PDA

View Full Version : சால்மன் மீன்!!!aren
06-10-2008, 11:21 AM
பிறந்தவீட்டை நோக்கி
முன்னேறினேன்!!!

கடலில் என்னை
பிடிக்க நினைப்பவர்களை
இலகுவாக ஏமாற்றி
முன்னேற்றப்பாதையில்
முன்னேறினேன்!!!

மனதில் பிறந்தவீடு
மட்டுமே நினைவில்!!!

பிறந்தவீடு வெகு அருகில்
மனது லப் டப் என்று
அலறுகிறது!!!

பெரிய மதில்சுவர்
என்னை எகிறவிடாமல்
தடுக்க
செய்வதறியாமல்
நிற்கிறேன்!!!

கருப்பு மற்றும் வெள்ளை
உருவத்துடன் பலர்
அங்கே இருக்கக் கண்டேன்!!!

என்ன செய்வதென்று
தெரியவில்லை
யாரும் எனக்குச்
சொல்லித் தரவில்லை!!!

திடீரென ஒரு அடி
கீழே தண்ணீரில் சாய்ந்தேன்
பலர் என்னைச் சூழக்கண்டேன்!!!

நொடிப்பொழுதில்
ஒரு கருப்பு உருவத்தின்
வாயில் நான்!!!

தண்ணீரை சேமிக்க
டாம் கட்டி
என்னை பிறந்தவீட்டிற்கு
செல்லவிடாமல்
தடுத்த மனித குலத்தை
சாபமிட எத்தனித்தேன்!!!

அதற்குள் அந்த
கருப்பு உருவத்தின்
வாய்க்கு இரையானேன்!!!

நான்
ஒரு பாவமே செய்யாத
பாவப்பட்ட
ஒரு சால்மன் வகை மீன்!!!

அந்த கருப்பு உருவம்
ஒரு கரடி!!!

poornima
06-10-2008, 02:16 PM
அன்பின் ஆரென்..உருவகம் உள்வைத்து வந்த நவீன கவிதை வகையா இது?
கவிதை படித்தபின் என்னமோ செய்கிறது மனதை.. என்னவெல்லாமோ காட்சி
அமைக்கிறது மனது..
சால்மன் மீன் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்..

mukilan
06-10-2008, 02:36 PM
எளிமையான வரிகளில் அதே சமயத்தில் வலிமையான கருத்தாழம் மிக்க கவிதை. சால்மன் மீன் ரொம்பவும் நல்லதாச்சே... சாப்பிடாமல் எப்படி இருக்கிறதாம்?

அமரன்
07-10-2008, 10:15 AM
கவிதை படித்தபின் என்னமோ செய்கிறது மனதை.. என்னவெல்லாமோ காட்சி
அமைக்கிறது மனது....

வழி மொழிகிறேன்..

நீண்ட நாளைக்குப் பிறகு ஆரென் அண்ணாவின் முத்திரைக்கவிதை.

உப்புக்காய்ச்ச பாத்தி கட்டினாலும் இந்தவகை மீன்கள் சாவதுண்டு..

இன்னும் வேண்டும் என்று கேட்கிறது மனது..

வசீகரன்
09-10-2008, 07:05 AM
சால்மான் மீன் கருவாக உள் வைத்து அழகுற எளிமையாக
மனிதர்களின் ஆக்கிரமிப்பு மனபாவத்தை கவிதை சொல்லி இருக்கும் விதம்...
ரொம்பவே புதுமை ஆரென் அண்ணா...!

பாராட்டுக்கள் பல...!!!

Keelai Naadaan
09-10-2008, 08:38 AM
அழகிய, அன்பான கவிதைக்கு பாராட்டுக்கள். ஆரென்.

poo
11-10-2008, 05:46 AM
நேரடி கவிதையாக இருந்தபோதும்... மனித வாழ்வில் ஒன்றாமலில்லை..
எளிமையான நடையும்..ஆழமான கருத்தும் வியக்க வைக்கிறது..

ஆரேன் அண்ணாவிற்குள் புதைந்துகிடக்கும் முத்தை முதல்முறையாய் காண்கிறேன்.. முன் தேடுகிறேன்.. பின் கொடுங்கள் அண்ணா..

பாராட்டுக்கள்..

ஓவியன்
11-10-2008, 06:14 AM
சாலமன் வகை மீன்கள் Salmonidae மீன் வர்க்கத்தினைச் சார்ந்தவை...
பொதுவாக அத்திலாந்திக் சமூத்திரத்திலும், பசிபிக் சமூத்திரத்திலுமே இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன....

உப்பு நீரிலே இருந்து நல்ல நீர் நிலைகளை நோக்கி வந்து, அங்கே முட்டைகளை இட்டு விட்டு மறுபடியும் உப்பு நீருக்குத் திரும்பி விடும் விந்தையான மீனினம் இது....

முட்டைகளிலிருந்து வெளியேறும் மீன் குஞ்சுகள் மறுபடியும் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் நீந்திக் கடந்து உப்பு நீரிலே வாசம் செய்யும், பின் முட்டையிட்டு இனம் பெருக்க தன் தாய் வீட்டை நோக்கி அசராமல் பிரயாணமும் செய்யுமாம்...

எந்த சமூத்திரத்திலிருந்தாலும் தன் பிறந்தகத்தை அச்சுப் பிசகாமல் கண்டறியும் சாலமன் மீனின் திறமை, இன்னமும் விஞ்ஞானிகளுக்கு விளங்காத புதிர்தான்...

