PDA

View Full Version : சிலுவையில் அறையப்படவில்லை.,



kulirthazhal
02-10-2008, 07:30 AM
சிலுவையில் அறையப்படவில்லை.,

உயிர்த்தெழு,
இன்னும் நீ
சிலுவையில் அறையப்படவில்லை.,

உன்
பாதங்களை
வருட எத்தனிப்பது
இதழ்களை விரிக்கும்
மலர்கள்தான்.

உன்
உறக்க கனவினில்
இறந்ததாய் எண்ணி
இன்னும்
அஞ்சிக்கொண்டிருக்கிறாய்...
உன்னை
சுற்றிவரும் நந்தவனம்
கனவல்ல...

விழிகளை திறக்கும்முன்
அஞ்சாதே!
அது
இருளினை சுகமென்னும்
போதை.

பழகிய இடங்களிலே
பழகுவதும்
உறக்கம்தான்.

எட்டுத்திக்கும்
உன்னைச்சுற்றி
புது உலகம்
பரவிக்கிடக்கிறது,
அஞ்சாதே!
அங்கேயும்
பாதங்களை செலுத்து.

பாலையிலும்
பூக்கச்செய்யும்
மென்மைமனம் போதும்,
உன்
சாம்ராஜ்யத்தில்
நீயே சர்வாதிகாரி...

எதிர்நிற்பவர்
எதிரியென்றிராதே,
எதிரிகளை
எண்ணிக்கையில் கொள்ளாதே!
தடைகளை மட்டும்
தாண்டிச்செல்.

எதிரியோடு
எதிர்நிற்க
பயமே முதல்வருகை,
வீரமெனும்
வெலுப்பை
பூசிக்கொள்கிறது.

எல்லா தடைகளும்
எதிரியாலே
வருவதில்லை,
நீ
எல்லா தடைகளையும்
தாண்டு,
தாண்ட
மிகுதி உயரம்
தாண்டி ஓடு
ஒவ்வொருமுறையும்.

இன்னமும் அஞ்சினால்
இன்னொருமுறை
உறங்கும் முன்
நீ
தாண்டி வெல்வதாய்
சொல்லிக்கொள்!
அங்கே
கனவினில்
தாண்டி வெல்லும்போது
நிச்சயம் நம்புவாய்

நீ
சிலுவையில்
அறையப்படவில்லை....,

-குளிர்தழல்

Narathar
02-10-2008, 07:55 AM
அஞ்சாதே.......
நீ சிலுவையில் அறையப்பட்டாலும் கூட
நாளை உன் வீரத்தை பேச
ஒரு கூட்டமிருக்கும்....
மாறாக கோளை என்ற கொடும் சொல்லுக்கு
ஆளாகாதே

இளசு
03-10-2008, 04:59 PM
தெறிக்கும் கவிதையும்
நறுக்கான பின்னூட்டமும்..

இரண்டையும் ரசித்தேன்..

பாராட்டுகள் குளிர்தழல்!
பாராட்டுகள் அன்பு நாரதர்!