PDA

View Full Version : நோக்கியா போனை ஃபார்மேட் செய்வது எப்படி?



சிவா.ஜி
02-10-2008, 12:50 PM
என்னுடைய கைப்பேசியில் வைரஸ் நுழைந்துவிட்டதால் அதை ஃபார்மேட் செய்ய முயன்றேன். அன்லாக் கோட் தரச் சொல்லுகிறது. ஆனால் கோட் எனக்குத் தெரியவில்லை. கோட் இல்லாமல் ஃபார்மேட் செய்ய முடியுமா? தெரிந்தவர்கள் யாரேனும் தயவுசெய்து உதவமுடியுமா?
நோக்கியா போனை
Make:Nokia
Model:5700 Music Express

praveen
02-10-2008, 01:51 PM
நீங்கள் ரீசெட் செய்வதற்கான கோடு என்றால் உங்கள் போனின் கையேட்டில் பாருங்கள் (1234 என்று) இருக்கும். உங்கள் போனில் உள்ள மெமரி கார்டில் தான் வைரஸ் என்றால் நீங்கள் உங்கள் மெமரி கார்டை தனியாக எடுத்து கம்ப்யூட்டரில் தகுந்த சாதனம் கொண்டு இனைத்து அதில் உங்கள் பிரத்தியேக டேட்டா இருந்தால் பத்திரப்படுத்தி பின் பார்மேட் செய்யுங்கள் அதில் தடை இருக்காது.

நீங்கள் அலைபேசி வாங்கிய நிறுவனத்திடம் கேளுங்கள் நிச்சயம் உதவுவார்கள்.

ஷீ-நிசி
02-10-2008, 03:12 PM
Nokia பொதுவாக 12345 தான் இருக்கும்... (நீங்கள் இந்த கோட் இதுவரை மாற்றாமலிருந்தால்...)

முயற்சித்துவிட்டு சொல்லுங்கள்.. வேறு வழி யோசித்துக்கொள்ளலாம்.

சிவா.ஜி
03-10-2008, 05:21 AM
நன்றி பிரவீன். மெமரி கார்டை ஃபார்மேட் செய்துவிட்டேன். வைரஸ் போன் மெமரியில் இருக்கிறது. அதைத்தான் ஃபாக்டரி செட்டிங்குக்கு மாற்ற முயற்சிக்கிறேன். 12345 என்பதை முயற்சி செய்துவிட்டேன். வீட்டிலிருக்கும்போது, யாரோ தவறுதலாய் கோட் எண்ணை 5 முறை பயன்படுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது. லாக் ஆகிவிட்டது.

நன்றி ஷீ*நிசி. வேறு வழியில் முயற்சிக்கிறேன்.

சுட்டிபையன்
03-10-2008, 01:36 PM
சிவாஜி உங்கள் தொலைபேசியை ஓப் பண்ணிவிட்டு கீழ் படத்தில் உள்ளது போல் * + கோல் + 3 பட்டங்களை அமத்திக் கொண்டு போனை ஒன் பண்ணவும். குறிப்பு செய்ய முதல் உங்கள் சகல் டேட்டாக்களையும் சேமித்து வைக்கவும் போன் இலக்கங்களை சிம்மில் சேமிக்கலாம், டேட்டாக்களை மெமரியில் சேமிக்கவும். இதற்க்கு உங்கள் பின் இலக்கம் தேவைபடமாட்டாது
http://www.500images.com/uploads/12424490055700format.jpg

சிவா.ஜி
03-10-2008, 06:07 PM
மிக்க நன்றி சுட்டிப்பையன். முயன்றுவிட்டு வெற்றி கிட்டியதும் ட்ரீட்தான்...சரியா?

ஷீ-நிசி
04-10-2008, 02:50 AM
நன்றி!

praveen
04-10-2008, 06:41 AM
சுட்டி பதில் பதிவு (படத்துடன்) அற்புதம்.

திரி ஆரம்பித்த நண்பர் அதனை செய்து பார்த்து அவர் என்ன பதில் என்று அறிய ஆவலாக இருக்கிறேன். (எல்லோருக்கும் தானே ட்ரீட்?).

சிவா.ஜி
04-10-2008, 02:40 PM
சுட்டி அளித்த தகவல் உண்மையிலேயே மிக உதவியாக இருந்தது. முயன்றேன்....முடிந்தது. மிக்க நன்றி சுட்டிப்பையன். மிக்க நன்றி பிரவீன். மிக்க நன்றி ஷீநிசி. எல்லோரும் துபாய்க்கு வருகிறீர்களா.....ட்ரீட்டுக்குத்தான்....!!!

பென்ஸ்
04-10-2008, 02:45 PM
டிக்கெட் வாங்கி கொடுத்தா நானும் வருவேமில்ல...

சிவா.ஜி
04-10-2008, 02:56 PM
ஈ_டிக்கெட்டா...எறும்பு டிக்கெட்டா...எது வேணுன்னு சொல்லுங்க....! அது சரி உங்க ட்ரீட் ஒண்ணு பாக்கியிருக்கே பென்ஸ்....!!!!

miindum
05-10-2008, 06:57 AM
நல்ல விளக்கம் அருமையான படம்..வரவேற்கிறேன்.

