PDA

View Full Version : எழுப்பாதீர்கள்!!!



தாமரை
07-10-2008, 12:26 PM
அவனைத் தொந்தரவு செய்யாதீர்கள்
சற்று உறங்கட்டும்

ஆடிக் களைத்த உடல்
அயர்ந்திருக்க
கூடிப் பேசிய கதைகள் கனவில்

புரண்டு படுக்கும் அவனிதழ்
புன்முறுவல்கள்
நல்ல கனவுதான் எனக்
குறிப்பால் காட்டுகின்றன

கொஞ்சம் பொறுமையும்
கொஞ்சம் கனிவும் கொண்டு
காத்திருப்போம்
விழித்ததும்
அவன் சொல்லப் போகும்
சொல்லும் கதைகளுக்காக

அவனைத் தொந்தரவு செய்யாதீர்கள்
சற்று உறங்கட்டும்
என் மனதில்

selvamurali
07-10-2008, 01:19 PM
அருமையான வரிகள்
நண்பரே. வாழ்த்துக்கள்

meera
07-10-2008, 02:04 PM
அண்ணா, ரொம்ப நாளுக்கு பிறகு உங்க கவிதை படிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.நல்ல கனவு என்றாலே ஒரு மாதிரி சந்தோஷம் தானே. பாராட்டுகள் அண்ணா.

தீபா
07-10-2008, 02:14 PM
ஒவ்வொருமுறையும் இப்படி நினைவுகளைத் தீண்டித்தான் அழ வைக்கிறார்கள்...

ஒவ்வொருவர் மனதினுள்ளும் அவனோ அவளோ உறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாராட்டுக்கள் திரு.தாமரை.

பென்ஸ்
07-10-2008, 03:08 PM
அவன் சொல்லப் போகும்
சொல்லும் கதைகளுக்காக


இருமுறை வருகிறதே தாமரை...

கவிதை... அருமை.. பாராட்ட வார்த்தைகள் இல்லை... அருமையாக உணர்ந்து , அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்...
அனிருத்தானே கவியின் நாயகன்...????
கனவெது.. நிஜமெது...
மாட்ரிக்ஸ் படத்தில் வரும் டயலாக் " நீ கனவில் இருக்கிறாய், அதில் இருந்து நீ எழும்பவேயில்லை, அப்போது எது கவவு, எது நிஜம் என்று உனக்கு எப்படி தெரியும்"
மெல்லிய புன்னகை கனவு நலமே...
அதுவே கொடியதாய் இருந்தால், அப்போது எழும்ப முடியாமல் போனால்....
கடவுள் கொடுத்த நல்வரம் அது... காலையில் கண்விழிப்பது...

தாமரை
07-10-2008, 04:05 PM
இருமுறை வருகிறதே தாமரை...

கவிதை... அருமை.. பாராட்ட வார்த்தைகள் இல்லை... அருமையாக உணர்ந்து , அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்...
அனிருத்தானே கவியின் நாயகன்...????
கனவெது.. நிஜமெது...
மாட்ரிக்ஸ் படத்தில் வரும் டயலாக் " நீ கனவில் இருக்கிறாய், அதில் இருந்து நீ எழும்பவேயில்லை, அப்போது எது கவவு, எது நிஜம் என்று உனக்கு எப்படி தெரியும்"
மெல்லிய புன்னகை கனவு நலமே...
அதுவே கொடியதாய் இருந்தால், அப்போது எழும்ப முடியாமல் போனால்....
கடவுள் கொடுத்த நல்வரம் அது... காலையில் கண்விழிப்பது...

என் மனதில் உறங்கிக் கொண்டு என்பது ஒரு சின்னப் பொறியைக் கிளப்பவில்லையோ?

கவிதை எழுதி நாளாயிற்றே எங்கேப் போனான் என்னுள் இருந்த அந்தக் கவிஞன் என யோசித்தேன்..

எழுதி எழுதி களைத்து உறங்குகின்றானோ என எண்ணம் வர..

முளைத்த கவிதை இது..

கதைகள் சொல்லப்படுகின்றன்.

சொல்லப்படுகின்ற கதைகளில் சில மட்டுமே எதையாவது சொல்கின்றன..

