PDA

View Full Version : ஏக்கக்குழந்தை



kulirthazhal
05-10-2008, 04:06 PM
ஏக்கக்குழந்தை

அந்த
குச்சிமிட்டாயின்
லட்சிய கவலையில்
தனிமையை தேடும்
ஏக்க குழந்தையில்
எதை நான் கண்டுகொள்ள.

நோக்கத்தை காணவா?
ஈடுபாட்டை காணவா?
உறுதியை காணவா?
தேடலை காணவா?

நானும்
மிட்டாயை மறக்கவில்லை
குழந்தைதானே!!!

- குளிர்தழல்.

இளசு
18-10-2008, 09:58 AM
தேடல் உள்ள வாழ்விலே ருசியிருக்கும் - பாடல் வரி!

தேடுவது தகுதியானதாய் அமைந்துவிட்டால் - நிறைவிருக்கும்..

அந்தந்த வயதுக்கு அந்தந்த தகுதிகள்..

ஈடுபாடு எங்கே முடிகிறது -
வீம்பு அடம் எங்கே தொடங்குகிறது..?
மிக நுட்பமான புள்ளி அது!

தகுந்த தேடல்கள் - தொடர்ந்துகொண்டே இருக்கட்டும்..
வாழ்க்கை வீணை - துடிப்புடன் இசைத்தபடி இருக்கடும்..

கவிதைக்கு வாழ்த்துகள் - குளிர்தழல்!

shibly591
20-10-2008, 10:33 AM
அருமையான ஏக்கத்தை பதிந்தமைக்கு நன்றிகள்

தொடருங்கள்