சூரியன்
05-10-2008, 02:16 PM
சுட்டி அண்ண அந்த கோட்-டை எப்படி பயன்படுத்துவது?
எனது போனில் அதுபோல் செய்ய முடியவில்லை

சுட்டிபையன்
06-10-2008, 04:05 AM
சுட்டி அண்ண அந்த கோட்-டை எப்படி பயன்படுத்துவது?
எனது போனில் அதுபோல் செய்ய முடியவில்லை

சூரியன் உங்களின் போன் மாடல் என்ன? இது நோக்கியா S 60 மாடல்களிற்க்கு மட்டுமே வேலை செய்யும். 6600, 6630, 6680,6681,6682,3230,6260,6670,7610,5520,7650,3660,3620,3600,3650,5500, 5700,6120, 6220, 6121,6290,3250, தற்போது வரும் N & Eசீரிஸ் போன்கள் யாவும் S603m வகையை சேர்ந்தது. சில தினங்களிற்க்கு முன்னர் 5ஆம் வகையை சேர்ந்த போன் மடலான 5800 நோக்கியாவால் அறிமுகம் செய்ய பட்டுள்ளது

சுட்டிபையன்
06-10-2008, 04:09 AM
மேற்கூறப்பட்ட மாடல்களில் உள்ள போன் எனின் மேலே உள்ள படிமுறயில் முயற்ச்சிக்கவும். மேற்கூறப்பட்ட மாடல் இல்லை எனில் அது S40, அந்த வகை பார்மாட் பண்ண முடியாது

சுட்டிபையன்
06-10-2008, 04:40 AM
ஈ_டிக்கெட்டா...எறும்பு டிக்கெட்டா...எது வேணுன்னு சொல்லுங்க....! அது சரி உங்க ட்ரீட் ஒண்ணு பாக்கியிருக்கே பென்ஸ்....!!!!

பார்மாட் பண்ணிட்டீங்களா என்று சொல்லவே இல்லையே என்னும்:sprachlos020::D:D

சிவா.ஜி
06-10-2008, 04:42 AM
பார்மாட் பண்ணிட்டீங்களா என்று சொல்லவே இல்லையே என்னும்:sprachlos020::D:D

ஃபார்மேட் செய்துவிட்டேன். மிக்க நன்றி சுட்டி.(ஏற்கனவே பதிந்திருக்கிறேன். மீண்டும் மிக்க நன்றி சுட்டிப்பையன்.)


சுட்டி அளித்த தகவல் உண்மையிலேயே மிக உதவியாக இருந்தது. முயன்றேன்....முடிந்தது. மிக்க நன்றி சுட்டிப்பையன். மிக்க நன்றி பிரவீன். மிக்க நன்றி ஷீநிசி. எல்லோரும் துபாய்க்கு வருகிறீர்களா.....ட்ரீட்டுக்குத்தான்....!!!

சூரியன்
06-10-2008, 02:48 PM
தகவலுக்கு நன்றி அண்ணா.

nada
09-10-2008, 02:25 AM
தகவலுக்கு நன்றி!!
Nokia 6300 ஐயும் formate பண்ணமுடியுமா?

subas
26-11-2008, 06:15 PM
சிவாஜி உங்கள் தொலைபேசியை ஓப் பண்ணிவிட்டு கீழ் படத்தில் உள்ளது போல் * + கோல் + 3 பட்டங்களை அமத்திக் கொண்டு போனை ஒன் பண்ணவும். குறிப்பு செய்ய முதல் உங்கள் சகல் டேட்டாக்களையும் சேமித்து வைக்கவும் போன் இலக்கங்களை சிம்மில் சேமிக்கலாம், டேட்டாக்களை மெமரியில் சேமிக்கவும். இதற்க்கு உங்கள் பின் இலக்கம் தேவைபடமாட்டாது. அருமை!! அருமை!! ரோம்பவும் சூப்பர்!!! தேக்கம் எதுவும் இல்லாத தாக்கமான இந்த பதிலுக்குரியவரை சுட்டி என்று சேர்த்துக்கொண்டாலும், பையன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நட்பும் நண்றியுமாய் -சுபாஷ்-

அக்னி
26-01-2009, 09:03 PM
சிவா.ஜி...
நீங்கள் உங்கள் அலைபேசியை (சுட்டி சொன்னதுபோல) மீளநிறுவுகையில்,
உங்கள் நினைவகத் தகவல்கள் அழிந்தனவா...
அல்லது அவை அப்படியே இருந்தனவா...

சிவா.ஜி
26-01-2009, 09:23 PM
எல்லாம் அழிந்துவிட்டன அக்னி. நான் முன்பே அதை சேமித்துக்கொண்டுதான் சுட்டி சொன்னதைப்போல செய்தேன்.

அக்னி
26-01-2009, 10:47 PM
நல்லவேளை...
சுட்டியின் (நன்றி: சுட்டி) எனக்குப் புதிய செயல்முறையை, ஒரு தடவை சும்மா பரீட்சித்துப் பார்க்கலாமே என நினைத்தேன்.

mohdrafi
08-01-2010, 03:42 PM
நான் நோக்கியா n80 ஐ மென்பொருள் மேம்படுத்துகை செய்யும்போது ஃபோன் ஆஃபாகி விட்டது. மீண்டும் ஆன் செய்தால் ஆனாகுதில்லை. இதை எப்படிச் சரிசெய்வது.

Any body help me
nan nokia n80 i softwer updata saium pothu mobile switch off aagi vitathu, meendum on saithal on aga villai,
eppadi on saivathu pls help me.

அனுராகவன்
27-01-2010, 07:10 PM
கைதொலைபேசி அருமையான பகுதி...
என் கைதொலைபேசியும் பார்மெட் செய்யமுடியுமா..

kavinele
04-07-2010, 08:07 AM
தகவலுக்கு நன்றி!!கைதொலைபேசி அருமையான பகுதி...