அவைதான் சொல்லப் போகும் சில சொல்லும் கதைகள்

pkarthi28
07-10-2008, 06:20 PM
படித்தவுடன், கண்ணதாசனின் "அவனை உறங்கவிடுங்கள்" கவிதை ஞாபகம் வருகிறது...
அவர் எழுதிய கவிதை நேரடியாக ஒரு குழந்தை வளர்ந்தவுடன் படும் துன்பங்களை சொல்லும்.
உங்கள் கவிதை உங்கள் கவிதை சிந்தனையைப்பற்றி கூறுகின்றது.
நல்ல கவிதை..

பென்ஸ்
08-10-2008, 12:26 AM
என் மனதில் உறங்கிக் கொண்டு என்பது ஒரு சின்னப் பொறியைக் கிளப்பவில்லையோ?
தாமரையை கவிஞனாக பார்க்காமல் நண்பனாக பார்ப்பதால், என் சிந்தனையின் திசையும் அந்த வழியே... mental blocks...

ஆனால் அனிருத் உறங்குவதை ரசிக்கும் தந்தையாய் உங்களை அந்த கவிதையில் ரசிக்கமுடிந்தது வியப்பே...!!!!

poo
11-10-2008, 06:12 AM
உள்வாங்கும் ஒரு கருவினை (கவிதையாய்) பிரசவிக்க காலஅவகாசம் அவசியமே...அத்தியாவசியமே., உள்ளே உறங்கிக் கொண்டிருப்பவனும் இயங்கிக் கொண்டிருக்கிறான் உன் வழியே...

பாராட்டுக்கள் நண்பரே... தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..

ஓவியன்
11-10-2008, 06:39 AM
என்னுள்ளும் ஒருவன் உறங்குகிறானென்பதை உணர வைத்த கவிதை...!! :)

இளசு
17-10-2008, 05:04 PM
உறக்கமென்பது -
களைப்பைக் களைய
புத்துணர்வடைய -
என்பது வரைக்கும் என்றால் ---

உறக்கம் மிக மிக அவசியமே..

நெடுநீர், மடி சேர்ந்த துயில் என்றால்
சிறிய தெளிவிப்பு அவசரமே!

உறக்கத்தின் உள்ளேயும் இருப்பை உணர்த்த
சலனித்த கவிக்கு வாழ்த்துகள்..

சலனமிலா உறக்கம் சாக்காடு என்பார்கள்..

வாழ்த்துகள் தாமரை..

சாம்பவி
17-10-2008, 07:29 PM
ஆடிக் களைத்த உடல்
அயர்ந்திருக்க
கூடிப் பேசிய கதைகள் கனவில்



ஆடிய களைப்பா...? : :O
கனவிலும் கதையளப்பா..?? :P ;) ;)

ஆடி ஆறாச்சு...!!!!
ஆறும் ஆடியாச்சு...!!!!

சுப்ரபாதம் பாடித்தான்
எழுப்பியது ......... எழுப்பத்தான்... !!!!



ஏந்திரி அஞ்சலி ஏந்திரி.... !!!!!!!

அமரன்
18-10-2008, 10:27 AM
இனிமேல் தூங்கியது மாதிரித்தான்:):rolleyes:

ஆர்.ஈஸ்வரன்
18-10-2008, 11:01 AM
உறங்கட்டும் உறங்கட்டும் உழைத்தவன்
உறங்கட்டும்

இளசு
18-10-2008, 12:18 PM
ஆடிய களைப்பா...? : :O
கனவிலும் கதையளப்பா..?? :P ;) ;)

ஆடி ஆறாச்சு...!!!!
ஆறும் ஆடியாச்சு...!!!!

சுப்ரபாதம் பாடித்தான்
எழுப்பியது ......... எழுப்பத்தான்... !!!!



ஏந்திரி அஞ்சலி ஏந்திரி.... !!!!!!!

தமிழும் குறும்பும்
மேதைமையும், அது தலைக்கேறாத பிள்ளைமனமும்
சேர்ந்த இனிய கலவை..
திகட்டாத , நலம் சேர்க்கும் நல்ல சுவை!

ரசித்தேன் சாம்பவி..
பாராட்டுகள்!