PDA

View Full Version : செம்மணி நாயகன் செங்குருதியில்...........



மறத்தமிழன்
06-10-2008, 05:54 AM
அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட22 பேர் பலி

அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை 8.35 அளவில் இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கிளையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா மற்றும் அவரது பாரியார் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரி மாவட்ட அமைப்பாளர் டொக்டர் ராஜா ஜோன் புள்ளே ஆகியோர் இந்தக் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனுராதபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி: தமிழ்வின் (http://www.tamilwin.com/view.php?2e30QHPcb33h9Ese4d46Wn5cb0bf7GU24d4kOp7400bpnLW0de23E2hF0cc3tj0Cde)

சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதி ஜானக பெரெரா உட்பட 25 பேர் குண்டுத்தாக்குதலில் பலி
[திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 10:03 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.
அனுராதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் இன்று திங்கட்கிழமை காலை 8:45 நிமிடமளவில் இக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாகவும் இருந்தவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரெராவும் அவரது மனைவியும் மற்றும் அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான டொக்டர். ஜோன்புள்ளேயும் அவரது மனைவியும் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நன்றி : புதினம் (http://www.puthinam.com/full.php?2e3YOAKcb33e6Dre4d45Vo6ca0bc4AO24d4yIm4200a6oMVHde22D1eW0cc3mcYAde)

பின்குறிப்பு : 1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 650 இளைஞர் யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டு பின்னர் அவர்களை கொன்று செம்மணியில் புதைப்பற்கு காரண கர்த்தாவாகிய அன்னார் இன்று அனுராதபுரத்தில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதானோ? அப்பாவி இளைஞர்கள். ஏதும் அறியா ஏதிலிகள். 1996ல் வன்னிக்கு இடம்பெயரலாம் என புறப்பட்டு போக முடியாத ஒரு சூழலில் பல இலட்சம் மக்கள் இராணுவத்தை நம்பி யாழ்ப்பாணம் திரும்பினர். அந்த மக்களில் பலருக்கு நடந்த் கதி ஈழத்தமிழனுக்கு தெரியும். அதுதான் இப்பொழுது வன்னியில் இருக்கும் மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வரச்சொல்லி அரசாங்கம் அழைத்தும் மக்கள் போகவில்லை. ஏனெனில் வவுனியாவில் மீண்டும் ஒரு 'செம்மணி' உருவாக்கப்படலாம். தேசியத்தலைவரில் நம்பிக்கை கொண்டு இன்றும் தலைவனுடனேயே இன்னல் வந்தாலும் இருப்போம் என இருக்கிறார்கள்.

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்

தீபன்
06-10-2008, 06:02 AM
எந்த அரசாங்கத்திற்காக ஜனக பெரேரா உளைத்தாரோ, அதே அரசாங்கத்தால்தான் அண்மைக்காலமாக அவருக்கு பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. காரணம், எதிகட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட தொடங்கியமையால். சிங்கள மக்கள் மத்தியில் தன் போர் வெற்றிகளால் பெரும் மதிப்பை பெற்றிருந்த இவர் அண்மையில் நடந்த உள்ளூர் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று தன் பலத்தால் தற்போதைய அரசாங்கத்திற்கு பெருத்த போட்டியாக உருவாகக்கூடிய வல்லமை தனக்கிருப்பதை நிரூபித்திருந்தார்.
இவைகூட இவரின் கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
என்னவானாலும், இவரின் மறைவில் பல தமிழ் குடும்பங்கள் திருப்தி பெருமூச்சுவிடுவதை யாரும் மறுப்பதற்கில்லை.

அன்புரசிகன்
06-10-2008, 06:53 AM
தற்போதய இவரின் மறைவால் தமிழ்மக்கள் பெருமூச்சு விட்டு பிரயோசனம் இல்லை. அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதரக அதிகாரியாகவும் கடமையாற்றியவர்.... எந்த சந்தேகமும் இல்லை. இலங்கை அரசு தான் செய்திருக்கிறது...

இனியாவது அந்த ஆத்மா சாந்தியடையட்டும்.

ராஜா
06-10-2008, 09:52 AM
அப்'பாவிகளுடன் மரித்த அப்பாவிகளுக்கு என் அஞ்சலி..!

Narathar
25-10-2008, 10:03 AM
ஏனோ நான் கொழும்பில் வாசித்த ஒரு சிங்கள சுவரொட்டியின் தமிழாக்கத்தை இங்கு பதியனும் போல தோன்றியது.....

என்னதான் சொன்னாலும் சிங்களவர்களுக்கு ஜானக் பெரேரா ஒரு வீரர்தானே?

இதோ அந்த சுவரொட்டியிலிருந்த வாசகம்

"தாய் நாட்டுக்காக பயங்கரவாதிகளை ஒழித்த ஜானக பெரேரா குண்டுக்கு இரை.....
தாய் நாட்டு வீரர்களை கொன்றொழித்த கருணா அம்மான் பாராளுமன்றத்தில்.."

சிங்கள அரசை என்னவென்பது????

நாராயணா!!!!

அமரன்
25-10-2008, 11:34 AM
ஸ்ரீலங்கா அரசியல் வாதிகளின் முகத்தை உரித்துக் காட்டும் சுவரொட்டி. இப்படியாவது போர் தொடர்வதுக்கான உண்மைக் காரணம் சிங்கள மக்களை அடையட்டும்