PDA

View Full Version : ஒரே கருத்துக்களுடன் செல்வி, ஜெயலலிதா கலைஞர் கர்ணாநிதிkampan
05-10-2008, 02:20 PM
ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக இரு பெரும் தலைவர்களும் சேர்ந்து குரல் குடுக்க தொடங்கியுள்ளனர்.

நன்றி தமிழகமே

"ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு"
http://www.puthinam.com/full.php?2eecHalja0bcacmOG22eddG3eq20cc3mpOWO34d44YPn9ccb33QIP344d4eSVB6cbb0000c3JGde

''இந்தியப் பிரதமர் தலையிட வலியுறுத்தி லட்சக்கணக்கில் தந்தி: தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு''

http://www.puthinam.com/full.php?2eehD6eeb0ac44mIy22eddAYcm30cc3ooMVV24d445Vo6ccb33KAOYY4d4eSOA4caa000We1DDde

தீபன்
05-10-2008, 05:19 PM
அண்மைக்காலமாக தமிழகத்தில் நடைபெறும் ஈழ ஆதரவு போராட்டங்கள் சற்று முனைப்பு பெற்று வருவதுடன் அனைத்து கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தையும் ஏற்படுத்தியுள்ளதைபோல் தோற்றம் தருகிறது. இது உண்மையிலேயே உளப்பூர்வமான மாற்றமாக அமைந்து ஈழ மக்களின் போராட்டத்திற்கு ஒத்தாசையாக அமையுமாயின் அனைவருக்குமே அது நன்மை பயப்பதாக அமையும். மாறாக, இதுவும் ஒரு அரசியல் சுயலாப நடவடிக்கையாகவே முடியுமாயின் அது ஈழ மக்களின் ஏமாற்றத்தின் தொடர்ச்சியாக அமையும்... அவ்வளவே...!

leomohan
05-10-2008, 08:30 PM
இதுவும் ஒரு அரசியல் சுயலாப நடவடிக்கையாகவே முடியுமாயின்

வருத்தமான விஷயம். ஆனால் இது தான் உண்மை. இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை. அவர்கள் கவலையெல்லாம் அடுத்த தேர்தல் தான்.

ராஜா
06-10-2008, 03:52 AM
காவிரிப் பிரச்னை, ஒகேனக்கல் விவகாரம் போன்று, ஈழத்தமிழர் விடயமும் அவ்வப்போது அரசியல்வாதிகளால் மெல்லப்படும் அவல்.

இதில் மகிழ்ச்சியடையவோ, முன்னேற்றங்களை எதிர்பார்க்கவோ எவ்வித முகாந்திரமும் இல்லை.

தீபன்
06-10-2008, 05:40 AM
அரசியல்வாதிகள் என்ன நோக்கில் செய்கிறார்களென்பது முக்கியமல்ல. ஆனால், எந்த நோக்கில் செய்தாலும் அவல் மெல்லப்படுவதுதான் முக்கியம். அந்த வகையில் யார் குத்தியானாலும் அரிசியானால் சரி என்பதுதான் ஈழத்தமிழர் எதிர்பார்ப்பு.
கலைஞரின் அறிவிப்பை தொடர்ந்து பிரதமருக்கு ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்பபடுவதாக செய்திகள் சொல்கிண்றன., இதனால், உடனடி விளைவுகளேதும் இருக்கப்போவதில்லை. ஆனால், குறைந்தபட்சம் ஈழத்தமிழருக்கு தாங்கள் தனிமைப்பட்டுவிடவில்லை என்ற ஆறுதலேனும் கிடைக்கும். அது அவர்களின் போராட்டம் தளர்வின்றி தொடர சிறு பங்கேனும் உதவும். அதனால், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் ஈழத்தமிழரை பொறுத்தவரை அவர்கலின் நோக்கத்திற்கப்பாற்பட்டு வரவேற்கத்தக்கதே.

ஸ்ரீதர்
06-10-2008, 07:43 AM
ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக இரு பெரும் தலைவர்களும் சேர்ந்து குரல் குடுக்க தொடங்கியுள்ளனர்.

