PDA

View Full Version : திரியை அழிக்க வேண்டும்



rajatemp
01-10-2008, 07:02 PM
நாம் உருவாக்கிய திரியை அழிக்க முடியுமா

Narathar
01-10-2008, 07:04 PM
நாம் உருவாக்கிய திரியை அழிக்க முடியுமா

மன்ற நிர்வாகிகளுக்கு தனிமடலில் தெரிவியுங்கள். அவர்கள் நீக்கிவிடுவார்கள்

mukilan
01-10-2008, 07:10 PM
நாம் உருவாக்கிய திரியை அழிக்க முடியுமா

எந்த திரி, ஏன் எனக் கூற முடியுமா?

praveen
02-10-2008, 09:42 AM
திரி ஆரம்பிக்கும் முன் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்க வேண்டும்.


திரி ஆரம்பித்த பின் அதனை நீக்குவதென்றால் நிர்வாக குழு உறுப்பினர் யாருக்காவது தனிமடலோ அல்லது அந்த திரியிலோ பதிந்து வைத்தால் போதுமானது.

பொதுவாக ஒரு திரியை குழந்தையுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். பெறுவது நம் உரிமை என்றாலும் அழிப்பதற்கு நமக்கு உரிமையில்லை.

தீபன்
03-10-2008, 01:05 AM
பொதுவாக ஒரு திரியை குழந்தையுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். பெறுவது நம் உரிமை என்றாலும் அழிப்பதற்கு நமக்கு உரிமையில்லை.
ஹி ஹி ஹி... அப்படியானால் அதை அழிக்கும் பொறுப்பாளர்களை சிசுக்கொலை செய்பவர்களென்கிறீர்களா...:eek::eek::eek:

பென்ஸ்
03-10-2008, 02:08 AM
ஹி ஹி ஹி... அப்படியானால் அதை அழிக்கும் பொறுப்பாளர்களை சிசுக்கொலை செய்பவர்களென்கிறீர்களா...:eek::eek::eek:
தீபன்... நகைசுவையாகவே இந்த பதிவை என்னால் பார்க்கமுடிவதால், இதை நான் பொறுப்பான வேலை செய்பவர்களை நக்கல் செய்வதாக எண்ணவில்லை...:fragend005:

அப்படியே எண்ணினாலும் முதலில் தனிபட்ட கருத்துக்கு வேண்டி நடவடிக்கை எடுக்காமல் நிர்வாக குழுவின் கண்கானிப்புக்கு கொண்டு செல்லப்பட்டு அனைவரின் ஒப்ப்புதலிலே அந்த திரிகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றபடும்....

தவறு செய்யும் குழந்தையை சிறை வைப்பது போல், சிலருக்கு ஆயுள் தண்டனை, சில பதிவுகள் மீண்டும் மன்றம் மீண்டதுண்டு....

மன்றத்தில் அனைவரும் சமம், அதனால் நீங்கள் அல்ல, ஒரு புதியவர் கேட்டிருந்தாலும் இதை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்... ஆனாலும் பொறுப்பாளர் பதவியும், அதற்க்கான பொறுப்புகளும் இருப்பதால் நானும் அதற்க்கு கட்டுபட்டு...

குசும்புகார ஆளுயா நீங்க...

அன்புரசிகன்
03-10-2008, 02:45 AM
தெரிந்ததால் சொல்கிறேன்... பதிவுகள் அல்லது திரிகள் அழிக்கப்படுவதில்லை. மாறாக மறைக்கப்படுகின்றன... அவ்வளவே...

உங்கள் திரி அல்லது பதிவு முற்றாக அழிக்கப்படும் எனின் உங்களின் பதிவுகளின் எண்ணிக்கைகளில் குறையும்... குறைகிறதா??????????