோப்பின் சரியான பெயரைக்கொடுத்து தேடினாலும் அது காணக்கிடைக்காது.

குறிப்பிட்ட *.bat கோப்பின் மூலம் சரியான கடவுச்சொல்லை தந்தால் மட்டுமே locker கோப்பகம் கண்ணுக்கு தென்படுகிறது.

இம்முறையில் மறைக்கப்பட்ட கோப்பை வேறு யாராலும் கண்டுபிடிக்க முடிகிறதா என கூறுங்கள் நண்பர்களே.

command prompt ஐ திறந்து ...................................................

பின்னர் D:/barathi>attrib +h +s என தட்டிவிடுங்கள். barathi என்ன folder ற்குள் உள்ள அனைத்து கோப்புக்களும் மறைந்திடும். பின்னர் தெரியவைக்க D:/barathi>attrib -h -s என தட்டினால் வந்திடும்.

நீங்கள் கடவுச்சொல்லாக நினைக்கும் சொல்லை கோப்பாக போட்டுவிட்டு மறைக்கலாம்.

இவ்வாறு மறைக்கும் கோப்புக்களை வேறு எந்த வகையிலும் கண்டுபிடிக்க இயலாது. (show hidden files or Advance search)

அன்பு கூறிய இந்த முறையில் செய்து மறைத்த கோப்புகளை

1. MSDOS முறையில் காண இயலாது.
2. விண்டோஸின் search முறையில் தேடினாலும் காண இயலாது.

ஆனால் கீழ்க்கண்ட முறையில் தேடினால் காணக்கிடைக்கும்.

இதை விண்டோஸ் எக்ஸ்புளோரர் - டூல்ஸ் - ஃபோல்டர் ஆப்ஷன்ஸ் - வியூ - ஹிடன் ஃபைல்ஸ் அண்ட் ஃபோல்டர்ஸ் - ஷோ ஹிடன் ஃபைல்ஸ் அண்ட் ஃபோல்டர்ஸ் (Windows explorer - Tools - Folder options - View - Hidden files and folders - Show hidden files and folders ) என்பதை தேர்வு செய்வதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்

பாரதி
08-10-2008, 12:09 PM
ரொம்ப நன்றி பாரதி. மிகவும் உபயோகமாக உள்ளது.

நன்றி பாரதி.

கருத்துக்களுக்கு நன்றி சிவா, பாபு.

சூரியன்
08-10-2008, 01:12 PM
உபயோகமான தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா.

praveen
08-10-2008, 01:47 PM
குறிப்பிட்ட *.bat கோப்பின் மூலம் சரியான கடவுச்சொல்லை தந்தால் மட்டுமே locker கோப்பகம் கண்ணுக்கு தென்படுகிறது.

இம்முறையில் மறைக்கப்பட்ட கோப்பை வேறு யாராலும் கண்டுபிடிக்க முடிகிறதா என கூறுங்கள் நண்பர்களே.

டோட்டல் கமாண்டர் என்ற பைல் மேனேஜரில் சென்றால் அல்லது டர்போ நேவிகேட்டர் என்றும் சுருக்கமாக டி.என் என்ற பைல் மேனேஜரில் சென்றாலும் பளிச் சென்று CONTROL PANEL.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} இந்த பெயரில் அந்த போல்டர் காணக்கிடைக்கிறது.

இந்த டி.என் என்பது இலவச மென்பொருள், தற்போது விநியோகப்படுவதில்லை.

இங்கே இறக்கி கொள்ளுங்கள் ---
TN.zip 580.16 KB
http://www.MegaShare.com/500573

பாரதி
08-10-2008, 02:07 PM
இது போல வேறு மென்பொருட்களை நிறுவாமல் நம்மால் மறைக்கப்பட்ட கோப்பை காண இயலுகிறதா என்ற சந்தேகத்திலேயே வினா எழுப்பினேன். கூடுதல் தகவலுக்கும், மென்பொருள் சுட்டிக்கும் நன்றி பிரவீண். [அப்படியே அந்த கோப்பகத்தையும் (folder), கோப்பையும் கடவுச்சொல் இன்றி திறக்க இயலுகிறதா என்றும் பாருங்களேன். என்னால் திறக்க இயலவில்லை.]

praveen
08-10-2008, 02:42 PM

தாராளமாக அனைத்து வேலைகளும் நான் சொன்ன இரண்டு பைல் மேனனஜர்களால் செய்ய முடிகிறது.