_______________________________________________________________________________________________

நல்ல கவிதைக்கு நன்றி ஆரென் அண்ணா, ரெட் சாலமனையும் பிங் சாலமனையும் விழுங்கி ஏப்பம் விடும் என்னைப் போன்றவர்களைக் கரடியாக்கிவிட்டீர்களே....??? :eek::eek::eek:

poo
11-10-2008, 06:18 AM
சகோதரரின் விளக்கத்தில் வியந்தேன்... அடடே அண்ணனின் கவிதை எத்தனை அர்த்தங்களை சொல்கிறது..

ஓவியன்
11-10-2008, 06:31 AM
நன்றி பூ அண்ணா, ஆரென் அண்ணாவின் கவிதையில் ‘பூஜை வேளை, கரடி’ என்ற சொற்றொடரும் பொருந்தி வருகிறதே...!! :)

தீபா
11-10-2008, 07:02 AM
புதிய படிமத்தில் வரையப்பட்ட கவிதை போல் இருக்கிறது. வாழ்த்துக்கள் ஆரென் அவர்களே!

அவ்வகை மீன்களின் புகைப்படம் கிடைக்குமா?

முக்கியமாக, இந்தியாவில் இந்த மீன் கிடைக்குமா? :)

ஓவியன்
12-10-2008, 02:16 AM
தென்றல் சாலமன் மீன்களைப் பற்றி அறிய இந்த சுட்டி (http://lidophogirlie.blogspot.com/)யைச் சுட்டுங்கள்...

இந்தியாவுக்கு இந்த மீனினங்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டால் மட்டுமே கிடைக்கும், ஆனால் அப்படி இறக்குமதி செய்யப் பட்டால் அதன் விலை அதிகமாக இருக்குமென நம்புகிறேன்...

மன்மதன்
12-10-2008, 07:28 AM
அருமையான கவிதை ஆரென்ஜி..

சால்மன் மீன்களை பற்றி அறிய தந்த ஓவியனுக்கும் நன்றி..

aren
17-10-2008, 02:13 AM
அனைவருக்கும் நன்றி.

பூ அவர்களை மறுபடியும் பார்ப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வந்து கலக்குங்கள்.

ஓவியன் அவர்கள் அருமையாக விளக்கம் கொடுத்தற்கு நன்றி.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
17-10-2008, 02:14 AM
பென்ஸ் இதைப் படித்துவிட்டு கொண்டுவாருங்கள் நான் சாப்பிடுகிறேன் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் ஒன்றுமே சொல்லாமல் படித்துவிட்டு சென்றுவிட்டார்.

இளசு
17-10-2008, 07:44 PM
மேலை வந்த பிறகு வாங்கி உண்ணும் ஒரே மீன் - சால்மன்!
நம் வஞ்சிரத்துக்கு ஈடான அட்லாண்டிக் கொடை!

ஆமைகள் கரைக்கும், சால்மன் ஆற்றுப்படுகை வரைக்கும் வந்து மட்டுமே
இனவிருத்தி மேற்கொள்ளும்.

ஓவியன் மிக அழகாகச் சொன்னதுபோல் -
எப்படி இவை தக்க காலத்தில் தேவையான இடத்தை
அத்தனை தூரம் அசராமல் கடந்து சேர்கின்றன
என்பது இயற்கை எத்தனை புதிர்/புனிதம் எனச் சொல்லும்!

இந்தக்கவிதை -
தகவல் ஒன்றை அழகான, மனதைப் பிசையும்
கவிதையாக்கும் அன்பின் ஆரெனின் திறமை சொல்கிறது..

மனிதன் இயற்கையின் பாதையில் எத்தனை இடையூறுகள் செய்கிறான்
என எண்ணிப் பார்க்க வைக்கிறது..

ஆர்க்டிக் பகுதியில் அணுகுண்டு, நீர்மூழ்கிகள், சோதனைச்சாலைகள்
என அழிச்சாட்டியம் பண்ணிய அமெரிக்கா, ஜெர்மனி,ரஷ்யா என்ற
சூழல் ஆர்வல பெரியண்ணாக்களை - பனிக்கரடிகள், சீல்களுடன்
சேர்ந்து திட்டச் சொல்கிறது..

மீன் கரடிக்கு உணவானால் கூட - இயற்கையின் ஒரு நியதி தப்பிக்கும்..
சுவரில் முட்டி, முட்டைகளுடன் கர்ப்பிணியாய் இறந்தே போனால்?


அன்பின் ஆரென்,
இனி சால்மன் சமைக்க வாங்குமுன் கொஞ்சம் தயங்க வைத்துவிட்டீர்கள்..

(பசியுடன்) பாராட்டுகள்!

aren
22-10-2008, 04:25 AM
நன்றி இளசு அவர்களே.

உங்களை பட்டினி போடவேண்டும் என்பது என் நோக்கமல்ல. நல்ல பச்சைக் காய்கறிகள் அதிகமாக அதே கடையில் இருக்கிறது. அதை வாங்கலாமே.

நீங்கள் டிஸ்கவரி சானலில் இதைப் பார்த்தால் தெரியும். கரிபிணி சல்மான் மீன்கள் என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கும்பொழுது இந்த கரடிகள் வந்து அவைகளை சாப்பிட்டு ஏப்பம் விடும். பார்க்கவே மிகவும் பாவமாக இருக்கும்.

என்னுடைய ஆதங்கத்தை எழுதி உங்கள் மனதை காயப்படுத்தியதற்கு என் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்