நன்றி தமிழகமே

"ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு"
http://www.puthinam.com/full.php?2eecHalja0bcacmOG22eddG3eq20cc3mpOWO34d44YPn9ccb33QIP344d4eSVB6cbb0000c3JGde (http://www.puthinam.com/full.php?2eecHalja0bcacmOG22eddG3eq20cc3mpOWO34d44YPn9ccb33QIP344d4eSVB6cbb0000c3JGde)

''இந்தியப் பிரதமர் தலையிட வலியுறுத்தி லட்சக்கணக்கில் தந்தி: தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு''

http://www.puthinam.com/full.php?2eehD6eeb0ac44mIy22eddAYcm30cc3ooMVV24d445Vo6ccb33KAOYY4d4eSOA4caa000We1DDde (http://www.puthinam.com/full.php?2eehD6eeb0ac44mIy22eddAYcm30cc3ooMVV24d445Vo6ccb33KAOYY4d4eSOA4caa000We1DDde)
இவர்கள் எல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனை தீர வேண்டும் என்றா இப்போது குரல் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?? இந்த அரசியல்வாதிகளை நம்பும் உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது அதன் மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தானாம். அதே போல நாடே , பெட்ரோல் பிரச்சனை , விலைவாசி உயர்வு , மின் வெட்டு என அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் போது மூன்று மாதங்களுக்கு மேலாக கொடநாடு எஸ்டேட்டில் சுகம் அனுபவித்துக்கொண்டே அறிக்கை மூலம் தரிசனம் தந்து கொண்டிருந்தவர் எதிர்கட்சி தலைவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பல இருக்கும் போது சினிமா வசனம் எழுதுவதிலும் , ஏற்கனவே இருக்கும் பட்டங்கள் போதாது என்று வேறுபல பெயர்களில் பட்டம் வாங்குவதிலும் , ஆடம்பர விழாக்களில்/மாநாடுகளில் கலந்து கொள்வதிலும் , நேரத்தை செலவு செய்து கொண்டிருப்பவர்தான். முதல்வர் கலைஞர் அவர்கள்.

நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். ஜெயலலிதா கேபிள் டிவி யை அரசுடமையாக்க சட்டம் கொண்டுவந்த போது , தன் பேரப்பிள்ளைகளின் வியாபாரத்திற்கு தடை வந்து விடக்கூடாது என்பதற்காக நேரில் ஓடிப்போய் கவர்னரிடம் முறையிடத்தெரிந்தவர்க்கு , தமிழர் பிரச்சனை என்றதும் கடிதம் எழுதத்தான் தோன்றுகிறதா??? தனக்கு நடுவன் அரசில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தத்தோன்றவில்லையா???

அல்லது தமிழர் பிரச்சனை என்பது தன் சொந்த குடும்பத்தைவிட முக்கியத்துவம் குறைந்தது என்று நினைக்கிறாரோ என்னவோ!!!. கலைஞரைப்பற்றி ஏதாவது சொன்னாலேயே வரிந்து கட்டிக்கொள்பவர்களுக்கும் நான் கேட்பதில் உள்ள நியாயம் புரியும் என நினைக்கிறேன்.

இதில் புதியதாக தமிழைக் காப்பதாக பீற்றிக்கொண்டிருக்கும் இராமதாஸும் விதி விலக்கல்ல.

இதுங்க எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

இப்போது ஈழ்த்தமிழருக்காக குரல் கொடுப்பதெல்லம் இவற்றிற்காகத்தான்.

1) தி மு க / அதிமுக வுக்கு முன்னாலேயே கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டம் நடத்தியதால் எங்கே தாங்கள் தமிழின அக்கறை இல்லாதவர்கள் என மற்ற கட்சிகளால் விமர்சிக்கப்படுவோமோ என உள்ள பயம்.

2) வரவிருக்கும் தேர்தல். அதில் தமிழருக்காக உயிரையும் கொடுப்போம் என கூறி ஓட்டுப்பிச்சை எடுப்பதற்கும் தான்.

இவை இல்லாமல் உண்மையாக தமிழர் மீது உள்ள நலம்தான் இந்த அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதற்க்கு காரணம் என்று நீங்கள் நம்பினால் என்னை மன்னியுங்கள்.

ராஜா
06-10-2008, 09:41 AM
மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஸ்ரீதர்..!

நம்புவோர் நம்பட்டும்.. நமக்கென்ன போயிற்று..?