அந்த கடவுட் சொல்லானது அந்த போல்டரை என்கிரிப்ட் செய்யவோ அல்லது மறைத்து வைக்கவோ செய்வதில்லை. மாறாக அந்த locked அல்லது என்ன பெயர் நாம் அந்த பேட்ச் பைலில் தருகிறோமோ அந்த பெயரை இந்தமாதிரி கண்ட்ரோல் பேனல் பைல் இது என்று ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு பெயர் மாற்றி காட்ட மட்டுமே செய்கிறது. மற்றபடி அந்த போல்டரை எந்த மாதிரியும் மறைப்பதுவோ அல்லது என்கிரிப்ட் செய்வதோ இல்லை.

அந்த போல்டர் கூட அந்த இடத்தில் show all files என்பதிலும் hide protecte operating system files என்பதை மாற்றினாலும் கண்ட்ரோல் பேனல் என்று எக்ஸ்புளோரரில் தெரிகிறது. ஆனால் அதனை கிளிக் செய்தால் அது விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் சென்று விடுகிறது.

இன்னொரு சிறு தகவல்.
இந்த மாதிரி சிறு விண்டோஸ் சிஸ்டம் பேட்ச் பைல்களை ஏ.வி.ஜி ஆண்டிவைரஸ் பயன்படுத்துபவர்கள் இயக்கும் போது unwanted tools என்றோ அல்லது system hacking டூல் என்றோ பிழைச்செய்தி காட்டும்.

பாரதி
08-10-2008, 07:34 PM
நீங்கள் கொடுத்திருக்கும் கூடுதல் தகவல்கள் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன் பிரவீண். மிக்க நன்றி.

anna
08-11-2008, 08:16 AM
பாரதி சார் நீங்கள் கொடுத்த தகவல் அருமையாக உள்ளது சூப்பர் ஆனால் பாஸ்வோர்ட் தெரிகிறதே

பாரதி
08-11-2008, 12:30 PM
அப்படியா...?! எங்கே எனக்குறிப்பிட்டு எழுதுங்களேன் நண்பரே..?

kavitha
10-11-2008, 08:35 AM
நல்ல பதிவு. நன்றி பாரதி. உபரி தகவல்கள் வழங்கிய ப்ரவீன், அன்பு ரசிகன் இவர்களுக்கும் நன்றி.

" வின்டொஸ் xபி" யில் என்cரிப்ட் செய்யபடும் கோப்புகள் மீண்டும் எடுக்கும்போது சிலவற்றை மீட்கமுடிவதில்லையே! இதற்கு வழி உன்டா?

அன்புரசிகன்
10-11-2008, 08:36 AM
" வின்டொஸ் xபி" யில் என்cரிப்ட் செய்யபடும் கோப்புகள் மீண்டும் எடுக்கும்போது சிலவற்றை மீட்கமுடிவதில்லையே! இதற்கு வழி உன்டா?
எனக்கு இது புரியவில்லை... அதெப்படி கோப்புக்களை என்கிரிப்ட் செய்வீர்கள்???

anna
13-11-2008, 06:32 AM
அப்படியா...?! எங்கே எனக்குறிப்பிட்டு எழுதுங்களேன் நண்பரே..?

பாஸ்வேர்ட் டைப் செய்யும் போது நாம் அதை மறைத்து ஸ்டார் அல்லது வேறேதும் கண்டோரல் கேரக்டர் கொடுத்து விடுவோம் .அப்போது நமது பாஸ்வேர்ட் டைப் செய்யும் போது மற்றவர்களுக்கு தெரியாது ஆனால் இதில் நாம் டைப் செய்யும் பாஸ்வேர்ட் வெளிப்படையாகவே தெரிகிறதே.

வெற்றி
12-12-2008, 06:39 AM
வெகு சின்ன சின்ன பிரச்சனைகள் தவிற (குறிப்பகாக கடவு சொல் *லில் அல்லாமல் அப்பட்டமாக தெரிவது தவிற) மிக மிக நல்ல விசயம் ...மிக்க நன்றி ...
வல்லவனுக்கு வல்லவன் உண்டு என சொன்ன ப்ரவீனுக்கும் நன்றிகள்
அந்த TN னைப்பற்றி அனேகருக்கு தெரியாது அல்லவா?? அது வரை போல்டரை மறைக்க உதவுமே...

பாரதி
12-12-2008, 07:12 AM
பாஸ்வேர்ட் டைப் செய்யும் போது நாம் அதை மறைத்து ஸ்டார் அல்லது வேறேதும் கண்டோரல் கேரக்டர் கொடுத்து விடுவோம் .அப்போது நமது பாஸ்வேர்ட் டைப் செய்யும் போது மற்றவர்களுக்கு தெரியாது ஆனால் இதில் நாம் டைப் செய்யும் பாஸ்வேர்ட் வெளிப்படையாகவே தெரிகிறதே.

ஓ... அதைக்குறிப்பிடுகிறீர்களா..! ஆம். நீங்கள் கூறுவது உண்மையே. ஏன் எனில் இது DOS முறையில் இயங்குகிறது. நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சும் போது அருகில் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் நண்பரே.

கருத்துக்களுக்கு நன்றி கவிதா, மொக்கச்சாமி.

thangasi
12-12-2008, 08:28 AM
பயனுள்ள தகவல்கள். பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி நண்பர்களே...

இன்பா
12-12-2008, 08:29 AM
ரகசியமாக மறைக்க பட வேண்டிய ஃபைகள் என்னிடன் கொஞ்சம் இருக்கிறது, உபயோகமான தகவல் கொடுத்தமைக்கு நன்றி.

மொக்கச்சாமிக்கும் நன்றி..

ஆர்.ஈஸ்வரன்
12-12-2008, 10:28 AM
நல்ல தகவல் மிக்க நன்றி

Narathar
12-12-2008, 12:55 PM
நன்றி! பரீட்சித்துப்பார்த்துவிட்டேன்.....
இனி பயன்படுத்துவதுதான் பாக்கி!!

பாரதி
12-12-2008, 01:05 PM
பின்னூட்டங்களுக்கு நன்றி தங்கசி, வரிப்புலி, ஈஸ்வரன், நாரதர்.

poornima
13-12-2008, 01:00 PM
நன்றி பாரதி.. மிக உபயோகமான தகவல்.. நிச்சயம் இது எல்லோருக்கும்
பயன்படக்கூடியதே..

டாஸின் பேட்ச் ஃபைலை பயன்படுத்தி சின்ன சின்ன நிரல்கள் செய்த அனுபவம் உண்டு. ஆனால் இங்கே நீங்கள் தந்திருக்கும் நிரலை முயற்சித்ததில்லை.இப்போது தெரிந்துகொண்டேன்.நன்றிகள் பல

தமிழ்தாசன்
13-12-2008, 01:36 PM
மிக்க மகிழ்ச்சி மிகவும் உபயோகமாக உள்ளது.
பாரதி அவர்களே!
பிரவீணா அவர்களே!

anna
16-12-2008, 07:49 AM
ஓ... அதைக்குறிப்பிடுகிறீர்களா..! ஆம். நீங்கள் கூறுவது உண்மையே. ஏன் எனில் இது DOS முறையில் இயங்குகிறது. நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சும் போது அருகில் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் நண்பரே.

கருத்துக்களுக்கு நன்றி கவிதா, மொக்கச்சாமி.

வேற வழி எதுவும் கிடையாதா?
இதற்காக நான் கடவு சொல்லையே ஸ்டார் மற்றும் டாட் என வைத்துக்கொண்டேன்.இப்ப பார்க்கிறவர்களுக்கு நான் ஏதோ பாஸ்வேர்ட் டைப் பண்ணுவது போல் தோன்றும்.

tamizhan_chennai
21-12-2008, 05:43 AM
அருமையான தகவல் நண்பர்களே, மிக்க நன்றி......

ஆர்.ஈஸ்வரன்
26-12-2008, 11:16 AM
*.பேட் பைலில் எடிட் செய்து பார்த்தால் பாஸ்வேர்ட் தெரிந்துவிடுகிறது. அதை மறைக்கவழி இல்லையா?

நிரன்
27-12-2008, 08:07 PM
நான் அதை பரீட்சித்துப்பார்த்தேன்...

தற்பொளுது சொப்ட்வோ்க்கு பதிலாக இதைத்தான் பாவித்துக்கொண்டுள்ளேன்

மிக்கநன்றி பாரதி அண்ணா:)

ஆர்.ஈஸ்வரன்
30-12-2008, 08:58 AM
ஓ... அதைக்குறிப்பிடுகிறீர்களா..! ஆம். நீங்கள் கூறுவது உண்மையே. ஏன் எனில் இது DOS முறையில் இயங்குகிறது. நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சும் போது அருகில் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் நண்பரே.

கருத்துக்களுக்கு நன்றி கவிதா, மொக்கச்சாமி.

யாரும் இல்லாமல் இருந்தாலும் அந்த பைலை எடிட் செய்து பார்த்தால் ரகசிய எழுத்துக்கள் தெரிந்துவிடுமே

பாரதி
30-12-2008, 02:01 PM
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி பூர்ணிமா, தமிழ்தாசன், தமிழன்_சென்னை, ஈஸ்வரன்.

அன்பு ஈஸ்வரன்,

நீங்கள் அந்த *.bat கோப்பை உபயோகித்து கோப்புறையை உண்டாக்கி, கோப்புகளை மறைக்கலாம் அல்லவா? அதற்கு பின்னர் உங்களுக்கு மிகவும் அவசியம் எனில் *.bat கோப்பை வேறு இடத்திற்கு மாற்றி வைக்கலாம். அல்லது அங்கிருந்து அதை நீக்கிவிட்டு ஒரு ஃபிளாஸ் அல்லது மெமரிடிஸ்கில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். (மறுபடியும் நீங்கள் கோப்புறையை காண வேண்டுமெனில் அந்த சமயத்தில் மீண்டும் *.bat கோப்பை அங்கே நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதையும் கவனத்தில் வையுங்கள்.)

ஆர்.ஈஸ்வரன்
02-01-2009, 08:41 AM

நன்றி

butterflysurya
02-01-2009, 10:31 AM
பயனுள்ள தகவல்கள்.

sunson
12-02-2009, 06:59 AM
தகவல் தந்து, அதற்கான பின்னூட்டங்களும் தந்து, விரிவான விவாதம் மூலம் எதுவுமே தெரியாத என் போன்றவர்களுக்கு மிகவும் புரிய வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்!!!

பாரதி
13-02-2009, 08:42 AM
பின்னூட்ட ஊக்கங்களுக்கு நன்றிகள் நிரன், சூர்யா, சன்சன்.

raj144
04-03-2009, 02:17 PM
என்னுடன் எங்கிரிப்ட் மென்பொருள் முலம்தான் செய்து வந்தேன், உங்களின் தகவல் பயனள்ளதக இருக்கும் என் நினைக்கிரேன்.பாரதி அவர்களுக்கு மிக்க நன்றி அதனை வீடியொ அனிமேஷனில் தந்த பிரவின் அவர்களுக்கும் மிக்க நன்றி

நேசம்
05-03-2009, 07:15 AM
அருமையான தகவல்.பகிர்தலுக்கு பாரதிண்னாவுக்கும் பிரவினுக்கு நன்றி

sureshkumaar1611
14-06-2009, 02:02 PM
மிகவும் பயனுள்ள புரோகிராம் ஒன்றை கொடுத்துள்ளீர்கள். அத்துடன் நீங்கள் கொடுத்த செய்முறை விளக்கமும் எளிதாக இருந்தது. மிக்க நன்றி!

annan
02-07-2009, 06:41 AM
மிகவும் அருமை. நன்றி நண்பரே

itsjai
03-07-2009, 05:48 PM
பயனுள்ள தகவல் விண்டோஸ் அல்லாமல் வேறு ஒரு மென்பொருள் மூலம் இதை செய்வது எளிது. இதற்கென தற்போது ஃபோல்டர் லாக் போன்ற மென்பொருள்கள் ஏராளம்.
டாஸில் ஒரு கோப்பினை attrib +h +s +r கொண்டு மறைத்தால் டாஸின் பார்ப்பது எளிது

dir /a என்ற கட்டளையின் மூல மறைத்த கோப்பினை பார்க்க முடியும்.
attrib என்று கட்டளை கொடுத்தாலே கோப்புகளின் முன்னால் அது என்ன வகை குணம் படைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்
உதாரணம்
A HR C:\Windows\WindowsShell.

rajesh2008
29-08-2010, 03:48 PM
எனக்கு மிகவும் உபயோககரமாக இருந்தது.பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி

aravindhraju
03-09-2010, 11:28 AM
பயனுள்ள தகவல்

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 10:53 AM
இந்த கைட்.பேட் என்னும் கோப்பை வலது தெரிவு செய்து ஓபன் நோட்பேட் ல் சென்று பார்த்தால் அனைத்துவரிகளும் மிக தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த கோப்பின்றி அடைத்து வைத்துள்ள கோப்பை பார்க்க இயலாது . இந்த கோப்பை பற்றி தெரிந்தவர்கள் மிகஎளிதாக எடுத்து விடுவார்களே? .ஆனால் அன்புரசிகன் கூறிய வழிமுறையில் ஓரளவிற்கு பாதுகாக்கலாம்.
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

rvijaychandar
01-01-2011, 06:04 PM
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.:lachen001:

rajasi13
19-03-2012, 12:10 PM
கடவு சொல்லை தொலைத்து விட்டேன் உதவிக்கு ஓடியாங்கோ

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-03-2012, 03:43 PM
மிகவும் பயனுள்ள தகவல்கள்...நன்றி...பாராட்டுகிறேன் :)